தீபாவளி மற்றுமொரு விடுமுறை தினம்
இந்த முறை தீபாவளி மற்றுமொரு விடுமுறை தினம் என்கிற ரீதியில்தான் கழிந்தது. சன் டிவியில் தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஒரு நிகழ்ச்சியை பார்த்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. தீபாவளி அன்றும் மேக்கிங் ஆஃப் எந்திரன், ரஜினி பேட்டி என்று மாறி மாறி விளம்பரம் போட்டே கடுப்பை கிளப்பி விட்டார்கள். எல்லா சேனல்களும் வரிந்து கட்டிக்கொண்டு மொக்கை படங்களை ஒளிபரப்பினார்கள். தீராத விளையாட்டுபிள்ளை, அழகிய தமிழ் மகன், சர்வம் என்று ஒரே மொக்கை. ஜெயா காக்க காக்க படத்தை நூற்று ஒம்பதாவது தடவை ஒளிபரப்பினார்கள். களவாணி மட்டுமே ஆறுதலான படம். தீபாவளி அன்று எங்கள் ஊரில் கன மழை. கரண்ட் வேறு கட் செய்து விட்டார்கள். மாலை எந்திரன் மேக்கிங் மற்றும் சிவாஜி பார்க்க முடியவில்லை.
சூப்பர் ஸ்டார் பேட்டி...
எனக்கு தெரிந்து ரஜினி ஒரு டிவி சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறதேன்று நினைக்கிறேன். தளபதி வந்த சமயம் தம் அடித்துக்கொண்டே கொடுத்த பேட்டி மிக பிரசித்தம். ரஜினிக்காக எல்லோரும் (அவர் பேச்சை கேட்க பலரும், பேச்சில் குறை கண்டுபிடிக்க சிலரும்) பார்ப்பார்கள் என்று தெரிந்து அங்கேயும் தன் சின்ன புத்தியை காட்டியது சன் டிவி. கேட்ட கேள்விகள் எல்லாமே சுற்றி சுற்றி எந்திரன், எந்திரன், எந்திரன். அதான் மேக்கிங்கில் காட்டி விட்டார்கள். ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கும் ரஜினியே வந்து பேசி விட்டார். மறுபடியும் திரும்ப திரும்ப அதைப்பற்றியே கேட்டது கோபத்தையே வரவழைத்தது. ஆனால் ரஜினி பேசிய விதம் என் மனதை கவர்ந்தது. ஒரு இருபது வயது இளைஞனின் துள்ளல் அவரது உடல் மொழியில் தெரிந்தது. எதை பற்றி கேட்டாலும் ஒரு பள்ளி குழந்தை போல ஆர்வமாக பகிர்ந்து கொண்டார். ஒரு சில கேள்விகள் மட்டுமே எந்திரன் அல்லாமல் வேறு விஷயங்கள் பற்றி இருந்தது. அதற்கும் அலட்டாமல் பதில் சொன்னார். விஜயசாரதி ரஜினி இருவருக்கும் நடந்த உரையாடலில் எனக்கு பிடித்த பகுதி,
"நீங்கள் ஆடு மாதிரி கத்தி காட்டுவது மிக நன்றாக இருந்தது",
உடனே ரஜினி ,"நீங்கள் சங்கர் அதை செய்து பார்த்ததில்லையே? என்னை விட அருமையாக இருக்கும்." என்றார்.
" ஒரே படத்தில் இப்படி மூன்று பரிணாமங்களில் நடித்து ஒரு புதுமையை செய்திருக்கிறீர்களே?"
அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரஜினி,"கமல் பத்து வேடங்களில் நடித்து விட்டாரே?" என்றார்.
அதான் ரஜினி...
தியேட்டருக்கு போன கதை...
உத்தமபுத்திரன் படத்திற்குதான் முதலில் சென்றேன். ஓரளவுக்கு பரவாயில்லை. பெண்களுக்கு பிடிக்கும். நண்பர்களுடன் வ படத்துக்கு சென்றேன். ஓரம்போ மாதிரி இதுவும் ஒரு புது முயற்சிதான். ஓரம்போ அளவிற்கு என்னை கவரவில்லை. படத்தில் பல இடங்களில் கோபம் பீறிட்டு வந்தது. எஸ்எஸ் மியூசிக் கிரைக் பேசும் வசங்களுக்கு சப்டைட்டில் போட்டால் தேவலை. ஒன்றுமே புரியவில்லை. எஸ்பி சரண் மட்டுமே தேறுகிறார். பெண்கள் குழந்தைகள் பார்க்கவே கூடாத படம். ஏனென்றால் பத்து நிமிடத்தில் பைத்தியம் பிடிப்பது உறுதி. நான் எதிர் பார்த்த மாதிரியே எந்திரனுக்கு நல்ல கூட்டம் இருந்தது. முன்பெல்லாம் தீபாவளி அன்று மாலை வெளியே கிளம்பி, அழகு பெண்கள் பட்டாசு கொளுத்தும் அந்த காட்சியை காண்பதற்காகவே ஒரு இரண்டு மணிநேரம் ஊரை சுற்றி வருவோம். இந்த வருடம் மழை அதற்கும் ஆப்பு வைத்து விட்டது.
மோனோ ஆக்டிங் செய்த ஹர்பஜன்
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த முதல் டெஸ்ட் ஆட்டம் ஒரு வழியாக டிராவில் முடிவடைந்தது. கடைசி நாளில் ஹர்பஜன் அடித்த கன்னி சதம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. சதம் அடித்து முடித்தவுடன் சச்சினை பார்த்து அவரை மாதிரியே செய்து காட்டினார். இதனை சச்சின் ரசித்தபடியே கைதட்டினார். அம்பயரின் தவறான தீர்ப்பால் லக்ஷ்மண் சதம் அடிக்க முடியாமல் போனது துரதிஷ்டவசமானது.
ஆஸ்திரேலியாவுக்கு உண்மையிலேயே நேரம் சரியில்லை போலும். சொந்த மண்ணில் வைத்தே இலங்கையுடன் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. ஆஷஸ் தொடரில் ஒரு அடி விழுந்தால் போதும். அணியின் கட்டுக்கோப்பே உருக்குலைந்து விடும் நிலை ஏற்பட்டு விடும். பாண்டிங்கின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்."காத்ரீனா புயல் வந்தபோது அமெரிக்கா மீது பரிதாபப்பட்டவர்களை விட, உள்ளுக்குள் மகிழ்ந்தவர்கள் பலர், அதற்கு காரணம் அமெரிக்காவின் முந்தய நடத்தைகள்." என்று ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்தது. தற்போது ஆஸ்திரேலியாவும் அடிமேல் அடி வாங்கும்போது உள்ளுக்குள் பலருக்கும் ஒரு வித மகிழ்ச்சி இருக்கிறது. காரணம் ஆஸ்திரேலியா மற்ற அணியினரிடம் முன்பு காட்டிய மரியாதை. இந்தியர்களே, பாகிஸ்தானை விடுத்து, ஆஸ்திரேலியர்களை எதிரிகளாக பாவிக்க தொடங்கி விட்டனர். ஆனாலும், முடிசூடா மன்னனாக இருந்த ஆஸ்திரேலியா மண்ணை கவ்வுவது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு வாக்கிலும் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்தான் ஆஸ்திரேலியா அணி இருந்தது. அதன் பின் சத்தமில்லாமல் வந்து உலககோப்பையை கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே (அப்போது தென்ஆப்பிரிக்காதான் கோப்பை வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர்). ஆகவே அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று சொல்லவே முடியாது. ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டைப்போல புதிய எழுச்சி பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கருத்து கந்தசாமிக்கு கருத்து தந்து உதவிய நண்பன் சண்முகசுந்தரத்துக்கு நன்றிகள்...
விரைவில் அடுத்த அரட்டையில் சந்திப்போம்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
15 comments:
ஓரம்போ அளவிற்கு என்னை கவரவில்லை. //
உண்மைதான்..ஓரம்போ ஆட்டோ ரேஸ் பற்றி ஸ்வாரஸ்யமாய் வெளிப்படுத்தி இருந்தது
சன்டிவியில் ரஜினி பேட்டி உண்மையில் அபாரம்தான்
ரஜினி யின் பெருந்தன்மை கமலிடம் இருக்கிறதா...கமல் ரஜினி பற்றி பேட்டிகளில் சொல்லும்போது நானும் ரஜினியும் படிக்காதவர்கள் எங்களை அரசியலுக்கு கூப்பிடாதீர்கள் என்றுதான் ஆரம்பிப்பார்...தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை ரகம் தான்
//குவாட்டர் கட்டிங் //
என்னோட கணிப்பு தவறிடுச்சு நண்பா...
//உத்தம புத்திரன் //
ஐயா சாமி ஆள விடுங்க :)
@ ஆர்.கே.சதீஷ்குமார்
தீபாவளி ரிலீஸ் படங்களிலேயே வ தான் மோசமான ரிசல்டாம்.
கமலைப் பத்தி நோ காமெண்ட்ஸ்.
நன்றி நண்பரே...
@ Balaji saravana
முதலிலேயே என் கணிப்பு இதுதான். தமிழ் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பே அதன் நெகடிவ்வாக அமைந்து விட்டது.
உத்தம புத்திரன் பெண்களால் மட்டுமே ரசிக்கப்படுகிறது.
நீங்கள் சொல்வது சரிதான்.....ரஜினி டிவியில் பேட்டி கொடுத்து எவ்ளோ வருடமாச்சு.....ஆனால் பேட்டி எடுத்தவர் அதை சரியாய் பயன்படுத்தவில்லை.....
ஒரே படத்தில் இப்படி மூன்று பரிணாமங்களில் நடித்து ஒரு புதுமையை செய்திருக்கிறீர்களே?"
அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரஜினி,"கமல் பத்து வேடங்களில் நடித்து விட்டாரே?" என்றார்.
அதான் ரஜினி...
yes
@ NKS.HAJA MYDEEN
//ஆனால் பேட்டி எடுத்தவர் அதை சரியாய் பயன்படுத்தவில்லை.....
அவர் என்ன செய்வார் பாவம்? சம்பளம் கொடுக்கும் முதலாளி சொல்வது போலத்தானே செய்யவேண்டும்?
வருகைக்கு நன்றி நண்பரே..
@ r.v.saravanan
வாங்க வாங்க..
வருகைக்கு மிக்க நன்றி... நண்பரே...
தீபாவளிப்படங்கள் எதுவும் பார்க்கும் ஐடியா இல்லை :-) உத்தம புத்திரன் ஓடிக்கொண்டிருக்கும் வளாகத்திலே இன்னொரு திரையிலே ஓடிக்கொண்டிருக்கும் எந்திரனை கடந்த ஞாயிறு பார்த்தேன்( மேக்கிங் ஒப் எந்திரன் பார்த்த பின்னர்).
நான் தொலைகாட்சிகள் பார்த்து வெகு காலமாகி விட்டது. இந்திரன் மேக்கிங் என்ற பெயரில் வழக்கமாக விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் நிகழ்ச்சியும் போடுவார்கள் என்றிருந்தேன். நீங்கள் சொன்னபிறகு தான் ஒரு நல்ல நிகழ்ச்சியை தவற விட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன்.
Rajini's reaction when vijay sarathy remembering the snack scene, is absolutely fantastic. He had reacted like a child .
we are all seeing him as superstar, but he shows himself as a child.
@ ரஹீம் கஸாலி
உண்மையில் நானும் சிறிது நேரம்தான் பார்த்தேன். மார்டீன் என்பவர் முகமூடி அணிந்து கொண்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் ரஜினியே நடித்திருக்கிறார் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த பின் தெரிந்தது.மறுபடியும் ஒளிபரப்ப போகிறார்களாமே?
நன்றி நண்பரே...
@ mydeen
Me too noticed the reaction. We many of the fans admire rajini not only for his heroism or punch dialogs. But also for these kinds of unintentional behaviors.
thanks a lot
Post a Comment