விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 24, 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...


ரஜினிகாந்த் அவர்களை பற்றிய பதிவு என்றவுடன் மனம் உடனே குதூகலம் அடைந்து விடுகிறது. நமக்கு பிடித்தவரை பற்றி பேசுகிறோம் அல்லவா? என்னை தொடர் பதிவுக்கு அழைத்த அரசையுரான் மற்றும் முறைமாமன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு நாட்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் பதிவுலகத்துக்கு ஆப்ஸெண்ட் ஆகி விட்டேன். ஆகவே உடனடியாக எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ரஜினி படங்களை வரிசைபடுத்த விரும்பவில்லை. ஆகவே நம்ம சன்டிவி புத்தாண்டு அன்று பத்து படங்களை வரிசை படுத்தாமல் ஒளிபரப்புவார்களே? அதே போல எழுதுகிறேன். ரஜினியின் படங்கள் என்றவுடன் என் நினைவுக்கு வரும் பத்து படங்களை பற்றி எழுதுகிறேன்.


தர்மத்தின் தலைவன்


இந்த படம் பார்க்கும்போது நான் ஒரு முழுமையான ரஜினி ரசிகனாக மாறி இருந்தேன். அப்போது எனக்கு வயது ஐந்துதான். ஆனாலும் ரஜினியிடம் இருந்த ஈர்ப்பு அவரிடம் கொண்டு சேர்த்தது. இன்னொரு விஷயம் இந்த படத்தில் ஒரு ரஜினியின் பெயர் ப்ரோபஸர் பாலு. பிரபு அடிக்கடி, "நான் ப்ரோபஸர் பாலுவோட தம்பி. சீவிடுவேன் சீவி!" என்று சொல்வார். அப்போது தீவிர ரசிகராக இருந்த என் மாமா என்னை பார்த்து, "டேய் ப்ரோபஸர் பாலு!" என்று கூப்பிடுவார். அப்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் அப்படி ஆவேன் என்று.

தளபதி


ரஜினியின் நடை உடை பாவனைகள் அனைத்து ஒரு பக்கா ரவுடியின் சாயலை ஒத்திருக்கும். சண்டை போடும்போது முகத்தில் காட்டும் ஆக்ரோஷம் அனைத்தும் அருமை. இந்த படத்துக்கு என் குடும்பத்துடன் இரண்டு தடவை சென்று டிக்கட் கிடைக்காமல் மூன்றாவது தடவைதான் முழுமையாக பார்க்க முடிந்தது. படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் மிக மிக வேகமாக இருக்கும். "இவர் மெதுவா பேசினாலே புரியாது." என்று என் அம்மா குறை பட்டு கொண்டார்.

தில்லு முல்லு 


இந்த படத்தை எப்போது கேடிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதும் பார்த்து விடுவேன். ரஜினியும், தேங்காய் சீனிவாசன் அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். மீசை இல்லாத ரஜினி தேங்காய் சீனிவாசனை முதன் முதலில் பார்த்து, "சார் அந்த தோட்டகாரன் உங்கள மாதிரியே இருக்கான்." என்று சொல்வதும், "இனிமேல் கல்யாணம் ஆகாத பொண்ணுங்களை மட்டும் லவ் பண்ணவே மாட்டேன்!" என்று சொல்வதும் இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

பாட்ஷா 


இந்த படம் பார்க்கும் போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் தியேட்டரில் இவ்வளவு ரசிக வெள்ளத்தை எந்த படத்துக்கும் பார்த்ததே கிடையாது. ரஜினியால் மட்டுமே இவ்வளவு மாஸ் உள்ள பாத்திரத்தில் நடிக்கமுடியும். இதற்கு பின் இதே சாயலில் வந்த பல படங்கள் மண்ணை கவ்வியது இதற்கு ஒரு சான்று. இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுதான் தமிழகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கி பெரிய அரசியல் மாற்றத்துக்கு அடிகோலியது.

நான் சிகப்பு மனிதன்


ஒரு அமைதியான ஆக்சன் ஹீரோவின் படம். எஸ் எ சந்திரசேகரன் அவர்கள் எடுத்ததிலேயே உருப்படியான படம் இதுதான். ரஜினி உச்ச நிலையில் இருந்த போது வந்த இந்த படத்தில் கூட தனக்கு இணையான கதாபாத்திரத்தில் பாக்யராஜை நடிக்க சம்மதிருப்பார். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் ரஜினியின் அலட்டாத நடிப்பு, அவரின் சின்ன சின்ன ஸ்டைல்கள் அனைத்தும் என்னை கவர்ந்தவை. இறுதி காட்சியில் ஆடாமல் அசையாமல் காந்திதேசமே என்று பாடல் பாடுவது கூட ஸ்டைலாகத்தான் இருக்கும்.


ஆறில் இருந்து அறுபது வரை


இன்றுவரை என் மனதில் மிகுந்த பாரத்தை ஏற்படுத்தும் படம் என்றால் அது இந்த படம்தான். தன் வேகத்துக்கும் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றிருந்த சமயத்தில் அப்படியே உல்டாவாக நடிக்க எந்த நடிகரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ரஜினி அப்படி எந்த வித செய்கைகளும் இல்லாமல் நடித்த படம் இது. பல இடங்களில் கண்களில் கண்ணீர் மல்க செய்யும்படி நடித்திருப்பார் ரஜினி.

நெற்றிக்கண் 


பலபேருக்கு இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் போது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி ரஜினி என்னை ரசிக்க வைத்த படம். பொதுவாகவே ரஜினி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலபேர் விரும்புகிறார்கள். ஒருதடவை ரஜினியே தனக்கு வில்லனாக நடிக்க பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அந்த விதத்தில் இந்த படம் ஒரு மைல்கல். விசு வசனத்தில் விளையாடி இருப்பார். சரிதாவிடம் அறை வாங்கி விட்டு அதனை சமாளிக்கும் காட்சி சுவாரசியமானது.

படையப்பா 


இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியும் தியேட்டரில் விசில் சத்தம் காது கிழியும். இந்த படம் வெளிவந்த சமயம் எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. படம் வெளியான மறுநாள் இறுதிதேர்வாக சமூக அறிவியல் தேர்வு. முந்தின நாள் இரவு படம் பார்த்து விட்டு உறங்க இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் தூக்க கலக்கத்தில் சென்று தேர்வு எழுதியது மறக்க முடியாதது. ரஜினி சவுந்தர்யாவின் கையை பிடித்தபடி ரம்யா கிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே வரும்போது வரும் பின்னணி இசை மிகவும் பிடித்தது. அதே போல வயதான ரஜினியை முதன்முதலாக காட்டும் காட்சியும் அருமை.

மன்னன் 


ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி மூவரும் கலந்து கட்டி அடித்த படம். அதிலும் அந்த செயின் மோதிரம் வாங்கும் காட்சியில், "இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா. எப்டி இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுகிட்டு முன்னால தைரியமா நீக்கறியோ?" என்று சொல்லும் டைமிங் அட்டகாசம். தலைவருடன் நடிப்பதாலோ என்னவோ விஜயசாந்தி இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்.

அண்ணாமலை 


ரஜினிக்கு அறிமுக பாடல் (அதற்கு முன் பெரும்பாலும் சண்டை காட்சிகள்தான் இருக்கும்), தனியாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்று டைட்டில் இசை ஆகியவை தொடங்கிய படம்.  தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்ட் உருவாக்கிய படம். தேவாவின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம். சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சியும், ஏலம் எடுக்கும் காட்சியும், புதிய சேர்மனாக ரஜினி தேர்ந்தெடுக்கப்படும் காட்சியும் பிரசித்தி பெற்றவை.


அடுத்த படம்... என்னது பத்து படம்தான் கோட்டாவா? அய்யய்யோ இந்த தொடர் பதிவை ரஜினி 100 படங்கள் என்று வைத்திருக்கலாமோ? நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். என்ன செய்ய பத்து படங்கள் என்று சொன்னதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

இந்த பதிவை தொடர நான் அழைப்பது (மற்றவர்கள் அழைத்து விட்டாலும், ஒன்ஸ்மோர்)





மறுக்காம எழுதிடுங்க ப்ளீஸ்... 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 



34 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு அருமையான பார்வை விரைவில் நானும் தொடர்வேன்.....

ஹரிஸ் Harish said...

ரைட்டு..

ஹரிஸ் Harish said...

ரைட்டு..

r.v.saravanan said...

நண்பா நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் சூப்பர் படங்கள்

good collection

பாலா said...

@ம.தி.சுதா

வருகைக்கு நன்றி. தொடருங்கள்..

பாலா said...

@ஹரிஸ்

ரைட் ரைட்

பாலா said...

@r.v.saravanan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Anonymous said...

நல்ல தொகுப்பு பாஸ்!

"ராஜா" said...

ரஜினியின் படங்களை பற்றி எழுத கசக்குமா? சீக்கிரமே எழுதிடுவோம் நண்பரே.. அழைத்தமைக்கு நன்றி

karthikkumar said...

ரஜினி உச்ச நிலையில் இருந்த போது வந்த இந்த படத்தில் கூட தனக்கு இணையான கதாபாத்திரத்தில் பாக்யராஜை நடிக்க சம்மதிருப்பார்///
athuthaan namma thalaivar bangali

karthikkumar said...

ungal varisai super nandri.

karthikkumar said...

tamil font prob. sorry

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்புங்க... தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல தொகுப்பு மக்கா ....நிறைய பேர அழைத்திருக்கிறீர்கள் ...............

பாலா said...

@karthikkumar

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@அருண் பிரசாத்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

Thank you :)

பாலா said...

@இம்சைஅரசன் பாபு..

நன்றி பாபு...

santhanakrishnan said...

முள்ளும் மலருக்கும்
ஜானிக்கும் உங்கள்
பட்டியலில்
இடமில்லையா?

Yoganathan.N said...

முள்ளும் மலரும் படம் இல்லாத இந்த 'டாப்' 10-ஐ நான் புறக்கணிக்கிறேன்.

வருண் said...

அழைப்புக்கு நன்றி பாலா! உங்க super 10 செலக்ஷன் நல்லா இருக்குங்க! வாழ்த்துக்கள்!

எல் கே said...

அருமையான தேர்வுகள் பாலா

//அப்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் அப்படி ஆவேன் என்று.///

நீங்களும் ஞாபகமறதிகாரரா ??

ரஹீம் கஸ்ஸாலி said...

குட்டிகுட்டி விமர்சனங்களுடன் ஒரு சூப்பர் (ஸ்டார்) தொகுப்பு. கலக்கிட்டீங்க பாலா.

பாலா said...

@santhanakrishnan

நண்பரே அந்த இரு படங்களும் ரஜினியின் மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரிரு தடவைதான் பார்த்திருக்கிறேன். இது ரஜினியின் டாப் டென் படங்கள் அல்ல. ரஜினி என்றவுடன் என் நினைவுக்கு வந்த படங்கள்.

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Yoganathan.N

முள்ளும் மலரும் படம் ஒரே ஒருதடவைதான் பார்த்திருக்கிறேன். அதனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை. இது டாப் டென் அல்ல தல. வருகைக்கு நன்றி தல.

பாலா said...

@வருண்

கருத்துக்கு நன்றி நண்பரே. விரைவில் எதிர் பார்க்கிறேன்.

பாலா said...

@LK

நான் பெரிய ஞாபக மறதிக்காரன் :)
நன்றி நண்பரே...

பாலா said...

@ரஹீம் கஸாலி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@Balaji saravana

நன்றி பாலாஜி :)

பாலா said...

@"ராஜா"

நன்றி தல

THOPPITHOPPI said...

சிவாஜி,ரோபோனு இல்லாம அருமையான படங்களை தேர்வு செஞ்சி இருக்கீங்க

பாலா said...

@THOPPITHOPPI

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

எப்பூடி.. said...

கம்பியூட்டரின் மக்கரால் என்னால் உங்கள் அழைப்புக்கு பதில்கூட அளிக்க முடியவில்லை, sorry.

உங்கள் அழைப்பிற்கு மிக்கநன்றி,

உங்கள் 10 படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை, நீங்கள் 150 படங்கள் எழுதியிருந்தாலும் எனக்கு அத்தனையும் பிடிக்கும், தலைவரின் படங்களில் எனக்கு பிடிக்காத படமென்றொன்றில்லை :-)

Related Posts Plugin for WordPress, Blogger...