விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 21, 2012

வெட்டி அரட்டை - ஆதீனம்.... ஐ(யய்யோ)பி‌எல்


இது உண்மையா பொய்யா?
சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட்டும், மல்யுத்தமும் மிகவும் பிடித்தவை. இங்கே மல்யுத்தம் என்று நான் குறிப்பிடுவது WWF என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களே அதைத்தான். கிரிக்கெட் புரிய ஆரம்பித்த வயதில் இருந்தே மல்யுத்ததையும் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டேன். அதில் வரும் வீரர்கள், அவர்கள் களத்தில் நுழையும்போது ஒலிக்கப்படும் இசை என்று ஒவ்வொன்றையும் ரசித்தேன். பதின்ம வயது வரை கூட அதில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றே நம்பி வந்தேன். வீரர்கள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் காரசாரமாக திட்டிக்கொள்வது, அவர்கள் அணிக்குள்ளாகவே துரோகம் செய்து கொள்வது, உணர்ச்சி மிக்க தருணங்களுள் கண்ணீர் ததும்ப அழுவது, என்று அனைத்து இளம் ரசிகர்களையும் கட்டிப்போடும் ஒரு விளையாட்டு அது.

இன்றும் ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே போகும் ஒரு விளையாட்டு இந்த மல்யுத்தம்தான். இந்த விளையாட்டின் சிறப்பம்சமே, முதலில் மந்தகதியில் தொடங்கி, முடிவு நெருங்க, நெருங்க, இருக்கை நுனிக்கே நம்மை வரவைத்து விடுவார்கள். எந்த நேரத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்லவே முடியாத அளவுக்கு த்ரில்லிங்காக இருக்கும். வாரா வாரம் நடக்கும் இந்த விளையாட்டின் முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமோ, அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நடக்கும். அதிலும் உச்ச கட்டமாக, ரஸ்ல்மேனியா(Wrestle Mania) என்று ஒரு போட்டி வருடத்துக்கு ஒருமுறை நடக்கும். இது கிட்டத்தட்ட உலகக்கோப்பை போல மொத்த சுவாரசியங்களின் அம்சமாக இருக்கும். 

இதற்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரெக்கார்டுகளை தானே முறியடித்து வருகிறது. இந்த போட்டியில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சில வீரர்களை பாத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வரலாற்றை போலவே இதிலும் கெட்டவர்கள் கையே ஓங்கி இருக்கும். நல்லவர்கள் பெரும்பாலும் தோற்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கெட்டவர்களின் ஒட்டுமொத்த வெற்றிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நல்லவர்களின் ஒரே ஒரு வெற்றி அமைத்து விடும். அந்த நேரத்தில் ஏற்படும் உணர்ச்சி பெருக்குக்கு அளவே கிடையாது. கவர்ச்சிக்கும் கிளுகிளுப்புக்கும் கூட இதில் பஞ்சமில்லை. சில நேரங்களில் ஹாலிவுட் நடிகர்கள் கூட இந்த அரங்குகளில் தோன்றியிருக்கிறார்கள்.

பதின்ம வயதை கடக்கும்போதுதான், இவை அனைத்தும் உட்டாலக்கடி என்பதை புரிந்து கொண்டேன். வீரர்கள் வாங்கும் அடி அனைத்தும் உண்மை. ஆனால் அதில் நடக்கும் துரோகம், பழிவாங்கல், ஆக்ரோஷம், ஆனந்தம் அனைத்தும் பொய் என்பதை உணர்ந்து கொண்டேன். இவை அனைத்தையும் புரிந்து கொண்டாலும், ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியாது. என்னால் மட்டுமல்ல, பெரும்பாலானோர்களால் அது முடியாது. ஏனென்றால் நல்லவர்கள் அரிதாகத்தான் இதில் ஜெயிப்பார்கள். 

ஒரு வீரர் இன்னொரு வீரரை தாக்கும்போது, அவருக்கு குறைந்த பட்ச வலி ஏற்படுவது போலவே தாக்குகிறார், அடி வாங்கியவர் அதிக பட்ச வலி ஏற்பட்டதைப்போல நடிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதே போல எல்லா போட்டிகளின் முடிவையும் முதலிலேயே நிர்ணயித்து விடுவார்கள், பிறகு அதன் சுவாரசியத்தை கூட்ட நிறைய அம்சங்களை சேர்ப்பார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என்னதான் இவர்களைப்பற்றி புரிந்து கொண்டாலும், இதை இன்றும் நான் ரசிப்பதை என்னால் மறுக்க முடியாது. ஒரு அதிரடி சினிமா போல, சுவாரசியமாக இருப்பதால் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஒரே வித்தியாசம், முன்பெல்லாம் உணர்ச்சி பொங்க பார்த்தேன். இப்போதெல்லாம் சும்மா ஜாலிக்காக பார்க்கிறேன். யார் ஜெயித்தாலும், தோற்றாலும் வருத்தம் ஏற்படுவதில்லை. 

உலகளவில், ஒலிம்பிக் போட்டிகளில் நடக்கும் மல்யுத்தத்துக்கும், இதற்கு துளியளவும் சம்பந்தமே இல்லை என்றாலும், “இது அந்த மல்யுத்தம் அல்ல, ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் வேறொரு விளையாட்டு.” என்று மனதுக்கு பழகி விட்டது.

“சரி, இப்போ எதுக்கு இத்தனை விஷயங்களை பேசுகிறாய்?” என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள கட்டுரையை எழுதி முடித்தபின் மல்யுத்தம் என்ற வார்த்தைக்கு பதில் கிரிக்கெட் என்றும், WWF என்ற வார்த்தைக்கு பதில் ஐ‌பி‌எல் என்றும் மாற்றி எழுதினாலும் என் எண்ணத்தின் வெளிப்பாடு அப்படியே பொருந்துகிறது. ஆமாம் ஐ‌பி‌எல் உண்மையான கிரிக்கெட் அல்ல. ஆனாலும் ஐ‌பி‌எல் எனக்கு சுவாரசியமாகவே இருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் சென்னை மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற ரீதியில் ஐ‌பி‌எல் போட்டிகளை பார்ப்பேன். இப்போது, யார் ஜெயித்தாலும் பரவாயில்லை, அந்த மூன்று மணிநேர சுவாரசியத்துக்காக மட்டுமே பார்க்கிறேன். 

சும்மா சொல்லக்கூடாது இந்த வருடம், முன்னெப்போதும் பொலில்லாமல், சர்ச்சைகளுக்கும், சுவாரசியங்களுக்கும் பஞ்சமே இல்லை. லீக் ஆட்டத்தின் கடைசி தினம் வரை, அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போகும் அணிகள் எவை என்பதை மர்மமாகவே மெயிண்டேயின் செய்தது மிக அருமை. என்னை பொறுத்தவரை இது கிரிக்கெட் அல்ல. கிரிக்கெட் போலவே நடத்திக்காட்டப்படும் ஒரு சுவாரசிய தனியார் ரியாலிட்டி ஷோ.

'ஆ'.... தீனமும் சில அல்பைகளும்
இப்போது ஊடகங்களின் ஹாட் டாபிக், மதுரை ஆதீனம் குறித்த சர்ச்சைதான். என்னை பொறுத்தவரை ஒரு சமய சங்கம் என்பது அந்த குறிப்பிட்ட சமயத்தின் சேவைமையமாக செயல் பட வேண்டும். அந்த சமயத்தின் அடிப்படை விஷயங்களை எல்லோருக்கும் எடுத்து கூறவேண்டும். இந்து மாதத்தின் அடிப்படையே, ‘தான்’ என்ற அகங்காரத்தை விட்டோழிப்பதுதான். அதை நோக்கியே அனைவரும் பயணம் செய்ய வேண்டும். ஆனால் முன்னாள் ஆதீனமும், இந்நாள் ஆதீனமும் பேசும் பேச்சுக்களை பார்த்தால், “நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். வாயை மூடிட்டு போங்கடா வெண்ணைகளா…”, என்பது போல இருக்கிறது. இது அகங்காரத்தின் உச்சம். 

இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னும் இவர்களின் பின்னால் செல்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை. நித்தி அந்த தப்பு செய்தார் இந்த தப்பு செய்தார் என்பதை குறித்து சர்ச்சை எழுப்ப தேவை இல்லை. எப்போது ‘தான்’ என்று நினைக்க தொடங்கி விட்டாரோ அப்போதே அவரும் ஒரு சாதாரண மனிதரே. அவர்கள் சாமியார்கள் அல்ல. சமய சங்கத்தலைவர்கள். அவ்வளவே....

இது இப்படி இருக்க, இதை வைத்து சில நண்பர்கள் இந்து மதத்தையே இழிவு படுத்தும் நோக்கில் எழுதி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன்பே சொன்னது போல ஒரே ஒருவரை வைத்து ஒரு ஒட்டுமொத்த சமுதாயமும் மதிப்பிடப்படுமானால் அதற்கு இரண்டே காரணங்களாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவரது அறியாமை காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட இந்த விஷயத்தில் போதிய அறிவு இல்லாமையே இப்படி நினைக்க, பேச, எழுத, காரணமாக இருக்கும். மற்றொன்று விஷமத்தனம். அதாவது வேண்டுமென்றே ஒன்றை பழிப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்கும்போது, இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு பழிப்பது. இது இந்து மதத்துக்கு மட்டும் நடக்கும் விஷயமல்ல. அந்தந்த கால கட்டத்தில் எல்லா பிரிவினருக்கும் நடப்பதுதான். இப்போது இங்கே நடக்கிறது.

நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?
மாவோயிஸ்டுகள். இந்த பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு உத்வேகம் பிறப்பதை விட சமீபகாலமாக வெறுப்பே ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து, அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து அவர்களைக் காப்பதற்காக உருவான ஒரு அமைப்பு என்பது மாறி, “எங்கே மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய் விடுவார்களோ?” என்கிற எண்ணம் இந்த மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்டு விட்டோதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அரசாங்கம் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது காட்டும் வெறுப்பையே இவர்கள் ஏனைய மக்களிடம் காட்டுவது போல தெரிகிறது. 

கலெக்டர் கடத்தல், ரயிலுக்கு குண்டு வைத்தது என்று தங்களை இப்போது மக்கள் விரோத சக்திகளாக காட்டத்தொடங்கி இருக்கிறார்கள் இந்த மாவோயிஸ்டுகள். இவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா, ஒபியம் முதலியவற்றையும் பயிரிடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இது இப்படி இருக்க, இவர்களைப்பற்றி இன்னுமும் சிலர் வெக்கமில்லாமல், கலெக்டர் கடத்தல் முதற்கொண்டு இவர்கள் செய்வது சரி என்பது போல எழுதி வருவது கடுப்பை கிளப்புகிறது.

மேலே நான் கூறி உள்ள எல்லா செய்திகளுக்குள்ளும் ஒழிந்திருப்பது ஒரே கருத்துதான். எந்த ஒரு விஷயமும் அது எந்த காரணத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதை விட்டு தடம் மாறி போக தொடங்கும்போது, நிச்சயமாக மக்கள் மத்தியில் மதிப்பை இழக்க தொடங்குகின்றன. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, சமய அமைப்பாக இருந்தாலும் சரி, வலைத்தளமாக இருந்தாலும் சரி, தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் சரி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

42 comments:

Unknown said...

அலசி ஆராய்ந்து காய போட்டுட்டீங்க, தலைவர் பாஷயில சொன்னால் எல்லாம் மாயா, எல்லாம் சாயா

முத்தரசு said...

எம்புட்டு முக்கியமான விடயங்களை பகிர்ந்து விட்டு வெட்டி அரட்டைன்னு....தலைப்பு ம் ம்

arasan said...

தொலைநோக்கிய சீரான பார்வை உங்கள் பதிவில் தெரிகின்றது ..
சில கருப்பு ஆடுகள் எங்கும் எதிலும் இருக்கத்தான் செய்யும் போலிருக்கின்றது நண்பா ..
நல்ல பதிவு என் வாழ்த்துக்கள் ...

ஆத்மா said...

நான் இந்த மல்யுத்தத்த சின்ன வயசிலிருந்தே வெருத்துவிட்டேன்...எனக்கு அப்பவே தெரியும் இதுவெல்லாம் போலியென்று ஆனால் என் நண்பர்கள் நம்பமாட்டானுகள்.

இந்த பதிவ அவனுகளுக்கு காட்டி நம்ப வைக்கிறேன்

r.v.saravanan said...

எப்போது ‘தான்’ என்று நினைக்க தொடங்கி விட்டாரோ அப்போதே அவரும் ஒரு சாதாரண மனிதரே.
yes bala

r.v.saravanan said...

எந்த ஒரு விஷயமும் அது எந்த காரணத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதை விட்டு தடம் மாறி போக தொடங்கும்போது, நிச்சயமாக மக்கள் மத்தியில் மதிப்பை இழக்க தொடங்குகின்றன. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, சமய அமைப்பாக இருந்தாலும் சரி, வலைத்தளமாக இருந்தாலும் சரி, தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் சரி.

repeat

ஹாலிவுட்ரசிகன் said...

சின்னவயசுல டீவில எல்லாம் கிடையாது. சி.டி தான். வாராவாரம் வரும். வெறித்தனமா ரெஸ்லிங் பார்த்த காலம் அது.

ஒரு நாள் பசங்க எல்லாம் ஸ்கூல் கட் அடித்துட்டு ரெஸ்ல்மேனியா பார்க்க, வாத்தி அன்றைக்கு வீட்டுக்கே வந்து வெளுத்ததில் வெறி கொஞ்சம் குறைந்தது. அப்புறம் எல்லாம் பொய்னு தெரிஞ்சதும் சுத்தமா விட்டாச்சு.

Prem S said...

ipl-wwf ஒன்றா உங்க அலசல் அப்படி தான் தோணுகிறது ..அருமை

ராஜி said...

எப்போது ‘தான்’ என்று நினைக்க தொடங்கி விட்டாரோ அப்போதே அவரும் ஒரு சாதாரண மனிதரே
>>
ரொம்ப கரெக்டா சொன்னிங்க சகோ. சாமியை நம்பலாம். சாமியாரை மட்டும் நம்ப கூடாது

Yoga.S. said...

வணக்கம் பாலா!அருமை.நன்றாக விபரித்து அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள்!யார் கேட்கிறார்கள்?ஹி!ஹி!ஹி!

Jayadev Das said...

இந்த ஐ.பி.எல் கூத்தை எந்த கேவலமான ஒன்றோடு ஒப்பிடுவதென்று யோசித்துக் கொண்டிருந்தேன், நீங்க அதை நச்சுன்னு சொல்லிட்டீங்க, அருமை. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ ஐ.பி.எல் லின் முதல் ரேன்க் அணியாக மாற்றவது தான் என்னோட லட்சியம்னு எவனோ சொன்னப்போ நகைப்புதான் வந்தது.

Jayadev Das said...

\\ஆனால் முன்னாள் ஆதீனமும், இந்நாள் ஆதீனமும் பேசும் பேச்சுக்களை பார்த்தால்\\ நித்தி சொல்றாரு, எதிர்க்கும் ஆதீனங்கள் மரியாதைக்குரியவர்களாம், இவர் போற்றி வணங்கத் தக்கவர்களாம், அதே சமயம் அவர்கள் சொன்னதை வாபஸ் வாங்கவில்லை என்றால் இவரோட சிஷ்ய கோடிகள் அவர்களை என்ன செய்வார்கள் என்று இவருக்கே தெரியாதாம், அவர்களைக் கட்டுப் படுத்த இவராலும் முடியாதாம். மிரட்டைளை எப்படி நயமாகச் சொல்றார் என்று வியந்தேன். இந்த நம்பர் 292, 293 என்பதை விட 420 என்பது இவர்கள் இருவருக்குமே பொருந்தும். 'அந்த மேட்டரில்' ஹா...ஹா...ஹா...

tamilvaasi said...

காசு, பரபரப்பு, கூட்டம் இவைகளே இந்த விளையாட்டுகளுக்கு முக்கியம்.

நல்ல அலசல் பாஸ்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

என்ன ஒரு உள்குத்து.. கில்லாடிங்க, முடியல..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

எங்க தாத்தாவிற்கு ஸ்ட்ரொக் வந்ததிற்கே இந்த மல்யுத்தம் தான் காரணம். நம்பி விட்டாறோ உண்மையென்று.!? அப்ப்டியொரு டென்ஷனாகப் பார்ப்பார். கரண்ட் இல்லையென்றால், கரண்ட் உள்ள கடைகள் கிராமங்கள் தேடி போய்விடுவார். அவ்வளவு கிரேஸி..! அவர் மல்யுத்தம் பார்க்க்கும் போது யாரும் பக்கத்தில் நிற்க முடியாது.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வரும். ப்ப்பா..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஆனால், மல்யுத்தத்தையும் ஆதினத்தையும் ஒரே தளத்தில்... எப்படி பாலா சார்.!?

Unknown said...

கிரிக்கெட் போலவே நடத்திக்காட்டப்படும் ஒரு சுவாரசிய தனியார் ரியாலிட்டி ஷோ

>>>>>>>

இது டாப்பு மாப்ளே...

..............

மக்களுக்காக மக்களால்(!) இப்படி அழைக்கப்படும் அமைப்புகள்...போகப்போக தங்களை வளப்படுத்திக்கொள்வது எப்படி என்பதை தான் யோசிக்கின்றன!

சீனு said...

கொஞ்சம் லேட்னு நினைக்கிறன் மன்னிச்சுக்கோங்க...
நீங்கள் கூறிய மல்யுத்தம் நான் பார்ப்பேன் ஆனால் அதை பார்த்துவிட்டு அதை போலவே சண்டை போடத் தொடங்கியதால் வீட்டில் அதற்க்கு எதிர்ப்பு வரவே நிறுத்தப் பட்டது. பார்ப்பது மட்டுமே, சண்டை நிற்கவே இல்லை.

// கிரிக்கெட் போலவே நடத்திக்காட்டப்படும் ஒரு சுவாரசிய தனியார் ரியாலிட்டி ஷோ./
எனக்கு ஐ பி எல் பிடிக்கவே இல்லை என்ன காரணம் என்பதற்கு நீங்கள் மேற்கூறிய ஒருவரி விளக்கம் சாலச் சிறந்தது

//அது விளையாட்டாக இருந்தாலும் சரி, சமய அமைப்பாக இருந்தாலும் சரி, வலைத்தளமாக இருந்தாலும் சரி, தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் சரி.//

உண்மையான வார்த்தைகள். எதுவுமே அதன் தனித்துவத்தில் இருந்து நழுவும் பொழுது வீனாத்தான் போகிறது.

ஆதீனம் போன்ற சகடைகள் பற்றி குறிப்பு ஏதும் குடுக்க விருப்பம் இல்லை. மொத்தத்தில் அருமையான பதிவு. தேர்ந்த எழுத்தர் எழுதியதை படிப்பது போன்ற எண்ணம் . வாழ்த்துக்கள்

Unknown said...

அந்நாட்களில் வீரத்தை வெளிகாட்டவே விளையாட்டுகள் ஆனால் இப்போது அவற்றை சூதாட்டமாக்கி விட்டார்கள்.

எனக்கு யோண் சீனாவை பிடிக்கும்......

பாலா said...

@இரவு வானம்

சரியா சொன்னீங்க. நன்றி நண்பரே

பாலா said...

@மனசாட்சி™

எதுவுமே எழுத தோன்றாத எழுதுவதாலேயே அந்த தலைப்பு.

பாலா said...

@அரசன் சே

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@சிட்டுக்குருவி

சின்ன வயதில் ஓகே இப்போது கூட நம்ப மறுக்கிறார்களா?

பாலா said...

@r.v.saravanan

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

இங்கேயும் அதே கதைதான். நன்றி நண்பரே

பாலா said...

@PREM.S

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ராஜி

நீங்களும் கரெக்டா சொல்லி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி

பாலா said...

@Yoga.S.

அதானே சொன்னா யார் கேட்கிறார்கள். நாம இப்படி புலம்பிட்டு போக வேண்டியதுதான்.

பாலா said...

@Jayadev Das

சும்மா பொழுது போக்கிற்கு ஒரு டிவி நிகழ்ச்சியை பார்ப்பதைபோல வேண்டுமானால் ஐ‌பி‌எல் போட்டிகளை பார்க்கலாம். வெறித்தனமாக பார்ப்பது அர்த்தமற்றது.

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ஆமா மேடம் நிறைய பேர் மிகவும் வெறித்தனமாக இந்த நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.

ஆதீனமோ, மல்யுத்தமோ மக்களை ஏமாற்றுவதில் எல்லாம் ஒரே தளம்தானே? கருத்துக்கு நன்றி மேடம்.

பாலா said...

@விக்கியுலகம்

கருத்துக்கு நன்றி மாப்ள

பாலா said...

@சீனு

நானும் உங்களைப்போல சண்டை போட்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் அடியே விழும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@எஸ்தர் சபி

எனக்கும் ஜான் சீனா பிடிக்கும். உங்க கருத்துக்கு நன்றிங்க.

selvasankar said...

boss appo intha varusha ipl la yaaruku champion lot vilunthurukku? unga karuthu enna? nan ninakuren chennaiku thannu/////

பாலா said...

@selvasankar

சென்னை இறுதி வரை முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தோனி முகத்துக்கு டிக்கெட் அதிகம் விற்கும். ஆனால் இறுதியில் வெல்லும் வாய்ப்பு பற்றி தெரியவில்லை. எதையுமே கணிக்க முடியவில்லையே? ஒரு வேலை நமக்கு அறிவு கம்மி போலிருக்கிறது.

பால கணேஷ் said...

எக்ஸலண்ட் பாலா. ஐபிஎல் கிரிக்கெட் ரியாலிட்டி ஷோ என்பதில் யாருக்கும கருத்து வேறுபாடு இருக்காது. ஆனாலும் சுவாரஸ்யத்துக்காகப் பார்க்கத்தான் செய்கிறார்கள். கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களை நம்புகிறவர்களை எண்ணி பரிதாபப்படுவதை விட வேறு என்ன செய்வது? வெட்டி அரட்டை இம்முறை மிகவே உபயோகமான அரட்டையாகி விட்டது. நன்று.

கலாகுமரன் said...

wwf குழந்தைகளில் பெண்பிள்ளைகளை அதிகம் ஈர்ப்பதில்லை. ஆனால் ஆண் குழந்தைகள் அதிகம் இதைப் பார்பதை தடுக்க வேண்டும். அவர்கள் மனதில் குரோத மனப்பான்மை வளரும். சென்சார் போர்டு - tv விளம்பரங்களுக்கு இருக்கானு தெரியவில்லை அல்லது ரூலை ஏமாற்றி அனுமதி வாங்கிவிடுகிறார்களா ?.

கலாகுமரன் said...

மாவோயிஸ்டுகள் தீவிர வாதிகளாகவே மக்கள் சிந்திக் கிறார்கள். கம்யூனிசம் மக்கள் நலம் எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. தங்கள் இயக்கத்தை வளர்த்துவதே முதல் குறிக்கோள். சில பத்திரிக்கைகள் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது.

Karthikeyan said...

நச்சுன்னு சொல்லீருக்கீங்க தல.. துறவிக்கு எதுக்கு தல கிரீடம் எல்லாம். பரதேசி வாழ்க்கைன்னு வந்ததுக்கு அப்புறம் கோடி பணம் இவுங்களுக்கு எதுக்கு..?

மாலதி said...

மிகசிறந்த செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு விடைதேட முயற்ச்சி செய்து இருக்கிறீர்கள் சிந்த ஆய்வு ஒருகன்னோட்ட்டத்தில் சரியென படும் விடயம் மற்றொரு இடத்தில் மிகவும் பிழையாக புரியவரும் எதையும் ஆய்வு கண்ணோட்டத்தில் மக்களின் தூய நலனில் பார்க்கத் ஹோடங்க விடை கிடைக்கும் இடுகைக்கு பாராட்டுகள்

Unknown said...

சாமியார்கள்னாலே இப்பல்லாம் பயம் தான் வருது. இந்த கிரிக்கெட்டை ஏன் விழுந்து விழுந்து பாக்கறாங்கனறதும் எனக்கு ஆச்சரியமான விஷயம்தான். அரட்டை நல்லாவே இருக்குது.

Related Posts Plugin for WordPress, Blogger...