விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 9, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 1


மறுபடியும் வேதாளம் கிரிக்கெட் மரத்தில் ஏறிவிடுகிறது. இதுவும் நல்லதுக்குத்தான். அப்புறம் நான் பாட்டுக்கு, பார்ப்பனியம், கம்யூனிசம் என்று வேறு மரத்தில் ஏற தொடங்கி விடுகிறேன். அதற்கு கிரிக்கெட் எவ்வளவோ தேவலாம். கிரிக்கெட் வரலாறு என்ற தொடர் எழுதிய பிறகுதான், பதிவுலகில் நிறைய பேருக்கு இந்த தளம் பரிச்சயம் ஆனது. அதே போல சமீபத்தில் ஒரு நண்பர், அதிக ஹிட் வாங்க வேண்டுமானால் விஜய் அவர்களை கலாய்த்து பதிவிடலாம் என்று கூறி இருந்தார். அந்த நோக்கத்தில் பதிவிடா விட்டாலும், என் முந்தைய பதிவான மங்காத்தா சம்பந்தமான பதிவுக்குத்தான் அதிக ஹிட்ஸ். அதே போல இதுவரை எனக்கு கமெண்ட்ஸ் 60ஐ தாண்டியதில்லை. இந்த பதிவிற்கு மட்டும் 98 கமெண்ட்ஸ். செஞ்சுரி ஜஸ்ட் மிஸ். கிரிக்கெட் தொடரை முடித்த பிறகு, கிரிக்கெட் பற்றி கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்றாலும், சில நண்பர்கள், இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடி வருவதை பற்றி கருத்து கேட்கிறார்கள். அவர்களுக்கு கவுண்டமணி பாணியில் சொல்வதானால் , "ஏம்பா நொந்து போயிருக்கிற நேரம் பார்த்து வந்து வம்பு பண்ற?" என்பதுதான் என் பதில். இப்போதைக்கு இந்த டூரை சீக்கிரம் முடித்து விட்டு திரும்பி வந்தாலே போதும். 


கிரிக்கெட் தொடரின் இறுதியில் சொன்னது மாதிரி, ஒவ்வொரு அணியிலும் பல வீரர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அத்தொடரில் கூறி இருந்தால் இன்னும் நீளமாகி இருக்கும். ஆகவே அவர்களைப்பற்றி இந்த மினி தொடரில் கூறுகிறேன். கண்டிப்பாக இது மினி தொடர்தான். 

ஆஸ்திரேலியா

நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கியதில் இருந்து கொஞ்சம் கூட கம்பீரத்தை இழக்காத ஒரு அணி. தனது தேசிய விளையாட்டாக இருப்பதாலோ என்னவோ, மிக ஆக்ரோஷமாக ஆடி வருகிறார்கள். பொதுவாக ஆஸ்திரேலியர்களை எல்லோருக்கும் பிடிக்காது. காரணம் அவர்களோடு மோதினால் தோல்வி வாய்ப்பு அதிகம் என்பதால். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதையும் மீறி, ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் என்னை கவர்ந்திருக்கின்றனர். 

டீன் ஜோன்ஸ்


மிகவும் ஸ்மார்ட் ஆன ஒரு வீரர். உயரமாக, நல்ல கட்டுடலுடன், ஆங்கில பட நடிகர் மாதிரியே இருப்பார். ஆஸ்திரேயர்களுக்கே உரிய அத்தனை தெனாவட்டும், இவருக்கு உண்டு. இங்கிலாந்தின் கோலிங்க்வுட் மாதிரி இவரையும் டிபெண்டபுள் (Dependable) என்று சொல்லலாம். இவர் களத்தில் நின்றால் வெற்றியை பற்றி கவலைப்படவேண்டியதில்லை. இவரை மிக குறைந்த போட்டிகளிலேயே பார்த்திருக்கிறேன். ஒரு போட்டியில் இவரும் டேவிட் பூனும் சேர்ந்து இந்திய அணியை புரட்டி எடுத்ததை மறக்கவே மாட்டேன். அது 92இல் நடந்த ஒரு தொடர். இவருக்குள்ள ஒரு குணம் என்னவென்றால், நிதானமாகவும் ஆடுவார், அதிரடியாகவும் ஆடுவார். அப்படி ஆடும் வீரர்களை வீழ்த்துவது மிகக்கடினம். 
 
கிளென் மெக்ராத்


ஆஸ்திரேலியா என்றாலே நினைவுக்கு வருபவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலியர்களை பிடிக்காவிட்டாலும், இவரை பிடிக்காதவர்கள் மிக கம்மி. ஒரு சராசரி பவுலராக இருந்ததில் இருந்து, இவரை பார்த்து வருகிறேன். தொண்ணூறுகளின் இறுதியில் புகழ்பெற தொடங்கிய இவர், 2000 ஆண்டுக்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்தார். இவரைப்பற்றி ஒரு சுவாரசியமான செய்தி உண்டு. ஆஸ்திரேலியாவுக்காக அதிக போட்டியில் ஆடி உள்ள இவர், முக்கால் வாசி போட்டிகளில் பேட்டிங் செய்ய களமிறங்கியதே கிடையாது. பேட்ஸ்மேன்களே பார்த்துக்கொள்ளும்போது, இவருக்கென்ன வேலை? 2003இல் இவர் எடுத்தது வரும் 19 ரன்களே.  இவரைப்பற்றி குறை என்றால், ஆஸ்திரேலியாவின் மோசமான பீல்டர்களில் இவரும் ஒருவர். இவரது காதல் மனைவி, 2008இல் கேன்சர் நோயால் இவரை விட்டு பிரிந்தார். 

ஷேன் வார்னே


கிரிக்கெட் என்றாலே ஒரு சிலபேர் நினைவுக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். கடந்த பதினைந்து வருடங்களில் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இவர் பந்துவீசும்போது பந்து மெதுவாக காற்றில் மிதந்து வரும். இதை தப்பு கணக்கு போட்டு ஆவலோடு இறங்கி வந்து விளாச நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். பந்து தரையில் பட்டவுடன், அசுர வேகத்தில் திரும்பும். எந்த திசையில் திரும்பும் என்பது ஷேன் வார்னுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், எதிரி முகாமில் இருந்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டவர். 

மைக்கேல் பெவன் 


தொண்ணூறுகளில், ஆஸ்திரேலிய டெயில் எண்டர்கள் நிம்மதியாக பெவிலியனில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், களத்தில் பெவன் நிற்கிறார் என்று அர்த்தம். அதற்கு மேல் விக்கெட் விழவே விழாது. இவர் ஆஸ்திரேலியாவின் டிராவிட். ஓட்டு மொத்த அணியும் வீழ்ந்து விட்டாலும், ஒற்றை ஆளாக நின்று பல முறை அணியை மீட்டிருக்கிறார். அதிலும், மிக வேகமாக நகர்ந்து ஆடுவதால், இவரை அவுட் செய்வது கடினமாக இருக்கும். எந்த நேரத்திலும் அவசரப்படவே மாட்டார். பதறாத காரியம் சிதறாது என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான். பவுலிங்கிலும் கொஞ்ச காலம் அசத்தினார். 

மார்க் வாக் 


எனக்கு தெரிந்து கிரிக்கெட்டின் மிக அழகான வீரர். அண்ணன் ஸ்டீவ் வாக் சாயலில் இருந்தாலும், அவரை விட மிக ஸ்மார்ட். தொண்ணூறுகளில் அதிரடி ஒப்பனர். அலட்டாமல் ஆடுவார். மிக கஷ்டப்பட்டு, எந்த ஷாட்டையும் அடிக்க மாட்டார். ஒரு காலத்தில் சச்சினுக்கு இணையாக செஞ்சுரிகளை குவித்து வந்தவர். பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே இவர் பந்து வீசுவது மிக அழகாக இருக்கும். ஹெய்டன் வருவதற்கு முன், ஸ்லிப் பொசிசனில், டெய்லருக்கு அருகில் இவர்தான் நிற்பார். இந்த நிலையில் மெக்ராத், வார்னே ஆகியோரின் பந்து வீச்சை கணித்து, பேட்டின் விளிம்பில் பட்டு, ஜெட் வேகத்தில் வரும் பந்தை லபக்குவதில் வல்லவர். பல அபார கேட்ச்களுக்கு சொந்தக்காரர். இதற்காக, ஒரு சுவற்றுக்கு அருகில் 2 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு, டென்னிஸ் பந்துகளை எறிந்து கேட்ச் பிடித்து பயிற்சி செய்வாராம்.  

கில்கிறிஸ்ட்


என்னை பொறுத்தவரை இவர் கிரிக்கெட்டின் ஜாக்கி சான். இவர் என்ன செய்தாலும் அது அழகாக இருக்கும். ரசிக்கக்கூடியதாக இருக்கும். கிரிக்கெட்டின் துறுதுறு வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஈவு இரக்கமற்றவர் என்று அம்பயர் ஸ்டீவ் பக்னர் கூறுகிறார். இங்கிலாந்து உடனான ஒரு டி20 போட்டியில், பேட்டிங் பிடிக்கும்போது, மைக்கில் பேசியபடியே ஆடி வந்தார். இரண்டு சிக்சர் அடித்ததும் வர்ணனையாளர், "மூன்றாவது சிக்சர் வேண்டும்" என்று சொன்னார். அடுத்த பந்தில் சிக்சர் அடித்து விட்டு, "கேட்டது கிடைத்ததா?" என்று கில்கிறிஸ்ட் கேட்டார். பாவம் பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.  கிரிக்கெட்டை மிக ரசிக்கக்கூடியதாக ஆக்கிய வீரர்களுள் இவரும் ஒருவர். இவர் இந்திய அணியுடன் ஆடும்போது, ஒவ்வொரு பந்தும் அடிவயிற்றில் பீதியை கிளப்பும். அதே போல உலகின் மிக சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். பல அபார கேட்ச்களை பிடித்தவர். இவரும், மெக்ராத்தும் சிறந்த பாட்னர்கள் போல செயல் படுவார்கள். முதுகுக்கு பின்னால் சென்ற பந்தை கங்குலி, சுழன்று அடிக்க, அதை பறந்து கேட்ச் பிடித்ததை என்னால் மறக்கவே முடியாது.  

ஜிம்பாப்வே 
கடந்த பத்தாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு அணி. உள்நாட்டில் சில பிரச்சனைகள், அரசின் நிறவெறி கொள்கைகள், என்று கிரிக்கெட் அணியை சுத்தமாக உலுக்கி எடுத்து, அதனால் பல வீரர்கள் ரிட்டையர் ஆகி விட, மிக மட்டமான அணியாக மாறிவிட்டது ஜிம்பாப்வே. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். ஆனால் 90களில் ஓரளவுக்கு விளையாடக்கூடிய அணியாகவே ஜிம்பாப்வே விளங்கியது. இந்த அணியிலும் சில வீரர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள். 

ஆண்டி பிளவர்


இவரை பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், இவர் மட்டும் வேறு அணியில் ஆடி இருந்தால் இந்நேரம், உலகப்புகழ் பெற்ற பேட்ஸ்மேனாக விளங்கி இருப்பார். ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் வரலாற்றை பற்றி எழுதினால், அதில் பாதிப்பக்கத்தை இவரைக்கொண்டுதான் நிரப்ப வேண்டும். உலகின் பெரிய பவுலர்களையே ஒரு கை பார்த்தவர். தொண்ணூறுகளில் பல போட்டிகளில் ஜிம்பாப்வே வெற்றி பெற காரணமாக இருந்தவர். இவரை அவுட் ஆக்கி விட்டால் ஆட்டம் முடிந்தது என்ற நிலைமையில், எப்போதுமே மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடியவர். அதே போல காயம் ஆகாமல் அதிக போட்டிகளில் ஆடுவது எப்படி என்ற வித்தையை இவரிடம் கற்றுக்கொள்ளலாம். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் ஆடும்போது, அவர்களுக்கே ஆட்டம் காட்டுவார். மொத்த அணியின் ஸ்கோர் 150 ஆக இருக்கும். அதில் ஆண்டி பிளவர் செஞ்சுரி அடித்திருப்பார். தற்போது இங்கிலாந்தின் பயிற்ச்சியாளராக இருக்கிறார். 
 
கீத் ஸ்ட்ரீக் 


இவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம், 1996 உலகக்கோப்பையில், சச்சினின் ஆடும்போது, இரண்டு ஸ்டம்புகள் எகிறும் நிகழ்ச்சியே ஞாபகம் வருகிறது. மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவர். ஆனால் சரியான ஜோடி கிடைக்காததால், ஜொலிக்க முடியவில்லை. ஜிம்பாப்வேயின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு வேகப்பந்து வீச்சாளர். அவ்வப்போது பேட்டிங்கிலும் அசத்துவார். 

அலிஸ்டர் கேம்பல்


ஜிம்பாப்வே அணியில் ஆடிய அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர். அரசியல் புயலில் காணாமல் போனவர். இவரது தலைமையில் ஜிம்பாப்வே அணி பல வெற்றிகளை பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கு பல நிலைகளில் களமிறங்கி ஆடியவர். ஜிம்பாப்வேயின் சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். 

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து வீரர்கள்... அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

32 comments:

Unknown said...

மாப்ள விளக்கத்துடன் கலக்கலான பதிவய்யா....என்னதான் சொல்லுங்க பெவன் சான்சே இல்ல....ஒன்னு ஒண்ணா தேத்திட்டு சுத்தி சுத்தி ஆடறதுல சூரன்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கில்கிறிஸ்ட் ஆட்டம் எப்பவும் சூப்பர்..

Manoj said...

Cricket is not australia's national game. infact, australia doesn't have any official national game.

சென்னை பித்தன் said...

நல்ல தேர்வு!

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள மொத வெட்டுக்கு நன்றி....

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@Manoj

அவ்வப்போது தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு நன்றி. கிரிக்கெட் அவர்களின் தேசிய விளையாட்டு என்று படித்ததாக நினைவு. அதை கருத்தில் கொண்டு எழுதினேன். விக்கியில் national summer sport என்று போட்டிருக்கிறார்களே?

நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்.

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு கிரிக்கெட் தெரியாதுன்னா அடிக்க வராதீங்கப்பு சத்தியமா தெரியாது...!!!

Manoj said...

ya i too saw that. but this link: http://en.wikipedia.org/wiki/National_sport tells about official national sports of a country. many countries doesn't have official national sports. i feel australia one among them.

Note: strange thing is Bermuda played only once in the world cup history but its national game is cricket.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது கிரிக்கெட் பதிவுகள் அற்புதமாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.

Nirosh said...

மைக்கல் பெவனை நினைவூட்டியதற்கு நன்றிகள் அருமையான பதிவு..!

Mohammed Arafath @ AAA said...

என்னங்க பாஸ்.. நான் இப்படி ஒரு பதிவு எழுதலாம் ன்னு நினச்சேன்.பட் நீங்க முந்திடீங்க..
கலக்குங்க...

Mohammed Arafath @ AAA said...

எனக்கும் சில கிரிக்கெட் வீரர்களை பற்றி எழுதணும் ஆசை.

my fav.. is Gilchrist...

N.Manivannan said...

நமக்கு புடிச்சவரு கில்ரிஸ்ட் தாங்க, ஜென்டில் மேன்

அந்நியன் 2 said...

கிரிக்கெட்டைப் பற்றி எனக்கும் எதுவும் தெரியாது.

படிச்சேன்...எதோ கொஞ்சம் புறிகிற மாதிரி தெரியுது.

வாழ்த்துக்கள்!

பிரசன்னா கண்ணன் said...

I guess you missed Neil Johnson of Zimbabwe.. Opening Batsmen & Opening Bowler of 99 WC Squad.. Well talented player..

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பா..என் பதிவை 3 இனையதளங்கள் காப்பி செய்துவிட்டன அவங்களுடன் அக்கப்போரடித்ததில் உங்கள் தளத்திற்கு வருவது தாமதமாகிவிட்டது...மன்னிக்கவும்

மைக்கல் பெவன் மிகச்சிறந்த ஒரு துடுப்பாட வீரர்..ராகுல் ராவிட் மதிரிதான் ஒருநாள் போட்டிகளில் அவரது புள்ளிவிபரங்களை எழுத்துப்பார்த்தால்..வியப்பாக இருக்கும்..ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக அமைந்தது இல்லை...அதுக்கு காரணம் அவருக்கு சரியான வாய்ப்புகிடைகாதது கூட இருக்கலாம்.

பிரமாதமான தொடர் வாழ்த்துக்கள் என் விருப்பங்களும் கிட்டத்தட்ட உங்கள் விருப்பத்துடன் ஒத்துப்போகின்றது சுவாரஸ்யமாக அடுத்தப்பதிவுகளை எதிர்பாக்கின்றேன்

அப்பறம் ஒரு விடயம்..அதிக கருத்துரைகள்...வருவது நீங்கள் சொன்ன மாதிரி கமர்சியல் கலாய்ப்பு பதிவுகளுக்குத்தான்.நான் கூட இதுவரை 68 பதிவுகள் எழுதியுள்ளேன் ஆதில் உங்களைப்போல் கிரிக்கெட் பதிவுகள் அதிகம் ஆனால் அன்மையில் இரண்டு மூன்று கமர்சியல் பதிவுகள் எழுதினேன்.....அதிரடியாக 100, கருத்துரையை தாண்டியது..அடுத்ததும் கமர்சியல் பதிவு..அதுக்கும் 150+மேல் கருத்துரை...உடனே 3 இனையதளங்கள் அந்தப்பதிவை காப்பிசெய்து தங்கள் தளத்தில் வெளியிட்டன் அம்புட்டு ஹிட்டாகிடுச்சி.எனக்கு இது மகிழ்சி அளிக்கவில்லை......மாறாக வருத்தம்தான் உண்மையில் பிரயோசன மான பதிவுகளுக்கு கருத்துரை குறைவாக வருகின்றது..அதிகம் ஹிட்ஸ் ஆவதில்லை.ஆனால் ஒரு வாசகன் என் பதிவை வாசித்தாலும் அவனுக்காக கிரிக்கெட் பதிவு எழுத நான் தயாராக இருக்கின்றேன்...இப்ப கிரிக்கெட் பதிவுகள் குறைவாகவே பதிவுலகில் வருகின்றன எனவே...இருக்கும் ஒரு சில கிரிக்கெட்பதிவர்களாகிய நாமும் நம் பாதையை மாற்றாமல் இடைக்கிடையில் நல்ல கிரிக்கெட் பதிவை எழுதவேண்டும் என்பது எனது விருப்பம்...தாங்களும் தங்கள் ஆதரவை வழங்கி இடைக்கிடையில் நல்ல கிரிக்கெட் பதிவுகளை எழுதுங்கள்..கிரிக்கெட் பதிவை படிக்கவும் நிறைய வாசகர்கள் இருக்கின்றார்கள்..ஆனால் நம் பதிவுகளில் கருத்துரை இடுபவர்கள்...நம் சக வலைப்பதிவாளர்கள்தான்......எனவேகருத்துரை இடாத நம் பதிவுகளை வாசிக்கும் சாதாரன இனையதள வாசகனுக்காகவும் நாம் எழுதுவோம் நண்பா....உங்கள் கிரிக்கெட் பதிவுகள் சாதாரண கிரிக்கெட் ரசிகனைகவரும் வண்ணம் உள்ளது...கலக்குங்கள் வாழ்த்துக்கள்.
உங்கள் கிரிக்கெட் பதிவுகளுக்கு என்றும் என் ஆதரவுகள்

கேரளாக்காரன் said...

My favourite players are Neil johnson and Paul strang from Zimbabwe and gilli and Clarke.post as usual super

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ........

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

உங்களுக்கு கிரிக்கெட் தெரியாது என்பது அவ்வளவு பெரிய குற்றமா? இதுக்கெல்லாம் அடிக்க வரமாட்டேன் அப்பு...

பாலா said...

@Manoj

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@Rathnavel

ரொம்ப நன்றிங்க...

பாலா said...

@Nirosh
நன்றி நண்பரே...

பாலா said...

@Mohammed Arafath @ AAA
நீங்களும் தாராளமா எழுதுங்க நண்பரே... நன்றி

பாலா said...

@N.Manivannanஆஸ்திரேலியர்களை பிடிக்காதவர்களுக்கு கூட அவரை பிடிக்கும். நன்றி நண்பரே

பாலா said...

@அந்நியன் 2கிரிக்கெட் பற்றி தெரியாமல் படிப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். நன்றி நண்பரே,,

பாலா said...

@பிரசன்னா கண்ணன்ஜான்சனை நான் மறக்கவில்லை நண்பரே. மிக குறைந்த ஆட்டங்களே ஆடியிருப்பதால் அவரை தவிர்த்து விட்டேன்.

பாலா said...

@K.s.s.Rajhகாப்பி செய்வதை தடுப்பதற்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். அதே போல மன நிறைவுக்காகவே இதுவரை எழுதி வந்தேன். ஆகவே எப்போதும் ஹிட்ஸ் பற்றியோ அல்லது கமெண்ட்ஸ் பற்றியோ கவலை இல்லை நண்பரே...

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@அம்பாளடியாள்தங்கள் வருகைக்கு நன்றி சகோ.

arasan said...

இதுவும் புதுசா தாங்க இருக்கு ..
ரொம்ப ரசித்தேன்

Related Posts Plugin for WordPress, Blogger...