விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 20, 2010

கழுத்தை அறுத்த ஏர்டெல்...

இதற்கு முன்பு ஒரு பதிவில், "ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா?" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவை படித்து விட்டு, "நீ மட்டும் என்ன ஒழுங்கா? ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை வைத்து அவர்களை திட்டியே ஒரு பதிவிடுகிறாயே?" என்று யாரும் கேட்க கூடாது. இந்த சேவைக்கும் நான் பணம் கட்டுகிறேன். சரி இனி நடந்தது என்னவென்று பார்ப்போம். முதலிலேயே சொல்லி விட்டேன் இது சொந்த கதை. கொஞ்சம் போர் அடிக்கும். நீளமாக வேறு இருக்கும். எனக்கு வேறு யார் இருக்க புலம்பரதுக்கு?
இப்போ புதுசா இந்த லோகோ மாத்திருக்காங்களாம் 


நான் என் வீட்டில் இண்டர்நெட் இணைப்பு பெற்று சுமார் ஒண்ணரை ஆண்டுகள் ஆகின்றன. நமக்கு எப்பவுமே இந்த பேலன்ஸ் பார்த்து கால் பண்ற வேலையே ஆகாது. அதனால்தான் மொபைலில் கூட போஸ்ட் பெய்டு இணைப்புத்தான் வைத்திருக்கிறேன். எனவே இணைப்பு வாங்கும்போதே ஏர்டெல்லில் 256 kbps வேகம் கொண்ட அன் லிமிட்டட் இணைப்பு பெற்றேன். எல்லாம் நன்றாகத்தான் போயி கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பெண் ஏர்டெல்லில் இருந்து தொடர்பு கொண்டாள். நீங்கள் இணையத்தை நிறைய பயன்படுத்துவதால்  உங்களுக்கு ஒரு புது ஆஃபர் . அதாவது உங்கள் வேகம் 1 mbps ஆக (நான்கு மடங்காக) அதிகரித்து கொள்ளலாம். கட்டணம் முன்னூறு ரூபாய்தான் அதிகம். தற்போது நீங்கள் அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று கூறினார். நான் அவரிடம் சுமார் ஒரு அரைமணிநேரம் உரையாடி தெளிவு பெற்றபின் என் இணைய வேகத்தை அதிகரித்து கொண்டேன். 

இந்த புது வேகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. என் இணைய பயன்பாடும் அதிகரித்தது. மூன்று மாதங்கள் கழித்து திடீரென இணைப்பின் வேகம் பாதியாகி போனது. உடனே கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு பேசிய போது, "நீங்கள் 100 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளீர்கள். இது டிராய் சட்டப்படி கூடாது. ஆகவே உங்கள் இணைப்பு பாதியாக குறைந்து விடும், அடுத்த மாத தொடக்கத்தில் வேகம் கூடி விடும்!" என்றார்கள். இந்த ம...ரை அந்த பெண் என்னிடம் கூறவே இல்லை. சரி 100 ஜிபி கொஞ்சம் ஓவர்தான் என்று அதற்கடுத்த மாதங்களில் உபயோகத்தை குறைத்து கொண்டேன். கடந்த மாதம் என் இணையத்தின் வேகம் பாதியாகி விட்டது. கேட்டால், "நீங்கள் இருக்கும் பிளானில் 25 ஜிபி டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்!!" என்றார்கள். "இது என்னடா புதுக்கதை?" என்று நான் வெகு நேரம் விவாதம் செய்த பிறகு, பெங்களூரில் இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு புகாரை அனுப்பினார்கள். நான் கல்லூரியில் இருக்கும் போது மதிய நேரம் ஒரு அதிகாரி என்னுடன் பேசினார். "எங்கள் பக்கம் தவறு நேர்ந்து விட்டது. இதை உங்களிடம் சொல்லாமல் விட்டது தவறுதான்." என்று கூறினார். "உங்களுக்கு 25 ஜிபிதான் வரையறை." என்றும் கூறினார். அவரிடம் நான் கேட்ட கேள்விகள்

1. ஒரு புது பிளானை அறிமுகபடுத்தும்போது, கஸ்டமரிடம் இம்மாதிரி விஷயங்களை மறைப்பது நியாயமா?

2. அப்படியே 25 ஜிபி வரையறை இருந்தாலும், முதல் நான்கு மாதங்கள் எனக்கு இப்படி நடக்க வில்லையே?

3. 25ஜிபி தான் வரையறை என்றால், என்னால் முன்பு நூறு ஜிபி வரை எப்படி டவுன்லோட் செய்ய முடிந்தது?

3. முன்பு நூறு ஜிபி வரை நான் டவுன்லோட் செய்தபோது கூட எனக்கு 25 ஜிபி வரையறை இருப்பது தெரிவிக்க படவில்லையே? தவறு என்றால் ஒரு முறைதானே நடக்கும்?

இந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. நான் இணைப்பை துண்டிக்க போகிறேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். மாலை வீட்டிற்கு சென்று வேகத்தை சோதனை செய்தால், முழு வேகத்தோடு இருக்கிறது. இது சரியாக இரண்டு நாளைக்குத்தான். மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்றாகி விட்டது. மறுபடியும் கஸ்டமர் கேரில் பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் விவாதம் வர, திடீரென இணைப்பு கட்டானது. கோபமுற்ற நான் மறுபடியும் தொடர்பு கொண்டேன். வேறு ஒருவர் பேசினார். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இணைப்பை தூண்டித்ததை சொல்ல வில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை கால் செய்யும் போது, பெயர், போன் நம்பர்,  மொபைல் நம்பர், ஈமெல் ஐடி, நாம் வைத்திருக்கும் பிளான் எல்லாம் ஒரு முறை ஒப்பிக்க வேண்டும். இதுவரை நான் பேசியவரை சுமார் 25தடவை ஒப்பித்து விட்டேன்.(கொடுமைடா சாமி) அவரிடம் நேரடியாக விஷ்யத்தை சொல்ல, உடனே அவர் ஒரு தொலைபேசி எண் கொடுத்தார். அதாவது இது பில்லிங் சம்பந்தமான புகாராம். பில்லிங் டீபார்ட்மெண்ட்டில் பேச வேண்டுமாம். உடனே நானும் தொடர்பு கொண்டேன்.

பில்லிங் டிப்பார்ட்மெண்டில் இருப்பவன் எல்லாம் பெரிய புடுங்கிகள் போலிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டுமானால் நிமிடத்துக்கு 50 பைசா பிச்சை போடவேண்டுமாம். மறுபடியும் ஒரு பெண் பேசினார். மீண்டும் போன் நம்பர் எல்லாம் ஒருமுறை ஒப்பித்த பிறகு உங்கள் பிரச்சனை என்ன என்று கேட்டார். சிவாஜி படத்தில் வருவது போல வசனம்தான் வந்தது, "எத்தனை பேர்தாண்டா இதே கேள்விய கேப்பீங்க?" என்று கேட்க நினைத்து, கேட்காமல், நடந்த எல்லாவற்றையும் நூற்று ஓராவது தடவையாக கூறினேன். அவர் சிறிது நேரம் கழித்து கூப்பிடுகிறேன் என்று போனை வைத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்தது. இப்போது அந்த பெண் குழைவான தோனியில் பேச தொடங்கினார். "சார் அது வந்து இங்க தப்பு நடந்துடுச்சு, எல்லாருக்குமே இதுதான் பிளான். உங்களுக்கு இதில் நிறைய வசதி இருக்கு..." என்று கூற ஆரம்பித்தார். நான் இடையில் மறித்து, "இதை எல்லாம் நான் கேட்டாகி விட்டது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்." என்று கேட்டேன். அவர், "சார் உங்களுக்கு நியாயமா இணைப்பு வேகம் கால் பங்காக குறைந்திருக்க வேண்டும், ஆனால் பாதிதான் குறைந்திருக்கிறது. வந்தவரை லாபம்தான்." என்று கூறினார். நான் கடுப்பில் போனை வைத்து விட்டேன்.

இதற்குள் அந்த மாத பில்லிங் சைக்கிள் முடிந்து விட்டது. என் இணைப்பு பழைய வேகத்துக்கே வந்து விட்டது. சரியாக ஒரு வாரம் கழித்து மறுபடியும் வேகம் பாதியாகி விட்டது. இது நடக்க வேண்டும் என்றுதான் நான் எதிர் பார்த்தேன். கண்டபடி தீட்டி ஷாக் கொடுக்கலாம் என்று கஸ்டமர் கேருக்கு போன் செய்து (எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டு) பேச ஆரம்பித்தேன். அவர், "சார் உங்கள் பிளான் படி 15 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்." என்று எனக்கு ஷாக் கொடுத்தார். நான் நேராக இணைப்பு வாங்கிய அலுவலகத்துக்கே சென்று விட்டேன். "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ரூல் சொல்கிறார்கள், முதலில் 100ஜிபி, பின்னர் 25 ஜிபி, தற்போது 15 ஜிபி என்கிறார்கள். எனக்கு இணைப்பு வேண்டாம் துண்டித்து விடுங்கள்!" என்று கூறினேன். உடனே அங்கிருந்தவர் பதறிக்கொண்டு, "நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன்." என்று அனுப்பி வைத்தார். இரண்டு நாள் கழித்து இணைப்பு முழு வேகம் வந்துவிட்டது. இருந்தாலும் எங்கோ தவறு நடப்பதாக என் துப்பறியும் மூளை சொன்னது.

இரண்டு நாள் ஆராய்ச்சி செய்ததில் நான் ஸ்பீட் செக் செய்யும் போது முழு வேகத்தில் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் டவுன்லோட் செய்யும் போது பாதி வேகத்தில் வருகிறது. உடனே கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு,(ஒப்பித்து விட்டு) விஷயத்தை கூறினேன். உடனே அவர், "உங்கள் கம்யூட்டரில் வைரஸ் இருக்கலாம், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறி விட்டார். நான் இணைப்பு வாங்கிய அலுவலகத்தில், மேல சொன்னவற்றை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, சில கேள்விகளையும் கேட்டேன். நம்ம உருவத்த பார்த்து படிக்காதவன் போலிருக்கு என்று பேசியவர், நான் சொன்ன விஷ்யங்களை கேட்டவுடன், விவரம் தெரிந்த ஆசாமி போலிருக்கு என்று, டெக்னீசியனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொன்னார். கூடவே அவரது மொபைல் எண்ணும் கொடுத்தார். இது நடந்தது, நவம்பர் 16. ஆனால் அவர் வருவதற்கு முன்னரே இணைப்பு தானாக முழு வேகத்தில் செயல் பட தொடங்கி விட்டது. இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அவ்வளவுதாங்க கதை. இதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

சம்பந்த பட்ட அந்த பெண் வேண்டுமென்றே என்னிடம் தெரிவிக்க மறந்திருந்தாலும், அடுத்த மாதமே என்னுடைய இணைப்பின் வேகம் பாதியாக குறைந்திருக்க வேண்டும். நடக்கவில்லை. ஆகவே ஏர்டெல்லே திட்டமிட்டு, என்னை முழு வேகத்தையும் உபயோகபடுத்த பழக்கி, பின் மெதுவாக தான் வேலையை காட்ட துவங்கி விட்டார்களோ?

பெங்களூரு ஆசாமியிடம் நான் பேசியவுடன் இணைப்பு வேகம் அதிகரித்தது தற்காலிகமாக  என் வாயை மூடவா? 

ஒவ்வொரு தடவை நான் போன் செய்யும் போதும் ஒவ்வொரு விதமான டீட்டைல் தரப்படுகிறதே எப்படி? வாய்ப்பே இல்லை என்று சொன்னவர்கள் இப்போது இணைப்பை தூண்டிக்கிறேன் என்று சொன்னதும், முழு வேக இணைப்பை வழங்கியது எப்படி?

வைரஸ் தாக்கி இருந்தால் இன்று வரை எனக்கு வேகம் பாதியாகத்தான் வந்திருக்க வேண்டும். மேலும் வைரஸ் தாக்கி இருந்தால் அச்சு பிசகாமல் பாதி வேகம் மட்டும் வருமா? நான் புகார் செய்ததும் முழு வேகம் வந்தது எப்படி? அந்த வைரசுக்கு எப்படி தெரிந்தது? ஏர்டெல்லில் போன் செய்து சொல்லி இருப்பார்களோ?

கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என்னையே இப்படி புரியாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றால், இந்த விவரம் தெரியாதவர்களை எல்லாம் எப்படி ஏமாற்றுவார்கள்?

எனக்கு தெரியும் இதுவும் அடுத்த பில்லிங் சைக்கிள் வரைதான். அதன் பின்...

                                                                                                                                 -தொடரும்......

டிஸ்க்:அவனவன் இரண்டு லட்சம் கோடி அடிச்சுட்டு போய்ட்டான், அவன கேக்க துப்பில்லை என்று யாரும் கமெண்ட் போடாதீர்கள்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


34 comments:

எல் கே said...

நண்பா,இதில் அவர்கள் தவறு ஒன்றுதான் முதலில் சரியாக தெளிவாக சொல்லாமல் விட்டது, மற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவு உபயோகம் தாண்டியவுடன், வேகம் குறைவது இன்று நடைமுறையில் உள்ளது. FAIR USAGE பாலிசி என்பது இதன் பெயர்

idroos said...

Phonil payanpadutthum GPRS il kooda intha pirachanai undu.

idroos said...

Phonil payanpadutthum GPRS il kooda intha pirachanai undu.

பாலா said...

@LK

முதன் முதலில் பேர் யுஸெஜ் பாலிசி இருப்பது எனக்கு முதலிலேயே தெரியும். ஆகவே தான் அது இல்லாத 256 kbps பிளானை எடுத்தேன். பின் அந்த பெண் அதே பிளானில் ஸ்பீட் மட்டும் அதிகரிக்கலாம் என்று சொன்னதால்தான் நான் 1 mbps வேகத்துக்கு மாறினேன். அப்படியே பேர் யுஸெஜ் பாலிசி இருந்தாலும், என்னுடைய சந்தேகங்களுக்கு என்ன பதில். முடியாது என்று சொல்லாமல், இணைப்பை தூண்டிக்கிறேன் என்று சொன்னதும், முழு வேகத்தை வழங்குவதின் நோக்கம் என்ன?

பாலா said...

@முசமில் இத்ரூஸ்

அதையும் கேள்வி பட்டிருக்கிறேன் நண்பரே... இது ஒரு வகையான மார்க்கெட்டிங்க் ஸிட்ரேடஜி என்று என் சகோதரர் கூறுகிறார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி நிறையா ஏமாத்துறாங்க. நான் இப்ப standard chartered பேங்க் ல hidden charges புடுன்கிட்டாங்கன்னு பயங்கர கடுப்பில் வேற பேங்க் போறேன்னு சொன்னேன். உடனே பேங்க் ல இருந்து வந்து எல்லா hidden சார்கேச்யையும் திரும்பி ரிவர்ஸ் பண்றதா சொல்றாங்க.

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அரசு நிறுவனங்களுக்கு போனா மெத்தனம், லஞ்சம் இந்த தொல்லை எல்லாம் இருக்குன்னுதான் தனியார் துறையை தேர்ந்தெடுக்கிறோம். இங்கு இந்த மாதிரியான பிரச்சனைகள். என்ன பண்றது?

karthikkumar said...

ஏர்டெல் ஒரு கொள்ளைக்காரன் பங்காளி நம்மதான் ஜாக்கிரதைய இருக்கணும்

தினேஷ்குமார் said...

//கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என்னையே இப்படி புரியாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றால், இந்த விவரம் தெரியாதவர்களை எல்லாம் எப்படி ஏமாற்றுவார்கள்?//

உங்களுக்கே இப்படினா அப்ப எங்களுக்கு அரோகரா தான்

எஸ்.கே said...

அச்சச்சோ! இதே பிரச்சினைதாங்க எனக்கும் இருக்கு! காரணம் இதானா! நான் என் கம்ப்யூட்டரில் பிரச்சினைன்னுல நினைச்சிகிட்டு இருக்கேன்!

என்ன பண்ணுறது இப்போ?

பாலா said...

@dineshkumar

நண்பரே... விஷயம் தெரிந்த யாரையாவது அணுகி விவரம் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி நன்ப்ரே...

பாலா said...

@எஸ்.கே

என்னை மாதிரி முட்டி மோத வேண்டியதுதான். வருகைக்கு நன்றி நண்பரே...

THOPPITHOPPI said...

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ஹிஹி அதாங்க BSNL சொன்னேன். சேவை மோசம் என்றாலும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவார்கள்

Anonymous said...

ஐடியா பிராட்பேண்ட் நல்லாருக்கும்னு நினைக்கிறேன்..பி.எஸ்.என்.எல் வேகம்தான் மிக அதிகம்..ஏர்டெல் திருடன் கிறது தெரிஞ்சதுதான்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நான் BSNL இல் broadband அதிகாரியாக இருந்த உரிமையில் சில விஷயங்கள்.
உங்கள் அனுபவத்தை விமர்சிக்க போவதில்லை. ஏனென்றால் airtel பற்றி எனக்கு தெரியாது.
schedule போட்டு ஸ்கேன் பண்ணி இருப்போம். இருந்தும் சற்று நேரம் முன்பு வந்த வைரஸ் கூட வேகத்தை குறைக்கும்.
அப்படி வேகம் குறைவதாக நாம் உணரும் போது temporary இன்டர்நெட் பைல் டெலீட் செய்து restart செய்து பார்க்கலாம். transparancy is our strength . so use BSNL

Unknown said...

We are using 512kbps day and 1mbps night unlimited plan

Before 2 months our speed is increased to 2 mbps, but that was for only 2 weeks

While customer care is called as, I strictly told about unlimited so they didnt do any thing, But now the speed is increased to 1mbps both in day and night time

but still we are downloading more than 25 gb

balajikannan said...

BSNL very good choice

சித்திரகுள்ளன் said...

என்னங்க இவ்வளவு அடி உங்கள அடிச்சிருக்காங்க. சத்தமே இல்ல.. நீங்க என்ன வடிவேலுவோட...

பழூர் கார்த்தி said...

பாலா, நான் BSNL பிராட்பேண்ட்தான் வைத்திருக்கிறேன், நன்றாக இருக்கிறது சேவை.. மாறி விடுங்களேன்..

ஏர்டெல் உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது..உங்களைப் போல் ஓரிருவர் மாறினால்தான் அவர்களும் உணர்வார்கள்..

<<>>

உங்கள் டிஸ்கியில் ஒரு தவறு:

//டிஸ்க்:அவனவன் இரண்டு லட்சம் கோடி அடிச்சுட்டு போய்ட்டான், அவன கேக்க துப்பில்லை என்று யாரும் கமெண்ட் போடாதீர்கள். //

இரண்டு லட்சம் கோடி அல்ல.. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி :-)

கலையன்பன் said...

அப்ப அதுகள் அப்படித்தானா?
இதே தொடர்கதையாப்போச்சுதே?

Unknown said...

நல்ல பதிவு நண்பா,
சென்னைல
எங்க வீட்டுல airtel தான் எடுக்கறதா இருந்தாங்க. நல்ல வேல தெளிவு படுத்திட்டீங்க. அப்போ எந்த line தான் better.

Anonymous said...

நன்றி நண்பரே, ஏர்டெல் பிராட்பேண்ட் வாங்க நினைத்தேன், தப்பிச்சேன்டா சாமி.

Anonymous said...

100GB நீங்க யூஸ் பண்ணியிருக்கீங்க. இது கொஞ்சம் அதிகம்தான் பாலா. ஏன்னா File sharing தளங்கல்ல ஏத்தறது, இறக்குறதுன்னு எல்லாரும் இறங்குனா என்னவாகும் யோசிங்க.

நானும் 512KB கனெக்ஷன் வாங்குனேன். ஓவரா டவுன்லோட் பண்ணி அது 256KB க்கு ஆயிடுச்சி. இதுக்கெல்லாம் அம்பி மாதிரி இறங்காதீங்க பாஸ்

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

520 is correct plan. pls change to this.

satheshpandian said...

இதெல்லாம் ஏர்டெல்லில் சகஜம். BSNL நல்லா தான் இருக்கும் ஆனால் என்ன பிரச்சினை என்றால் நம்ம தாலியை அறுத்திடுவானுங்க. ஏர்டெல்லில் அப்படி இல்லை.கொள்ளை அடிப்பானுங்க அவ்ளோ தான்

Philosophy Prabhakaran said...

நானும் ஒரு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தான்... என்னோட Point of viewல் இருந்து பதில் சொல்லுகிறேன்... நீங்கள் 100 இல்லை... ஆயிரம் முறை கஸ்டமர் கேருக்கு கால் செய்தாலும் உங்களுக்கான தீர்வு கிடைக்காது... அதற்காக கஸ்டமர் கேர் அதிகாரிகளை திட்ட வேண்டாம்... அவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்க பட்டிருக்கிறதோ அதையே அவர்கள் சொல்வார்கள்... சில நேரங்களில் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான தகவல்களை உளறிக்கொட்டுவார்கள்... உங்களுக்கு தீர்வு கிடைக்க ஒரே வழி நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்யாமல் Nodal Officer அல்லது Appelate Authority க்கு கால் செய்யுங்கள்... அதன்பின் பாருங்கள் கஸ்டமர் கேரில் உங்களுக்கு சலாம் போட்டு வேலை செய்வார்கள்...

Butter_cutter said...

bsnl best

r.v.saravanan said...

தகவலுக்கு நன்றி நண்பரே எப்படிலாம் நம்ம காசை எப்படிலாம் புடுங்குறாங்க

Anonymous said...

ஏர்டெல்லில் இந்த மாதிரி நிறைய கொள்ளை நடக்கிறது...நன்பா..
ஏதாவது அவசரத்திற்கு வெளிநாட்டுக்கு கால் செய்தால் ரிங் போறதும் தெரியாது..பேசவும் முடியாது...ஆனா...பதினெஞ்சு ரூபாய் கட்டாயிடும்..சரியாக..
திருட்டு தேவிடியா பசங்க...
இப்படி கொள்ளை அடிப்பதற்கு பதிலா...அவனுங்க வீ்ட்டு பொண்ணுகளை கூட்டி கொடுத்து தொழில் பண்ணலாம்.

ரிஷி said...

என் மொபைலில் ஏர்டெல்லில் இருந்து ஹலோட்யூன் சப்ஸ்க்ரிஷ்பனுக்காக அழைப்பு வந்தது. அதைக் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன். எந்தப் பாடலையும் செலக்ட் செய்யவில்லை. ஆனால் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டு விட்டதாகவும் ரூபாய் பத்து பிடிக்கப்பட்டு விட்டதாகவும் எனக்கு மெஸேஜ் வந்தது. இந்த கொடுமைய எங்க போயிச் சொல்றது???

Yoganathan.N said...

100 ஜிபி்க்கு அப்படி என்ன தான் டவுன்லோட் செய்யுறாங்களோ... ஹிஹி

Jokes apart, நீங்கள் கேட்டது ஒரு விதத்தில் நன்மைக்கே... யாரும் கேட்கலேனா, இவனுங்கள இன்னும் கைல பிடிக்க முடியாது.

ஹரிஸ் Harish said...

lk கூறியது உண்மை தான்..நானும் airtel தான் உபயோகிக்கிறேன்..குறிப்பிட்ட அளவு உபயோகம் தாண்டியவுடன், வேகம் குறைவது இன்று நடைமுறையில் உள்ளது.

பாலா said...

நண்பர்களே கடந்த நான்கு நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொண்டு விட்டதால் தங்களின் கருத்துரைகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். மற்றபடி வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்...

kalimuthu gagarin said...

ETHUKKUTHAN BSNL CONNECTION VENUNGIRaathu

Related Posts Plugin for WordPress, Blogger...