விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 28, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 3

முந்தைய பகுதிகள் 

பகுதி 3 - இந்தியாவின் ரன் மெஷின்


1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தது. ஆகவே இந்திய மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிரிக்கெட் பற்றி எழுதின. கிரிக்கெட் பற்றி எழுதுவதில் தமிழில் தினமலர் நாளிதழ் எப்போதுமே முன்னணியில் இருக்கும். தினமும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி விலாவாரியாக எழுதுவார்கள். அப்போது ஒரு வீரருக்கு அவர்கள் கொடுத்த தலைப்புதான் இந்தியாவின் ரன் மெஷின். அவர் யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்போது அவர் இந்தியாவின் ரன் மெஷினாக இருந்தார். இப்போது கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்றுதான் சொல்ல வேண்டும்.




1989ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இருந்தாலும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு யார் கண்ணிலும் படாமல்தான் இருந்தார் சச்சின். ஆனால் அவரிடம் இருந்த துறுதுறுப்பு, அசாத்திய தைரியம் ஆகியவை தொடர்ந்து அவரை அணியில் இடம்பெற செய்தது. கபில் ஒவ்வொரு முறை சச்சின் பற்றி சொல்லும்போதும், "ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, எல்லா மாணவரும் என் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் தைரியமாக விளையாடினான். நான் முழு வேகத்தில் வீசினாலும் அவன் பயப்படவில்லை. அந்த மாணவன் பெயர் சச்சின்." என்று சொல்வார். 

1992 உலகக்கோப்பையில் ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் இந்தியாவில் நடந்த ஹீரோ கோப்பையில் பவுலிங்கிலும் அசத்தினார். ஆனால் அப்போது சச்சினை யாரும் கவனிக்கவில்லை. இந்தியாவின் அப்போதைய நட்சத்திரவீரர் அசார்தான். மேலும் காம்ப்ளி உள்ளிட்ட இளம்வீரர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் 1994ஆம் வருடம் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் ஒரு வீரன் விஸ்வரூபம் எடுத்தான். தான் எந்த நிலையில் ஆடினால் சரியாக வரும் என்று புரியாத நிலையில் திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு வந்தது.


அது 1994இல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு தொடர். அன்று ஹோலி பண்டிகை. சொந்த நாட்டில் விளையாடினாலும், முதலில் ஆடிய நியூசியால் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் ஓப்பனிங் இறங்க வேண்டிய சித்து காயத்தால் விளையாடாததால் வேறு ஒரு வீரரை தேடவேண்டிய சூழ்நிலை. யாருமே விளையாட முன்வராததால், வேறு வழியில்லாமல், சச்சினை களமிறக்கினார்கள். காரணம் எளிய இலக்கு. கொஞ்சம் சமாளித்து விளையாடுவான் என்று நம்பினார்கள். ஆனால் நடந்ததே வேறு. அத்தனை காலம், ஒருநாள் போட்டி என்றால் கடைசி பத்து ஓவர்கள் மட்டுமே சுவாரசியமாக இருக்கும். ஆனால் முதல் பத்து ஓவரில் அதை நிகழ்த்தி காட்டினார் சச்சின். இந்தியா விரைவிலேயே வெற்றி பெற்று விட்டது. சச்சின் களத்தில் இறங்கியதில் இருந்து ருத்ரதாண்டவம்தான். பெரிய பந்து வீச்சாளர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். கடைசியில் சச்சின் அவுட் ஆகும்போது அவர் எடுத்தது 82 வெறும் 49 பந்துகளில். தாங்கள் படுதோல்வி அடைய போகிறோம் என்பதை கூட மறந்து ஒரு நல்ல ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் அரங்கமே எழுந்து கைதட்டியது. ரன் கம்பேரிசன் வினோதமாக இருந்தது 11 ஓவர் முடிவில் நியூசி எடுதது 16/2 இந்தியா எடுத்தது 92/1. இவ்வளவு வேகமான ஸ்கோரிங் ரேட்டை அதுவரை இந்தியா நிகழ்த்தியதில்லை. இந்தியா 22ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.

அந்த ஆட்டத்தின் முடிவில் 

"ஏதோ ஒரு போட்டியில் இப்படி நடக்கலாம். அதற்காக எல்லாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை." என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதற்கடுத்து அவர் களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும்  அதகளம்தான். இப்போது இருக்கும் முதுமையும், பொறுமையும் அவருக்கு அப்போது கிடையாது. இருந்ததெல்லாம் துணிச்சலும் வேகமும் மட்டும்தான். நாமெல்லாம் சேவாக், கில்க்றிஸ்ட் அடிப்பதை பார்த்து வாயை பிளக்கிறோம். ஆனால் 20 வயதில் சச்சின் அடித்ததை பார்த்தால்தான் தெரியும் இவர்கள் அடிப்பது சாதாரணம் என்று. மட்டையில் பட்ட அடுத்த நொடி எல்லைகோட்டை தொட்டுவிடும். அவ்வளவு பலமாக மட்டையை வீசுவார். பின்னர் தேவை இல்லாமல் சக்தியை வீணாக்க கூடாது என்று வேகத்தை குறைத்து விட்டார்.  வரிசையாக அரைசதமாக அடித்து வந்தவர், பத்தாவது ஆட்டத்தில் சதமடித்தார். 1994ஆம் ஆண்டை அவரால் மறக்கவே முடியாது. அதுவரை கட்டை வண்டியில் சென்றவர் திடீரென ராக்கெட்டில் ஏறியது போல இருந்தது. அதுவரை அவர் 70 போட்டிகளில் 1809 ரன்கள் எடுத்திருந்தார்.84 அதிகபட்சம்.
இப்போது 450 போட்டிகளில் 18000 ரன்கள், அதிகபட்சம் 200*.
இது ராக்கெட் வேகம்தானே?


 இந்தியாவுக்கு உலகில் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிடைத்து விட்டார். அதன்பின் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓப்பனிங் ஆட்டக்காரர்கள் மாறுவார்கள், ஆனால் அவர்களுடன் இன்னொருபக்கம் சச்சின் களமிறங்குவார். மஞ்ச்ரேக்கர், மனோஜ்பிரபாகர், சித்து, கங்குலி, சடகோபன்ரமேஷ், தாஸ், சேவாக், கம்பீர் என்று எண்ணற்ற வீரர்களோடு சச்சின் களமிறங்கி இருக்கிறார். இதில் கங்குலியுடன் களமிறங்கியது, வெஸ்ட்இண்டீசின் கிரீனிட்ஜ, ஹெய்ன்ஸ் ஜோடிக்கு நிகராக உலகப்புகழ் பெற்றது. சச்சினின் ரெக்கார்டுகளைப்பற்றி சொல்லத்தேவை இல்லை. அதிக ரெக்கார்டுகள் வைத்திருக்கும் ரெக்கார்டையும் அவர்தான் வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் எந்த ஒரு ரெக்கார்ட் பட்டியலை எடுத்துப்பார்த்தாலும் அதில் சச்சின் இருப்பார்.


1994இல் சச்சினின் ஆட்டத்தை பார்த்தபிறகு முடிவே செய்து விட்டேன். 1996 உலககோப்பை நமக்குத்தான். நான் மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் உலகமே அப்படித்தான் நினைத்தது. முதல் காரணம் போட்டிகள் நடப்பது இந்தியாவில். இன்னொரு காரணம் சச்சின். ஆனால் அதுவரை அமைதியாக இருந்துவந்த ஒரு அணி திடீரென நாலுக்கால் பாய்ச்சலில் முன்னால் வரும் என்று யாருமே நினைக்கவில்லை. 

இலங்கையின் எழுச்சியும், காம்ப்ளியின் கண்ணீரும் அடுத்த பதிவில்..... 



உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


30 comments:

ராஜகோபால் said...

நாலாவது போட எங்க இருந்து புடிச்சிங்க அருமை

சொல்ல முடியாது அடுத்த உலககோப்பைளையும் சச்சின் இருப்பார்

arasan said...

ரொம்ப விறு விறுப்பா போகுதுங்க ,...
கலக்குங்க ...
நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன் ,,நன்றி

Anonymous said...

ரொம்ப சுவாரசியமா எழுதியிருக்கீங்க ...

ம.தி.சுதா said...

அவரது துடுப்பாட்ட பிரயோகமும் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் தன்மையும் என்னை வியக்க வைத்தவை சகோதரம்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

சக்தி கல்வி மையம் said...

கிரிகெட் பற்றி பல அறிய தகவல்கள் தந்து கொண்டிருப்பதற்கு நன்றிகள்..

Bala said...

@ராஜகோபால்

நெட்டில் சுட்டதுதான் நண்பரே. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் பயன்படுத்தி இருக்கிறேன்.

நன்றி நண்பரே...

Bala said...

@அரசன்

நன்றி நண்பரே. இன்னும் சுவாரசியமாக எழுத முயற்ச்சி செய்கிறேன்..

Bala said...

@கந்தசாமி.

மிக்க நன்றி நண்பரே.

Bala said...

@♔ம.தி.சுதா♔

வேறு எந்த வீரராலும் இவ்வளவு கன்சிஸ்டண்ட் ஆக ஆட முடியாது.

நன்றி நண்பரே

Bala said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே...

Anonymous said...

இப்போ தான் இந்த தொடரின் முந்தைய பகுதிகளையும் படிச்சேன் பாஸ். வெரி நைஸ்! அழகான நடை மற்றும் தகவல்கள் அருமை. கீப் ராக்கிங் பாலா! :)

Madhavan Srinivasagopalan said...

அந்த நியூசிலாந்து டூர்ல செமையா விளையாடினாரு சச்சின்..
நல்லா நினைவு இருக்கு.. நைட்டு ரெண்டரை மணிலேருந்து மேச்சு பாத்திருக்கேன்..

சென்னை பித்தன் said...

சுட்ட பழமாயிருந்தாலும்,மிகச் சுவையான பழம்தான்!

பாலா said...

@Balaji saravana

நன்றி நண்பரே... தொடர்ந்து சுவாரசியமாக எழுத முயற்சி செய்கிறேன்.

பாலா said...

@Madhavan Srinivasagopalan

கபிலின் கடைசி காலகட்டம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் கிரிக்கெட் நன்றாக வேரூன்ற தொடங்கிய காலம் அது.

நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி நண்பரே. நினைவில் இல்லாத விஷயங்களையும், படங்களையும் மட்டுமே நெட்டில் சுடுகிறேன். மற்றபடி சொந்த சரக்குத்தான்.

சிசு said...

பதிவு சச்சின் மாதிரி இருக்கு பாஸ்...

Suresh said...

After Sachin chnage the bat logo from MRF to Addidas he got the World cup.

Unknown said...

பாலா நிசமாலுமே அருமையான கிரிக்கட் எழுத்தாளர் நீங்கள்,ஒவ்வொரு வரியாக ரசித்து படித்தேன்...நன்றி

பாலா said...

@சிசு

தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Suresh

இப்படியும் ஒரு செண்டிமெண்டா? நன்றி நண்பரே...

பாலா said...

@மைந்தன் சிவா

கருத்துக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...

நிரூபன் said...

சகோ, சச்சின்...எப்போதும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஒரு வீரர்.. அவர் பற்றிய அலசல் அருமை.

ஆனால் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள்(இந்தியா இறுதிச் சுற்றுக்கு வந்த) இரண்டிலும் அடித்தாடாமல் அவுட்டாகி விடுவார். இது கொஞ்சம் கவலையான விடயம்.

இந்த வயதிலும் சச்சினின் சளைக்காத சதங்கள் நூற்றினை எட்டும் செஞ்சுவரிகள் என அவர் ஒரு பிரட்மன் என்பதில் ஐயமே இல்லை...
நன்றாக வரலாற்றினைட் தொகுத்து எழுதியுள்ளீர்கள்.

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் சகோ

பாலா said...

@நிரூபன்

சச்சின் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் என்று சொல்லிதெரிய வேண்டியதில்லை. அவரது சிறு சிறு தவறுகளை கண்டுகொள்ள தேவை இல்லை. கருத்துக்கு நன்றி நண்பரே...

FARHAN said...

லிட்டில் மாஸ்டரின் வரலாற்றை பக்கவக பதிவு செய்துள்ளீர்கள்

r.v.saravanan said...

கிரிகெட் பற்றி அறிய தகவல்கள் விறு விறு விறுப்பா எழுதியிருக்கீங்க பாலா

பாலா said...

@FARHAN

நன்றி நண்பரே.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்....

பாலா said...

@r.v.saravanan

நன்றி தலைவரே....

இராஜராஜேஸ்வரி said...

கிரிக்கெட்டின் ரன் மெஷின் -ரொம்ப சுவாரசியமா எழுதியிருக்கீங்க ...
பாராட்டுக்கள்.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...