விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 10, 2010

என்கவுண்டரும் - ஹிட்கவுண்டரும்...

இன்று பதிவுலகில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் என்கவுண்டர். அதாவது,ம"னித உரிமைக்கு இங்கு மதிப்பே இல்லை, எல்லாருக்கும் இப்படி தண்டனை கொடுத்து விட்டால் சரியாகி விடுமா?" என்றல்லாம் பலர் எதிர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். நான் பேசப்போவது என்கவுண்டர் சரியா தவறா என்றல்ல. என்கவுண்டர் விஷயத்தை கூட சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தும் ஹிட் கவுண்டர்களை பற்றி. இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக எங்கெல்லாம் சந்து கிடைக்கிறதோ அங்கெல்லாம் மூத்திரம் அடித்து விட வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்வது? தேவையே இல்லாமல் இந்த விஷயத்துக்கு சாதி, மதம், தொழிலாளர் வர்க்கம் என்று மூலாம் பூசுகிறார்கள். மக்களுக்கு உண்மையை தெளிவாக்குகிறேன் என்று இன துவேசத்தை தூண்டுகிறார்கள். இந்த தவறை செய்தவன் ஒரு பார்ப்பனராக இருந்தால் இப்படி நடக்குமா? என்று கேள்வி கேட்கிறார்கள். அய்யா சாமி!, சாத்தியமா எங்களுக்கு இப்படி எல்லாம் சிந்திக்க தெரியாது. செத்துபோன அந்த குழந்தைகள் என்ன சாதின்னும் தெரியாது, கடத்தி கொன்னவன் எந்த சாதின்னு தெரியாது, அவன சுட்டு கொன்னவனும் என்ன சாதின்னு தெரியாது.


இந்த செய்திகளை கேட்ட உடனே மனதில் தோன்றியது, அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு வேன் டிரைவரை நம்பித்தானே பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். ஒரு குழந்தையை கொடூரமாக கொன்றவனுக்கு இந்த தண்டனை தேவைதான் என்ற எண்ணம். "அது சரி, எல்லாவற்றுக்கும்  என்கவுண்டர் என்றால் என்ன ஆகும்?" என்று கேட்கிறார்கள். இதே பதிவர்கள் இவனை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து வழக்கு நடத்தினால் அதற்கும் தம் கண்டனங்களை பதிவு செய்வார்கள். அதாவது அவர்கள் செய்திருக்க வேண்டிய செயல், அவனை கைது செய்தவுடன் இவர்களிடம் போன் போட்டு கேட்டிருக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று. இங்கே நான் நிறுவுவது என்கவுண்டர் சரியென்று அல்ல. சந்தடி சாக்கில் தான் அதிமேதாவித்தனத்தை காட்டி ஹிட் வாங்க துடிக்கும் உண்மையான சமூக ஆர்வலர்களின் செயல் சரியா என்று வினவுவதற்க்காகத்தான். எல்லா விஷயத்திலும் ஒன்று பூணூல் மாட்டுவது, இல்லையேல் சிகப்பு சாயம் அடிப்பது சரியாஇந்த மாதிரி பல விஷ கிருமிகள் பதிவுலகிலும் பெருகி விட்டன. இந்த கிருமிகள் நிறைந்த உலகில் சஞ்சாரிப்பதால் எனக்கும் ஒரு சில நோய்கள் வந்து விட்டன. அதைப்பற்றி இன்னொரு பதிவில் கூறுகிறேன்.

என்கவுண்டர் நடந்த இடத்தில்...
(இந்த போட்டோ எடுத்தவரை பாராட்டியே ஆகனும்) 

நான் தொலைக்காட்சியில் இந்த செய்தியை சொல்லக்கேட்டவுடன், குபீரென்று சிரித்து விட்டேன். அப்படியே அஞ்சாதே பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவு படுத்தியது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இது பற்றி என் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் இந்த என்கவுண்டர்களுக்கு பின்னால் சில தூண்டல்கள் இருக்கலாம் என்றான்.

  1. பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாரேனும் பெரும்புள்ளி இருந்திருந்தால் அவர்கள் போலீசிடம் லஞ்சம் கொடுத்து இதை செய்திருக்கலாம்.
  2. உண்மையிலேயே அவன் தப்பி ஓடி இருக்கலாம்.
  3. அவன் உயிருடன் இருந்தால் ஏதாவது உளறி இன்னும் பலபேரின் அண்டர்வேரை கழட்ட வேண்டி வரும் என்ற பயத்தால் கரை வேட்டிக்காரர்கள் செய்த வேலையாக கூட இருக்கலாம்.
அவன் கேட்ட இன்னொரு கேள்வி, தற்போது (இன்னொரு குற்றவாளி) மனோகரனின் மனநிலை எப்படி இருக்கும்?


என்கவுண்டர் ஒரு தீர்ப்பல்ல. ஆனால் என்கவுண்டரும் சில நேரங்களில் தீர்ப்பாக வேண்டும். எது எப்படியோ இது ஒரு நிரந்தர தீர்வல்ல என்பது மட்டும் உண்மை. சட்டத்தில் தேவையான மாற்றங்கள் வந்தால் தேவலாம்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


15 comments:

எப்பூடி.. said...

இந்த என்கவுண்டரில் உள்க்குத்துக்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், எது எப்பிடியோ நேரடியாக செய்தாலோ யாரவது சொல்லி செய்தாலோ இவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான். இப்படி செய்வதால் உண்மைக்குற்றவாளி தப்பித்தாலும் (கொல்லப்பட்டவன் வாக்குமூலம் கொடுத்தாலும் உண்மை குற்றவாளி தண்டிக்கப் படப்போவதில்லை) பணத்திற்காக கொலை செய்பவர்களுக்கு இந்த சம்பவம் பயத்தையாவது ஏற்ப்படுத்தும். பொலிசாருக்கு இதில் லாபம் இருக்கிறதென்றே வைத்துக்கொண்டாலும் இந்த விடயமில்லாவிட்டால் வேறொரு விடயத்தில் அவர்கள் லாபம் பார்க்கத்தான் போகிறார்கள் என்பதால் அவர்களால் ஏற்ப்பட்ட நல்லகாரியம்தான் இது.

போலீசாரை பாரட்டத்தேவயில்லை (எல்லா நேரங்களிலும் இவர்கள் இப்படி செய்வதில்லை), சட்டத்தை கேலி பண்ணத்தேவையில்லை (சட்டம் எப்படிஎன்பதுதான் தெரியுமே ), ஏன் உண்மை குற்றவாளி என்றொருவன் இருந்திருந்து அவன் தப்பிவிட்டான் என்று ஆதங்கபடதேவயில்லை (எப்படியும் அவன் தப்பித்தே தீருவான் )

ஆனால் பச்சிளம் பாலகர்களை அதுவும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கூலிக் கொலையாளியாவது கொல்லப்பட்டான் என்று திருப்திப்படுவதை தப்பாக பார்க்கவேண்டாம். குழந்தைகளை விரும்பும் அனைவரும் இந்த கொலையை (என்கவுண்டர் என்றாலே கொலைதானே?) நியாயமாகத்தான் பார்ப்பார்கள், ஜனநாயகத்தை விரும்புபவர்கள் பிழையாக பார்ப்பார்கள்.

குழந்தைகளா ஜனநாயகமா என்றால் எனது தனிப்பட்ட பதில் 100 % குழந்தைகள்தான்

குழந்தைகள் பாதுகாக்காத ஜனநாயம் குற்றவாளியை தண்டிக்குமென்பதில் என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட ஜனநாயகம் எனக்கு தேவையில்லை.

ஒரு நாதாரி கொல்லப்பட்டு விட்டான், ஒருவேளை அவனை தூண்டிவிட்டவன் உயிரோடு இருந்தால் அவனை கடவுள் அல்லது இயற்கை அல்லது சந்தர்ப்பம் (அவரவர்க்கேற்றபடி எடுத்து கொள்ளலாம்) பார்த்துக்கொள்ளும்.

Please Save The Children

NKS.ஹாஜா மைதீன் said...

சரியாக சொன்னிர்கள்....சில விசமிகளை பற்றி.....

பாலா said...

@ எப்பூடி..

//குழந்தைகள் பாதுகாக்காத ஜனநாயம் குற்றவாளியை தண்டிக்குமென்பதில் என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட ஜனநாயகம் எனக்கு தேவையில்லை.

நூற்றுக்கு நூறு உண்மை. நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த செயலின் அவன் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் கொல்லப்படுவது சரியே...

நன்றி தலைவரே...

பாலா said...

@ NKS.HAJA MYDEEN

எனக்கு வந்த விஷக்காய்ச்சல் பற்றி விரைவிலேயே எழுதுகிறேன்.
நன்றி நண்பரே...

ரிஷபன்Meena said...

உண்மைத்தமிழன் பதிவைப் படித்துவிட்டு ஒரு அயோக்கியனுக்கு பரிந்து இப்படியும் எழுதுகிறார்களே என்றிருந்தேன்.

உங்களை போன்ற சிலரையாவது மனித உரிமை நோய் தொற்றாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

ரிஷபன்Meena said...
// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[பயணமும் எண்ணங்களும் said...

மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!

Wednesday, November 10, 2010 4:46:00//


நல்ல சிந்தனை உள்ளவர்கள் இது போன்ற குற்றவாளிகளை உறவைக் காரனம் காட்டி அவர்களுக்கு பரிந்து பேச மாட்டார்கள்.

நல்லவேளை இந்தக் கயவாளியின் மனைவி இவனை காதலித்ததுக்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கிராம மக்கள் அவன் பினம் கூட ஊருக்குள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.

//என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

அந்த மோகன் ராஜ்-ஐ கூட போய்ட்டுப் போறான் விடுங்க சார் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்.

கம்ப்யூட்டர் முன்னாடி கண்டதையும் (உங்களை மாதிரி)டைப் செஞ்சா தூக்கம் வர்ற மாதிரி யாரவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லதுன்னு தோனுது சார்.

புதன், நவம்பர் 10, 2010 இரவு 11:56:00 //

ரிஷபன்Meena said...

உண்மைத்தமிழன் பதிவைப் படித்துவிட்டு ஒரு அயோக்கியனுக்கு பரிந்து இப்படியும் எழுதுகிறார்களே என்றிருந்தேன்.
உங்களை போன்ற சிலரையாவது மனித உரிமை நோய் தொற்றாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

ரிஷபன்Meena said...
// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[பயணமும் எண்ணங்களும் said...

மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!
//

நல்ல சிந்தனை உள்ளவர்கள் இது போன்ற குற்றவாளிகளை உறவைக் காரனம் காட்டி அவர்களுக்கு பரிந்து பேச மாட்டார்கள்.
நல்லவேளை இந்தக் கயவாளியின் மனைவி இவனை காதலித்ததுக்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கிராம மக்கள் அவன் பினம் கூட ஊருக்குள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.

//என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

அந்த மோகன் ராஜ்-ஐ கூட போய்ட்டுப் போறான் விடுங்க சார் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்.

கம்ப்யூட்டர் முன்னாடி கண்டதையும் (உங்களை மாதிரி)டைப் செஞ்சா தூக்கம் வர்ற மாதிரி யாரவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லதுன்னு தோனுது சார்.

புதன், நவம்பர் 10, 2010 இரவு 11:56:00 //

தமிழ்மலர் said...

// ஆனால் பச்சிளம் பாலகர்களை அதுவும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கூலிக் கொலையாளியாவது கொல்லப்பட்டான் என்று திருப்திப்படுவதை தப்பாக பார்க்கவேண்டாம். //

அப்படியா அவனா கொல்லப்பட்டான்?

மனோகர் தான் கஞ்சா குடிகாரன், பல குற்றவழக்குகளில் உள்ளவன். அவன் தான் குழந்தையை பாலியல்பலாத்காரம் செய்து கொன்றான் என்றனர்.

வழக்கு இப்படி இருக்க எந்த குற்ற பின்னனியும் இல்லாத மோகன்ராசு கொல்லப்பட என்ன காரணம்?

கொஞ்சமாவது யோசியுங்கள்...

இந்த அவரச என்கவுன்டருக்கு காரணம் என்ன?

அரசியல் ஆதாயமா?
போலீசாரின் சுயநலமா?
அல்லது
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உள்விவகாரமா?

பாலியில் வன்முறைபடுத்தி கொன்றவனை விட்டுவிட்டு, கொன்றவனை மட்டும் சுட்டுக்கொல்ல அவரசம் என்ன?

Philosophy Prabhakaran said...

// உண்மையிலேயே அவன் தப்பி ஓடி இருக்கலாம் //
இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கருதுகிறேன்...

// அவன் உயிருடன் இருந்தால் ஏதாவது உளறி இன்னும் பலபேரின் அண்டர்வேரை கழட்ட வேண்டி வரும் என்ற பயத்தால் கரை வேட்டிக்காரர்கள் செய்த வேலையாக கூட இருக்கலாம் //
இந்த சம்பவத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை... ஒருவேளை இருக்கலாம்...

// பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாரேனும் பெரும்புள்ளி இருந்திருந்தால் அவர்கள் போலீசிடம் லஞ்சம் கொடுத்து இதை செய்திருக்கலாம் //
இது வேண்டுமானால் காரணமாக இருக்கலாம்... மேலும் எனக்கென்னவோ இது யாருடைய உந்துதலும் இல்லாமல் காவல்துறையே எடுத்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது...

r.v.saravanan said...

என்கவுண்டர் ஒரு தீர்ப்பல்ல. ஆனால் என்கவுண்டரும் சில நேரங்களில் தீர்ப்பாக வேண்டும்.

பாலா said...

@ரிஷபன்Meena

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@தமிழ்மலர்

கண்டிப்பாக உள்குத்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

பாலா said...

@philosophy prabhakaran

//யாருடைய உந்துதலும் இல்லாமல் காவல்துறையே எடுத்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது...


அதற்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு கண்டிப்பாக இருக்கும்...

நன்றி நண்பரே..

பாலா said...

@r.v.saravanan

ரிப்பீட்டு ....

நன்றி தல.

karthikkumar said...

ரைட்டு

karthikkumar said...

என்கவுண்டர் தேவையா இல்லையா என்பது அவசியமில்லாத விவாதம் தண்டனைகள் இது போன்று இருந்தால்தான் பயம் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...