விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 16, 2012

புரட்சிப்பதிவர் ஆவது எப்படி?


மு.கு: மிக நீளமான இந்த பதிவு தன் மனசாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போலியானவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. தனி மனித தாக்குதலுக்காக எழுதப்பட்டதல்ல. 



அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தின மற்றும் சன்டிவியின் பத்தொன்பதாவது ஆண்டுவிழா வாழ்த்துக்கள். பதிவுலகத்தால் கவரப்பட்டு, தானும் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன், எழுதவந்து, கொஞ்ச காலத்திலேயே மொக்கை பதிவர் ஆகிவிடுகிறோம். அப்படி ஆகிவந்த ஒரு அரை மொக்கை பதிவர், பாதியில் அலார்ட் ஆகி, பதிவுலகில் புரட்சிகரமான பதிவுகள் எழுதும் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார். 

"அண்ணே வணக்கம் ". 

"பிச்சுபுடுவேன் பிச்சு, தோழர் அப்படின்னு கூப்பிடு...". 

"ஏன் அப்படி சொல்றீங்க?" 

"இல்ல இப்படி கூப்பிடுறது ஒரு கோட் வேர்ட். கும்பல்ல கலவரம் ஆகும்போது, சில நேரம் நம்மாள்களே நம்மை தாக்க நேரிடும். அப்போ இதை சொன்னா தப்பிச்சுக்கலாம். சரி வந்த விஷயத்தை சொல்லு?"

"அதில்லை அண்ண்.... சாரி தோழரே. இந்த சமுதாயத்துக்கு நான் ஏதாவது செய்யனும். ஒண்ணும் செய்ய முடியாலான்னாலும் அட்லீஸ்ட் ஒரு புரட்சிகர பதிவர் அப்படின்னு பேராவது எடுக்கணும். அதுதான் என்னோட ஆசை. "

"சமுதாயத்துக்கு நல்லது செய்யுறத பத்தி எனக்கு தெரியாது. ஆனா புரட்சிபதிவர் ஆகிறது எப்படின்னு சில ஐடியாக்கள் தரேன் ஓகேவா?"

"சரி சொல்லுங்க நோட் பண்ணிக்கிறேன்"

"உன்னோட வலைப்பக்க லே-அவுட்டை மொதல்ல மாத்து. மொக்கையா ஏதோ க்ரீட்டிங் கார்டு மாதிரி இருக்கு. பாத்த உடனே உணர்ச்சி கொப்பளிக்க வேணாமா?"

"அப்போ நமீதா இல்லைனா ஹன்ஸிகா படம் போடவா?"

"டேய் அப்புறம் உன் பேரு கில்மா பதிவர்னு மாறிடும். ரத்த கலர்ல, திட்டு திட்டா தெரியுர மாதிரி கலரிங் பண்ணு. ஆங்காங்கே கை கால் தலை சிதறி கிடக்குற மாதிரி படம் போடு.."

"அய்யோ தோழா பயமா இருக்கே? இப்படிலாம் போட்டா யார் என் தளத்துக்கு வருவா?"

"நிச்சயமா எவனும் வரமாட்டான். காலங்காத்தால இப்படி ஒரு தளத்தை பார்த்தா விளங்கிடும். ஆனா எல்லோரையும் வரவழைக்கிறதுக்கு வேற வழி இருக்கு. நான் சொல்றத மட்டும் கேளு. குறுக்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. புரட்சியாளர் ஆக மொதல் தகுதி, சீனியர் புரட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்காம இருப்பதுதான். புரியுதா?"

(பீதியுடன்) "சரி நீங்க சொல்றமாதிரியே பண்றேன்"



"திங்கள்கிழமை ஹிந்து, செவ்வாய் கிழமை ஒரு சாதி, புதன் கிழமை ஏதாவது ஒரு பெரிய மனிதன். வியாழக்கிழமை முஸ்லிம், வெள்ளி கிழமை மறுபடியும் ஒரு சாதி, சனிக்கிழமை அமெரிக்கா, ஞாயிற்றுகிழமை சீனா."

"புரியலையே... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. "

"திங்கட்கிழமை இந்துக்களை கேவலமாக திட்டி ஒரு பதிவெழுது. அப்புறம் செவ்வாய் கிழமை ஏதாவது ஒரு சாதி, பிராமணர் இல்லை தேவர் ஏதாவது ஒன்றை போட்டு தாக்கு. புதன் கிழமை சச்சின், சூர்யா, ஸ்டீவ்ஜாப்ஸ், பில்கேட்ஸ், பவர்ஸ்டார் என்று ஏதாவது ஒரு பெரிய மனிதரை பற்றி தரக்குறைவாக ஒரு கட்டுரை எழுது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் தோழராக மட்டும் இருந்து விடக்கூடாது. அப்புறம் மன்னிப்பு கேட்கவேண்டி வரும். மன்னிப்பு கேட்பது என்பது நாம் தோழர் சமுதாயத்திலேயே இல்லாத ஒன்று.  திங்கட்கிழமை நம் கட்டுரையை படித்து கடுப்பாகி இருக்கும் இந்துக்களை மகிழ்விக்க இப்போது முஸ்லீம்களை கேவலப்படுத்தி ஒரு கட்டுரை. வெள்ளிக்கிழமை மறுபடியும் சாதி வெறி உண்டாக்கும் வகையில் ஒரு கட்டுரை. சனிக்கிழமை அமெரிக்காவை திட்டி ஒரு கட்டுரை. ஞாயிற்றுகிழமை சீனாவுக்கு சொம்படித்து ஒரு கட்டுரை."

"இந்த ஆர்டரில்தான் எழுதணுமா? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"

"திங்கள் மற்றும் வெள்ளி, கம்பெனியில் எவனும் வேலை பார்க்க மாட்டான். ஆகவே அப்போதுதான் சும்மா கொழுந்து விட்டு எரியுர மாதிரி கட்டுரை எழுதணும். அதுக்குத்தான் ஹிந்து மற்றும் சாதி வெறி. மற்றபடி மற்ற கட்டுரைகளை எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டுரைகளுக்கு குறைந்தது மூன்றுநாள் இடைவெளி வேண்டும்." 

"இந்துக்களை திட்டி விட்டு உடனே முஸ்லீம்களை திட்டினால் நாம் மீது அவநம்பிக்கை வந்துவிடாதா?"

"உனக்கு போதிய அனுபவம் கிடையாது. நம்ம ஊரில் சாதி என்று வந்துட்டா பரம்பரை எதிரி கூட நண்பன் ஆகிடுவான். இன்னிக்கு இந்துவை திட்டி நான் கட்டுரை எழுதுன உடனே எல்லா இந்துக்களும் என்னை எதிரியா நினைப்பான். நாளைக்கே முஸ்லிமை திட்டி நான் எழுதுனா இவன் எல்லாம் எனக்கு நண்பன் ஆகி அவன் எல்லாம் எதிரி ஆகிடுவான்."

"தலைவா நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். ஆமா கிறித்துவர்களை விட்டுட்டீங்களே? அவங்க நம்ம ஆளா?"

"அட நீ வேற. இந்து முஸ்லிம் கட்டுரை எழுது. கமெண்ட் பகுதியில் கிறித்துவர்களையும் போட்டு குதறி விடலாம்."

"அப்புறம் ஒரு முக்கிய விஷயம். சீசனுக்கு ஏத்த மாதிரி சில புதிய கட்டுரைகளை எழுதணும். அதுல ரொம்ப முக்கியம் எப்படியாவது, சாதியை கலக்க மறக்க கூடாது. நாட்டுல டெய்லி ஆயிரக்கணக்குல தப்பு நடக்குது. எல்லா சாதிக்காரனும்தான் தப்பு பண்றான். ஆனால் குறிப்பிட்ட ஒரு தப்பை மட்டும் சுட்டிக்காட்டி, அவன் சாதியை தொண்டி துருவி, நாறடிக்கணும்." 



"சரி நாறடிக்கிறதுன்னா என்ன?"

"நாலு கெட்ட வார்த்தை. குறிப்பா தே... ம... கண்டிப்பா இருக்கணும். அது போல, மூத்திரம், மலம் என்று கலந்து விடணும். எந்த சாதியை , மதத்தை, மனிதரை திட்டுகிறாயோ அவரது உருவத்தை கேலி செய்தோ அல்லது அவரது வீட்டு பெண்களை ஆபாசமாக வர்ணித்தோ அல்லது ஒழுக்கத்தை குறிவைத்தோ எழுத வேண்டும்." 

"அய்யோ குமட்டுதே....  சரி ஒருவரின் உருவத்தை கிண்டல் பண்றது தப்பில்லை?"

"யார் சொன்னது? சொல்வது தோழராக இருந்தால் தப்பில்லை." 

"பெண்களை ஆபாசமாக வர்ணிப்பது அல்லது அவர்களின் கற்பை கேலிக்குள்ளாக்குவது?"

"பெண்ணியம் பேசும் கட்டுரைகளில் மட்டும் பெண்களை உயர்த்தி பேசினால் போச்சு. நமக்கு வேண்டிய 'தோழி'களை மட்டும் மதித்தால் போதும்."

"நமக்கு வேண்டியவர்களே ஒழுக்க கேடாக நடந்தால் என்ன செய்வது?"

"கண்டுக்க கூடாது, யாராவது கேள்வி கேட்டா வந்துட்டாண்டா கலாச்சார காவலன் என்று அவனை கலாய்த்து விடவேண்டும். ஆனால் அதே சமயம் அடுத்த பெண்கள் கற்போடுதான் இருக்கிறார்களா? என்று ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடவுளாக இருந்தாலும் விடக்கூடாது. பெண்களை திட்டுவது ஆணாதிக்கம் என்று சொல்லிக்கொண்டே அடுத்தவனின் குடும்பப்பெண்களை திட்டவேண்டும். "

 "எனக்கு அவ்வளவா கெட்ட வார்த்தை தெரியாதே?"

"கவலைப்படாதே. நம்ம தளத்தின் முந்தைய பதிவுகளை படித்து தெரிஞ்சுக்கோ."

"ரொம்ப நன்றி தோழா... சரி இப்படி எழுதினால் யாராவது சண்டைக்கு வரமாட்டார்களா?"

"என்ன அப்படி கேட்டுட்ட?, கண்டிப்பா வருவாங்க. அதுக்கு பதிலா நீ நாலு ஐடி கிரியேட் பண்ணி கமெண்ட் போடணும். என்கிட்ட இதுமாதிரி நிறைய பேர் இருக்காங்க. என்கிட்ட சொன்னா உனக்கு உதவி பண்ணுவேன். கமெண்ட் போட்டவன் என்ன சொன்னாலும், அவனது ஜாதி, மதத்தை குறிவைத்தே பேசணும். வந்தவன் துண்டகாணோம் துணியகாணோம் என்று ஓடி விடுவான்."

"அப்புறம் நம்ம தளத்து பக்கம் யாரும் வரமாட்டாங்களே?"

"அங்கதான் நீ தப்பு பன்ற. என்னதான் தர்ம அடி வாங்கினாலும் வரத்தான் செய்வான். ஆனா கமெண்ட் போடமாட்டான். போட வைக்கணும். அங்கதான் உன் திறமை இருக்கு. தர்ம அடி கொடுக்குறவன் அடி வாங்கவும் பயப்படக்கூடாது. 'தோழர்' கோட் வேர்டை பயன்படுத்தினால் தோழர்களிடம் இருந்து அடிவாங்காமல் தப்பிக்கலாம். ஆனால் வர்றவன் போறவன் எல்லாம் அடிப்பான். அந்த மாதிரி சமயங்கள்ல மக்களை திசை திருப்ப, உடனே ரெண்டு மூணு மொக்கை கட்டுரைகளை எழுதிடனும். இல்லை அந்த கட்டுரையை தூக்கிடனும்."

"சரி நம்மாட்களே தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா என்ன பண்றது?"

"அவர்களை போலி தோழர்னு சொல்லிடு. வேறு கேள்வி கேட்கவே முடியாது."

"இந்த போலி சாமியார் மாதிரி கரெக்ட்தானே?"

"போலி சாமியார்னு சொன்னாலும் அவன் சாமியார்தான், இந்துதான்னு அடிச்சு பேசணும். விட்டிட கூடாது. ஆனா போலி தோழர்னு ஒரே வார்த்தையில் விவாதத்தை முடிச்சுடனும்."  



"எப்படியோ நாடு நல்ல இருந்தா சரி.... "

"அடி செருப்பால. நாடு நல்ல இருந்தா சரியா? இந்த நாடு நல்லாவே இருக்க கூடாதுடா. அதுதானே எங்க கா கா கீ கீ இயக்கத்தொட நோக்கமே. இந்தியான்னு ஒரு நாடே இருக்க கூடாது. எல்லா ஸ்டேட்டையும் தனி நாடா ஆக்கணும். அப்பத்தான் சீனா ஆக்கிரமிக்க வசதியா இருக்கும்." 

"எத்தனை நாள்தான் வாயிலேயே வடை சுடுவது. போராட்டம்னு ஏதாவது நடத்தினாதானே மக்கள் நம்புவாங்க?"

"டேய் இந்த மக்களை பத்தி உனக்கு தெரியாதுடா. நாட்டுல எவன் என்ன பேசினாலும் ஆன்னு வாயை பிளந்துகிட்டு பாப்பாங்க. அடுத்த நிமிஷமே அதை மறந்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க. சொன்னவன் முகம் கூட ஞாபகம் இருக்காது. நாம என்ன பண்ணணும்னா, இங்கே இருந்து பத்தவச்சிக்கிட்டே இருக்கணும். பத்திக்கிட்டா அதை பெரிசா ஊதி விடணும். அதோட வேலை முடிஞ்சது. அதுக்கும் திருப்தி இல்லைனா? டவுன் பஸ்ஸுல டிக்கெட் எடுக்காத போராட்டம், பேண்டுக்குள் ஜட்டி அணியாத போராட்டம், வரலாறு காணாத எழுச்சின்னு... நம்மை நாமே போட்டோ எடுத்து  போட்டுக்க வேண்டியதுதான்." 

"ஆகா சூப்பர் தோழரே... இதுவரை கரையாகி இருந்த என் மூளையை நன்றாக சலவை செய்து சுத்தப்படுத்தி விட்டீர்கள்..... "

(சீனியர் தோழர் மனதுக்குள் ... "அப்பாடா இன்னிக்கு ஒருத்தனை தீவிரவாதியா மாத்தியாச்சு.... இன்னிக்கு கோட்டா முடிஞ்சது.")

"சந்தோஷம் தோழரே எனக்கு அவசர வேலை இருக்கு போய்ட்டு வரேன். லேட்டா போனா மொதலாளி திட்டுவார். என்ன இருந்தாலும்  மொதலாளி நமக்கு தெய்வம் இல்லையா?". என்றபடி இருவருமே தாங்கள் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஓடுகிறார்கள். 



(கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டனோ?) உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....   


48 comments:

பால கணேஷ் said...

பிரபல புரட்சிப் பதிவர் ஆவது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன் பாலா. (நல்லவேளையா... அப்படி ஒரு ஐடியா எனக்கில்ல) அதுசரி... இங்க வெச்சிருக்கற பட்ங்கள்ல இருக்கறது உங்க நண்பர்களா... இல்ல, வேற வேற சந்தர்ப்பங்கள்ல எடுத்துகிட்ட உங்க படங்களா?

Unknown said...

"அங்கதான் நீ தப்பு பன்ற. என்னதான் தர்ம அடி வாங்கினாலும் வரத்தான் செய்வான். ஆனா கமெண்ட் போடமாட்டான். போட வைக்கணும்.அங்கதான் உன் திறமை இருக்கு//////

உண்மைதாய்யா

Unknown said...

தெய்வமே நீங்க எங்கியோ போய்ட்டிங்க.....

கலாகுமரன் said...

பய புள்ளக, அவ அவன் தினத்திக்கி என்ன போராட்டம்னு வெயில்ல மண்டைய போட்டு பிராண்டிட்டு இருக்கான் என்னா நீங்க சரமாரிய டிப்சு குடுக்கிறீயலே...

Unknown said...

பாலா அண்ணா நானும் சீக்கிரம் ஆயிடுவன் புரட்சிப் பதிவாளராக

பாலா said...

@கணேஷ்

சார் அந்த படங்கள் எல்லாம் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு அந்த ஜூனியர் புரட்சியாளர் சொல்வதாக குறிக்க. அப்புறம் நான் அவ்வளவு அழகாக இருக்க மாட்டேன். எல்லாம் நம்ம மூதாதயர்கள்தான்.

பாலா said...

@Vairai Sathish

நன்றி நண்பரே

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

அய்யோயோ நம்மளயும் தெய்வம் ஆக்கிடாதீங்க...

பாலா said...

@kalakumaran

ஏதோ நம்மாள முடிஞ்சது.... ஹி ஹி

பாலா said...

@Esther sabi

என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு சகோதரி. நடக்கட்டும்.

பாலா said...

@Esther sabi
உங்க வலைத்தளத்துக்குள் வந்தாலே வேறு ஒரு தளத்துக்குள் திருப்பி விடுகிறது. என்ன பிரச்சனை என்று பார்க்கவும்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

வலைத்த்ளத்தில் பெயரை.. ‘பெரிசா பொகயற பீடி’ன்னு வச்சுக்கோங்கோ. நல்ல கற்பனை.

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

நீங்க வாழ்த்துறீங்களா இல்லை திட்டுறீங்களான்னு தெரியல. எது சொன்னாலும் கேட்டுக்க வேண்டியதுதான். நன்றிங்க

Unknown said...

நக்கலோ நக்கல்..கிண்டலோ கிண்டல்!
யதார்த்தத்தை சுவையான நடையில் வடித்தமைக்குப் பாராட்டுகள்!

அவர்களுக்கு மிகவும் பிடித்த சொம்பால் விளாசிவிடப் போகிறார்கள்! உஷார்!

test said...

என்னமா ஐடியா குடுக்கிறீங்க பாஸ்! :-)

ப.கந்தசாமி said...

நல்ல ஐடியாக்கள். பாலாவிற்கு பாராட்டுக்கள்

முத்தரசு said...

அடேங்கப்பா இம்புட்டு விடயம் இருக்கா பொரச்சி பதிவர் ஆவதற்கு.(கொய்யால)...

பாலா பாலா ப்ளீஸ் டிப்ஸ் கொடுத்த அந்த சினியர் பதிவர் காண்டக்ட் கொடுங்களேன்....இல்ல பாராட்டத்தான்.

பாலா said...

@ரமேஷ் வெங்கடபதி

நன்றி சார். பதுங்கி கொள்கிறேன்.

பாலா said...

@ஜீ...

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@பழனி.கந்தசாமி

நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்மகன்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@மனசாட்சி™

அவரே என்னை தேடிக்கிட்டு இருக்காராம். பார்த்ததும் சொல்றேன். நன்றி நண்பரே

Yoga.S. said...

வணக்கம் பாலா!சும்மா பின்னி பெடல் எடுத்திட்டீங்க,போங்க!பாத்தீங்களா,கமெண்டு போட்ட ஒருத்தர் கூட காண்டாவுலியே?????விசுவரூப வெற்றி!

மாலதி said...

பிரபல புரட்சிப் பதிவர் ஆவது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன்...மிக்க நன்றி

Thava said...

கொஞ்சம் நீளமான பதிவுதான்..ஆனால் செம்ம சுவார்ஸ்யமான பகிர்வு..ஐடியாக்கள் தூக்கல் சார்..மிக்க நன்றி.

முத்தரசு said...

//பாலா said...
@மனசாட்சி™

அவரே என்னை தேடிக்கிட்டு இருக்காராம். பார்த்ததும் சொல்றேன். நன்றி நண்பரே//

மறக்காம சொல்லணும் மீ வெய்ட்டிங்

செய்தாலி said...

ம்ம்ம்
பிரபலம் ஆகா இவ்வளவு செய்யனும்மா சார்

Anonymous said...

ஆகா சூப்பர் தோழரே...-:)

சென்னை பித்தன் said...

ஆகா!ஆகா!ஆகா!

ஒசை said...

புரட்சிப்படுற பாட்டை விலாவாரியா எழுதி இருக்கீங்க.

Rathnavel Natarajan said...

அருமை.
நல்ல நகைச்சுவை.
வாழ்த்துகள்.

r.v.saravanan said...

தர்ம அடி கொடுக்குறவன் அடி வாங்கவும் பயப்படக்கூடாது. '

ஹா ஹா

இப்படி பதிவு எழுத உட்கார்ந்து யோசிபிங்கலோ

எப்பூடி.. said...

டெம்ளேட்டில் சேகுவாரா, காஸ்ரோ, மாவோ, ஸ்டாலின் படங்களும், அமெரிக்க கொடிக்கு தீ வைப்பது போன்ற புகைப்படங்களும் விரும்பத்தக்கது!!! மதம், ஜாதி, கடந்து நாடு, இனம் என்று கிடைக்கிற எல்லாவற்றையும் திட்டனும். சொல்லப்போனா நமக்கு திட்டிறதுதான் முழுநேர வேலை, திருத்திறது இல்லை; இந்த பாயிண்ட்தான் முக்கியம்.....

நம்ம ஏரியா பதிவு, வழமைபோல சிறப்புத்தான்; இருந்தாலும் இப்பெல்லாம் எனக்கு இவங்க மேல கோபம் வாறதில்லை, அவங்களை இப்பெல்லாம் காமடி பீசைவிட காமடியாத்தான் டீல் பண்ணிறன் :p

ஆத்மா said...

என்னதான் மொக்கையா இருந்தாலும் பயனுள்ள சில ஐடியாவ நாமளும் புடிச்சுகிட்டோமில்ல............

பாலா said...

@Yoga.S.FR

காண்டாவாதவங்க மட்டுமே கமெண்ட் போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். நன்றி நண்பரே

பாலா said...

@மாலதி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@Kumaran

தொடர்ந்து புரட்சி பதிவுகளை படித்தால் உங்களுக்கே இப்படி பல ஐடியாக்கள் வரும். நன்றி நண்பரே

பாலா said...

@மனசாட்சி™

பண்ணுங்க பண்ணுங்க

பாலா said...

@செய்தாலி

இந்த ரூட்டுல பிரபலம் ஆகணும்னா இததனையும் செஞ்சுதான் ஆகணும். நன்றி நண்பரே

பாலா said...

@ரெவெரி

அய்யோ நான் தோழர் இல்லை, நான் தோழர் இல்லை....

பாலா said...

@சென்னை பித்தன்

ரசிப்புக்கு நன்றி சார்

பாலா said...

@ஒசை

நன்றி நண்பரே.

பாலா said...

@Rathnavel Natarajan

மிக்க நன்றி சார்

பாலா said...

@r.v.saravanan

நீங்களும் இந்த மாதிரி புரட்சி பதிவுகளை படிங்க தானா எழுத வரும். நன்றி நண்பரே

பாலா said...

@எப்பூடி..

உண்மைதான் தலைவரே. அதனால்தான் நானும் இதை நகைச்சுவையாகவே எழுதி இருக்கேன். வருகைக்கு நன்றி தலைவரே

பாலா said...

@சிட்டுக்குருவி

எப்படியோ பயனுள்ளதா இருந்தா சரிதான்.

N.H. Narasimma Prasad said...

ஒன்னும் புரியல போங்க. மண்டை குழம்பிடுச்சி.

Karthikeyan said...

பதிவும் அருமை. அதற்குண்டான படங்களும் பொருத்தம்.

Related Posts Plugin for WordPress, Blogger...