விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 26, 2012

வெட்டி அரட்டை - ஒரு அறிவிப்பும், சில அரசியலும்....

அப்பப்போ பதிவுலகத்துக்கு ஆப்சென்ட் ஆகிவிட்டு பிறகு வந்து சமாளிப்பதே வாடிக்கையாகி போய்விட்டது. இந்த முறை எழுத நினைத்த விஷயங்களுக்கு சரியான பிரிபரேசன் இல்லாததால் வெட்டி அரட்டை அடித்து சமாளிக்கிறேன்.

இது புதுசு....

ரொம்ப நாள் ஒரே டிசைனில் இந்த வலைத்தளம் இயங்கி வந்ததால், இதன் அமைப்பை கொஞ்சம் மாற்றலாம் என்று முடிவு கட்டி கடந்த சில நாட்களாக மல்லுக்கட்டி வருகிறேன். இன்னும் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து வருவதால் கொஞ்சம் அசவுகரியமாக இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். அதே போல ஓட்டுப்பட்டைகளும் திடீரென்று காணாமல் போகும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். இதில் எதேனும் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள். என்னால் முடியும் பட்சத்தில் மாற்ற முயற்சிக்கிறேன்.

அறிவிப்பு....

தொடர் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆகவே மறுபடியும் ஒரு தொடர் எழுதலாம் என்று முயற்சி எடுத்து வருகிறேன். கிரிக்கெட் வரலாறு என்பது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமான ஒன்று என்பதால் அதை சுலபமாக எழுதி விட்டேன். ஆனால் அடுத்து நான் எழுத உத்தேசித்திருக்கும் தொடரை பற்றி நிறைய தகவல்கள் திரட்ட வேண்டி இருக்கிறது. எனக்கு அவ்வளவாக தெரிந்திராத தகவல்கள். ஆகவே கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடிக்கொண்டிருக்கிறேன். எப்போது எழுத தொடங்கப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம். இது வரை வெறும் சைவம் மட்டுமே எழுதி வந்த நான் இந்த தொடரில் கொஞ்சம் அசைவமான விஷயத்தை பற்றி எழுத நினைதிருக்கிறேன். கவலைப்படவேண்டாம். எல்லோரும் படிக்கும் வகையிலேயே இருக்கும்.

பகிர்வுகள்.....

எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மின் வெட்டு பழக்கமாகிக்கொண்டே வருகிறது.  ஆனாலும் நடு இரவில் கரண்டை கட் பண்ணுவதுதான் தாங்க முடியவில்லை. எங்கள் ஊர் சும்மாவே நெருப்பில் இருப்பது போலத்தான் இருக்கும். இப்போது இரவில் கரண்ட் வேறு கட் ஆகி விடுவதால், தூங்குவது கூட தவணை முறையில்தான் செய்ய வேண்டி இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். மின் வெட்டு என்பதே மின் பற்றாக்குறையால் ஏற்படுவதுதானே? அப்படியானால் நிறைய வீடுகளில் இன்வெர்டர்கள் வைத்து மின்சாரம் இருக்கும்போது அதை சேமித்து வைத்துக்கொண்டு, இல்லாத போது பயன்படுத்திக்கொள்கிறார்களே? இதுவும் ஒரு வகை பதுக்கல்தானே? இதன் மூலம் மின் பற்றாக்குறை அதிகரிக்கத்தானே செய்யும்? பணம் இருப்பவர்கள் இன்வெர்டர்களை வைத்து மின்சாரத்தை உறிஞ்சினால், பணம் இல்லாதவர்களுக்கு மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்குமே? இது ஒரு வகை சமுதாய மோசடி அல்லவா? அய்யோயோ வர வர நம்ம சிந்தனை எல்லாம் ஏன் இப்படி ரூட் மாறுகிறது என்றே தெரியவில்லை.

சிறு வயதில் எல்லாம் நன்மைக்கே என்று ஒரு கதை படித்திருப்போம். அதாவது அந்த கதையின் சாராம்சம் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று. அந்த வகையில் இந்த மின்வெட்டையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளலாம். மின்வெட்டின் மூலம் சில நன்மைகள் நடந்துள்ளன. மின்கட்டணம் உயர்ந்தாலும், கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருப்பதால், மின்கட்டணம் கட்ட வேண்டிய தொல்லை பாதியாக குறைந்து விட்டது. முன்பெல்லாம் இருளில் தட்டுத்தடுமாறும் மக்கள் இப்போது இருளில் கூட தெளிவாக நடக்கிறார்கள். ஆகவே மக்களின் பார்வைதிறன் வெகுவாக அதிகரித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் வெறும் தொலைக்காட்சிகளிலேயே அடைந்து கிடக்காமல், குடும்பத்தையே வெளியே அழைத்து செல்ல கணவன்மார்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைகள் தேவை இல்லாத விஷயங்களை தொலைக்காட்சியில் பார்த்து கெட்டுப்போகும் வாய்ப்பு குறைந்திருக்கிறது. கிரைண்டர், மிக்சி தேவை இருப்பதால் பெண்களிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடித்து விடவேண்டும் என்கிற சுறுசுறுப்பு வந்திருக்கிறது. ஆரோக்கியமற்ற பிரிட்ஜ் குடிநீரை விடுத்து, ஆரோக்கியமான மண்பானை குடிநீரை பருக தொடங்கி இருக்கிறார்கள். மிக முக்கியமாக மாலை நேரங்களில் எல்லோரும் வீட்டு வாசலில் அமர்ந்து, அக்கம்பக்கத்தாருடன் பேசி உறவாடுகிறார்கள். பட்டியலிட்டால் இன்னும் நீண்டு கொண்டே போகும் இந்த மின்வெட்டின் நன்மைகள்.

 சஸ்பெண்ட் ஆனதாலோ என்னவோ, கேப்டன் கொஞ்சம் வேலை பார்க்க தொடங்கி இருக்கிறார் போலிருக்கிறது. முன்பெல்லாம் அம்மாவிடம் மேம்போக்காக புகார்களை சொல்லி பல்பு வாங்கி வந்த எதிர்கட்சி எம்‌எல்‌ஏக்கள், இப்போது குறிப்பிட்ட பிரச்சனையை ஆதாரத்துடன் அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். கேப்டனின் பேச்சை அவரது தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். "மக்களே மக்களே..." என்று பேசும் அவரது குரலை கேட்கும்போதே நமக்கு கிக்கு ஏறுகிறது. இப்போதெல்லாம் நகைச்சுவை சேனல்களை விட, கேப்டன்டிவி மற்றும் மக்கள் டிவியையே அதிகம் பார்க்கிறேன். நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால், மாலை நேரத்தில் இந்த சேனல்களை பாருங்கள். உங்களுக்கே புரியும்.

மருத்துவர் அவர்கள் ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். அதை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடத்துவோம் என்று பின்னர் அறிவித்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை எத்தனை கடைகளுக்கு பூட்டு போட்டிருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஒருவேளை அடுத்தடுத்த தேர்தல்களில் பல்பு வாங்கி வருவதால் மக்கள் மீது காண்டாகி, "நீங்கள் எல்லாம் குடித்தே சாவுங்கடா", என்று நினைத்து விட்டாரோ? தங்கள் கட்சி இப்படி படுதோல்வி அடைவதற்கு என்ன காரணம் என்று ஆராய்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. சில பல மாதங்களுக்கு முன் மருத்துவர் அவர்கள் பேட்டிகளில் என்ன பேசி இருக்கிறார் என்று திரும்ப ஒருமுறை போட்டு பார்த்தாலே தெரிந்து விடும்.

மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்க அதை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, இந்த தமிழ் புத்தாண்டு பிரச்சனையை பேசிக்கொண்டிருப்பது மிகுந்த எரிச்சலை அளிக்கிறது. மக்கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. "இருக்கிற கடுப்புல இது வேறயா?", என்றே நினைக்கிறார்கள். கலைஞர் வழக்கம்போல தன்னுடைய தமிழீழ கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தமிழர்கள் மேல் பாசம் வரும் போலிருக்கிறது. இன்னும் நான்காண்டுகள் இதே பாசம் இருக்கும். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் கொஞ்ச நாளைக்கு காணாமல் போய் விடும். அவரும் என்ன செய்வார் பாவம், அவரது கட்சிக்குள்ளேயே ஐ‌பி‌எல் போல அணிகள் பிரிந்து கிடக்கிறதே?

என்னதான் மாவோயிஸ்டுகள் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்கள் மக்களை துன்புறுத்துவதில்லை, ஆகவேதான் மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது என்று பேசி வந்தார்கள். ஆனால் மாவோயிஸ்டுகளின் தற்போதைய நடவடிக்கை இவர்களை வாயடைத்து போக வைத்திருக்கிறது. குறிப்பாக இணையத்தில் புரட்சி செய்து வரும் சில தீவிரவாத குழுக்கள், இந்தியா அக்னி 5 ஏவுகணை சோதனை செய்ததை கலாய்த்து கட்டுரைகளை தயார் செய்து வந்த நேரத்தில், மாவோயிஸ்டுகள் கலெக்டரை கடத்தி சென்றது, கைகளை பிசைய செய்திருக்கிறது. "இதை சொல்லித்தானே இத்தனை நாள் வியாபாரம் செய்து வந்தோம்?, இனி மக்கள் நம்மை நம்ப மாட்டார்களே? என்ன செய்வது?", என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மறைக்கும் விதமாக ஏதாவது உட்டாலக்கடி கட்டுரைகள் இந்நேரம் தயாராகி கொண்டிருக்கும். கூடிய சீக்கிரத்தில் வெளிவரும். அவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல, போலி மாவோயிஸ்டுகள், ஆர்‌எஸ்‌எஸ் காரர்கள் என்று எதையாவ்து எழுதுவார்கள். என்னை பொறுத்தவரை இந்த கடத்தல் சம்வம்,  மாவோயிஸ்டுகளின் ஹீரோ இமேஜை மக்கள் மத்தியில் சரித்து விட்டது. அவர்களது உண்மையான நோக்கம் புலப்பட தொடங்கி இருக்கிறது.

எஸ் அண்ட் பி அளித்துள்ள அறிக்கையில், "இந்தியா பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது. இதனால் தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். குறிப்பாக உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல நமது நிதி அமைச்சர், "யாரும் கவலைப்படவேண்டாம், பொருளாதார சீர்திருத்த மசோதாக்களால் இந்த நிலைமை சரிசெய்யப்படும்.", என்று கூறியுள்ளார். இவர் சொல்வதை கேட்கும்போது கார்த்திக் மற்றும் கவுண்டமணி ஒரு படத்தில் உரையாடுவதை போல இருக்கிறது, கார்த்திக், "கவலப்படாதீங்க மாம்ஸ் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்", என்பார். அதற்கு கவுண்டமணி "அது எல்லாத்தையும் நீ பார்த்துக்கிட்டுதானே இருக்கிற. ஒண்ணும் பண்ண மாட்டேங்கிறியே?" என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

இவனை என்ன பண்ணலாம்?

உத்திரபிரதேசத்தில், உள்ள ஒரு கிராமத்தில், தனியாக இருந்த 12 வயது சிறுமியை கற்பழித்ததோடு நில்லாமல், அவள் கத்துவதை தடுக்க, மண்ணெண்ணை ஊற்றி எரித்திருக்கிறான் ஒருவன். முழுவதும் எரிந்த நிலையில் அந்த சிறுமி உயிருக்கு போராடி வருகிறாள். இன்னும் அவன் கைது செய்யப்படவில்லையாம்.

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....
ஓட்டுகளையும் போடுங்க..... 


34 comments:

முத்தரசு said...

வணக்கம் நண்பா

அலசி விட்டீர்கள் அலசி

முத்தரசு said...

//இவனை என்ன பண்ணலாம்?//
என்கவுன்ட்டர்

முத்தரசு said...

//பகிர்வுகள்.....//

என்னத்தை சொல்ல

முத்தரசு said...

//அறிவிப்பு....//

நான் வெஜ் சாப்பிடுற மாதிரி இருந்த சர்தான்

முத்தரசு said...

//இது புதுசு....//

ஒக்கே ஒக்கே

Unknown said...

என்னே ஒரு கற்க்கால உணர்வுக்கு கொண்டு போய் இருக்கிறார்கள்(!)...ஆட்சியாளர்கள்..பிரமிப்பு....சீக்கிரத்துல எல்லாம் சரி ஆகிடும்...இப்படியே சொல்லி ஓட்டிட மாட்டாங்க!

Thava said...

நல்ல அலசல்..வெட்டி அரட்டை என்று சொல்லி கலக்கிட்டீங்க வழக்கம் போல..நீங்கள் தொடர் தொடங்க போவதை அறிந்து மகிழ்கிறேன்..எதிர்ப்பார்க்கிறேன் சார்..

இவனை என்ன பண்ணலாம்? @@
என்ன பண்றது சார்..ஆனா ஏதாவது பண்ணனும்..என்ன செய்தாலும் இந்த மாதிரி கிராக்கி எல்லாம் திருந்த மாட்டாங்க.

அடுத்த பதிவில் வருகிறேன்..மிக்க நன்றி.

பாலா said...

@மனசாட்சி™

உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள. என்னதான் நடக்க போகுதுன்னு தெரியல.

பாலா said...

@Kumaran

கருத்துக்கு நன்றி நண்பரே

கலாகுமரன் said...

மின்சார பதுக்கல் என்று சொல்லமுடியாது வசதியானவன் அதிக மின்சக்தியை உறிஞ்சிக் கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். பேட்டரி எப்போதும் முழுசார்ஜ் அடையாமல் விரைவில் அதன் வேலையை காட்டி விடும். குழந்தைகள் எழுப்பும் கேள்வி அந்த காலத்தில் எப்படி சிம்னி விளக்கு வைச்சுட்டு படிச்சீங்க ?

இராஜராஜேஸ்வரி said...

முன்பெல்லாம் இருளில் தட்டுத்தடுமாறும் மக்கள் இப்போது இருளில் கூட தெளிவாக நடக்கிறார்கள். ஆகவே மக்களின் பார்வைதிறன் வெகுவாக அதிகரித்திருக்கிறது.

அரட்டை அரங்கம்..

ஆத்மா said...

நண்பா......கலக்கிட்டீங்க...அந்த மின் வெட்டு நன்மைகள் இருக்கே சூப்பர்..

ஆத்மா said...

இன்னும் பல விசயங்களை அலசலாம் தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிறு வயதில் எல்லாம் நன்மைக்கே என்று ஒரு கதை படித்திருப்போம். அதாவது அந்த கதையின் சாராம்சம் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்//

;)))))

ராஜி said...

இவனை என்ன பண்ணலாம்?
>>
குதிரை இல்லைன்னா மாடு கால்ல இவனை கட்டி ஓட ஓட அடிச்சு விடனும்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

மின்சாரம் இல்லாமல் இருட்டிலும் சரியாக நடக்கிறார்கள்.. எப்பூடி..ஹஹஹ
நல்ல ஆய்வுதான்

Unknown said...

இன்வெட்டர் சார்ஜ் ஏற வெறும் 12வேல்ட் போதும் தலைவரே! அது பெரிய மின்சார செலவு கிடையாது.....

selvasankar said...

enakku nidhi amaichar nadu mandaila nangunu kottanum bola irukku nanba...nammala evvalavu nalaiku than kenayanave pappanunga?

நிரஞ்சனா said...

ப்ளாக்கின் அமைப்பு நல்லாவே இருக்கு பாலா Sir. நீங்கள் அலசின விஷயங்கள் ரசித்துப் படிக்க வைத்தன. அடிக்கடி வெட்டி அரட்டை அடியுங்களேன். அப்புறம்... அவனை என்ன செய்யலாம்னா கேட்டீங்க? கிருமிபோஜனம்! Ok?

Prem S said...

மின்வெட்டின் நன்மைகள் கலக்கல் கடைசி தகவல் அதிர்ச்சி

பாலா said...

@
kalakumaran


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. குழந்தைகள் கேட்டது நியாயமான கேள்விதானே?

பாலா said...

@
இராஜராஜேஸ்வரி


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

பாலா said...

@சிட்டுக்குருவி
மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ராஜி

அதெல்லாம் போதுமாங்க...?

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

கரண்ட் இல்லாத நேரத்துல உக்காந்து யோசிச்சு பாருங்க நிறைய ஐடியா வரும். ஹி ஹி. நன்றி மேடம்

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

அப்படியா? எனக்கு இந்த டெக்னிகல் விஷயங்கள் எல்லாம் அவ்வளவா தெரியாது. நீங்க சொல்றீங்கன்னு கேட்டுக்கிறேன். சின்னப்பையனை ஏமாத்தலையே?

பாலா said...

@selvasankar

எனக்கும் அப்படித்தான் இருக்கு நண்பரே. எனக்கென்னமோ நாடு போகிற போக்கை பார்த்தால் சரத்பவாருக்கு விழுந்த அறை இனி எல்லோருக்கும் விழும் என்றே தோன்றுகிறது. நன்றி நண்பரே

பாலா said...

@நிரஞ்சனா

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி நிரஞ்சனா மேடம். கிருமிபோஜனம் நல்ல ஐடியாதான். அடிக்கடி வாங்க.

பாலா said...

@PREM.S

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

Unknown said...

செமையான அரட்டை பாஸ்!

//கேப்டனின் பேச்சை அவரது தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். "மக்களே மக்களே..." என்று பேசும் அவரது குரலை கேட்கும்போதே நமக்கு கிக்கு ஏறுகிறது//
:-)))

Unknown said...

மின்வெட்டுனால என்னென்ன நன்மைகள்னு பட்டியல் போட்டு கொடுத்திட்டீங்க, இனி அடுத்த எலக்சனுக்கு இதையே காரணமா சொன்னாலும் சொல்லும் அந்தம்மா :-) கேப்டன் இல்லைன்னா பதிவுலகமும் இல்லீங்க பாஸ், எல்லாம் ஒரு டைஸ் பாஸ்தானே, அடுத்த தொடர் எதைபத்தின்னு ஒரு ஹிண்ட்ஸ்ஸாவது கொடுத்திருக்கலாம், இன்னும் வினவு உங்களை கிழிச்சு ஒரு பதிவும் எழுதலயே ஏன் நண்பா :-)

பாலா said...

@ஜீ...

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@இரவு வானம்

கருத்துக்கு நன்றி நண்பரே. நானெல்லாம் கிழிக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்லை, என்னை கிழித்தால் யாரும் கேட்கபோவதில்லை. அவர்களுக்கு தேவை நல்ல குழாயைடி சண்டை. சமீபத்தில் வெளியிட்ட இந்துக்கள் பற்றிய கட்டுரையில் எவ்வளவு அடிதடி நடக்கிறது என்று பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...