விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 1, 2012

என்ன மனுஷன்யா இவரு?

சில சொந்த வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் வெகு நாட்களாக வர முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும். வர வர தமிழ் சேனல்களின் மீதான ஈடுபாடே குறைந்து விட்டது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைக் கண்டால் கடுப்புதான் மிஞ்சுகிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். ஆனால் எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் அதில் ஃபேமிலி சென்டிமெண்ட், ஸ்லோமோஷன் காட்சிகள், அழுகை, கண்ணீர் என்று டிராமாக்களை அரங்கேற்றி கடுப்படிக்கிறார்கள்.அதிலும் சூர்யா பங்கு பெரும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில், பங்கேற்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் எல்லோருமே சூர்யாவிடம் வழிந்து தள்ளுகிறார்கள். தாங்க முடியல (பொறாமை?...... லைட்டா....) சிரிப்போலியில் இரவு 9 மணிக்கு கலகல மணி என்று கவுண்டமணி காமெடி ஒளிபரப்புவார்கள். அதை மட்டுமே ரசிக்க முடிகிறது. ஆனால் அதே நேரம் டிஸ்கவரி தமிழில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள்.



இதை பெரும்பாலானோர் பார்த்திருப்போம். Man Vs Wild என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி மிகப்பிரபலமானது. இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லி விடுகிறேன். விபத்து, இயற்கை சீற்றங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் என்னவெல்லாம் செய்து தப்பிக்கலாம்? இல்லை, உதவி வரும் வரை எவ்வாறு தாக்கு பிடிக்கலாம்? என்பதை படம் பிடித்து காட்டும் ஒரு நிகழ்ச்சி. காட்டில் தன்னந்தனி மனிதனாக பல சாகசங்களை செய்து காட்டுவார் இந்த நிகழ்ச்சியை வழங்கும் பியர் கிறில்ஸ். ஒரு சில காட்சிகள் மிரள வைக்கும், ஒரு சில காட்சிகள் பிரமிக்க வைக்கும், ஒரு சில காட்சிகள் அருவருப்பை உண்டாக்கும்.  ஏனென்றால் இவர் கையில் சிக்கும், பாம்பு, பல்லி, தவளை, பூச்சி, புழு என்று எல்லாவற்றையும் தின்று விடுவார். சில நேரங்களில் சமைத்து, பல நேரங்களில் பச்சையாக. யார் இந்த மனிதர் என்று தேடிப்பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன 

இவரது பெயர் எட்வர்ட் மைக்கேல் கிறில்ஸ் பிற்காலத்தில் எட்வர்டை பியர் ஆக மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே கராத்தே, ஸ்கை டைவிங்(பாராசூட் கட்டிக்கொண்டு விமானத்தில் இருந்து குதித்தல்), யோகா ஆகிய நிறைய விஷயங்களை மனிதர் கற்றுத்தேறிவிட்டார்.   எட்டு வயதில் இருந்தே எவரெஸ்ட் சிகரத்தின் மீது தீராத காதலைக்கொண்ட இவருக்கு, இவரது தந்தை பரிசாக எவரெஸ்ட் சிகரத்தின் போஸ்டரை பரிசளித்தாராம். அதை பத்திரமாக தன் படுக்கையறையில் ஒட்டி வைத்திருந்தாராம். தினமும் எழுவதும் அதைப்பார்த்தபடிதான், தூங்க போவதும் அதை பார்த்த பின்னர்தான். 

19ஆவது வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். 1996ஆம் ஆண்டு, பாராசூட் கட்டிக்கொண்டு குதிக்கும்போது அது சரியாக விரியாமல் போகவே 14,000 அடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். முதுகெலும்பு நொறுங்கி விட்டது. இவருக்கு மருத்துவம் அளித்த டாக்டர், "இவர் மயிரிழையில் தப்பி விட்டார். இல்லையென்றால், நிரந்தரமாக முடமாகி இருப்பார்.", என்று கூறினாராம். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்த முதல் வேலை, எவரெஸ்ட் மீது ஏறும் வேலைகளை தொடங்கியதுதான். ஒரே ஆண்டில் அதை நிகழ்த்தியும் காட்டினார்.தனது 23ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, மிக இளம் வயதில் எவரெஸ்ட் மீது ஏறிய பிரிட்டிஷ்காரர் என்ற பெருமையை பெற்றார். அந்த கணத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மண்டியிட்டு, அரைகுறை ஆக்ஸிஜனோடு தேம்பி தேம்பி அழுததையும், 20,000 அடிக்கு கீழிருந்து சூரியன் உதிப்பதை பார்த்ததையும் நினைவு கூறுகிறார்.

அதன் பிறகு நிறைய சாதனைகளை நிகழ்த்த தொடங்கினார், எல்லாமே ஒரு நல்ல நோக்கத்துக்காக பணம் திரட்டும் முயற்சியாகவே இருந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, 25,000 அடி உயரத்தில், கேஸ் பலூனில் தொங்கும் டேபிளில் உணவருந்தியது மற்றும், வட அமெரிக்காவில் இருந்து, ஐரோப்பா வரை, உறைந்த கடல் நீரில் மிகச்சிறிய படகில் பயணம் செய்து வட அட்லாண்டிக் கடலை கடந்தது. இந்த ரூட்டில்தான் டைட்டானிக் கப்பல் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.  ரத்தத்தை உறைய வைக்கும் இத்தகைய சாதனைகளை மிக அசால்டாக செய்த கிறில்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக மீடியாக்களில் தலைகாட்ட தொடங்கினார். இவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றது சேனல் 4இல் ஒளிபரப்பபட்ட Born Survivor:Bear Grylls என்ற நிகழ்ச்சிதான். பின்னர் இதே நிகழ்ச்சி, Man vs Wild என்ற பெயரில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. 

குறிப்பு:அருவருப்பான விஷயங்கள் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் என்றால், சிகப்பில் இருப்பதை படிக்காதீர்கள். 
இதில் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்தால் பிழைக்கலாம்? என்று செய்து காட்டுவார். அதிலும் உச்சகட்டமாக, ஒரு சாரைப்பாம்பை கொன்று, (உடலை தின்றபின்) அதன் தோலை மட்டும் உரித்து, அதில் தன்னுடைய சிறுநீரை சேகரித்து வைத்து, பாலைவனத்தில் தண்ணீரே கிடைக்காத நேரத்தில் பருகியதை சொல்லலாம். இதோடு மட்டுமல்லாமல், இறந்து கிடக்கும் ஆடு, எருமை, பன்றி, என்று எதையும் விட்டு வைக்காமல் தின்று விடுவார். நெருப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும். இல்லாத நேரத்தில் பச்சையாகவே தின்றுவிடுவார். அழுகிய உடல்களில் இருக்கும் புழுக்களையும் விடமாட்டார். மேலும் சில நேரங்களில் தண்ணீருக்காக வேண்டி, யானையின் சாணியை பிழிந்து நீர் அருந்தியும், ஒரு கரடியின் சாணத்தில் இருக்கும் செரிக்காத விதைகளை எடுத்து உண்டும் மிரள வைத்தார். இது போக, கண்ணில் ஒரு புழு, பூச்சி கிடைத்தாலும் விடுவதில்லை. சாப்பிடுவதோடு நில்லாமல் அவற்றின் சுவை என்ன? அதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் என்ன? என்பதையும் சொல்லுவார். 

பெரிய காட்டாற்று வெள்ளத்தை கடப்பது, செங்குத்தான மலை மீது ஏறுவது, அருவி வழியாக கீழே இறங்குவது அல்லது குதிப்பது என்று சாகசங்களையும் நிகழ்த்துவார். அதுபோக, காட்டில் இருக்கும் செடி கொடிகள், பாசிகள் அவற்றின் பண்புகள், விஷமுள்ளவை, விஷமில்லாதவை என்று எல்லாவற்றை பற்றியும் கூறிக்கொண்டே செல்வார். பல நேரங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போதுமான அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும், வேண்டுமென்றே சில ஆபத்துக்களை உருவாக்கி அதை கிறில்ஸ் எதிர்கொள்வதை போல அமைத்திருப்பதையும், இதை ஒளிபரப்புபவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். 

2012 மார்ச் மாதத்தோடு டிஸ்கவரி சேனாலோடு தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் கிறில்ஸ். இருந்தாலும் தனது அட்வெஞ்சர்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அதில் வரும் பணத்தை பெரும்பாலும் சேவை அமைப்புகளுக்கு கொடுத்து விடுகிறார். இவர் நிறைய புத்தகங்களும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய The Kid Who Climbed Everest என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. குடும்பத்தோடு தேம்ஸ் நதியில் மிதக்கும் படகில் வாழ்க்கை நடத்தி வருகிறார். தனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது தனது தந்தைதான் என்கிறார். "என் வாழ்வில் கடுமையாக எதையும் நினைக்கவில்லை. ஏனென்றால் கடுமையான நிகழ்வுகள் இல்லை என்றால் இன்று நானே இல்லை. அவைதான் என்னை உருவாக்கின. அப்படி சொல்லவேண்டுமானால், என் தந்தையின் மறைவுதான் எனக்கு மிகக்கடுமையான தருணம்." என்று கூறுகிறார். 

உழைத்துக்கொண்டே இருக்க விரும்பும் இம்மனிதரிடம், "உங்களுக்கு பிடித்த கட்டிடம் எது?", என்று கேட்டால், "மலைகள்", என்று சொல்லும் இவருக்கு பிடித்த திரைப்படம் Greystoke: The Legend of Tarzan. பொருத்தமான திரைப்படம்தான் என்கிறீர்களா?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க 

45 comments:

பால கணேஷ் said...

வித்தியாசமான புரோகிராம். வித்தியாசமான மனிதர். அருமையான பகிர்வு. நன்றி பாலா.

Rizi said...

Superb Details.. Amazing man!! Thanks for Sharing..Good work Bala,

கோவை நேரம் said...

நான் பார்த்து இருக்கறேன்...மீன் பிடித்து அதை பாறை சூட்டில் வேக வைத்து தின்றதை..அப்புறம் ஒட்டக கறி சாப்பிட்டது என....அருமை யான ப்ரோக்ராம்

Swami said...

sappidum bothu mattum ivarai parkka matten. ivar manusana,illai
kattumanusana?

பாலா said...

@பா.கணேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

பாலா said...

@Rizi

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கோவை நேரம்

உண்மைதான். அருவருப்பை தள்ளி விட்டு பார்த்தால் மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சி.

பாலா said...

@Swami

பல நேரங்களில் இவரது உடம்புக்கு எதுவும் ஆகி விடாதா என்று சந்தேகம் வரும். உண்மையிலேயே இவர் சாதாரண மனிதரே அல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு மிகப்பிடித்தமான நிகழ்ச்சி........ விரும்பி பார்ப்பேன்...... உண்மையில் இவர் ஒரு பிரமிக்கத்தக்க மனிதர்.........

Unknown said...

என்னை ஆச்சரியப்படுத்திய சாகச மனிதர்,எத்தனை கஷ்டமான நிலைகளையும் அசாரணமாக கடக்கும் மனிதர், பகிர்வுக்கு நன்றி பாலா

Unknown said...

இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை நான் பாக்கத் தவறிட்டேனே... அருவருப்பைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் பிரமிப்புங்கறதால இனி பார்த்துடறேன் ஸார். இப்பதான் கவனிச்சேன்... நீங்களும் வாசிக்கலாம் லிஸ்ட்ல என் தளமும் இருக்குன்றத. என்மேல வெச்ச நம்பிக்கைக்கு மிக்க நன்றி.

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா.

பாலா said...

@இரவு வானம்

கருத்துக்கு நன்றி நண்பரே. நான் தவறாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. அதிலும் தமிழ் டப்பிங் அசத்தல்.

பாலா said...

@Niranjanaa Bala

சீரியல்களில் சிக்கி இருப்பவர்களுக்கு மிக சிறந்த புரோகிராம். உங்கள் கருத்துக்கு நன்றி.

அப்புறம் நம்பிக்கையை காப்பாற்றி வருவதற்கு நன்றிகள். :)

K.s.s.Rajh said...

விந்தை மனிதர் அருமையான பகிர்வு பாஸ் நான் இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்தது இல்லை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்

இராஜராஜேஸ்வரி said...

நல்லவேளை பார்க்கவில்லை..

MARI The Great said...

சுவாரஸ்யமான மனிதர் தான்., பதிவும் சுவாரஸ்யமாகவே சென்றது ..!

Unknown said...

நான் இவருடைய ரசிகன்! தெரியாத விஷயம் பல சொல்லியிருக்கிறீர்கள் நன்றி!

Gobinath said...

என்்னை மிகவும் கவர்ந்த பியர் கிறில்ஸ்சை பற்றி அறியாத பல தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி.

r.v.saravanan said...

தெரியாத விஷயம் நான் பார்க்காத நிகழ்ச்சி இது தகவல்கள் தந்தமைக்கு நன்றி பாலா


பங்கேற்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் எல்லோருமே சூர்யாவிடம் வழிந்து தள்ளுகிறார்கள். தாங்க முடியல (பொறாமை?...... லைட்டா....)


கண்ணை கட்டுதா

Unknown said...

சாகச மனிதர் வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

நம்மலோட ஃபேவெரைட்டு சானல் டிஸ்கவரிதான்.எல்லா புரோகிராமும் அருமையாக இருக்கும் .இதில் முதலில் பிடித்தது மேன் விஸ்சஸ் வைல்டு பதிவுக்கு நன்றி !

ஆத்மா said...

சார் இவர இப்போதைய போதி தர்மர் என்னு சொல்லலாமா..?

ஆத்மா said...

பெரும்பாலும் நான் டிஸ்கவர் சனல் பார்ப்பதில்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்று சொல்லியுள்ளீர்கள்..இனி மேல் பார்க்க வேண்டியதுதான்

பகிர்வுக்கு ரொம்ப நன்றிசார்...:)

Senthilkumar said...

I love Bear,since i am leaving in abudhabi i couldn't watch his program please can anyone send me the online link to watch his program?

கலாகுமரன் said...

இவரின் சாகசங்களை வியந்து பார்த்திருக்கிறேன். இளவயதில் எவரெஸ்ட் தொட்டது மற்றும் அவரின் வாழ்க்கை சாகசங்கள் குறித்த விரிவான அலசல். பதிவுக்கு நன்றி.

பாலா said...

@K.s.s.Rajh

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

அருவருப்பை மட்டும் தள்ளி விட்டு பார்த்தால் மிக அருமையான நிகழ்ச்சி. நிச்சயம் பாருங்கள். மிக்க நன்றி

பாலா said...

@வரலாற்று சுவடுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@Gobinath

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி நண்பரே. உண்மைதான் பார்க்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே கண்ணை கட்டிவிடுவதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. :)

பாலா said...

@புலவர் சா இராமாநுசம்

ரொம்ப நன்றி நண்பரே

பாலா said...

@Arif .A

உங்கள் கருத்துதான் எனக்கும் நண்பரே. மிக்க நன்றி

பாலா said...

@சிட்டுக்குருவி

கண்டிப்பாக பாருங்கள் சார். மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சி

பாலா said...

@Senthilkumar

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இணையத்தில் டொரண்டில் கிடைக்கும் தேடி பாருங்கள்.

பாலா said...

@கலாகுமரன்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

Karthikeyan said...

பூச்சி உணவு என்று சொல்லிக்கொண்டே வண்டை வாய்க்குள் போட்டு லேஸ் போல திங்கும் போது நமக்கு குமட்டிவிடும். சுவை எப்படி என்றும் ஒரு பைனல் டச் கொடுப்பார்..

நல்ல பதிவு

சீனுவாசன்.கு said...

விஜய் டி.வி.விளம்பரத்த விட்டுபுட்டீங்களே!...

சீனு said...

நானும் வலைபூ பக்கம் வந்து வெகு நாட்களாகிவிட்டது பாலா அண்ணா. அருமையான பதிவு, ஒரு மனிதரை பற்றி தங்கள் தங்கள் வார்த்தைகளில் கூறிய விதம் அருமை

Athisaya said...

இதுவரை அறிந்ததில்லை;தகவலுக்கு மிகவே நன்றி வாழ்த்துக்கள்..!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா சார், சிகப்பா உள்ளதைப் படித்து விட்டேனே.! முருகா தலை சுற்றுகிறது.
அருமையான அழகான தமிழ் நடை, உங்களின் எழுத்து.
உங்களுக்கும் சிஸ்கவரி சேனல்தான் பிடிக்குமா, எனக்கும் அதுதான் விருப்பமான சேனல்ஸ். சாகசங்கள் சுவாரிஸ்யங்கள் நிறைந்தவை.
பதிவு அற்புதம். தொடருங்கள் வாழ்த்துகள்.

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு பாலா சார். இப்படி ஒரு சாதனையாளரை பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ADMIN said...

நிறைய தகவல்களைத் தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி..! இந்த நிகழ்ச்சிகளை நானும் பார்த்ததுண்டு.

மாலதி said...

உண்மையில் இந்த பதிவு மாறுப்பட்டதாக இருந்தாலும் சிறப்பானதே இயற்கையோடு யணிந்த வாழ்க்கை வாழும் இந்த மாறுபட்ட மனிதரை பாராட்டலாம் அதேபோல இந்த இடுகை இட்டவரையும் பாராட்டலாம்

Related Posts Plugin for WordPress, Blogger...