விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 11, 2011

வியாபாரமான கிரிக்கெட், விவஸ்தை கெட்ட விளம்பரம்


சமீபத்தில் வோடபோன் விளம்பரம் ஒன்று வருகிறது. அதில் வரும் வாசகமும் காட்சியும் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. தன் பிறந்த நாளுக்கு எல்லோருக்கும் ஒரு சாக்லேட் கொடுக்கும் ஒரு பெண், தன் நண்பிக்கு மட்டும் நிறைய சாக்லேட் கொடுப்பாள். பின் வரும் வாசகம் யாராவது உங்களை ஸ்பெசலாக நினைக்க செய்தார்களா? என்று. இந்த விளம்பரத்தை நான் மேற்கோள் காட்டியதன் நோக்கம் என்னவென்றால், என்னையும் வலைச்சரத்தில் ஒரு வாரகாலம் ஆசிரியராக பணியாற்ற அழைத்திருக்கிறார்கள்.



உண்மையிலேயே கதை, கவிதை என்று சுவையாக எழுதும் அளவிற்கு எனக்கு திறமை இருந்தது கிடையாது. இருந்தும் நானும் எழுதிக்கொண்டுதான் இருந்தேன் என் வலைப்பக்கத்தில். ஆனால் திடீரென்று வலைச்சரத்தின் ஆசிரியர் சீனாவிடம் இருந்து மின்னஞ்சல், "ஆசிரியராக இருக்க முடியுமா?" என்று. வலைச்சரத்துக்கு சென்று பார்த்ததில் மிரண்டு போய் விட்டேன். உண்மையிலேயே சிறப்பாக எழுதும் பலர் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். இதில் என்னையும் எழுத அழைத்து கவுரவித்த சீனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வலைச்சரத்திலும் எழுத வேண்டி இருப்பதால் இங்கு அதிக நேரம் செலவளிக்க இயலவில்லை 


விளம்பரம்

பதிவின் ஆரம்பத்தில் ஒரு நல்ல விளம்பரத்தை பற்றி சொன்னேன் அல்லவா? சமீபகாலமாக நல்ல விளம்பரங்களின் வருகை மிக குறைந்து விட்டது. மொக்கை விளம்பரங்கள் அல்லது கன்றாவி விளம்பரங்கள்தான் அதிகம் வருகின்றது. ஒரு கடையில் சாதாரண செல்போன் வைத்திருக்கும் ஒருவனுக்கு  சில்லறை கொடுப்பதற்கு பதிலாக சாக்லேட் கொடுக்கும் ஒரு பெண், குறிப்பிட்ட போன் வைத்திருப்பவனுக்கு, சில்லறைக்கு பதிலாக காண்டம் கொடுக்கிறாள். ஏனென்றால் அவன் ஆண்மகனாம். மற்றவன் எல்லாம் பச்சாவாம். கொடுமைடா சாமி. குறிப்பிட்ட ஒரு செல்போனை நீங்கள் வாங்காவிட்டால், உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பளாரென்று அறைந்து கொள்வீர்கள் என்று ஒரு விளம்பரம். உச்ச கட்ட கற்பனை வளத்துடன் வருபவை சானிடரி நாப்கின் விளம்பரம்தான். விதவிதமான இசை, மலர் போன்ற டிசைன் என்று. குழந்தைகளை தயவுசெய்து டீவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.

டென் கிரிக்கெட் சேனல்காரர்கள் இந்திய, தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டிகளை மிகுந்த விலை கொடுத்து வாங்கி இருப்பார்கள் போலிருக்கிறது. பத்து செகண்டுக்கு ஒரு விளம்பரம் ஒளிறுகிறது. போட்டியில் பாதிநேரம் முக்கால் ஸ்கிரீனில்தான் ஆட்டம் தெரிகிறது. முன்பெல்லாம் ஆட்டத்துக்கு நடுவே விளம்பரங்கள் பார்த்தது போய், தற்போது விளம்பரங்களுக்கு இடையே ஆட்டங்களை பார்க்கும் நிலை வந்துவிட்டது.


கிரிக்கெட்டோ கிரிக்கெட் 


இந்தியா எதில் வல்லரசாகிறதோ இல்லையோ கிரிக்கெட்டில் ஆகி விட்டது. எல்லா நாட்டுகாரனும் நம்ம நாட்டை நோக்கி படையெடுக்கிறான். திவாரி, தவான் போன்ற அட்ரஸ் இல்லாத வீரர்கள் கூட கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்கு நல்லதுக்கில்லை. நம்ம தாதாவை புறக்கணித்ததும் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அசாருதீனுக்கு அப்புறம் இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்தது கங்குலிதான். திமிர், தெனாவட்டு ஆகியவற்றை மொத்த அணிக்கும் கற்றுக்கொடுத்தவர் தாதா. எதிரணிக்காரன் கெட்ட வார்த்தையில் திட்டினாலும், நிலம் பார்த்து நடந்த இந்திய வீரர்களை, நிமிர்ந்து முகம் பார்க்க வைத்தவர். இத்தனைக்கும் சென்ற ஐபிஎல்இல் இவர் நன்றாகத்தான் ஆடினார். தாதா இல்லாத அணி தேவை இல்லை என்று வங்காள ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, கங்குலியின் பங்கு அணியில் நிச்சயம் இருக்கும் என்று சப்பை காட்டு கட்ட தொடங்கி இருக்கிறார் ஷாரூக்.


நினைத்தது நடந்து விட்டது. ஆஷஸ் தொடரை இழந்து பரிதாபமாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இது குறித்து நண்பர் ஸ்பீட் மாஸ்டர் எழுதிய வரக்குத்து வாங்கிய ஆஸ்திரேலியா என்ற பதிவில் நான் படித்து சிரித்த பஞ்ச் டயலாக் "ஓவரா பேசுர வாயும், ஓவர் நைட்டுல கத்துற நாயும், அடி வாங்காம போனதா சரித்திரமே இல்லை."

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


27 comments:

Speed Master said...

நல்ல பதிவு
என் பதிவின் லிங்க் போட்டுதான் டயாலக்கை பிரசுத்துள்ளீர்கள்

நன்றி

karthikkumar said...

கங்குலி இல்லாதது எனக்கும் வருத்தம்தான் தலைவரே...

Anonymous said...

வலைச்சரத்துல எழுதுவதற்கு வாழ்த்துக்கள் பாலா!
அந்தக் கடைசிப் பஞ்ச் சூப்பர் :)

ராஜகோபால் said...

வாழ்த்துக்கள் பாலா!

வலைச்சரத்துல எழுதுவதற்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துக்கள் பாலா!

Jayadev Das said...

//
இந்தியா எதில் வல்லரசாகிறதோ இல்லையோ கிரிக்கெட்டில் ஆகி விட்டது. //எல்லா பயல்களும் வந்து நம்மை மொட்டைதான் அடிக்கப் போறானுங்க, BCCI என்பது எந்த விதத்திலும் அரசுக்குச் சம்பந்தப் பட்டதல்ல, அதன் வருமானம் எவ்விதத்திலும் மக்கள் சேவையில் பயன்படுத்தப் படப் போவதில்லை, இதில் வல்லராசகி என்ன பிரயோஜனம்????

எப்பூடி.. said...

/திவாரி, தவான் போன்ற அட்ரஸ் இல்லாத வீரர்கள் கூட கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.//

உள்ளூர் வீரர்களில் பிரபலமான 40 பேரில் (அண்ணளவாக) முக்கியமான வீரர்களை தேர்ந்தேடுக்கே வேண்டும், பத்து அணிகள் உள்ளதால் ஒவ்வொரு அணிக்கும் தலா நான்கு வீரர்கள்தான் கிடைப்பார்கள்; அதனால்தான் இந்திய உள்ளூர் வீரர்களுக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் அதிக கிராக்கி, அதைவிட 11 பேரில் எழு வீரரர்கள் இந்திய வீரர்கள் ஆடவேண்டும் என்பதும் இவர்களது உச்ச விலைக்கு முக்கிய காரணம்.

எப்பூடி.. said...

அவுஸ்திரேல்யா & பொண்டிங்கின் நிலைமை ->> யானை படுத்தா பண்ணிகூட ஒன்னுக்கடிக்குமாம், அந்த நிலைதான் :-)))

எப்பூடி.. said...

விளம்பரங்கள் தொல்லை தாங்க முடிவதில்லை, நீங்கள் சொன்னதுபோல நல்ல விளம்பரங்களை காண்பதே அரிதாகி விட்டது :-(((


ரின் மற்றும் எக்ஸ்சல் விளம்பரங்கள் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரங்கள்/

எப்பூடி.. said...

கங்குலியை விட கிறிஸ் கெயிலை தேர்வு செய்யாததுதான் எனக்கு ஆச்சர்யம்!!!!!, தேர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நேரம் கெயில் ஆவுஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தார்.

ம.தி.சுதா said...

முதலில் வாழ்த்துக்கள்.. நான் உலகக் கிண்ணத்தை எதிர் பார்த்திருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் கலக்க எனது வாழ்த்துக்கள்...

பாலா said...

@Speed Master

நன்றி நண்பரே

பாலா said...

@karthikkumar

சேம் பீலிங்...

பாலா said...

@Balaji saravana

நன்றி பாலா :)

பாலா said...

@ராஜகோபால்

மிக்க நன்றி. உங்களையும் இன்று அறிமுகப்படுத்தி உள்ளேன்

பாலா said...

@நாய்க்குட்டி மனசு

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@Jayadev Das

சரிதான் நண்பரே.

நான் சொன்னது பிசிசிஐயை மனதில் வைத்துத்தான். கிரிக்கெட்டில் மாட்டும்தான் அப்படி. அதனால் இந்திய அரசுக்கு உபயோகம் கிடையாது என்று எனக்கும் தெரியும். நன்றி நண்பரே...

பாலா said...

@எப்பூடி..

நீங்கள் சொல்வதும் சரிதான். இதற்கும் ஒரு வரைமுறை விதித்தால் சரியாக இருக்கும்.

ஆஸ்திரேலியா மீண்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில காலம் பிடிக்கும்.

கிறிஸ் கெய்ல், ஜெயசூர்யா ஆகியோர் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

பாலா said...

@ம.தி.சுதா

நன்றி நண்பரே. நானும்தான்

பாலா said...

@Philosophy Prabhakaran

மிக்க நன்றி தலைவரே.

Madurai pandi said...

இப்பலாம் விளம்பரம் பிட்சுக்கு நடுவுல இருந்துலாம் வருதுங்க!!! ரொம்ப கொடுமையா இருக்கு.
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

பாலா said...

@மதுரை பாண்டி

ஆமாங்க கரெக்டா சொன்னீங்க

நன்றி

கிரி said...

ஆஸி :-)

Saleem S said...

போட்டியில் பாதிநேரம் முக்கால் ஸ்கிரீனில்தான் ஆட்டம் தெரிகிறது. முன்பெல்லாம் ஆட்டத்துக்கு நடுவே விளம்பரங்கள் பார்த்தது போய், தற்போது விளம்பரங்களுக்கு இடையே ஆட்டங்களை பார்க்கும் நிலை வந்துவிட்டது ------ Super Bala.. i have been reading your blog regularly and hitting ur blog page daily to see any new post but this my first comment for your post....

பாலா said...

@கிரி

நன்றி :)

பாலா said...

@Saleem

மிக்க மகிழ்ச்சி நண்பரே... உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.

:))

Related Posts Plugin for WordPress, Blogger...