விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 16, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 7

கிரிக்கெட் பதிவுக்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய இடைவெளியாகும் என்று நினைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத அறிவிக்கப்படாத கோடை விடுப்புக்கப்புறம் மீண்டும் எழுதுகிறேன். விடுப்பு என்றவுடன் ஏதோ சுற்றுலாவுக்கு சென்று விட்டதாக நினைக்க வேண்டாம். ஆசிரியர்களுக்கு எப்போதுமே கோடை விடுமுறையில் விடைத்தாள் திருத்தும் பணிதான் இருக்கும். ஆகவே பதிவுலகத்தின் பக்கம் எட்டி கூட பார்க்க முடியாத நிலை. வந்தவுடனே சீரியசாக ஆரம்பிக்க வேண்டாம் என்பதால் கிரிக்கெட் வரலாற்றை எழுதுகிறேன். பின்னூட்டமிட்டும், பின்னூட்டமிடாமலும் தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. 


பகுதி 7 - இந்திய அணியின் தடுமாற்றம். 


சச்சின் தனது முதல் கோப்பையை பெற்று விட்டாலும் அவரால் ஒரு திறமையான கேப்டனாக செயல் படமுடியவில்லை என்பது முற்றிலும் உண்மை. அவரது மோசமான ஃபார்ம், மற்றும் மற்ற வீரர்களின் படுமோசமான ஃபார்ம் என்று இந்திய அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்தது. அணியில் நிறைய வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். ஒன்றிரண்டு தொடர்களில் நீக்கப்பட்டார்கள். 1996 இறுதியில் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார் வி‌வி‌எஸ் லக்ஷ்மண். இப்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு இந்தியா சிறந்து விளங்கினாலும், ஒருநாள் தொடர்களில் சரிவர ஆட முடியவில்லை. கங்குலி, டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் புதுமுகங்களாக இருந்ததால் அவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவே அதிகம் சிரத்தை எடுக்க வேண்டி இருந்தது. மூத்த வீரர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அணி தடுமாறியது. பேட்டிங்தான் இப்படி என்றால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை.மொகந்தி, குருவில்லா என்று நிறைய வீரர்கள் வந்த சுவடே தெரியாமல் போனார்கள். 


ஷார்ஜா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து என்று சென்ற இடமெல்லாம் இந்திய அணிக்கு தோல்வி முகம்தான். இந்திய வீரர்களின் பவுலிங் திறமைக்கு எடுத்துக்காட்டாக 1997 இல் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தை சொல்லலாம். முதலில் பேட் செய்த இந்தியா, ஒண்ணே முக்கால் நாளில் 537 எடுத்து டிக்ளேர் செய்ய, மீதி மூணே கால் நாட்கள் இலங்கை ஆடி டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரான 957 ரன்களை எடுத்தது. என் வாழ்நாளிலேயே நான் பார்த்த மொக்கையான டெஸ்ட் போட்டி இதுதான். ஜெயசூரியாவும், மகனாமாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 576 ரன்கள் குவித்து பல சாதனைகளை வசமாக்கினார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியா வீழ்த்தியது வெறும் ஆறு விக்கெட்டுகள்தான்.  இந்த போட்டி முடிந்ததும் சச்சின் இலங்கை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம்தான் என்றாலும், இந்திய அணியின் மோசமான பந்த்துவீச்சின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.


எனக்கு உள்ளுக்குள் பயம் பிறந்தது "என்னடா இது? இப்படிப்பட்ட ஒரு அணியை நம்பியா 1999 இல் இந்தியா உலககோப்பை தொடரில் களமிறங்கபோகிறது?" இந்த நடுக்கத்துக்கு வலு சேர்க்கும் விதமாக 1997இல் நடந்த சுதந்திரதின பொன்விழா கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த தொடரை நினைவிருக்கிறதா? மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. வழக்கமான அதே ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய ஆட்டம் பாதி முடிந்தவுடனேயே நிறைய இந்தியா ரசிகர்கள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். ஆம், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 327 ரன் எடுத்தது. அப்போது அது எட்டவே முடியாத ஒரு ஸ்கோர். அதில் சயீத் அன்வர் எடுத்தது மட்டும் 194. ஒருநாள் போட்டியில் வெகு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ்இன் 189 ஸ்கோரை இந்த ஆட்டத்தில் அன்வர் முறியடித்தார். அதிலும் இந்தியாவுக்கு எதிராக, இந்திய மண்ணிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 200 எடுத்து விடுவார் என்று கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த என் வயிற்றில் கங்குலி அபாரமாக ஒரு கேட்ச் பிடித்து பாலை வார்த்தார். 


"சரி பரவாயில்லை எப்படியும் சமாளித்து விடலாம்." என்று நினைத்தபோது, ஆடத்தொடங்கிய 15ஆவது நிமிடத்தில் இந்தியாவின் அப்போதைய ஒரே நம்பிக்கையான சச்சின், 4 ரன்கள் மட்டுமே சேர்த்து நடையை காட்டினார். கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்த மாதிரிதான். பிறகு 'கட்டை மன்னன்' என்று அப்போது வருணிக்கப்பட்ட டிராவிட்டும், காம்ப்ளியும் சமாளித்து ஆடினார்கள். இருந்தாலும் நம்பிக்கை இல்லாத ஒரு ஆட்டத்தால் வரிசையாக ஒரு பக்கம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்தது. மறுமுனையில் டிராவிட் நிலைத்து ஆடி தன் முதல் சதத்தை கடந்தார். இந்த காலகட்டம்தான் ராகுல் டிராவிட் வாழ்க்கையில் மிக முக்கியமானது. தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு ஒரு மாபெரும் பலமாக வந்து சேர்ந்தார் டிராவிட். இதற்கு பின்னர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு அசைக்கவே முடியாத மிடில் ஆர்டர் வீரராக மாறி "கிரேட் வால் ஆஃப் இந்தியா" என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். ஒரு காலத்தில் சச்சின் அவுட் என்றால் ஆட்டம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அடுத்து டிராவிட் இருக்கிறார் என்று நம்பிக்கை அளித்தார். 


முதல் சதம் கடந்த டிராவிட்டும் அவுட் ஆக, வழக்கம்போல் உடைந்த கப்பலை ஒற்றை ஆளாக மீட்கும் பணியில் ஈடுபட்டார் ராபின்சிங். மிக குறுகிய காலமே ஆடினாலும் அனைத்து இந்திய ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர் ராபின் சிங். மேற்கிந்திய தீவுகளில் பிறந்த இவர், கங்குலி மாதிரியே 1989இல் ஒரே ஒரு தொடரில் ஆடிவிட்டு, பின் 7 வருடங்கள் கழித்து 33ஆவது வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். பொதுவாக பீல்டிங்கில் அவ்வளவாக சோபிக்காத இந்திய அணியில் ராபின்சிங் ஒரு சிறந்த பீல்டராக விளங்கினார். இவரது மீடியம் பந்துவீச்சு ஓரளவிற்கு மிடில் ஓவர்களில் நன்கு உபயோகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து விட்டாலும், ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி போராடுவார். இவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அபிமன்யு ஞாபகம்தான் வரும். உடம்பெல்லாம் சேறாக, விழுந்து புரண்டு, ஒரு ரன்னை இரண்டாக்கி, இரண்டை மூன்றாக்கி,  வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து என்று கடைசி பந்த்துவரை அணிக்காக மிகுந்த அர்ப்பணிப்போடு ஆடிய ஒரு வீரர். தற்போது மும்பை அணிக்கும், இந்திய அணிக்கும் பீல்டிங் கோச்சாக இருக்கிறார். 


1999 உலகக்கோப்பை ஜுரம் - அடுத்த பதிவில்.....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

24 comments:

சக்தி கல்வி மையம் said...

உங்கள் கட்டுரையால் கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை தெரிந்துக்கொல்கிறேன். நன்றி.

r.v.saravanan said...

present bala

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@r.v.saravanan

வாங்க வாங்க...

சென்னை பித்தன் said...

ஆட்டத்தின் நடுவில் உணவு இடைவேளை என நினைத்தேன்.ஆனால் பெரிய இடை--- வேளையாகி விட்டது!
நின்று ஆடுங்கள்!

rajamelaiyur said...

Rabin is super fielder. .

arasan said...

மிகவும் அருமையான தகவல்களை சுவாரசியம் கலந்து தருகின்றீர் ...
தொடருங்க ... வாழ்த்துக்கள் ...

பாலா said...

@சென்னை பித்தன்

கொஞ்சம் கேப் ஆகிப்போச்சு. இனி தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி நண்பரே...

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

உண்மைதான். கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@அரசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Unknown said...

இத்தனை மேட்ச் எல்லாம் பார்த்தது இல்லீங்க, நீங்க கிரிக்கெட்ட ரொம்பவே ரசிக்கிறீங்கன்னு தெரியுது

பாலா said...

@இரவு வானம்

சமீப காலமாகத்தான் சில ஆட்டங்களை பார்ப்பதில்லை. அதற்கு முன்பெல்லாம் ஒரு ஆட்டத்தை தவற விட்டாலும் மிகப்பெரிய துக்கம் நடந்து விட்டதைப்போல உணர்வேன். கருத்துக்கு நன்றி நண்பரே...

"ராஜா" said...

Onthat match dravid batting is somewat better tan anwar. Bcoz anwar faced weak indian bowlers without any pressure, but he faced pakistani strong bowling line with lot of pressure on his hand. Though india lost it was the classic batting from the wall.

மதுரை சரவணன் said...

arumai vaalththukkal. palaya ninaiyukal vanthu pokinrana

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

பாலா said...

@"ராஜா"

You are right. Dravid played with tremendous pressure on that match.

Thank you

பாலா said...

@மதுரை சரவணன்

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@உலக சினிமா ரசிகன்

கண்டிப்பாக...

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

ஆனால் 1997ல் அந்த உலகசாதனை டெஸ்ட் போட்டியில் ஜெயசூரியாவின் முச்சதத்தை சாதாரனமாக கருதமுடியாது மிகவும் அற்புதமான சதம் அது

உங்கள் பதிவு மிகவும் அருமை.கங்குலியின் தலைமைத்துவத்தில் இந்திய அணியின் வளர்ச்சியை எப்போது எழுதுவீர்கள் என எதிர்பாக்கிறேன்.

பாலா said...

@Kss.Rajh

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஜெயசூரியாவின் கேரியரின் உச்சகட்டம் அது. கங்குலி பற்றி விரைவில் எழுதுகிறேன். நன்றி நண்பரே...

அபிமன்யு said...

நன்றி பாலா.. உங்கள் வலைப்பக்கம் ,உங்கள் கருத்துகள் அனைத்தும் அருமை.. குறிப்பாக உங்கள் கிரிக்கெட் தொடர் மிக ஈர்ப்பாக உள்ளது..வாழ்த்துக்கள்..

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி - 2

குணசேகரன்... said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
கட்டுரை தொடருங்க ..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

Related Posts Plugin for WordPress, Blogger...