வணக்கம் நண்பர்களே. நான் பதிவு எழுத வந்து சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன. இதுதான் என்னுடைய நூறாவது பதிவு. இத்தனை நாள் என்னுடைய எழுத்துக்களையும் மதித்து, பிழைகள் இருந்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு படித்த அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டமிட்டு என் தவறுகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும், வோட்டு போட்டு ஆதரவை தெரிவித்த வாக்காளர் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றி. என் பதிவுகளுக்கு உறுதுணையாக இருந்த, நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு சில பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தனியாக ஒரு நன்றி. நீங்கள் இல்லை என்றால் என் பதிவுகளுக்கான மேட்டருக்கு எங்கே போவேன?
இதே போல இனி வரும் நாட்களிலும் என் பதிவுகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதுகிறேன் (விட மாட்டான் போலிருக்கே? என்று கடுப்பாகாதீர்கள்.)
பதிவுகள் சில உண்மைகள் :
இது ஏதோ புலனாய்வு கட்டுரை என்று நினைக்காதீர்கள். பதிவுலகத்தை பற்றி கூகுலாரிடம் கேட்ட போது அவர் சொன்ன சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன்.
WEB LOG என்பதன் திரிபே BLOG. வலைப்பதிவின் திரிபே பதிவு (எப்படி தமிழ் படுத்திட்டோம்ல..)
1994 ஆம் ஆண்டு ஜஸ்டின் ஹால் என்பவர் ஆன்லைன் டைரி என்று சொந்த சமாச்சாரங்களை வலைத்தளத்தில் எழுத தொடங்கியதே முதல் பதிவாகும்.
ஒவ்வொரு அரைநொடிக்கும் ஒரு பதிவுத்தளம் உருவாக்கப்படுகிறதாம்.
பதிவுலகில் எத்தனை பதிவு தளங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியவில்லை. சுமாராக இரண்டு மில்லியனுக்கு அதிகமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
பதிவர்களில் 75% பேர் பட்டதாரிகள் (பத்தாம் வகுப்பில் இருநூறு எடுத்த லோக்கல் ஆட்களும் எழுதுகிறார்களே..)
பாதிக்கும் மேட்பட்டவர்கள் திருமணமாகி குழந்தை உள்ளவர்கள். (உஷார்...)
பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் பதிவுதளத்தை கைவிட்டு, இரண்டாவது பதிவு தளத்தில்தான் எழுதி கொண்டிருக்கிறார்கள் (அடியேனும் தான்...)
நாற்பது சதவிகிதம் பேர் பதிவுகளின் வாயிலாக புதிய நண்பர்கள் ஆகின்றார்கள் (அப்போ அறுபது சதவீதம் பேர் எதிரிகள் ஆகிறார்களோ?)
சும்மா இருப்பவர்களை காட்டிலும், வேலைக்கு செல்பவர்கள்தான் (வேலை பார்க்காமல்) அதிகமாக பதிவு எழுதுகிறார்களாம். (முதலாளிக்கள் கவனிக்க...)
ஐந்து பேரில் ஒருவர் தினமும் பதிவெழுதுகிறார். சராசரியாக வாரத்துக் இரண்டு அல்லது மூன்று பதிவு எழுதுபவர்களே அதிகம்.
பதிமூன்று சதவீத பதிவர்கள் சொந்தமாக வலைத்தளத்தை உருவாக்கி எழுதி வருகிறார்கள் (மூளைக்கார பசங்க...)
நூறு பதிவுகள் எழுதி விட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய சில பதிவுகளை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். டைம் இருந்தா படிச்சு பாருங்க...
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க....
34 comments:
நூறுக்கு வாழ்த்துக்கள்
@எல் கே
நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே! :)
வாழ்த்துக்கள் நண்பரே....பதிவுலகை பற்றிய உங்கள் தகவல்கள் இதுவரை நான் படிக்காதது....சூப்பர்...
வாழ்த்துக்கள் :))
90 adichchu 100 kondaadavum
@Balaji saravana
நன்றி பாலா
@NKS.ஹாஜா மைதீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@karthikkumar
நன்றி பங்காளி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அப்படின்னா என்னங்க?
- நானும் ரொம்ப நல்லவன் (சாத்தியமா)
நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
@r.v.saravanan
நன்றி நண்பரே...
நூறு ஆயிரமாகட்டும் , இது வாழ்த்து மட்டுமல்ல, உத்தரவும் கூட :-)
வாழ்த்துகள் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க... எனது ஆதரவு நிச்சயம், எப்பவும் உண்டு. :)
@எப்பூடி..
ஆகட்டும் தலைவரே...
உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
ரொம்ப நாளா ஆளையே காணோம்?
வாழ்த்துக்கள் பாலா! தொடர்ந்து எழுதுங்க! நீங்கள் என்னுடைய தளத்தை உங்கள் தளத்தில் இணைத்த பிறகு எனது பதுவுகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு எனது நன்றிகள்! இப்போது எனது தளத்திலும் நீங்கள் இருக்கிறீர்கள்! தொடர்வோம்.. கொஞ்சம் இருங்க வாக்குப் போட்டுட்டு வந்திடுறேன்.......
@Rajeevan
நன்றி நண்பரே. உங்கள் ஆதரவை எப்போதும் வேண்டுகிறேன். என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ
@ஆமினா
மிக்க நன்றி சகோ
அன்பின் பாலா - இனிய நூறுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
// பத்தாம் வகுப்பில் இருநூறு எடுத்த லோக்கல் ஆட்களும் எழுதுகிறார்களே.. //
எதுக்கு இந்த வீண்வேலை :)))
பதிவுலக நோய்கள் குறித்து நீங்கள் எழுதியிருந்த பதிவு ஒரு மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்... பிறிதொரு நாளில் விளக்கமாக பதில் போடலாம் என்று புக்மார்க் செய்து வைத்தேன்... ஆனால் பிற்பாடு மறந்துவிட்டேன்...
நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! :)
நூறுக்கு வாழ்த்துக்கள்
வலைபதிவுகள் பற்றிய பதிவு சூப்பர்
@cheena (சீனா)
மிக்க நன்றி நண்பரே...
@philosophy prabhakaran
//எதுக்கு இந்த வீண்வேலை :)))
என்னப்பா ஒரு ஜோக்குக்கு கூட சொல்லக்கூடாதா. அரசியல்வாதிங்கதான் இப்படின்னா இங்கேயுமா? :)))
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி நண்பரே
@FARHAN
நன்றி நண்பரே....
வாழ்த்துக்கள் பாலா :-)
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தல.....தொடர்ந்து எழுதுங்கள்...
@கிரி
நன்றி கிரி அவர்களே
@ரஹீம் கஸாலி
நன்றி தல
வாழ்த்துக்கள் நண்பரே
@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி நண்பரே, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Post a Comment