விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 28, 2012

இது கல்யாணமானவர்களுக்காக....

பிகு: சும்மா ஜாலிக்கு. யாரும் படிச்சுட்டு சாபம் விட்டுடாதீங்க. 

டாக்டர், "மேடம் உங்க கணவருக்கு மனஅழுத்தம் அதிகமாயிடுச்சு. நல்லா சமைச்சு போடுங்க, சண்டை போடாதீங்க, உங்க பிரச்சனைகளை சொல்லாதீங்க. டிவி சீரியல் பத்தி பேசாதீங்க, எப்பவும் சந்தோஷமா பாத்துக்குங்க."

வெளியே வந்த பிறகு கணவன், "டாக்டர் உன்கிட்ட என்னம்மா சொன்னாரு?"

மனைவி, "நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு...."

############################################################################

மாமியார்,"உனக்கு புள்ளைங்களை ஒழுங்கா வளர்க்க தெரியல."
மருமகள்,"வாயை மூடுங்க. உங்க வளர்ப்பு பத்திதான் எனக்கு கல்யாணத்தன்னிக்கே தெரிஞ்சு போச்சே"

############################################################################

காட்டுக்குள் டிரெக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சிங்கம் எதிர்பாராமல் ஒரு பெண் மீது பாய, அவள் தன் கணவனிடம், "ஷூட் பண்ணுங்க, ஷூட் பண்ணுங்க" , 
கணவன், " இரும்மா கேமராவில் செல் போட்டுக்கிறேன்...." 

############################################################################

கணவனுக்கு தெரியாமல் தான் வாங்கிய புது சிம்கார்டை செல்போனில் போட்டு,  அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, சமையல் அறைக்குள் இருந்தபடி போன் செய்து, "ஹலோ டார்லிங்.... "

கணவன் தாழ்ந்த குரலில், "அப்புறம் பேசுறேன் செல்லம். அந்த வெளங்காதவ, கிச்சன்லதான் இருக்கா..."

############################################################################

சாணக்கியன் சொல் 
கணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது


மனைவி, "அட்லீஸ்ட் அந்த நியூஸ்பேப்பரா போறந்தாவாவது , டெய்லி ஆசையா என்னை மடியில வச்சிருந்திருப்பீங்க...."
கணவன்,"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ"

############################################################################

மனைவி, "கணவன் மனைவி இருவரும் ஒரு வண்டியின் டயர் மாதிரி. ஒண்ணு பஞ்சர் ஆனாலும் வண்டி நகராது. இதுலேருந்து என்ன தெரியுது?"
கணவன்," ஸ்டெப்னி ரொம்ப முக்கியம்னு தெரியுது."

############################################################################

நண்பேன்டா 

மனைவியை விட நண்பனே சிறந்தவன். ஏனென்றால்,
நண்பனிடம், "எனக்கு கிடைச்ச ஃப்ரெண்ட்டுலேயே நீதான் மச்சான் பெஸ்ட்" அப்படின்னு சொல்லலாம். ஆனா மனைவியிடம் அதே மாதிரி சொல்ல முடியுமா?

############################################################################

மனைவி, "பெண்களுக்கு ஆண்களை விட ஆயுட்காலம் அதிகம். ஏன்னு தெரியுமா?"
கணவன்,"தெரியுமே. அவங்களுக்குத்தான் பொண்டாட்டி கிடையாதே..? 

############################################################################


ஒருவன்,"ஏண்டா மச்சான் கவலையா இருக்க?",
இன்னொருவன்,"நான் அப்பா ஆகப்போறேண்டா."
ஒருவன்,"அதுக்கு ஏண்டா இவ்ளோ சோகமா இருக்க?"
இன்னொருவன்,"இதை என் மனைவிக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலயே?"

############################################################################

பெண்கள் கடுப்பாகக்கூடாது இல்லையா அதுக்காக 

 கணவன், "அய்யோ உன்னை கடவுள் அழகாவும், ஆனா சுத்த முட்டாளாவும் ஏன் படைச்சான்னு தெரியல"
மனைவி", வேறெதுக்கு, பொண்ணு பாக்க வரும்போது என்னை உங்களுக்கு பிடிக்கணும், உங்கள எனக்கும் பிடிக்கணுமே அதுக்குத்தான்."

############################################################################


கல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள் , "ஏண்டி, கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லைனாலும், எல்லா பசங்களும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க?"
"கார் ஓட்ட தெரியலான்னாலும், அத துரத்திக்கிட்டு நாய் ஒடுறதில்லையா? அதுமாதிரிதான்."

ஜோக்குகளை பகிர்ந்து கொண்ட நண்பனுக்கு நன்றி 

கோபப்படாம உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
ஓட்டுக்களையும் பதிவு பண்ணுங்க.... 
39 comments:

Anonymous said...

//மனைவி, "நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு...."//

//"அப்புறம் பேசுறேன் செல்லம். அந்த வெளங்காதவ, கிச்சன்லதான் இருக்கா..."//

//கணவன்,"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ"//

நான் வாய்விட்டு சிரித்து ரசித்து மகிழ்ந்த துணுக்குகள் இவை. அத்தனையும் அருமை

முத்தரசு said...

நண்பா ஏன் இப்பூடீ

கடைசி ஒண்ணு செம கலக்கல்

tamilvaasi said...

ஜோக்குகளை பகிர்ந்த நண்பன் ரொம்ப பாவங்க.. ஹி..ஹி...

பாலா said...

@seenuguru

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லா ஜோக்ஸுமே அருமை. சிலது ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் நீங்க சொல்லியிருக்கும் விதம் இன்னும் சிரிப்பூட்டுகிறது. நன்றி

பாலா said...

@மனசாட்சி™

சொந்த அனுபவம் எல்லாம் இல்லை நண்பா. அந்த கடைசி ஜோக் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதனாலதான் அதை இரண்டாவது முறையாக இங்கே வெளியிடுகிறேன்.

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

அந்த நண்பனும் கல்யாணம் ஆகாதவன்தான். அவனுக்கு யார் இதை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. நன்றி நண்பரே.

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

என் நண்பன் ஆங்கிலத்தில்தான் அனுப்பி இருந்தான். நான்தான் அதை தமிழ் படுத்தினேன். கருத்துக்கு நன்றி நண்பரே

Unknown said...

கடைசி ஜோக்...!ரொம்ம பாதிச்சிருச்சு தலைவா.....! நம்ம நிலமை இப்படி பூடிச்சே!

கலாகுமரன் said...

"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ"
பலபேர் குப்புரபடுத்துட்டு பேப்பர் படிக்கரது ஏன்னு இப்ப புரிஞ்சுடுச்சு.

Thalapolvaruma said...

நண்பரே அனைத்தும் அருமைஃஅதிலும் குறிப்பாய் அந்த வெளங்காதவ இன்னும் கீச்சன் தான் இருக்கா சூப்பர் கல்யாணம் ஆகாத வரை சந்தோஷம் தான்ஃஃஃ

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லாவே சிரிக்க வைச்சீங்க!

பாராட்டுக்கள்.

========================

இதில் பல ஜோக்குகள் நெட் மூலம் ஆங்கிலத்தில் வந்தன.

அதில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நான் கூட ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.

http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_31.html

தலைப்பு:

வாழ்க்கைத்துணை வாய்ப்பதெல்லாம்

Yoga.S. said...

வணக்கம் பாலா சார்!இன்னிக்கு ரொம்ப நாளைக்கப்புறம் வாய் விட்டு சிரிச்சேன்!அப்போ இத்தன நாள்????அப்புடீன்னெல்லாம் குறுக்குக் கேள்வி கேக்கப்புடாது சொல்லிப்புட்டேன்,ஹி!ஹி!ஹி!!!!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா வெங்காதவ கிச்சன்ல இருக்கா...ஹஹஹஹஹஹ நல்லா சிரித்தேன். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர். பெண்களை உயர்த்துவதாக காமடி..ம்ம்ம்ம்ம்

Unknown said...

மாப்ள...சிரிக்க முடியல..ஹெஹெ...யோவ் என்னய்யா படிக்கிற..பக்கத்துல சம்சாரம் அது மின்சாரம்யா ஹெஹெ!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அசத்தல் தல...

ரசித்து படித்தேன்.. மகிழ்ந்தேன்

பால கணேஷ் said...

பாலா... அந்த 2வது ‌ஜோக்கும், 3வது ஜோக்கும் வாய்விட்டுச் சிரிக்க வெச்சுடுச்சுய்யா... மத்ததெல்லாமும் புன்முறுவ‌ை வரவழைத்தன. ரிலாக்ஸாகி எனர்ஜி சார்ஜ் ஏத்திக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

கல்யாணமானவர்களுக்கா அப்போ நான் ஓடிருரேன்

Guru said...

super jokes sir

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் நண்பரே. கண்டுக்காதீங்க

பாலா said...

@kalakumaran

இது சிங்கிள் மீனிங்கா இல்லை டபுள் மீனிங்கா? #நான் நல்லவன்

பாலா said...

@chinna malai

உங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@வை.கோபாலகிருஷ்ணன்

சார் எனக்கு முன்னாலேயே நீங்கள் இவற்றை எழுதி விட்டீர்கள் போலிருக்கிறது. நான் கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி சார்.

பாலா said...

@Yoga.S.FR

அதெல்லாம் கேட்கமாட்டேன் நண்பரே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

நீங்க கோபப்படுவீங்கன்னு பயப்பட்டேன். ரசித்ததற்கு நன்றி மேடம்.

பாலா said...

@விக்கியுலகம்

பக்கத்துல சம்சாரமா? அப்போ எப்படி அடிவாங்கிக்கிட்டே சிரிக்கிறீங்களா மாப்ள?

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்

பாலா said...

@Vairai Sathish
கல்யாணம் ஆனதுக்கப்புறம் மறக்காம வந்து படிங்க நண்பா. நன்றி

பாலா said...

@அ.குரு
மிக்க நன்றி நண்பரே

vimalanperali said...

ஜோக்குகள் படு ஜோர்.நன்றி, வணக்கம்.

மாலதி said...

ஒரு சிறந்த அரசியல் விமர்சகர்போல முயன்று பதிவு செய்து இருக்கிறீர்கள் பாராட்டுகள்

சுதா SJ said...

பாலா அண்ணா என்ன இது விளையாட்டு...... இப்படி எல்லாம் பதிவு போட்டு ஒரு சின்னப்பையனை அதுவும் கல்யாணம் செய்ய இருக்கும் பையனை இப்படி மிரட்டலாமா????? :(

உங்க ஜோக் பார்த்து படிச்சதில் இருந்து பயமால்ல இருக்கு.... ஆவ்......

எல்லாம் சரி...
நம்ம பாலா அண்ணாவுக்கு கல்யாணம் ஆச்சா????? ஹீ ஹீ.......

பாலா said...

@விமலன்

உங்க கருத்துக்கு மிக்க நன்றி சார்

பாலா said...

@மாலதி

பாராட்டுகளுக்கு நன்றிங்க

பாலா said...

@துஷ்யந்தன்

சரி சரி பயப்படாதீங்க. சாகிற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்.

அப்புறம் கல்யாணம் ஆனவங்க இவ்வளவு தைரியமா பதிவு போட முடியுமா? இன்னும் ஆகல சகோதரா.

ம.தி.சுதா said...

/// கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது////

நல்ல எடுத்துக்காட்டையா... சூப்பரா இருக்கு...

N.H. Narasimma Prasad said...

கணவன் மனைவி ஜோக்ஸ் எல்லாமே அருமை பாலா. பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சாணக்கியன் சொல்
கணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது ..

nice ..

Related Posts Plugin for WordPress, Blogger...