நமது புராணங்களிலும் சரி படைப்புகளிலும் சரி சிருங்கார ரசம் என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட்டே வந்திருக்கிறது. விளக்கமாக சொல்வதாக இருந்தால், நூறு பக்கத்தில் ஒரு படைப்பு எழுதப்பட்டால் அதில் பாதி பக்கங்களுக்கும் மேலே அதில் வரும் பெண்களை வர்ணிப்பதிலேயே செலவளிக்கப்படுகின்றன. ஆக எல்லா படைப்புகளுமே காதல், காமத்தை தொட்டு செல்ல தவறுவதில்லை. இத்தகைய விஷயங்களை ஏட்டில் படைக்கும்போது இருக்கும் சிரமங்களை விட அதை தெருக்கூத்தாகவோ, நாடகமாகவோ, திரைப்படமாகவோ காட்சிப்படுத்தும்போது அதிக சிரமம் இருக்கிறது. காரணம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. எழுத்தாளர் எழுத்தாக வடிக்கும்போது அது குறித்த கற்பனையை படிப்பவரிடமே விட்டு விடுகிறார். ஆனால் காட்சி படுத்தும்போது உண்மையிலேயே நடப்பதால், அது சிலரை திடுக்கிட வைக்கலாம், முகம் சுழிக்க வைக்கலாம், நெளிய வைக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி அத்தகைய விஷயங்கள் நாம் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் அரங்கேறியே இருக்கின்றன. சரி எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்று கேட்கிறீர்களா?
இப்படி பட்ட காட்சிகள் தெருக்கூத்து, நாடகங்களில் அரங்கேறும்போது எவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக திரைப்படங்களில் ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் சினிமாவில் வேண்டுமென்றால் ஒரே காட்சியை எந்த ஆங்கிளில் வேண்டுமானாலும் எடுத்து காட்டி விட முடியும். எவ்வளவு குளோஸ் அப்பிலும் எடுத்து காட்டி விட முடியும். அதே போல திரைப்படங்களின் ரீச் என்பது பட்டி தொட்டிகள் வரை சென்றடையக் கூடியது. சினிமாவில் பெண்கள் தோன்றுவதையே ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட அந்த காலத்தில், கவர்ச்சியாக தோன்றி அதிர வைத்தவர்களும் உண்டு. மனிதனுக்கு பழைய விஷயங்களை அசை போடுவது எப்போதுமே அலாதியானதுதான். அதே ரீதியில் நோஸ்டால்ஜிக்க்காக ஒரு தொடர் எழுத வேண்டும் என்று நினைத்தபோது தோன்றியதே இந்த தொடர்.
அன்றைய இளைஞர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை தூக்கத்தை தொலைக்க காரணமான கவர்ச்சி நடிகைகள் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கண்டிப்பாக இது ஆபாசமான ஒரு தொடர் அல்ல. சில நேரங்களில் ஆபாசத்தை தொடலாம். என்னால் முடிந்த அளவுக்கு தகவல்களை திரட்டி அளிக்க முயற்சி செய்கிறேன். இது குறித்து தகவல்களை தேடினால், நாம் தேடுவது ஒன்று ஆனால் கிடைப்பது விவகாரமான இன்னொன்றாக இருக்கிறது. இந்த தொடரில் எல்லா நடிகைகளைப் பற்றியும் கூறப்போவதில்லை. அப்படி எழுத தொடங்கினால் மிக நீண்ட தொடராகிவிடும். ஆகவே கவர்ச்சியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்களை பற்றி மட்டுமே எழுதப்போகிறான். எப்படி எழுதுவது? எங்கே இருந்து தொடங்குவது? என்று குழப்பமாக இருந்ததால், தமிழ் சினிமாவின் காலகட்டங்களின் அடிப்படையில் பிரித்து எழுதலாம் என்று முடிவு கட்டி இருக்கிறேன்.
1950களில்.........
தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி
தமிழ் சினிமாவில் 1931 முதல் பேசும் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை தமிழ் சினிமா என்று சொல்வதை விட, தென்னிந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்ற எல்லா மொழி திரைப்படங்களும் சென்னையை மையமாகக்கொண்டே தயாரிக்கப்பட்டன. ஆகவே ஒரே நடிகர்கள் பல்வேறு மொழிகளில் நடிப்பது சர்வ சாதாரணமாக இருந்த கால கட்டம் அது. 1936இல் மூன்றாவது முறையாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட தேவதாஸ் (முதல் முறை ஊமைப்படம், இரண்டாவது முறை பெங்காலி) திரைப்படத்தில் தன்னுடைய பதினான்கு வயதில் அறிமுகமான இப்பெண், 1939இல் பதினேழு வயது இளம்புயலாக தமிழ் திரை உலகில் நுழைந்தார்.
திரைப்படத்தின் பெயர் குமார குலோத்துங்கன். அந்த பெண்ணின் பெயர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயீ. இப்படிசொன்னால் யாருக்கும் தெரியாது. டிஆர் ராஜகுமாரி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வளமான குரல், நடன திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர். முதல் படம் சுமாராக போனாலும் அடுத்த படமான, கச்ச தேவயானி ஹிட் ஆக அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944இல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஹரிதாஸ் வெளியாகி இவரது புகழை உச்சியில் ஏற்றியது. 1944 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம் 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜபாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு கமர்ஷியல் மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப்படமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான். மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும்சரி டிஆர் ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது. 1948இல் அதை விட பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவர தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆனார்.
தியாகராஜபாகவதர், சின்னப்பா என்று அன்றைய தல தளபதிகளோடு நடித்தவர், அடுத்ததாக வந்த டிஆர் மகாலிங்கத்தோடும் ஜோடி சேர்ந்தார். இவர் டிஆர் ராஜகுமாரியை விட இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1940களில் திரையுலகை கலக்கி வந்த இவர், 50களில் திரையுலகை தன் முழு பிடியில் கொண்டு வந்து விட்டார். அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னேறிக்கொண்டிருந்த, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரோடும் ஜோடி சேர்ந்தார். முத்தாய்ப்பாக மனோகரா படத்தில் சிவாஜி கணேசனுக்கு சித்தியாகவும் நடித்திருப்பார். மனோகராவின் தந்தையை மயக்கி அவரது ஆசை நாயகியாகி ஆட்சியை கைப்பற்றும் வேடத்தில் நடித்தார் இந்த போதை தரும் கண்களுக்கு சொந்தக்காரர். இப்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், உற்று கவனியுங்கள். அவரது உடையலங்காரத்தில் உள்ள கவர்ச்சியை. அதற்கடுத்து வந்த நடிகைகளே அணிய பயந்த பயங்கர லோ கட் ஆடைகளை சர்வ சாதாரணமாக அணிந்திருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி வில்லி ஆனவரும் இவர்தான். ஒரே காலகட்டத்தில் கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் கலக்கியவர். பியு சின்னப்பாவின் பொருத்தமான ஜோடி என்று பலரால் பாராட்டப்பட்டவர்.
ஆர்ஆர் பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக திரைப்படக்கம்பெனி தொடங்கி, தன் சகோதரர் டிஆர் ராமண்ணா இயக்க நிறைய படங்களை எடுத்தார். எம்ஜிஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படத்தை தயாரித்தவர் இவரே. எம்ஜிஆரின் மாஸ் ஹிட் படமான குலேபகாவலியை தயாரித்தவரும் இவர்தான். அதே போல தியாகராயநகரில் தியேட்டர் ஒன்றை கட்டி, திரைப்பட நடிகைகளில் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை என்ற பெயரும் பெற்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்து வந்தவர் 1963 ஆம் ஆண்டோடு நடிப்புக்கு முழுக்கு போட்டார். கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.
எங்கள் வீட்டருகில் இருக்கும் பெரிசு ஒருவர், "இந்தக்காலத்துல இருக்குறவா எவா நல்ல இருக்கா? டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா? அவ கண்ண பார்த்தாலே போதை ஏறும்." என்று சொல்ல கேட்டிருக்கிறேன். கவர்ச்சி மட்டும் இல்லாமல், நடிப்பிலும் தான் திறமைசாலி என்று நிரூபித்த இந்த பெண், தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இவர் ஒரு தமிழர் என்பதும், இதன் பின் தமிழகத்தை கலக்கிய கவர்ச்சி நடிகைகள் எவரும் தமிழர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பகுதி
1950களின் இறுதி, வைஜெயந்தி மாலா, ராஜசுலோச்சனா மற்றும் சிலர்.....
இந்த பதிவு குறித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவியுங்கள்.....
44 comments:
//தியாகராஜபாகவதர், சின்னப்பா என்று அன்றைய தல தளபதிகளோடு நடித்தவர்
ஆனாலும் சின்னப்பாவை நீங்கள் இவ்வளவு அசிங்கபடுத்தியிருக்க கூடாது ...
கனவுக் கன்னிகளைப் பத்தி எழுதப் போறீங்களா. இல்ல கவர்ச்சிக் கன்னிகளப் பத்தியா பாலா... சில்க் படத்தைப் பாத்ததும் இந்த சந்தேகம் வந்தது. டி.ஆர்.ஆர். நல்ல தமிழ் பேசி நடித்த அழகான கனவுக் கன்னி, சந்திரலேகா ஒண்ணு பாத்தாலே போதும், பிடிச்சுப் போகும், வைஜயந்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். அப்புறம்... மேல ராஜா சொல்லியிருக்கற கருத்தை ஆமோதிக்கறேன் நான்.
கனவுக் கன்னிகளைப் பத்தி எழுதப் போறீங்களா. இல்ல கவர்ச்சிக் கன்னிகளப் பத்தியா பாலா... சில்க் படத்தைப் பாத்ததும் இந்த சந்தேகம் வந்தது. டி.ஆர்.ஆர். நல்ல தமிழ் பேசி நடித்த அழகான கனவுக் கன்னி, சந்திரலேகா ஒண்ணு பாத்தாலே போதும், பிடிச்சுப் போகும், வைஜயந்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். அப்புறம்... மேல ராஜா சொல்லியிருக்கற கருத்தை ஆமோதிக்கறேன் நான்.
நல்லவேளை... நான் 15க்கு மேலதான். நம்புங்க ஸார்... நான் டிவில ஒரு தடவை கொஞ்ச நேரம் சந்திரலேகா பாத்தேன். முழுசாப் பாக்க பொறுமையில்ல.. பட். அவங்களோட முகஅழகு எனக்கு ரொம்பப் பிடிக்கும். (லோ கட் டிரஸ்ஸையா ரசிக்கறீங்க... வீட்ல வத்தி வெச்சுடறேன் இருங்க... Ha... Ha...)
எஸ் ஜூஸ் மீ..... மீ யூத்து சோ, சொல்லுங்க கேட்டுகிறேன் அம்புட்டுதான்
தொடர் அமர்க்களமா போகுது...வாழ்த்துக்கள்!....
போதை கண்ணுக்கு சொந்தக்கார பெண் இவர்தான்...அதற்க்கு பிறகு அதை தக்க வைத்த பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு மட்டுமே உண்டு!
தாங்கள் சொல்வத்து முற்றிலும்
உண்மையே!
காரணம் நான அந்த காலத்து மனிதன்!
புலவர் சா இராமாநுசம்
@"ராஜா"
விடுங்க சின்னப்பா இப்போ இல்ல அதனால கோவிச்சுக்க மாட்டார்.
@கணேஷ்
சந்தேகமே வேண்டாம் கவர்ச்சிக் கன்னிகள்தான். நன்றி சார்
@நிரஞ்சனா
நீங்க 15+ஆ அப்போ படிக்கலாம். வீட்டுல எல்லாம் வத்தி வச்சுடாதீங்க. அப்புறம் கிடைக்கிற சாப்பாடும் கட்டாகிடும்.
@மனசாட்சி™
வருகைக்கு நன்றி நண்பரே
@விக்கியுலகம்
மிக்க நன்றி மாப்ள. போதைக்கண் இந்த இருவருக்கும் மட்டுமே உண்டு என்பது முற்றிலும் உண்மை.
@புலவர் சா இராமாநுசம்
உங்கள் கருத்துக்கு நன்றி சார். நான் இந்தக்காலத்தவன் என்பதால், கஷ்டப்பட்டு தகவல்களை தேட வேண்டி இருக்கிறது.
இந்த தொடர் இனிமேல கலகட்டிரும் போலயே பாலா சார்..போர் அடித்தால் திரும்ப திரும்ப படிக்கலாமே இனி ?
முதல் பதிவே அருமை..கொஞ்சம் பழைய நடிகையா இருந்தாலும் புதுமையா இருந்தது..இந்த வெற்றித்தொடரை, பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.. அசத்துங்க..அசத்துங்க..மிக்க நன்றி.
@Kumaran
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. உங்க ஆலோசனைகள் ஏதாவது இருந்தாலும் கூறுங்கள்.
அட்டகாசமான தொடர் பாஸ்
நம்ம ஆளுகள் பல பேர் இதில வருவாங்க ஹி.ஹி.ஹி.ஹி........
@K.s.s.Rajh
பாஸ் நான் கவர்ச்சி நடிகைகளை பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன். மற்றவர்களைப்பற்றி எழுதமாட்டேன் பரவாயில்லையா?
செம இன்ட்ரஸ்டிங்கான ஆரம்பம். எனக்கு 80களில் ராதாவும் அதன் பின்னர் வந்த நடிகைகளைப் பற்றி மட்டுமே தெரியும்.
இது நம்ம தாத்தா, அப்பா படிக்கவேண்டிய பதிவு போலத் தெரியுது. ஹி ஹி.
படிப்படியா வாங்க. நானும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.
@ஹாலிவுட்ரசிகன்
நானும் உங்களைப்போலத்தான் நண்பரே. ஆனால் எதை பற்றி தெரிந்து கொண்டாலும் தொடக்கத்தில் இருந்து வர வேண்டும் அல்லவா? ஆகவேதான் மிக பழைய கதியில் இருந்து தொடங்கி இருக்கிறேன். நன்றி நண்பரே
@பாலா
////
@K.s.s.Rajh
பாஸ் நான் கவர்ச்சி நடிகைகளை பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன். மற்றவர்களைப்பற்றி எழுதமாட்டேன் பரவாயில்லையா/////
பாஸ் கவர்ச்சி நடிகைகளைதான் நான் சொன்னேன் எங்க ஆளுகள் என்று ஹி.ஹி.ஹி.ஹி........
பாஸ் உங்க கனவு கன்னி யாரு ?
@"என் ராஜபாட்டை"- ராஜா
ஹி ஹி அது போக போக உங்களுக்கே தெரியும் நண்பரே வருகைக்கு நன்றி
@K.s.s.Rajh
ஹா ஹா அப்போ சரி. உங்களை திருப்தி படுத்தும் வகையில் எழுத முயற்சி செய்கிறேன்.
@"ராஜா" ரொம்ப சரியா சொல்லிருக்கிங்க ராஜா சார், ஆனாலும் இது ரொம்ப வித்தியாசமான பதிவு, வரவேற்கிறேன்.
சார் நீங்களா.../ ஏன் இப்பிடி மாறிட்டீங்க,...
பழைய காலத்துக்கே போயிட்டீங்க...
கடைசியா சொன்ன பெருசு மேட்டர்....? பெருசுக்கு என்னா குசும்பு.:)
@Kathir Rath
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@சிட்டுக்குருவி
நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது....
கருத்துக்கு நன்றி நண்பரே
டி.ஆர்.ராஜகுமாரி! காலத்தால் அழியாத நினைவுகளை தாத்தாக்களிடம் விட்டு சென்ற கவர்ச்சிக்கன்னி!
/////இப்படி பட்ட காட்சிகள் தெருக்கூத்து, நாடகங்களில் அரங்கேறும்போது எவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக திரைப்படங்களில் ஏற்படுத்தி இருக்கும்./////
நிச்சயமாக சகோ... சிலவேளை மீள் ஒளிப்பதிவு போன்ற தவறுத்திருத்தல் காரணமோ தெரியல..
அருமையான நடையில் பதிந்துள்ளீர்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்
டி.ஆர். ராஜக்குமாரி, ஆடைக்குறைப்பு செய்யாமல் சிரிப்பாலயே கவர்ந்தவர்.
நல்ல தொடர் + நல்ல முயற்சி! அருமையாகத் தகவல்களைத் தொகுத்திருக்கீங்க பாலா!
ஆனா ஒரு விஷயம் மிஸ்ஸிங்! - அதுதான் பாலாவின் வழக்கமான கலகலப்பான எழுத்து நடை! இந்த நடை மிகவும் வித்தியாசமாக முதிர்ச்சியா இருக்கு!
ஆனா நான் உங்களிடம் எதிர்பார்ப்பது காமெடி கலந்த கல கல எழுத்து நடையையே....!
குறிப்பு - ஸில்க்ஸ்மிதா பற்றி படிக்க வெயிட்டிங் ;-)
"இந்தக்காலத்துல இருக்குறவா எவா நல்ல இருக்கா? டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா? அவ கண்ண பார்த்தாலே போதை ஏறும்."
அந்த காலத்து பிளாக் ஒயிட் படத்தப் பாத்தே இவ்வளவு கிக் ஏறி போயி கெடக்கே...ம்ம்ம்ம்
பெருசு செம மேட்டரான ஆளா இருக்கும் போல..
கிளுகிளு குளுகுளு தொடரா இருக்கே...செம..வாழ்த்துகள்
T R ராஜகுமாரியின் தீவிர ரசிகன் குறிப்பாக சந்திரலேகா படத்திற்கு :-) கவர்ச்சியா நடிகைகள் என்றால் அது இவரும் சில்க்கும் தான். இவர் வில்லியாக நடித்த படங்கள் கூட அசத்தலாக இருக்கும். அனைத்து கதாப்பாத்திரத்திலும் நடிக்கவும் ஒரு தில் வேண்டும்.
@வீடு சுரேஸ்குமார்
உண்மைதான் நண்பரே கருத்துக்கு நன்றி
@♔ம.தி.சுதா♔
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
@ராஜி
கருத்துக்கு நன்றிங்க
@மாத்தியோசி - மணி
அப்படியா. உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னும் சுவாரசியமாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே
@Manimaran
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
@கிரி
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே. மிக்க நன்றி
அருமையான தொடர். தொடருங்கள். உங்களிடமிருந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன் நண்பரே
அவர்கள் கவர்ச்சிக்குப்பின்னால் ஆயிரம் கடை இருக்கிறது.
Post a Comment