நான் இப்போது சொல்லப்போவது ரொம்ப சீரியஸான விஷயம். ஆனால் சீரியசா இல்லாமல் கொஞ்சம் லைட்டாவே சொல்றேன். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதிவெழுதி வருகிறேன். அதற்கு முன் சுமார் ஒரு வருடங்கள் பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஆக நான் பதிவுலகுக்கு வந்து ஒண்ணரை வருடங்கள்தான் ஆகின்றது. அதற்கு முன் தமிழில் பதிவுகள் வருவதே தெரியாது. நான் வந்த புதிதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். அதுவும் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளாகவே என் உடலும் மனதும் சரியில்லை. என்னவென்று ஒரு டாக்டரை அணுகியபோது அவர் கூறிய சில நோய்கள்...
1. உலகபடமோபோபியா:
இது பொதுவாக இளைஞர் முதல் நடுவயதினரை தாக்கும். ஆண்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் வெளிநாட்டு படங்களுக்கெல்லாம் ஒரே பெயர்தான். அது இங்கிலீஷ் படம். இப்போதுதான் நிறைய ஆங்கிலம் அல்லாத படங்கள் பற்றி தெரிந்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சனை என்றால், இப்போதெல்லாம் தமிழ் படங்களை பார்க்கும்போது, "இது ஒரு உலக படதரத்துக்கு இல்லையே?" என்று கடுப்பு வருகிறது (உபயம் பதிவுலகம்). மேலும், "இந்த படத்தை பாராட்டி பதிவெழுதலாமா, எழுதினால் கும்மி விடுவார்களோ?" என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது. ஒரு நல்ல படத்தை பார்த்தால் கூட, "இது எந்த உலகபடத்தின் காப்பியோ?" என்று சந்தேகம் வருகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியாமல், ஒரு நிம்மதி அற்ற நிலையே ஏற்படுகிறது. ரசித்து பார்த்தாலும், எனக்குள் இருக்கும் பதிவர் வந்து, "நீயும், உன் ரசனையும்!!" என்று காரி துப்புகிறார். ஒண்ணரை வருடத்துக்கு முன் திரைப்படம் பார்க்குபோது இருக்கும் நிம்மதி இப்போதில்லை. இதன் பெயர்தான் உலகபடமோபோபியா.
டிஸ்க்: தமிழ்நாடும் உலகத்தில்தானே உள்ளது. அப்படியானால் தமிழ் படங்களை உலகப்படம் என்று சொல்லக்கூடாதா?
2. பார்ப்பனியாசிஸ்:
இந்த நோய்தான் எனக்கு முற்றி விட்டது. உதாரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர். கொஞ்ச நாளாக இது எனக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால் இதில் வருபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். இது மட்டுமல்ல, ஏனைய பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூட நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் யாராவது பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ அது என்னை பாதிக்காது. ஆனால் இப்போதெல்லாம் பேசுபவர் பார்ப்பனராக இருக்குமோ? என்று கருத தோன்றுகிறது(உபயம் பதிவுலகம்). இதற்கு முன் ஒருவரின் சாதி என்ன என்று கவனிக்க தோன்றாத எனக்கு, இப்போதெல்லாம் யாருடன் பேசினாலும் அவர் சாதி என்ன?, ஒருவேளை பார்ப்பனராக இருப்பாரோ? என்று ஆராய தோன்றுகிறது. இப்பேற்பட்ட சாதி வெறியை சமுதாய விழிப்புணர்வு என்ற பெயரில் எனக்கு தந்தது இந்த பதிவுலகம்தான். இந்த நோய்க்கு பெயர் பார்ப்பனியாசிஸ்.
3. பகுத்தறிவு டிஸார்டர்:
இந்த நோய் பதிவுலகம் வருவதற்கு முன்பிருந்தே கொஞ்சம் தாக்கி இருந்தது. இப்போது முழுவீச்சில் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. கோவிலுக்கு சென்று நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை. "நாம் ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?" என்ற எண்ணம் தோன்றி தொலைக்கிறது. இந்துவாக இருப்பதே ஒரு தேசதுரோக குற்றமாக எண்ண தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை மற்ற மதத்தை துவேசிப்பதில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று நினைப்பவன். இப்போது, "நாம் திராவிடர்கள். ஆரிய கடவுள்களை கும்பிடக்கூடாது" என்று சொல்கிறார்கள். இதற்கு முன் இப்படி நினைத்ததில்லை. ஆரிய திராவிட பேதம் கூட தெரியாது. இதற்கு முன் எங்கள் வீட்டில் புரோகிதர் வைத்து திருமணம் நடந்ததில்லை. இனிமேலும் நடக்க போவதில்லை. ஆனால் இனிமேல் புரோகிதர் இல்லாமல் நடப்பது என் மனதில் ஒரு வித கொடூர சந்தோசத்தை தரும். ஏனென்றால் "நான் திராவிடன். ஆரியனை புறக்கணிக்கிறேனே" என்று. எனக்கு நம்பிக்கை தரும் ஒரு சக்தியாகவே கடவுள் இருந்திருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையையே ஆட்டம் காண செய்திருக்கிறது இந்த நோய். கடவுள் நம்பிக்கை என்பது செக்ஸ் மாதிரி என்று சொல்கிறார்கள். கடவுளை வணங்குவது சுய இன்பம் மாதிரி என்று கூட சொல்வார்கள்.
இந்த நோயால் ஒரு நன்மை உண்டாகி இருக்கிறது. இதுவரை கடவுள் இருக்கிறார் என்று நம்பிய எனக்கு, அவர் எப்படி இருப்பார்? என்ற ஆவல் உண்டாகிறது. கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு பதிலாக, கடவுள் ஏன் இருக்க கூடாது? என்ற கேள்வி தோன்றி உள்ளது. நான் யாருக்கும் கடவுளை போதிக்கவில்லை. ஆகவே யாரும் எனக்கு நாத்திகத்தை போதிக்க தேவை இல்லை. ஐயோ மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சுட்டேனே?
4. புரட்சியோமேனியா
எப்படி பகுத்தறிவு டிஸார்டர் என்னை இந்துவாக இருப்பதற்காக வெட்கப்பட வைத்ததோ அதே போல புரட்சியோமேனியா என்னை நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதற்கு வெட்கப்பட வைக்கிறது. "ஏதோ பிறந்தோம், சம்பாதித்தோம், இறந்தோம் என்று இருக்கிறாயே!" என்று செருப்பால் அடிக்கிறது. "அநியாயத்தை தட்டிக்கேள்!!" என்று ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நாம் உடல் நிலையோ, மன வலிமையோ என்னை பார்த்து, "இதோ பார்ரா புரட்சிக்காரன்.." என்று எக்காளமிடுகின்றன. யாரை பார்த்தாலும் ஒரு சமுதாய கண்ணோட்டத்தோடே பார்க்க தோன்றுகிறது. எல்லோரும் எதிரி மாதிரியே தெரிகிறார்கள். ஜவுளிக்கடை, மார்க்கெட், தொழிற்கூடம் எங்கே போனாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது (உபயம் பதிவுலகம்). ஏற்கனவே இருந்த ஆசிடிட்டி அல்சராக பிரோமோஷன் பெற்று விட்டது.
5. ரசிகனோசோம்னியா
நான் கட்டவுட் ஏறி பாலாபிஷேகம் செய்யும் ரசிகனல்ல. ஆனால் ஒரு சில நடிகர்களின் தீவிர ரசிகன். அபிமானம் என்பதை தாண்டி ஒரு வித அன்பு இருக்கிறது. ஒவ்வொரு முறை தல படம் பார்க்கும்போதும், "அய்யயோ இந்த படத்தை பதிவர்கள் எப்படி கிழிக்க போகிறார்களோ?" என்ற பயம் தோன்றுகிறது. இளைய தளபதி படத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்க தோன்றுகிறது. அந்த படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கூட கட்டாயமாக மறக்க முயல்கிறேன். பதிவர்கள் ஒவ்வொரு முறை ரசிகர்களை முட்டாள்கள் என்று திட்டும்போதும், என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறேன். "நான் முட்டாள்தானோ? படித்து முடித்த இரண்டாவது நாளில் இருந்து என்னுடைய செலவுகள் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை, என் மன நிறைவுக்காக, நான் விரும்பும் நாயகனின் படத்தை பார்க்க செலவளிக்கிறேன். நான் எப்படி முட்டாள் ஆவேன்? இந்த பணததை யாரேனும் ஏழைகளுக்கு செலவிடலாம். நான் முட்டாள்தானோ?" இப்படி மாறி மாறி எண்ணங்கள் என் நிம்மதியை குலைக்கின்றன. ஒரு வேளை நான் என் நாயகனின் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்? ஒரு பெரிய சமுதாய மாற்றம் உண்டாகும். ஆனால் அதனால் எனக்கொன்றும் பயனில்லை. எனக்கிருந்த ஒரே மகிழ்ச்சியும் பறிபோகும். இப்படி ஒரு பைத்தியக்கார மன நிலைக்கு என்னை தள்ளியது இந்த நோய்தான். என் ஆதர்ச நாயகனின் படத்தை கூட சலனம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. படம் பார்க்கும் போது கூட பதிவர்கள்தான் ஞாபகம் வருகிறார்கள்.
நடுத்தரவர்க்க பதிவுலக நண்பர்களே! உங்களுக்கும் என் போன்ற உபாதைகள் வந்திருக்கலாம். அதில் இருந்து எப்படி மீண்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்...
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
56 comments:
ஹஹஅஹா.. ரொம்ப அருமையான பதிவு. வாய் விட்டு சிரித்தேன் .
@LK
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அப்புறம் ஒரு விஷயம். நகைச்சுவையாக சொன்னாலும், இதில் பல விஷயங்கள் உண்மையிலேயே எனக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது...
உங்களுக்கு நிறைய சொல்லவேண்டி இருக்கிறது... இன்றிரவு உங்கள் பதிவை மறுமுறை நிதானமாக படித்துவிட்டு விளக்கமாக பின்னூட்டம் இடுகிறேன்... இப்போ கொஞ்சம் வேலை இருக்கு... Sorry...
@philosophy prabhakaran
பொறுமையா படிங்க அவசரம் ஒன்னுமில்ல
எய்ட்ஸ்க்கு அப்புறம் மருந்து இல்லாத நோய் இதுதான்..!! ஹா.ஹா..ஹா...!!
செம கலக்கல் புனைவு போபியா பத்தி சொல்லல
நண்பர் பாலா அபர்களுக்கு
///நகைச்சுவையாக சொன்னாலும், இதில் பல விஷயங்கள் உண்மையிலேயே எனக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது...///
உங்களுக்கு மட்டுமல்ல இதில் பதிக்கப்பட்ட நிறைய பேர் இருக்கிறார்கள்
இத நேனச்சு மனச தேத்திகங்க
சூப்பரு :) எண்ட கண்டி கதிர்காம கந்தா :)
ஹி ஹி நீங்கள் வைத்த எல்லா பெயர்களும் சூப்பர்......
சும்மா சொல்லக்கூடாது பாலா. கலக்கிட்டீங்க.....வாழ்த்துக்கள்.
நோய்களிக்கான தீர்வுகள் :-)
உலகபடமோபோபியா
உலகப்படங்களை உயர்த்தி உள்ளூர் படங்களை கேவலப்படுத்தும் பதிவுகளையும் பதிவர்களையும் "இவளவு வக்கணையாக பேசும் இவர்கள் பார்த்து வளர்ந்த ஆரம்பகால திரைப்படங்கள் தமிப்படமா? இல்லை ஒலகப்படங்களா என மனதுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்? " அப்புறம் அவர்களை காமடி பீசுகள் என நினைத்து விட்டுவிடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தருவதுதான் சினிமா, பெருமைக்காக பார்ப்பதல்ல. விக்கிரமன் படம் போனாலும் பார்ப்பேன் மணிரத்தினம் படம் போனாலும் பார்ப்பேன், டைட்டானிக் போனாலும் பார்ப்பேன். எல்லாமே பார்க்கும் எங்கள் மனதில்தான் உள்ளது.
பார்ப்பனியாசிஸ்:
இந்த கருமாந்திரம் புடிச்ச சொல்லே பதிவுலகத்துக்கு வந்துதான் தெரியும், ஆரம்பத்தில பிடிக்காத பூசாரிகள்மீது ஒரு சாப்ட் கானரை ஏற்ப்படுத்திவிட்டார்கள். இதையெல்லாம் காதிலேயே போட்டுக்ககூடாது பாஸ்.
பகுத்தறிவு டிஸார்டர்:
உண்மையான ஆத்திகனுமில்லை, உண்மையான நாத்திகனுமில்லை, எல்லோரும் 1% ஆவது சந்தேகத்துடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம், எதை செய்தாலும் அடுத்தவனுக்கு பாதிப்பில்லாமல் உங்கள் மனதுக்கு நிறைவாக எது இருக்கிறதோ அதை செய்யுங்கள்.
புரட்சியோமேனியா
புரடிசிங்கிற வார்த்தைய கேட்டாலே இப்பெல்லாம் ஒரே காமடிதான், இன்றைக்கு காமடியில யாரு no 1 அப்பிட்ன்னு கேட்டா அது நம்ம வடிவேலோ சந்தானமோ இல்லை, நம்ம இணைய புரட்சியாளர்கள்தான் டாப்பில இருப்பாங்க.
ரசிகனோசோம்னியா
நாங்க ஒருநாள் ரெண்டுநாள் கொண்டாடிற்று அடங்கீருவம், ஆனா இவங்க வருசம்பூரா கத்திகிட்டே இருப்பாங்க, இவங்க லூசுத்தனமான பிதற்றல்களுக்காக நம்ம சந்தோசத்தை (அடுத்தவனை பாதிக்காத) எதுக்கு விட்டுக்கொடுக்கணும், மங்காத்தாவுக்கு தயாராகுங்க.
.
@சேலம் தேவா
அதுக்கு கூட மருந்து கண்டு பிடிச்சிடலாம். இதுக்குத்தான் என்ன மருந்துன்னே தெரியல
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
தலைவரே எனக்கு அந்த நோய் மட்டும் இன்னும் வரல...
நன்றி நண்பரே...
@ஹைதர் அலி
அடக்கடவுளே இதுக்கு மருந்தே இல்லையா?
@Prasanna
ரிப்பீட்டு...
ஏடுகொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா...
@NKS.HAJA MYDEEN
இதுக்காக தனியா ஒரு லிடெரெச்சர் சர்வே செய்தேன் தலைவா..
@ரஹீம் கஸாலி
நன்றி தலைவரே...
வொய் பிளட். சேம் பிளட்
@எப்பூடி..
//விக்கிரமன் படம் போனாலும் பார்ப்பேன் மணிரத்தினம் படம் போனாலும் பார்ப்பேன், டைட்டானிக் போனாலும் பார்ப்பேன். எல்லாமே பார்க்கும் எங்கள் மனதில்தான் உள்ளது.
இதேதான் என் மன நிலையும்.
//காதிலேயே போட்டுக்ககூடாது பாஸ்
//அடுத்தவனுக்கு பாதிப்பில்லாமல் உங்கள் மனதுக்கு நிறைவாக எது இருக்கிறதோ அதை செய்யுங்கள்.
கண்டிப்பா தலைவரே..
இவர்கள் செய்யுர காமெடியா பாத்தா பத்திக்கிட்டுதான் வருது.
//நம்ம சந்தோசத்தை (அடுத்தவனை பாதிக்காத) எதுக்கு விட்டுக்கொடுக்கணும், மங்காத்தாவுக்கு தயாராகுங்க.
.
சொல்லப்போனா இப்பல்லாம் ரஜினி மற்றும் அஜீத் மீது ஈர்ப்பு அதிகரிக்கவே செய்கிறது. நன்றி பதிவுலக அறிவு ஜீவிகள்.
நண்பரே என் நோய்க்கு வைத்தியம் சொன்னதற்கு நன்றிகள். ஆனால் இவை உடனே குணமாகிற நோய்கள் அல்லவே. பார்க்கலாம். மனதை பக்குவ படுத்த முயற்ச்சிக்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே...
சூப்பர் பாஸ்.. நோய்களுக்கு பெயரெல்லாம் சூப்பரோ சூப்பர்.
@ஹரிஸ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க
விஜய் டீ வி மட்டுமா,சூப்பர் சிங்கர் மட்டுமா?நிறையச் செய்யப்படுகிறது திட்டமிட்டு,,,,,,,./
@விமலன்
சார் இதெல்லாம் தெரியாமல் இருந்த போது அந்த நிகழ்ச்சியை என்னால் எந்த விட நெருடலும் இல்லாமல் ரசிக்க முடிந்தது. எந்த விட துவேசமும் இல்லாமல் இருக்க முடிந்தது. ஆனால் இப்படி அவ்வாறு இருக்க முடியவில்லை. அதுதான் என் கவலையே. கருத்துக்கு நன்றி சார்.
:)
ROFL
@vaarththai
ROFL
appadinna ennanga puriyala..
//தமிழ்நாடும் உலகத்தில்தானே உள்ளது. அப்படியானால் தமிழ் படங்களை உலகப்படம் என்று சொல்லக்கூடாதா? //
ஹா ஹா.. பாஸ்! செம கேள்வி :)
ரொம்ப தான் கஷ்டப் படுறீங்க பாஸ்!
@Balaji saravana
உண்மையிலேயே ரொம்ப கஷ்டபடுகிறேன் நண்பரே...
வாற்குகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள யாரு இந்த மாதிரி எல்லாம் பேச சொல்றது பங்காளி.
எல்லாமே சூப்பர் நல்லாத்தான் யோசிக்கறீங்க
@karthikkumar
தானா வருது பங்காளி. கருத்துக்கு நன்றி...
@பாலா
Rolling Over The Floor Laughing
:)
@vaarththai
விளக்கத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
பதிவு அருமை ஹா.ஹா
செம நக்கல்.
நகைச்சுவை உங்களிடம் கை கட்டி
சேவகம் செய்கிறது பாலா.
ஆனாலும் உள்குத்து புரிகிறது.
ரொம்பவே ரசித்தேன்! இந்த நோய்லாம் குணமாகிறது கஷ்டம்தான்!
மேதையோ மேனியா
இன்னா நண்பா இத விட்டுடீங்களே.
இங்க பதிவு எழத வர நெறைய பேரு தங்களுடைய மன அழுதத்த குறைசிக்க தான் வாராங்க.
ஆனா சில பிரபல மேதாவிங்க என்னமோ அவங்க தான் இந்த பதிவுலகத்த கண்டுபிடிச்சா மாதிரி - என்னத்த எழுதற இதல்லாம் ஒரு பதிவா அப்டின்னு நோனி நோட்ட சொல்றானுங்க.
@விக்கி உலகம்
ha..ha..ha...
repeattuuuu
@பாலா
நல்ல வேள...
இந்த பெண் ஈயமோ, பித்தளையோ சொல்றாங்களே,
அது தாக்காம விட்டதே...
:)
@r.v.saravanan
ரசித்து சிரித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே..
@r.v.saravanan
ரசித்து சிரித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே..
@santhanakrishnan
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
@எஸ்.கே
நன்றி நண்பரே... சீக்கிரமா மருந்து கண்டுபிடிங்கப்பா..
@இளங்கோ
சிரித்ததற்கு நன்றி நண்பரே...
@விக்கி உலகம்
மேதை மேனியா நோய் இன்னும் என்னை தாக்க வில்லை நண்பரே.. ஆகவே அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஐடியா கொடுத்ததற்கு நன்றி..
@vaarththai
அந்த ஈயம் இப்பத்தான் லைட்டா தாக்கிருக்குற அறிகுறி தென்படுது. ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிடணும். நன்றி நண்பரே..
you forget one thing
Narcissism
this disease comes for a particular period for all bloggers
@பெயரில்லா
adhu ennanga narcissism?
இது தான் உங்கள் பதிவிற்கான மருந்து...
உங்களிடமே இருக்கின்றது
//விவேகானந்தாவின் நறுக்...
காயம்படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.//
strength is life, weakness is death
//நடுத்தரவர்க்க பதிவுலக நண்பர்களே! உங்களுக்கும் என் போன்ற உபாதைகள் வந்திருக்கலாம். அதில் இருந்து எப்படி மீண்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்...//
மீண்டு வந்தா சொல்லியனுப்புறேன்....
@ஆகாயமனிதன்..
சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே..
அடிக்கடி வாங்க.
@பெயரில்லா
உங்களுக்குமா? கண்டிப்பா சொல்லுங்க..
பெயர் சொல்வதில் தவறு கிடயாதே?
:)
@THOPPITHOPPI
வருகைக்கு நன்றி நண்பரே..
ஒரே வழி - இந்த விசயங்களைப் பேசும் வலைப்பக்கங்களுக்கு செல்லாதீர்கள்.
Oh wait, அப்படி பார்த்தா ஒட்டுமொத்த பதிவுலகையே மறந்துட வேண்டியது தான்... :P
@Yoganathan.N
வாங்க வாங்க... என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?
நண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.பார்க்க....ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்
ரசித்து பார்த்தாலும், எனக்குள் இருக்கும் பதிவர் வந்து, "நீயும், உன் ரசனையும்!!" என்று காரி துப்புகிறார். //
பதிவுலகில் பிரபல பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.
Post a Comment