விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 27, 2012

வெட்டி அரட்டை... எப்படி இருந்த நான்...?.

இன்னிக்கு முழுக்க சினிமா குறித்த அரட்டைதான். அரட்டைக்குள்ளே போகும் முன்பு ஒரு சின்ன கேள்வி. கீழே படத்தில் இருக்கும் நபரை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இவரை பற்றி இந்த பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். மேற்கொண்டு பதிவை படித்து முடிக்கும்போது உங்களுக்கு தெரிந்து விடும்.மிரள வைக்கும் பில்லா - 2


ரஜினிக்கு அடுத்த படியாக முந்தைய படம் தோல்வி அடைந்தால் கூட அது தனது அடுத்த படத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பது அஜித்துக்குதான். ஒவ்வொரு முறையும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, முந்தைய படமான மங்காத்தா சூப்பர் ஹிட் ஆக, அஜித்தின் அடுத்த படமான பில்லா-2விற்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. , பில்லா-2 டீசர் வெளிவந்த ஒரே நாளில் சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் பார்வையாளர்களை பெற்றிருப்பதே இதற்கு சாட்சி. விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரிடொலேடி படத்தை இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடன் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தாலும், இப்போது டீசர் மிரட்டலாக வந்திருப்பதால் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அஜீத் பேசும் அந்த டயலாக்கிற்கு சரியான வரவேற்பு இருக்கும் என்பது என் கருத்து. இது போக ஒரு பாடல் வேறு லீக் ஆகி இருக்கிறது. கிட்டத்தட்ட பில்லா தீம் மியூசிக் போலவே இருக்கிறது. வழக்கம்போல கோட் சூட், கூலிங் கிளாஸ் என்று (வேறு வழியில்லாமல்) மொக்கையாக கலாய்க்கப்பட்டாலும், இப்படம் ரசிகர்களிடைய மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கல் ஒரு கண்ணாடி

"இவன் ஒரு சரியான லேட் பிக்கப்." என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.  சத்தியமாக இது விமர்சனம் அல்ல. இங்கே பதிவுலகில் எழுதப்படும் பெரும்பாலானவை விமர்சனங்கள் அல்ல என்பது என் கருத்து. அவை அனைத்துமே ஸ்பாய்லர்கள். அதாவது படத்தை பற்றிய தன் சொந்த கருத்துக்கள். இதை வைத்து படத்தை எடைபோடக்கூடாது. ஆனால் இவற்றை படிப்பதனால் படத்தின் மீதான நமது அபிப்ராயம் மாறக்கூடும். எனவேதான் பதிவுலகில் எழுதப்படும் பட விமர்சனங்களை நான் படம் பார்த்த பிறகே படிக்கிறேன்.


சரி விஷயத்துக்கு வருவோம். இந்த கோடை விடுமுறைக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனரின் முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியவற்றை ஒப்பிடும்போது இது கொஞ்சம் சுவை குறைவுதான் என்றாலும் மோசமில்லை என்றே கூறவேண்டும்.உதயநிதி அவர்கள் நடனம் ஆடும்போது, பாக்யராஜ் நினைவுக்கு வந்து தொலைக்கிறார். சந்தானம் என்ற ஒரே பேட்ஸ்மேனை வைத்து களத்தில் இறங்கினாலும் ஆட்டத்தில் ஜெயித்து விட்டார் ராஜேஷ். எங்கள் ஊரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. இதில் உதயநிதி அவர்கள், "படத்துக்கு வரிவிலக்கு தரமாட்டேன்கிறார்கள்." என்று வேறு புகார் வைத்திருக்கிறார். என்னைக்கேட்டால் எந்த படத்துக்குமே வரிவிலக்கு அளிக்க தேவை இல்லை என்றே சொல்லுவேன். அல்லது, படத்தின் பட்ஜெட் குறிப்பிட்ட அளவே இருக்கவேண்டும், டிக்கெட் விலை குறிப்பிட்ட அளவே இருக்கவேண்டும், என்று நிறைய கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடித்து, இதில் தேரும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம்.

அதிக விலைகொடுத்து வாங்கிய நண்பன்


விஜய் ரசிகர்கள் இந்த பத்தியை தவிர்த்து விடுங்கள்
மே 1ஆம் தேதி நண்பன் படத்தை விஜய் டிவியில் ஒளிபரப்புகிறார்கள். இதை கேள்விபட்டவுடன், விஜய் ரசிகர்கள் மற்றவர்களால் வழக்கம்போல கலாய்க்கப்பட, அவர்களும், "நண்பன்தான் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட படம், அது... இது.... ", என்று சொல்லி சமாளித்து வருகிறார்கள். ஒரு அஜீத் ரசிகனாக இந்த சமாதானத்தை எல்லாம் என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்க அப்படித்தான் கலாய்ப்போம். ஏனென்றால் இதற்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கு. சில வருடங்களுக்கு முன்,  அசல் வெளிவந்த சமயம் அஜித்தை கலாய்க்கும் நோக்கில் விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய பதிவில், "இன்னும் ஒரே வாரத்தில் அசல் படத்தை டிவியில் ஒளிபரப்புவார்கள்." , என்று செமையாக கலாய்த்திருந்தார். ஆனால் அவர் எந்த நேரத்தில் அதை சொன்னாரோ, அதில் இருந்து வரிசையாக குறிப்பிட்ட இடைவெளியில் அதன் பின் விஜய் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களையுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டார்கள்.  இப்போது கடைசியாக நண்பன்.  அதனால இப்படித்தான் கலாய்ப்போம்.  டாக்டருக்கு ஒரு வேண்டுகோள், "சீக்கிரம் துப்பாக்கியை ரிலீஸ் பண்ணுங்க. அடுத்து டிவியில ஒளிபரப்புவதற்கு உங்க படம் எதுவும் இல்லையாம்."

ஹிந்திக்கு போகும் தனுஷ்
நம்ம கொலவெறி புகழ் தனுஷ் பாலிவுட் படங்களில் நடிக்க போகிறார் என்று ஒரு செய்தி படித்தேன். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலும், இவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள தமிழ் மக்களுக்கே வெகு காலம் பிடித்தது. அப்படி இருக்க, பாலிவுட்டில் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இன்னொரு பாடல் ஹிட் ஆனால் அடுத்து ஹாலிவுட்டில் நடிக்க போய்விடுவார் போலிருக்கிறது. "ஒரே பாட்டில் எப்படி பெரிய ஆள் ஆக முடியும்?", என்று இனிமேல் யாரும் தமிழ் படங்களை கிண்டல் செய்ய வேண்டாம்.

நான் ஈ

பொதுவாக நான் பிறமொழி படங்களை அவ்வளவாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஈகா (தமிழில் நான் ஈ) படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். இவரது படங்கள் எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள் நடப்பது போல இருக்கும். இவரது படங்களுள் நான் முதன்முதலில் பார்த்தது எமதொங்கா. ஜூனியர் என்‌டி‌ஆர் நடித்த இப்படம், கிட்டத்தட்ட தமிழில் வெளிவந்த அதிசயபிறவி போல இருந்தாலும், படம் சூப்பர் ஹிட். அடுத்தடுத்து விக்கிரமர்குடு(சிறுத்தை), மகாதீரா(மாவீரன்) என்று டோலிவூட்டை வசூல் மழையில் நனைய வைத்த இந்த இயக்குனரின் அடுத்த படம்தான் ஈகா. டிரெய்லர் பார்த்தவுடனே என் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து விட்டது. டிரெய்லரை வைத்து பார்த்தால், நாயகிக்காக வில்லனால் கொல்லப்பட்ட நாயகன், அடுத்த பிறவியில் ஈயாக பிறப்பெடுத்து வில்லனை பழிவாங்குவது போல தெரிகிறது. கண்டிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் படமாக அமையும் என்றாலும், இளசுகளையும் கவரும் என்பதில் ஐயமில்லை. நாயகி சமந்தா அல்லவா?

இது என்னங்க?

"மது தர்ற மயக்கத்த விட, பெரிய மயக்கம் ஒண்ணு இருக்கு. நான் பாத்ரூமுக்குள்ள போனவுடனே கரப்பாம்பூச்சின்னு கத்துவேன். உடனே அவன் உள்ள வருவான். நான் அவன் மேல வழுக்கி விழுவேன். என்னை கட்டி புடிச்சதும் அவனுக்கு ஒரு போதை வரும். அப்படியே ரெண்டு பெரும் ஒண்ணா சேருவோம். நான் என்னை அவனுக்கு விருந்தாக்கி, என் திட்டத்தை......"

இது இந்த வாரம் திருமதி செல்வம் என்ற மெகா சீரியலில் இடம்பெற்ற வசனம். இதற்கு முந்தைய காட்சியில், மௌனகீதங்கள் படத்தில் வரும் பாத்ரூம் காட்சியை, இந்த வசனத்தை பேசியவர் டிவியில் பார்ப்பது போலவும் ஒரு காட்சி இருந்தது. இந்த ஒரு காட்சி மட்டுமல்ல. இது போல அடுத்தடுத்து நிறைய கருத்துள்ள வசனங்கள் வந்து கொண்டிருந்தன. இதுக்கு மின்வெட்டு எவ்வளவோ பரவாயில்லீங்க. குழந்தைகள் பத்திரம்....

சரி முதலில் ஒரு படத்தை காட்டி அந்த நபரை தெரிகிறதா என்று கேட்டிருந்தேன் அல்லவா? தெரிந்தவர்களுக்கு சபாஷ். தெரியாதவர்களுக்கு, இவர்தாங்க அவர். முக நூலில் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. இப்போ புரியுதா இந்த பதிவோட தலைப்பின் அர்த்தம்?உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
அப்படியே ஓட்டுகளையும் போடுங்க.... 

32 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இளமையும், ஆரோக்யமும், அழகும் என்றும் நிரந்தரமே இல்லை.

ஆனால் நீங்கள் இன்றும் பர்ர்க்க நல்லாத்தான் இருக்கீங்க!

இதற்காகவெல்லாம் அனாவஸ்யமாகக் கவலையே பட வேண்டாம்.

கோவை நேரம் said...

சினிமா அரட்டை நல்லா இருக்கு

Azhagan said...

It is high time to fight for a censor board(proper board with social responsibilities, not commercial) for the TV programs in the country

நம்பிக்கைபாண்டியன் said...

அழகிய திரைபார்வை!

உதயாநிதியா அது! எவ்வளவு மாற்றம்!

பால கணேஷ் said...

சின்னப்புள்ளைல குதயநிதி முகத்துல ஒரு அப்பாவித்தனம் தெரியுதே... நீங்க சொன்ன அந்த ‘திருமதி செல்வம்’ சீனை தற்செயலா நான் பார்க்க நேர்ந்தது. ரொம்ப துணுக்குற்றுப் போனேன் நான். பெண்கள் எவ்வளவு முன்னேறி(?)ட்டாங்கப்பா... சினிமா அரட்டை நல்லா இருக்குது பாலா!

r.v.saravanan said...

திரைபார்வை நல்லா இருக்கு பாலா

Anonymous said...

கதம்பத்தில் உள்ள அனைத்தும் அருமை. அந்த நகைச்சுவை அருமையிலும் அருமை

உங்களின் வலைப்போ அறிமுகம் இப்பொழுது தான் கிடைத்தது. அருமையாகவும் அழகாகவும் உள்ளது. இனி தவறாது தொடர்கிறேன். வலைப் பூவிற்கு புதியவன். உங்கள் போன்ற ஜம்பவங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. கற்றுக் கொள்கிறேன்.

Anonymous said...

அழகான நடை. தெளிவான வார்த்தைகள். வாழ்த்துக்கள்.

வலைப் பூவிற்கு புதியவன் என்பதால் இன்று தான் பார்த்தேன். உங்கள் பதிவுகளை தவறாது தொடர்கிறேன் நன்றி

தவறுக்கு மன்னிக்கவும். கதம்பம் படித்துவிட்டு எழுதிய கமெண்ட் அது. அதிலுள்ள வார்த்தைப் பிழையையும் இப்பொழுது தான் கவனித்தேன். ஜாம்பவான் என்று அந்த வரத்தை இருந்திருக்கக வேண்டும்.

புதியவன் என்பதால் சில பிழைகள் வரலாம் மன்னிக்கவும்

Unknown said...

சமோசா வித்திட்டு இருந்த பையன் பீட்சா விக்கிற பையனா மாறிட்டாரே...ஹிஹி!

எப்பூடி.. said...

திருமதி செல்வத்தால் பாதிக்கப்படவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கணும்; அதுக்கு நான்தான் தலைவர் :p

Thalapolvaruma said...

Anaithum super nanba...ippo billa2 ton ton song youtubela pattaiya kilapputhu...nanban paakka theater ponathu thappa poche ...

Thalapolvaruma said...

Naan udayanithi first paarthavudane kandupidithu vittean...

முத்தரசு said...

வெட்டி அரட்டை என்பது சினிமா சீரியலை பத்தியா சரியாக சொன்னீர்கள் வெட்டி என்று

பாலா said...

@வை.கோபாலகிருஷ்ணன்

சார் மொதல்ல உங்கள மாதிரிதான் நானும் கண்பியூஸ் ஆகிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது நான் இல்லைன்னு. மிக்க நன்றி

பாலா said...

@கோவை நேரம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

பாலா said...

@Azhagan

You are absolutely right. Thanks for your valuable comments

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

காலமும் பணமும் தந்த மாற்றம் அது. மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

நீங்களும் அதை பார்த்தீங்களா? உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@seenuguru

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. ஜாம்பவானா? யாரது, பதிவுலகில் இன்னுமும் நான் ஒரு மாணவன்தான் நண்பரே. பிழைகள் வருவது சகஜம்தான். சித்திரமும் கைப்பழக்கம்.

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

கரெக்டா சொல்லிட்டேங்களே... நன்றி நண்பரே

பாலா said...

@எப்பூடி..

தலைவரே எனக்கு அட்லீஸ்ட் ஒரு உபதலைவர் போஸ்டாவது கொடுங்க.

பாலா said...

@chinna malai

மிக்க நன்றி நண்பரே. கொஞ்சம் பொறுத்திருந்தால் நண்பனை டிவியிலேயே பார்த்திருக்கலாம். உதயநிதியை கண்டு பிடித்ததற்கு சபாஷ்

பாலா said...

@மனசாட்சி™

பொழுது போகாமல் எதை பேசிக்கொண்டிருத்தாலும் அது வெட்டிதான் நண்பரே. மிக்க நன்றி

Unknown said...

செல்வத்தால நிறைய பேரு பாதிக்கபட்டு இருப்பாங்க போல, விஜய விட மாட்டீங்களா பாலா?? :-) ஆனாலும் ஒகே ஒகே நல்லாத்தான் இருக்குங்களாம், நல்லா டைம் பாஸ் ஆச்சு, சூப்பர் பதிவு பாலா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாலா said...
@வை.கோபாலகிருஷ்ணன்

சார் மொதல்ல உங்கள மாதிரிதான் நானும் கண்பியூஸ் ஆகிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது நான் இல்லைன்னு. மிக்க நன்றி//

அழகிய விளக்கத்திற்கு நன்றி.

கன்பியூஸ் ஆனால் தான் கடைசியில் தெளிவே ஏற்படுகிறது. ;)))))

sajirathan said...

ரஜினிக்கு அடுத்த படியாக முந்தைய படம் தோல்வி அடைந்தால் கூட அது தனது அடுத்த படத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பது அஜித்துக்குதான்//////////// சரியாக சொன்னீங்க..... இதை உலகமே ஏற்றுக்கொண்டு விட்டது. இந்த விஜய் ரசிகர்கள்தான் பாவம் கிணத்துதவளைகள் போல இன்னமும் நம்பாம இருக்காங்க...

இராஜராஜேஸ்வரி said...

பல வண்ணக் கதம்பத்திற்கு பாராட்டுக்கள்..

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

selvasankar said...

kasu iruntha kaka kooda vellai ayidum girathu unmai than boss

Rocket Ranga said...

The last time I commented on your blog I thought u were a Rajini fan, but now u r saying u r a Ajith fan..ROFL..How can u have dual loyalties ???

But anyways I hope u didn't see any of the Vijay movies telecasted on May 1. Just remembering the good old days when Rajini movies were telecasted on each and every festival day, but I guess that is "Palaya nenapuda Perandi."

பாலா said...

@Rocket Ranga

நான் அஜீத் ரசிகன் என்று சொன்னேன். ரஜினி ரசிகன் இல்லை என்று சொல்லவில்லை. கண்டிப்பாக இருவரிடமும் அபிமானம் இருக்க முடியும். எனக்கு காமராசர் பிடிக்கும், அப்துல்கலாமும் பிடிக்கும், ஆபிரகாம் லிங்கனும் பிடிக்கும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும்.

நீங்கள் சொல்வது போல முன்பெல்லாம் விசேச நாட்களில் ரஜினி படம் போடுவார்கள். அதெல்லாம் ஒரு காலம்.

Related Posts Plugin for WordPress, Blogger...