விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 26, 2010

குயில்களின் குரலில் எனக்கு பிடித்தவை..


மறுபடியும் ஒரு தொடர் பதிவு. என்னை இந்த பதிவு எழுத அழைத்திருக்கும் ராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக திரைப்பட பாடல்களை எல்லாம் கேட்டவுடன் குப்பை என்று சாதாரணமாக ஒதுக்கி விடுவோம். இப்பல்லாம் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மாதிரியான நிகழ்ச்சிகள் பார்த்த பிறகுதான் பாடல் பாடுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது. மேலும் கல்லூரி காலங்களில் இசைக்குழுவில் இருந்ததால் பாடல்களின் இனிமை மற்றும் அருமை எனக்கு தெரியும். இசைக்குழுவில் இருந்ததால் பெரிய வித்துவான் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எல்லாம் கேள்வி ஞானம் மட்டும்தான். ரஜினி படங்களை வரிசை படுத்த எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஆனால் இந்த பதிவில் பாடல்களை தேர்வு செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. தொகுத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் வரிசைப்படி கொடுத்ததல்ல.


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...

       படம் : தில்லானா மோகனாம்பாள் 
       பாடலாசிரியர்:கண்ணதாசன் 
       இசை : கே வி மகாதேவன் 
       பாடியவர்: பி சுசீலா 

காதலும், நக்கலும் கலந்து எழுதப்பட்ட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரல் கணீரென்று இருக்கும். பத்மினியின் அபிநயங்கள், மற்றும் சிவாஜி கணேசனின் நடிப்பு எல்லாம் நன்றாக இருக்கும்.மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு...
       
       படம் : கந்தன் கருணை 
       பாடலாசிரியர்: கண்ணதாசன் 
       இசை : கே வி மகாதேவன் 
       பாடியவர்: பி சுசீலா

முதலிரவு பாடல். தான் கணவன் மீது கொண்ட மையலை அழகாக வெளிப்படுத்துவது போல அமைந்திருக்கும் இந்த பாடல். சுசீலாவின் தேன் குரல் திகட்டாத இனிமை.


நினைத்து நினைத்து பார்த்தால்...

       படம்: 7/G ரெயின்போ காலனி
       பாடலாசிரியர்: நா முத்துக்குமார் 
       இசை : யுவன் ஷங்கர் ராஜா. 
       பாடியவர்: ஷ்ரேயா கோஷல் 

பாடல் வரிகள் உணர்த்தும் மெல்லிய சோகம் இந்த பாடல் முழுவதும் இழையோடும். அதற்கு முழு பொறுப்பு ஷ்ரேயா கோஷல்தான். இந்த பாடலை கேட்டு கதறி அழுதவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.


சினேகிதனே...சினேகிதனே..

       படம்: அலைபாயுதே 
       பாடலாசிரியர்:  வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான். 
       பாடியவர்: சாதனா சர்கம்
இந்த பாடல் வெளிவந்தபோது விரும்பி கேட்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கிட்டத்தட்ட முதலிரவு பாடல் போல இருந்தாலும், திருமணத்துக்கு முன்தினம் இருவர் பேசிக்கொண்டால் அந்த பெண் என்ன சொல்வாள் என்பது போல அமைந்திருக்கும்.


மல்லிகை என் மன்னன் மயங்கும் ...

       படம்:தீர்க்க சுமங்கலி 
       பாடலாசிரியர்: கண்ணதாசன் 
       இசை :  எம்எஸ் விஸ்வநாதன் . 
       பாடியவர்: வாணி ஜெயராம்

வாணிஜெயராம் குரலுக்காகவே இந்த பாடலை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம். பாடலில் பல நெளிவு சுழிவுகள், ஏற்ற இறக்கங்கள் என்று பாடுவதற்கு மிக கடினமான பாடல் இது. 


நிலா காய்கிறது...

       படம்: இந்திரா 
       பாடலாசிரியர்: வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான்
       பாடியவர்: ஹரிணி.

ஒரு பிஞ்சு குழந்தையின் குரலை கேட்டு அய்யோ கொஞ்ச தோன்றுமே? அதே போலத்தான் தோன்றும் இந்த பாடலை கேட்டால். ஹரிணி குழந்தையாக இருக்கும்போது பாடிய பாடல். மழலை குரலில் நெஞ்சை அள்ளும் இந்த பாடல். 


அன்பேன்ற மழையிலே...

       படம்: மின்சார கனவு   
       பாடலாசிரியர்:  வைரமுத்து   
       இசை :  ஏ ஆர் ரகுமான் 
       பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல்களில் இதுவும் ஒன்று. தெரியாமல் ஆரம்பித்துவிட்டு, போக போக பாட முடியாமல் திணறுபவர்கள் பலர்.  அனுராதாவின் குரலின் முழு பலத்தையும் வெளிக்கொணர்ந்த பாடல் இது.


பாடவா உன் பாடலை...

       படம்: நான் பாடும் பாடல் 
       இசை : இளையராஜா   
       பாடியவர்: எஸ் ஜானகி 
  
படத்தில் இந்த பாடல் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவது போல அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மெலடி என்றும் சொல்ல முடியாது, வேகமான பாடல் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஜானகியின் குரலிலேயே நிறைய உணர்ச்சிகளை புரிய வைக்கமுடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த பாடல்.


என் வானிலே... 

       படம்:  ஜானி 
       இசை : இளையராஜா   
       பாடியவர்: ஜென்ஸி

பட்டுப்போன்ற துணியால் வருடுவது போன்ற குரல் ஜென்சியினுடையது. மிக குறைந்த பாடல்களே பாடி இருந்தாலும் அனைத்துமே குறிப்பிடத்தக்க பாடல்கள். ஒரு சில பாடல்களே எந்த வேளையில் கேட்டாலும் நன்றாக இருக்கும். அப்படி பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.


எங்கே எனது கவிதை...

       படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
       பாடலாசிரியர்: வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான் 
       பாடியவர்: சித்ரா
சித்ராவின் பாடல்கள் பெரும்பாலான பேருக்கு மகிழ்ச்சியாக பாடினால்தான் பிடிக்கும். ஆனால் எனக்கு சோக பாடல்கள் பிடிக்கும். அழுகை முட்டிக்கொண்டு வரும்போது அதை அடக்கி கொண்டு பாடுவது போல அமைக்கபெற்ற இந்த பாடல் என் ஆல்டைம் பெவரிட்.

டிஸ்க்: இளையராஜாவின் பாடல்கள் குறைவாக இடம்பெற்றதன் காரணம் எனக்கு பிடித்த இளையராஜா பாடல்கள் எல்லாம் டூயட் பாடல்களாகவே இருக்கின்றன. அதே போலத்தான் பின்னணி பாடகிகளின் பாடல்களும்.

இந்த பதிவை தொடர்வதற்கு நான் அழைப்பவர்கள் 

மறுக்காமல் எழுதுங்கள் என்று கேட்டு கொள்கிறேன். 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

26 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

அருமையான தொகுப்பு ஒன்று நல்லாயிருக்கிறத வாழ்த்துக்கள் சகோதரம்..

Anonymous said...

உங்கள் ரசனைக்கு என் சல்யூட் பாஸ்! என்ன அருமையான பாடல்கள்..
எனக்கு பிடித்த பாடல்கள் இதில் நிறைய :)
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி பாஸ்..
இப்போ தான் ஒரு தொடர் பதிவு எழுதி போஸ்ட் பண்ணினேன்.. :)
ஓகே கொஞ்சம் டயம் எடுத்து எழுதுறேன் பாலா..

எல் கே said...

நல்ல தேர்வு

"ராஜா" said...

மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் டாப் கிளாஸ் பாடல் ...

நன்றி நண்பரை தொடர் பதிவை தொடர்ந்ததுக்கு

பாலா said...

@ம.தி.சுதா

கருத்துக்கு நன்றி சகோதரா...

பாலா said...

@Balaji saravana

நிதானமாக எழுதுங்கள். நன்றி நண்பரே..

பாலா said...

@LK

நன்றி நண்பரே...

பாலா said...

@"ராஜா"

நன்றி தல....

karthikkumar said...

உங்க செலக்சன் சூப்பர் பங்கு. அழைத்ததற்கு நன்றி. ஆனால் ஏற்கனவே ஒரு தொடர்பதிவு போட்டுட்டேன். அதனால் வேறொரு பதிவு போட்ட பிறகு எழுதுகிறேன் நன்றி.

ஆமினா said...

பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை!!!

சூப்பர்

எப்பூடி.. said...

எல்லா பாடல்களுமே எனக்கு பிடித்தவயானாலும் 'பாடவா உன் பாடலை' மற்றும் 'என் வானிலே' எனக்கு மிகவும் பிடித்தவை.

ஹரிஸ் said...

சூப்பர்..

ஒரு டவுட்டு..பாடகிகளோட படத்த செலக்ட் பண்ணீட்டு பாட்ட செலக் பண்ணீகளோ?

Unknown said...

மல்லிகை என் மன்னன் மயங்கும் //
எனக்கு பிடிச்ச பாட்டு...அழகான தொகுப்பு!!

Unknown said...

நல்ல ரசனை

பாலா said...

@karthikkumar
பங்கு ஒன்னும் அவசரம் இல்ல. பொறுமையா டைம் கிடைக்கும்போது எழுதுங்க...
நன்றி

பாலா said...

@ஆமினா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே...

பாலா said...

@ஹரிஸ்

அப்படி எல்லாம் இல்ல நண்பரே... முதல்ல பாட்ட எல்லாம் டைப் பண்ணிட்டுதான் பாடகிகளோட படத்தை தேடி பிடித்தேன்.

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

மாணவன் said...

அனைத்து பாடல்களுமே அருமை,

சிறப்பாக தொகுத்து பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

மாணவன் said...

அனைத்து பாடல்களுமே அருமை,

சிறப்பாக தொகுத்து பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பாலா said...

@மாணவன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

எஸ்.கே said...

மிக அருமையான தொகுப்பு!

r.v.saravanan said...

எனக்கு பிடித்த பாடல்
மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்


பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி

எழுதுறேன் பாலா

Anonymous said...

பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை

அருமையா தொகுப்பு சார்!!
தொடரட்டும் உங்கள் பணி!

வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...