பகுதி 4 - இலங்கையின் எழுச்சியும், காம்ப்ளியின் கண்ணீரும்
ஹெய்ன்ஸ் மற்றும் கிரீனிட்ஜ |
இந்திய அணியில் உள்ள நல்ல வீரர்கள், குறிப்பாக சச்சினின் அசுர வளர்ச்சி, மேலும் ஆட்டங்கள் பெரும்பாலும் இந்தியாவில் நடப்பதால், உள்ளூரில் நம்மை யாரும் அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கை ஆகியவை என்னுள், "இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்." என்று அடித்துக்கூறின. இந்த முறை மொத்தம் 12 அணிகள். அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா மற்றும் ஹாலந்து ஆகிய மூன்று அணிகள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்றே அப்போதுதான் தெரியும். கோலாகலமாக தொடங்கியது 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
டீன் ஜோன்ஸ் |
கிரிக்கெட் ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் விதமாக ஒவ்வொரு அணியிலும் இருந்த ஜாம்பவான் ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றுவிட்டார்கள். குறிப்பாக, கபில்தேவ், மார்டின் குரோவ், டெஸ்மண்ட் ஹெயின்ஸ், கிரஹாம் கூச், டீன் ஜோன்ஸ், ஆலன் பார்டர் என்று பெரிய வீரர்கள் எல்லாம் வரிசையாக ஓய்வு பெற்றார்கள். பாகிஸ்தானில் மட்டும் இன்னும் சீற்றம் குறையாத சிங்கமாக ஜாவித் மியாண்டத் ஆடிக்கொண்டிருந்தார்.
இந்திய அணிக்கு முதல் சுற்றில் எந்த வித கடினமும் இருக்கவில்லை. காலிறுதி ஆட்டத்துக்கு 12 அணிகளில் எட்டு அணிகள் அதாவது ஒவ்வொரு 6 அணிகள் கொண்ட பிரிவில் இருந்தும் 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்ப்டும் என்பதால் இரண்டு அணிகளை வீழ்த்திவிட்டாலே பிரச்சனை இல்லை. இலகுவாக இந்தியா முன்னேறியது. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு ஆட்டங்கள் என் உலகக்கோப்பை கனவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.
அந்த ஆட்டங்கள் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரானவை. "இந்தியாவின் பலவீனம் என்ன?", என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும், "பவுலிங் மற்றும் பீல்டிங். " என்று. இந்த இரு அணிகளையும் இந்திய வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இலங்கைக்குக்கு எதிராக மனோஜ் பிரபாகர் ஓடி வராமல், ஸ்பின் எல்லாம் போட்டு பார்த்தார் (அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்). ஒன்றும் வேலைக்காகவில்லை. இலங்கைக்கு எதிராக இமாலய ஸ்கோரான 271 எடுத்தும் கூட இந்தியாவால் ஜெயிக்க முடியவில்லை. இருந்தாலும் மற்ற மூன்று அணிகளுடன் ஜெயித்து (கென்யா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட்இண்டீஸ்) காலிறுதிக்கு முன்னேறிவிட்டோம்.
லீக் சுற்றுகளில் நிறைய சுவாரசியங்கள் நடந்தன. இலங்கை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை சென்று விளையாடப்போவதில்லை என்று புறக்கணித்ததால் அவற்றிலும் இலங்கையே வென்றது என்று அறிவிக்கப்பட்டது. விளையாடி இருந்தாலும் இலங்கைதான் வென்றிருக்கும் என்பது என் கருத்து. அதே போல நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து முதன் முறையாக Greatest Upset ஒரு ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. இரண்டு முறை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி, புதிய அணியான கென்யாவிடம் படுதோல்வி அடைந்தது. 93 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. என்னை பொறுத்தவரை இந்த தோல்விதான் வெஸ்ட் இண்டீசின் சரிவின் ஆரம்பம். எந்த நேரத்தில் இந்த தோல்வி வந்ததோ, இன்றுவரை அவர்களால் மீண்டு வர முடியவில்லை.
கென்யாவுடன் சரித்திர தோல்வி |
முழுக்க முழுக்க சச்சினின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு உலகக்கோப்பை இது. இந்தியாவின் பெரும்பான்மையான ஸ்கோரிங்கை சச்சினே பார்த்துக்கொண்டார். எல்லா ஆட்டங்களிலும் சச்சின் ரன்களை குவித்து தள்ளினார். ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டும் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹீத் ஸ்ட்ரீக் பந்தில் இரண்டு ஸ்டம்புகள் தெறித்து விழுந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கென்யாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் எட்டவே முடியாத ஸ்கோராக 398 என்ற இலக்கை நிர்ணயித்து எல்லோர் வாயையும் பிளக்க வைத்தது இலங்கை. அப்போதெல்லாம் 300 என்பதே கனவுதான். "அதெல்லாம் சும்மா. கண்டி மிக சின்ன கிரவுண்ட். அங்கே விளையாடி இருந்தால் இந்தியா கூட 400 அடிக்கும்." என்று சின்ன பிள்ளைதானமாக வாதம் செய்திருக்கிறேன்.
வழக்கம்போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதே நேரம் அச்சுறுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா ஆடிக்கொண்டிருந்தது. ஹன்சி குரோனியே தலைமையில், கொஞ்சமும் மன உறுதி குறையாத ஒரு அணி உருவாகி இருந்தது. டொனால்ட், மேத்யூஸ், டிவில்லியர்ஸ் என்று கதிகலக்கும் வேகப்பந்து வீச்சு, மேலும் மேக்மிலான் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள், பொல்லாக், காலிஸ் என்று புதுமுக வீரர்கள் என்று 1992 அணியை விட பலமாக இருந்தது. கேரி கிறிஸ்டன் 188 ரன்கள் எடுத்து, ஒரு ரன்னில் விவியன் ரிச்சர்ட்சின் அப்போதைய சாதனையான 189ரன்னை முறியடிக்க தவறினார். பிற்பாடுதான் அன்வர் 194 அடித்தது எல்லாம். என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக நல்ல வலுவான அணியாக இருந்தது தென்னாப்பிரிக்காதான்.
தென்னாபிரிக்க அணியில் எல்லோரையும் கவர்ந்த பவுலர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். விக்கெட் வீழ்த்துவதிலோ, கட்டுப்படுத்துவதிலோ அவர் புகழ்பெறவில்லை. மாறாக அவரது வினோதமான பவுலிங் முறையில் அனைவரையும் கவர்ந்தார். அவர் பெயர் பால் ஆடம்ஸ். மெதுவாக ஓடி வந்து ஒரு ஜம்ப் அடித்து உடலை பல்டி அடிப்பது போல சுழற்றி கையை தலைக்கு மேலே கொண்டு சென்று அவர் பந்து வீசுவதே பார்க்கவே வினோதமாக இருக்கும்.
1995 இல் இருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு எல்லா அணிகளும் பயந்தது யாரைப்பார்த்து என்றால், ஆஸ்திரேலியாவை பார்த்து அல்ல. இலங்கையை பார்த்து. அப்போதெல்லாம் இந்திய இலங்கை ஆட்டம் என்றால் எல்லோரும் அடித்து சொல்வார்கள் இலங்கைதான் வெல்லும் என்று. இந்தியாவில் சச்சினை விட்டால் அடிக்க ஆளில்லை. இலங்கையிலோ தர்மசேனா வரை அடிப்பார்கள். அடுத்திருப்பது முரளி மட்டும்தான். இங்கே கும்ப்ளேவை நம்பிதான் பவுலிங்கே. அங்கே மகனாமா, கலுவிதரானா தவிர அனைவருமே பவுலர்கள். இப்படி ஒரு அணி இலங்கைக்கு இனி அமையுமா? என்றால் சந்தேகமே. 1992 உலகக்கோப்பை வரை கென்யா மாதிரி ஒரு கத்துக்குட்டி அணியாக இருந்த இலங்கை 1995 முதல் அசுர வளர்ச்சி பெற்றது. இதில் பயிற்சியாளர் வாட்மோர் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2003க்கு அப்புறம் வங்காளதேசத்தின் பயிற்சியாளர் ஆன பின்புதான் அவர்களின் ஆட்டத்திலும் மாற்றங்கள் வந்தன.
ஜெயசூர்யா என்று ஒரு பவுலர் இருக்கிறார் என்று சொன்னால் 1996க்கு முன்பு யாருக்குமே தெரியாது. 1996க்கு பின் அவரை தெரியாத ஆளே கிடையாது. ஒரு அணியின் மன உறுதியை குலைத்துவிட்டால் அவர்களை வென்று விடலாம் என்று திட்டமிட்டு ஜெயசூர்யாவை அஸ்திரமாக பயன்படுத்தியவர் ரணதுங்கா. 1996 முதல் 1998 வரை அவரது கேரியரின் உச்சம் என்று சொல்லலாம். சச்சின் அடிப்பது தர்மஅடி என்றால் ஜெயசூர்யா அடித்தது மரண அடி. எதிரணி எழுந்திருக்கவே முடியாத அடி. ஒரு காலத்தில் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்திருக்கிறார் என்று சின்னாபிள்ளைதானமாக எண்ணியதுண்டு. அதே போல அரவிந்தாவை பார்த்தாலே எமதர்மனின் ஞாபகம் வந்து தொலைக்கும். அவர்கள் இருவரும் அதிரடி என்றால், மகனாமாவும், ரணதுங்காவும் ஸ்லோ பாய்சன்கள். நிலையாய் நின்றே கொன்று விடுவார்கள். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு இலங்கை வீரர்களை பார்த்தாலும் பற்றிக்கொண்டு வரும். "இவர்கள் எல்லாம் எப்போது ரிட்டயர் ஆவார்கள்?" என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்ததுண்டு.
நாக் அவுட் ராசி |
பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மீது தனி பாசத்தை ஏற்படுத்தியது அந்த ஆட்டம். ஒவ்வொரு கணமும் அனுபவித்து பார்த்த ஆட்டம். அது இந்திய் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த 1996 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம்.
ரொம்ப நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் பேசலாம்.
இந்தியா காலிறுதியும், அரையிறுதியும்... அடுத்த பதிவில்.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
17 comments:
பால் ஆடம்ஸ் ஃபோட்டோ பிரமாதம்!
நல்ல தொகுப்பு!
ரொம்ப சிரமப்பட்டு தொகுத்து இருப்பீர்கள்...நல்ல தொகுப்பு....
எனக்கு அந்த உலக கோப்பையில் ஜெயசூர்யாவையும் , கலுவிதரனாவையும் பாத்தாலே பத்திக்கிட்டு வரும் ... முதல் பத்து ஓவரில் அடித்து ஆடும் போக்கை கிரிக்கெட்டில் கொண்டு வந்ததே இந்த ஜோடிதான் ...
அதே போல அரவிந்த டிசில்வா இன்னொரு தூண் .... இவரை அவுட் ஆக்குவது என்பது அந்த காலகட்டதில் ரொம்ப சிரமம் .... பந்தை தரையை ஒட்டியே அடிப்பதில் நம்ம டிராவிட் லக்ஷ்மணனுக்கு அப்பன் இவர் ...
சின்ன வயதில் அந்த அணி கோப்பையை வென்றது எனக்கு கடுப்பாக இருந்தது .. ஆனால் இப்பொழுது அவர்களின் கூட்டு முயற்சியை நினைத்தால் வியப்பாக இருக்கும் . that was the best team that deserves for the world cup...
ஆனால் இந்திய அணியில் தனிமனிதனாக போராடிய சச்சின்தான் அந்த உலக கோப்பையின் உண்மையான ஹீரோ ...
As Told by Raja, Jayasurya made a formula in that world cup. First 10 overs 100 runs do not worry about wicket. This is what he applied and of course, Unforgettable. Pls include about Steve Waugh too.
கிரிக்கெட் பற்றி பல அறிய தகவல்களை தெரிந்து கொள்கிறேன்,,
நன்றி..
பல புதிய தகவல்களும், நான் அறிந்திராத ஆட்டக்காரர்களைப் பற்றியும் அறிந்துகொள்கிறேன்... நன்றி...
அடுத்த பதிவிற்காக ஆவலாய் காத்திருக்கிறேன்.
@சென்னை பித்தன்
கருத்துக்கு நன்றி நண்பரே...
@NKS.ஹாஜா மைதீன்
அதெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. நினைவில் கொண்டுவந்து எழுதவேண்டியதுதான.
@"ராஜா"
உண்மையிலேயே அந்த அணி உலகக்கோப்பை வாங்க தகுதியான அணிதான்.
அந்த உலகக்கோப்பைக்கு பிறகுதான் சச்சின் என்ற ஒற்றை மனிதனை நம்பி இந்திய அணி ஆட தொடங்கியது.
@Thameez
கருத்துக்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக எழுதுகிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மிக்க நன்றி நண்பரே...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி நண்பரே. விரைவில் எழுதுகிறேன்.
பால் ஆடம்ஸ்.. பேட்ஸ்மனை பார்க்காமலேயே எப்படிதான் பந்து வீசினாரோ. வித்யாசமான மனிதர்.
இன்று 20/20 அளவுக்கதிகமாக ஆடப்படுவது சலிப்பை தருகிறது. விரைவில் கிரிக்கெட் மோகம் குறைய இதுவே காரணமாக இருக்கலாம்.
மேட்ச் லே நின்னு ஆடறது போல் நீங்க சுவாரஸ்யமா எழுதறீங்க பாலா தகவல்கள் நிறைய தெரிஞ்சுக்க முடியுது நன்றி
@! சிவகுமார் !
அந்த அணியிலேயே மிக துருதுருவென இருப்பார். ஆனால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியவில்லை.
நீங்கள் சொல்வதுபோல கிரிக்கெட் இப்போது சலிக்க தொடங்கி உள்ளது.
நன்றி நண்பரே...
@r.v.saravanan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
Post a Comment