விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 27, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 14

இந்த தொடருக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். "என்னடா இவன்?" நன்றிய எதனை தடவை சொல்வான்னு நினைக்கிறீர்களா? ஒரு சில நேரம் இந்த தொடரை படிக்கும்போது எனக்கே சலிப்பு தட்டுகிறது. ஆனால் சலிக்காமல் படித்து ஆதரவு கொடுத்து வருபவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா? மேலும் தொடரை முடித்து விட்டு எல்லோருக்கும் நன்றி சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அது முறையல்ல என்பதால்தான் அடிக்கடி சொல்கிறேன். இது கிரிக்கெட் பற்றிய ஒரு முழுமையான தொடர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகனாக எனது அனுபவங்கள் மட்டுமே. ஆனால் அதை முடிந்த அளவிற்கு சுவாரசியமாக்கி தர முயன்று கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து வரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

வாய்ப்பை தவற விட்ட இலங்கை... பாண்டிங் அடித்த மரண அடி. 




உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கே உரிய அத்தனை சுவாரசியங்களையும் தந்த முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா என்ற நான்கு பெரிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. அதிலும் தென்னாபிரிக்கா, உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி. வழக்கமாக ஒரு அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேற்றப்பட்டால் முதலில் பலியாவது கேப்டன்தான். இங்கேயும் அதுவே நடந்தது. மேலும் என் வயதை ஒத்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நான் பார்த்து ரசித்து வந்த பல ஜாம்பவான்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டை விட்டு விடைபெற்றார்கள். கார்ல் ஹூப்பர் (மே தீ), கிறிஸ்டன், அலேக் ஸ்டூவர்ட், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என்று பெரிய வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விடைபெற்றார்கள். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு இவர்களின் இழப்பு, கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்தது என்னவோ உண்மை.


2003 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்களை பொறுத்தவரை இந்திய அணிக்கு எந்த நெருக்கடியும் இருக்கவில்லை. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் பெரிய அணிகள் இரண்டு வராததால் மற்ற அணிகள் நிம்மதி அடைந்தது ஒருபுறம் என்றால், சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்ததையே பெரிய வெற்றியாக கொண்டாடி கொண்டிருந்தன ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள். ஆஸ்திரேலியா, "என் வழி தனி வழி", என்ற ரேஞ்சில், பட்டையை கிளப்பி தனி ரூட்டில் சென்று கொண்டிருந்தது. இந்திய அணி, ஜாக்கிரதையாக ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொண்டது. முன்பெல்லாம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால், மிச்சம் உள்ள போட்டிகளை கடனே என்று ஆடுவார்கள். ஆனால் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதில் கவனமாக இருந்தார் கங்குலி.


ஒரு அணி கோப்பையை வெல்ல முக்கியமான தகுதி அதன் கன்சிஸ்டன்சி. அதாவது தொடர்ந்து தன் திறமையை நிரூபிப்பது. அந்த வகையில் இந்த கோப்பைக்கு தகுதியான அணி ஆஸ்திரேலியாதான். லீக் சுற்றில் இந்தியா சொதப்பியதை போல, சூப்பர் சிக்சில் இலங்கை சொதப்பியது. முதலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இலங்கை, அடுத்த போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த உலகக்கோப்பை தொடரிலேயே இலங்கையின் மோசமான ஆட்டம் என்றால் அது இந்த போட்டிதான். முதலில் ஆடிய இந்திய அணி சச்சினின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் 292 ரன் குவித்தது. இந்திய அணியின் பேட்டிங் பலமடைந்து கொண்டே வந்தது. இப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு சச்சினும் சேவாக்கும் சேர்ந்து 152 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. பிறகு களமிறங்கிய இலங்கையின் ஆட்டம் மிக மோசமானதாக இருந்தது. 4 ஓவருக்குள் 15 ரன்னில் 4 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டன. பிறகு வந்த வீரர்களால் விக்கெட்டை கட்டுப்படுத்துவதா? இல்லை ஸ்கோரிங் ரேட்டை உயர்த்துவதா? என்று குழப்பம் அடைந்து விட்டனர். இளம் வீரர் சங்கக்காரா(30) மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். இலங்கையால் 109 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சங்கக்காராவுக்கு அடுத்த படியாக உதிரிகளாக 21 ரன் வந்தது மட்டுமே அதிகபட்சம். சுமார் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். 


மறுபக்கம் நியூசிலாந்து படுசொதப்பலாக ஆடி வந்தது. இந்தியாவுடனான ஆட்டத்தில் ஸ்கோரிங்கை துவக்காமலேயே முக்கிய ஆட்டக்காரர்கள், மேக்மில்லன் மற்றும் ஆஸ்லே அவுட் ஆகிவிட, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 146 மட்டுமே எடுத்தது. இந்திய அணி எளிதில் வென்றது. பல திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரில் அடுத்த அதிர்ச்சி சூப்பர் சிக்ஸ் சுற்று முடிந்தவுடன் காத்திருந்தது. இந்த சுற்று தொடங்கும்போது எல்லோருமே, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.  சூப்பர் சிக்சில் இலங்கையும், நியூசிலாந்தும் சொதப்பி கொண்டிருக்க, வந்தவரை லாபம் என்று கென்யா தன் ரன் ரேட்டை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டது. மேலும் ஏற்கனவே இலங்கையுடன் வெற்றி பெற்றதால் போனஸ் பாயிண்ட் வேறு பையில் இருக்கிறது. சூப்பர் சிக்ஸில் தனக்கு வேண்டிய ஒரே ஒரு வெற்றியை ஜிம்பாப்வேயிடம் இருந்து பெற்றுக்கொண்டது கென்யா. மட்டமாக ஆடிய நியூசிலாந்து அணி வெளியேற, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து, கென்யாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதை கென்யா ரசிகர்களாலேயே நம்ப முடியவில்லை.


தாங்கள் உலகக்கோப்பையையே வென்று விட்டதை போல உணர்ந்தனர் கென்யா வீரர்கள். அவர்களின் இந்த வெற்றிக்கு கென்யா அணியின் கோச் சந்தீப் பட்டீலும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 80களில் இந்திய அணியின் அதிரடி மன்னன் சந்தீப் பட்டீல், திறமையாக செயல் பட்டு கென்யா அணியை அரையிறுதிவரை முன்னேற உதவினார். ஆனால் 2003 உலகக்கோப்பைக்கு பின் இவர் விடை பெற, முன்பிருந்த நிலையை விட படு பாதாளத்துக்கு போய் விட்டது கென்யா அணி. எனக்கு சந்தோஷம் தாளவில்லை. அரையிறுதி இலங்கையோடு என்றால் கூட கொஞ்சம் சந்தேகம் வரும். இப்போது சந்தேகமே இல்லை. இந்திய அணி மோதப்போவது கென்யாவுடன். இறுதிக்கு சென்றுவிட்டோம். இன்னும் ஒரே ஒரு படிதான். முன்னதாக நடந்த முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இலங்கை. தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது ஆஸ்திரேலியா. என்னை பொறுத்த வரை இத்தொடரில் ஆஸ்திரேலியா சறுக்கிய ஒரே போட்டி இதுதான். 144 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது ஆஸ்திரேலியா.

இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டதில் எனக்கு இலங்கை மீது வருத்தம்தான். ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் மட்டும் கொஞ்சம் நிலைத்து ஆடி 91 அடிக்க ஆஸ்திரேலியா 212 மட்டுமே எடுத்தது. கொஞ்சம் கவனமாக ஆடி இருக்கலாம். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ஸ்கோர் மாற்றி அமைக்கப்பட இலங்கை வீரர்கள் பதட்டத்துடன் ஆடினார். இதனை சாதகமாக்கிக்கொண்ட பவுலர்கள், ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர். பிரெட்லீ தன்னுடைய அசுரவேகத்தால் இலங்கையை வீழ்த்தினார். அவரது கேரியரின் உச்ச்கட்டத்தில் இருந்த நேரம் அது.  ஒரு சுவாரசியமான செய்தி. இந்த ஆட்டத்தில் சைமண்ட்ஸ் ஆடிக்கொண்டிருந்த கடைசி பத்து ஓவர்களை, மதுரையில் இருந்து வரும் வழியில் பேருந்தில் பார்த்துக்கொண்டே வந்தேன். டி‌டி‌எச் இல்லாத காலத்தில் ஆண்டெனாவை பேருந்தில் மாட்டி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய மேட்சை, ஓடுகிற பேருந்தில், டிவியில் காட்டிய அந்த கண்டக்டரின் டெக்னிக்கல் அறிவு வியக்க வைத்தது.


"அப்பாடா! ஒரு வழியாக இறுதிப்போட்டிக்குள் வந்தாயிற்று. இன்னும் ஒரே ஒரு வெற்றி. என்னுடைய பத்தாண்டு கனவு பலிக்கபோகிறது.".  நாடே விழாக்கோலம் பூண்டது. கடந்த சில வருடங்களாக சந்தித்து வந்த பல அவமானகளில் இருந்து விடுபட்டு, சிலிர்த்து எழுந்து உலகக்கோப்பை இறுதிவரை இந்திய அணி வந்ததற்கு முதல் மற்றும் மிகப்பெரும் காரணம் கங்குலி என்ற தன்னிகரற்ற ஒரு கேப்டன்தான். சரியான நேரத்தில் அதிரடியான முடிவுகள் எடுத்து, அவற்றை சரியாக செயல்படுத்தி, வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணியின் பலம் பேட்டிங் என்று தெரிந்ததால்தான் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்ற நிலையில், விக்கெட் கீப்பரை விட்டுக்கொடுத்து, டிராவிட்டையே விக்கெட் கீப்பராக பயன்படுத்திக்கொண்டார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, ஷேன் வார்னே அணியில் இருந்து விலக்கப்ப்ட்டது, தொடர்ச்சியாக இந்தியா பெற்ற வெற்றிகள் போன்றவை, என் மனதில் நம்பிக்கையை ஆழமாக ஊன்றிவிட்டது


என்னதான் நம்பிக்கை இருந்தாலும் அடி மனதில் ஏதோ ஒரு உறுத்தல். சரி பார்க்கலாம். தொடங்கியது இறுதிப்போட்டி. தொடக்கம் முதலே ஆஸ்திரேலியர்களின் கை ஓங்கியே இருந்தது. 20 ஓவரில் 125 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகள் விழ ஓரளவுக்கு ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விட்டால் வென்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அடுத்து களமிறங்கியவர்கள் ரன்ரேட்டை உயர்த்திக்கொண்டே போனார்கள். 42 ஓவரில் 250 ரன்னாக இருந்தபோது, பாண்டிங் ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார். விளைவாக சிக்சர் மழை பொழிய ஆரம்பித்தது. இறுதியாக பாண்டிங் எட்டு சிக்சர்களுடன் 140 ரன் சேர்க்க, ஆஸ்திரேலியா 359 ரன் எடுத்தது. இந்தியா ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை. இதை எட்டினால் அது உலகசாதனை. "இருக்கட்டுமே, நாட்வெஸ்டில் எடுக்கவில்லையா? முடியும்.", என்று நானே சொல்லிக்கொண்டேன்.

சச்சினும் சேவாக்கும் களமிறங்கினார்கள். மிக நெருக்கடியான இந்த ஆட்டத்தில் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய கையோடு நடையை கட்டினார் சச்சின். பாதிப்பேர் டிவியை ஆப் செய்துவிட்டு போய்விட்டனர். கொஞ்சம் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினாலும், 59 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகள் விழ,  சேவாக்கும் டிராவிட்டும் அதிரடியாக ஆடினார்கள். என் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது.  17ஆவது ஓவரில் மழை கொட்டத்தொடங்கியது. பெரும்பாலான இந்தியர்கள் ஆட்டம் கைவிடப்படும் என்று எண்ணி பட்டாசு வெடிக்க தொடங்கினார்கள். ஆனால் சிறிது நேரத்திலேயே மழை விட, ஆட்டம் தொடங்கியது. அடுத்து சேவாக்கும், டிராவிட்டும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். போராடிக்கொண்டிருந்த யுவராஜ் 208 ரன்னில் அவுட் ஆக, மிச்சம் இருந்த அனைத்து வீரர்களும் கடனுக்கு என்று இரண்டு பந்துகள் ஆடிவிட்டு அவுட் ஆனார்கள். புதிய கேப்டன் பாண்டிங் தலைமையில் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்திய ரசிகர்கள் கோபம் அடையவில்லை. கடந்த காலத்தை ஒப்பிடும்போது, இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றதே ஒரு சாதனை என்று கூறப்பட்டது. "ஒருவேளை இந்த மன நிலைதான் நம் தோல்விக்கு காரணமா? இறுதிப்போட்டிக்கு வந்ததே போதும் என்று வீரர்கள் நினைத்து விட்டார்களோ?" என்று பல கேள்விகள்.


என்னை பொறுத்தவரை, நான் பார்த்ததிலேயே, 2011ஐ விடவும் 2003 உலகக்கோப்பை போட்டிகள்தான் மிகச்சிறந்தவை என்பேன். அதன் காரணம் எண்ணவென்று தெரியவில்லை. ஒரு வேளை என் கல்லூரிப்பருவம் என்பதாலோ என்னவோ? இந்த தொடரில் அதிக ரன் சேர்த்த பெருமையை பெற்றார் சச்சின். "சரி இது முதல் படிதான். எப்படியும் 2007இல் கோப்பையை தட்டி விடலாம்." என்று என் கனவை தள்ளிபோட்டேன்.....


மீண்டும் முளைத்த சர்ச்சைகள்..... அடுத்த பதிவில் 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


25 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓப்பனிங் பேட்ஸ் மேன்...

கிரி said...

இறுதிபோட்டியில் பாண்டிங் அடித்த அடியைப் பார்த்து எனக்கு பேதி ஆகாத குறை தான்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் ஸ்ரீநாத் சிறப்பாக பந்து வீசினார் அனைவரும் அவரை ரொம்ப எதிர்பார்த்து இருந்தார்கள். ஸ்ரீநாத் ஒரு டென்ஷன் பார்ட்டி அவர் கட்டுப்பாட்டுக்குள் போட்டி இருக்கும் வரை நல்லது மீறினால் அதோ கதி தான்.

ஆஸிக்கு ஸ்ரீநாத் பலவீனம் நன்றாகத் தெரிந்து இருந்தது ..இவனை டென்ஷன் பண்ணிட்டால் போதும் என்று அவரது பந்துகளை விளாசித் தள்ளினார்கள் அவர்கள் எதிபார்த்தது போலவே ஸ்ரீநாத் டென்ஷன் ஆகி கண்டபடி பந்து போட்டு ரன்களை வாரி வழங்கி விட்டார். நம்ம காலி ஆனதுக்கு இதுவும் ஒரு காரணம்.

துவக்கத்தில் நீங்க சொன்னது போல சச்சின் அவுட் ஆனதும் பலர் செம கடுப்பாகி விட்டார்கள்.

அருண் பிரசாத் said...

அந்த அடியை மறக்க முடியுமா பாஸ்...

காட்டு காடுனு காட்டிட்டு போனதோட இல்லாம.... சச்சின் விக்கெட்டை சொல்லி வெச்சி எடுத்த மெக்ராத்தை பாராட்டியே ஆகனும் (அப்போ மெக்கிராத்தை கண்டபடி திட்டினேன்)

இப்போதான் இந்த தொடரை பார்த்தேன் ...இருங்க எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்...

சென்னை பித்தன் said...

//ஒரு சில நேரம் இந்த தொடரை படிக்கும்போது எனக்கே சலிப்பு தட்டுகிறது.//
எனக்கு அப்படியில்லை பாலா.பழைய மேட்ச்களைப் பார்ப்பது ஒரு த்ரில் என்றால் அதைப்பற்றிப் படிப்பதும்தான்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க எழுதிட்டே இருங்க... நாங்க படிச்சுட்டே இருக்கோம். நன்றிய மறக்காம சொல்லுங்க.

arasan said...

அருமையான பின்னோக்கிய சிந்தனை நண்பரே..
நிறைய செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு இது...
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

அந்நியன் 2 said...

பிடிக்காத ஒன்றை பிடிக்கும்படி செய்து விடுவீர்கள் போல தெரியுதே...

என்னை சொன்னேன்...கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு உங்கள் பதிவு ஒரு நாள் விளையாடினதைப் போன்ற உணர்வைத் தருகின்றது.

K.s.s.Rajh said...

//உலகக்கோப்பை இறுதிவரை இந்திய அணி வந்ததற்கு முதல் மற்றும் மிகப்பெரும் காரணம் கங்குலி என்ற தன்னிகரற்ற ஒரு கேப்டன்தான். சரியான நேரத்தில் அதிரடியான முடிவுகள் எடுத்து, அவற்றை சரியாக செயல்படுத்தி, வெற்றிக்கு வழிவகுத்தார்.//

அருமையான வரிகள் கங்குலி பற்றி என்ன சொல்வது.எனக்கு விபரம் தெரிந்து நான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்பத்தில் வலதுகை துடுப்பாட்டவீரராக இருந்த நான்.கங்குலியை பார்த்து இடதுகைதுடுப்பாட்ட வீரராக மாறினேன்,ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் இடதுகை துடுப்பாட்ட வீரராகத்தான் கிரிக்கெட் விளையாடுவது இல்லை என்றால் கிரிக்கெட் விளையாடுவதே இல்லை என்ற முடிவில் கடின பயிற்சியின் பின் பாடசாலைகாலங்களில் இடதுகை துடுப்பாட்ட வீரராக சதம் அடித்தும் இருக்கின்றேன் பாஸ்.அந்த அளவுக்க்கு கங்குலி என்ற சொல் எனக்கு கிரிக்கெட் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
ஒரு கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்ற ஆசை சின்ன வயதில் இருந்தே இருந்தது.ஆனால் எங்கள் நாட்டின் யுத்த சூழ்நிலைகளினால்.இலங்கையின் வடபகுதி(கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு) இளஞர்களின் கிரிக்கெட் கனவு கனவாகவே போய்விட்டது.இப்போது அமைதி திரும்பியுள்ளதால் இனிவரும் காலங்களில் இலங்கையின் வடக்குப்பகுதி(கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு) கிரிக்கெட் வீரர்களும் இலங்கை அணியில் விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அப்பறம் அந்த 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை மறக்கமுடியுமா.இப்போது என்றால் அந்த இலக்கை துரத்தி வெற்றி பெற்று இருப்பார்கள்.பொண்டிங்கும் டேமியன் மார்ட்டினும் என்னா அடிஅடிதாங்கப்பா.பொண்டிங் ஒரு ருத்திரதாண்டவமே ஆடினார்.

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

களமிறங்கியதற்கு நன்றி நண்பரே.

பாலா said...

@கிரி

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பவுலர்களில் மன உறுதி குறைந்து போனதே தோல்விக்கு மிகப்பெரிய காரணம். நன்றி நண்பரே

பாலா said...

@அருண் பிரசாத்

மிக்க நன்றி நண்பரே. தொடரை முழுவதும் படித்ததற்கு.

பாலா said...

@சென்னை பித்தன்

உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கும் ஓக்கேதான். நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

அப்படியா மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@அரசன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@அந்நியன் 2

மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

பாலா said...

@Kss.Rajh

உங்களை மாதிரி ரசிகர்கள் கங்குலிக்கு நிறைய உண்டு. நன்றி நண்பரே.

கேரளாக்காரன் said...

2003 world cub match nalan 11th standardla 3 subject fail. Edho minister thambidurai punniyathula varsham waste aagala Edho minister thambidurai punniyathula varsham waste aagala

Unknown said...

மாப்ளே super!

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் போலிருக்கே?

பாலா said...

@விக்கியுலகம்

தாங்க்ஸ் மாப்ள...

Akash said...

// கார்ல் ஹூப்பர் (மே தீ), கிறிஸ்டன், அலேக் ஸ்டூவர்ட், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என்று பெரிய வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விடைபெற்றார்கள். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு இவர்களின் இழப்பு, கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்தது என்னவோ உண்மை.//
உண்மை தான்

Akash said...

// கார்ல் ஹூப்பர் (மே தீ), கிறிஸ்டன், அலேக் ஸ்டூவர்ட், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என்று பெரிய வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விடைபெற்றார்கள். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு இவர்களின் இழப்பு, கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்தது என்னவோ உண்மை.//
உண்மை தான்

Anonymous said...

மறக்கமுடியாத ஃபைனல் அது... ஒரு கையில் கோப்பையும், மறு பக்கத்தில் தன் காதலியின் முத்தத்தோடும் பாண்டிங் கொடுத்த ஸ்டில்லை மறுநாள் பேப்பரில் பார்த்து வெறுத்தே போய்விட்டது...

2011ல் கோப்பையை பெற்ற அந்த நாள் அடேயப்பா.... தாங்க்ஸ் தோனி!

பாலா said...

@Akash

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.

பாலா said...

@She-nisi

கருத்துக்கு நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...