பகுதி 2 - ஹீரோ கோப்பையும், ஸ்ரீநாத்தும் கும்ளேவும்.
இந்தியா 1992 உலகக்கோப்பையில் மரண அடி வாங்கிவிட்டு வீடு திரும்பியது. தொடர்ந்து என் அண்ணன் 9ஆம் வகுப்பில் பெயில் ஆகியதால் எங்கள் வீட்டில் கிரிக்கெட் பார்க்கவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போதெல்லாம் இப்போது மாதிரி தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருக்காது. வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்கள் மட்டுமே இருக்கும். ஆகவே அதில் பெற்ற வெற்றி பெரும் அளவில் பேசப்படும் வெற்றியாக இருக்கும். அப்படி வந்த ஒரு தொடர்தான் 1993இல் வந்த ஹீரோ கோப்பை.
கிட்டத்தட்ட ஒரு மினி உலககோப்பை போலவே நடந்தது. கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பின்வாங்கிவிட (எல்லாம் அதே காரணம்தான்) பங்கேற்றது என்னவோ ஐந்து நாடுகள்தான். இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள். ஆனால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் 1996 உலகக்கோப்பைக்கு ஒரு சிறு முன்னோட்டம்போல நடந்தது. முதன்முறையாக ஒரு நவீன தரத்துடன் இந்தியாவில் ஒரு தொடர். ஆனால் இந்தியா பல சங்கடங்களை சந்தித்தது. பல வீரர்கள் தாங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என்று புகார் செய்தனர். சில பல வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் எல்லோரும் மேற்கிந்திய தீவுகள்தான் வெல்லும் என்று முடிவு கட்டி இருந்தார்கள். அப்போது புதிதாக கேப்டன் ஆகி இருந்த ரிச்சர்ட்சன் தலைமையில் ஒரு மாதிரி பலமான அணியாக இருந்தது. லாரா உள்பட நிறைய புதுமுகங்கள், மிரட்டும் பவுலிங் என்று எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா தட்டு தடுமாறி அரையிறுதிக்கு வந்தது. அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதவேண்டும். விதி விளையாடியது. முதலில் ஆடிய இந்திய அணி 195க்குள் சுருண்டது. தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. நாக் அவுட் என்றாலே தென்ஆப்பிரிக்க வீரர்கள் பீதி அடைகிறார்களே அது இப்போது மட்டுமல்ல, ஆதி காலத்தில் இருந்தே அப்படித்தான் போலிருக்கிறது. மிக எளிய இலக்கை நோக்கி சென்ற தென்ஆப்பிரிக்க வீரர்கள் மிகவும் பதற்றத்துடன் ஆடினார்கள்.
![]() |
சச்சின் வீசிய கடைசி ஓவர் |
இரண்டு விக்கெட் மீதமிருக்க, ஜெயிப்பதற்கு இன்னும் ஆறு ரன்கள் மட்டுமே தேவை. இருப்பது ஒரே ஒரு ஓவர். கபில், ஸ்ரீநாத், பிரபாகர் என்று ஆளுக்கு இரண்டு ஓவர் பாக்கி இருக்கிறது. யாருக்கு கடைசி ஓவர் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்க, யாருமே எதிர்பாராத வகையில் சச்சினுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. சச்சினுக்கு அதுதான் முதல் ஓவர். அவர் மீது எந்த நம்பிக்கையில் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. சீட் நுனியில் அமர்ந்திருக்க, தென்ஆப்பிரிக்காவால் அந்த ஓவரில் ஒரு விக்கெட் இழந்து மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதே மாதிரி ஒரு நிகழ்வு மறுபடியும் நடந்தது. நினைவிருக்கிறதா? 2002 மினி உலகக்கோப்பை அரையிறுதி. அபாயமான க்ளூஸ்னர் களத்தில் நிற்க, சேவாக்கை கடைசி ஓவரை வீச செய்து இந்தியா ஜெயித்தது.
இறுதி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 225 எடுத்தது. அரையிறுதியில் ஜெயித்த நம்பிக்கையில் இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. மைதானத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள். அனைவரும் இந்தியா பக்கம். ஒரு கட்டத்தில் 57க்கு ஒரு விக்கெட் என்று இருந்த மேற்கிந்திய தீவுகள், அடுத்த 66 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அனில் கும்ப்ளே தான் வீசிய கடைசி நாலு ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மேட்சில் அவர் 12 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். அரங்கில் மக்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. தெருவில் நான் கத்திக்கொண்டே ஓடியது நன்றாக நினைவிருக்கிறது.
முதன் முறையாக எனக்கு இந்தியா 1996இல் உலகக்கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை வந்தது. ஸ்ரீநாத், கும்ப்ளே என்று இரண்டு புதிய வீரர்கள் அந்த நம்பிக்கையை எனக்கு ஊட்டினார்கள். இருவருமே இந்த தொடரில் சிறப்பாக ஆடினார்கள். மேலும், ஜடேஜா, மஞ்ச்ரேக்கர், வினோத் காம்ப்ளி, ராஜு என்று ஒரே இளைஞர் பட்டாளம். அசாருதீன் அசைக்க முடியாத பார்மில் இருந்தார். பிரபாகர், கபில் என்று மூத்த வீரர்களும் நம்பிக்கை அளித்தனர். இந்த தொடரில் சச்சின் அவ்வளவாக சோபிக்கவில்லை. சொல்லப்போனால் பேட்டிங்கை விட பவுலிங்கே சிறப்பாக இருந்தது. சச்சினை விட காம்ப்ளியே முன்னணியில் இருந்தார். அப்போது எனக்கு தெரியாது, 1996 உலககோப்பைக்கு மட்டுமல்லாமல், அடுத்த ஐந்து உலகக்கோப்பைகளுக்கும் சச்சின்தான் துருப்பு சீட்டாக இருக்கப்போகிறார் என்று...தொடர்ந்து பேசுவோம்...
இந்தியாவின் ரன் மெஷின் அடுத்த பதிவில்....
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்தை இங்கே பதிவு பண்ணுங்க.....
22 comments:
உலககோப்பை கடைசி ஓவர்தான் என்னை ரசிக்க வைத்தது
கிரிக்கெட் உலககோப்பை ஓகே ஆனா அதுக்கு பின்னாடியே 20;20 கொண்டு வந்தது பிசினஸ்..ஆனால் நம் இளைஞர்கள் அடிமையாகிவிட்டார்கள்
நல்ல சுவாரஸ்மாக தொடரை போல கொண்டு செல்கிறீர்கள், சூப்பர் பாலா
Good post on cricket.
மிக பெரிய பலமான அணியாக இருந்தும் 1996 ல் கோப்பையை கைவிட்டது துரதிஸ்ரம்
கிரிக்கெட் பற்றி விரிவாக தொடராக தந்து கொண்டிருப்படர்க்கு நன்றிகள்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது கிரிக்கெட் விஷயத்திலும் உண்மை. நன்றி நண்பரே...
@இரவு வானம்
நன்றி நண்பரே..
@Chitra
நன்றி மேடம்
@கந்தசாமி.
ஆமாம் ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டம் அது.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி நண்பரே...
மறக்க முடியாதா தொடர் அது . இந்தியாவில் முதல் முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்த தொடரும் கூட.
அந்தத் தொடரில்தான் ஜான்டி ரோட்ஸ் களத்தடுப்புக்காக மட்டும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்
@எல் கே
மைதானம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிறைந்து ஆரவாரம் மிக்க ஒரு தொடர். மறக்கவே முடியாத ஒன்று.
நன்றி நண்பரே.
நானும் வந்துட்டேன்...
விவரம் எல்லாம் ஏதாவது டயரியில் குறித்து வைத்திருக்கிறீர்களா!அள்ளி விடுகிறீர்கள்!
@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி நண்பரே...
@சென்னை பித்தன்
பாதி நினைவில் இருப்பது. மீது நெட்டில் சேகரித்தது. நன்றி நண்பரே...
அந்த Match நானும் மறக்க மாட்டேன்..
டெண்டுல்கர் டோனால்டுக்கு கால்/pad மேலே போட்டு ரன் தராம செஞ்சாரு..
மக்மில்லன் எதிர் முனையில இருந்தாரு..
//நம் இளைஞர்கள் அடிமையாகிவிட்டார்கள்//
yes i agreed
@Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி நண்பரே...
@ஷர்புதீன்
நானும் ஆமோதிக்கிறேன். நன்றி நண்பரே..
@ஷர்புதீன்
நானும் ஆமோதிக்கிறேன். நன்றி நண்பரே..
Post a Comment