பதிவுலக தீர்க்கதரிசி...
சில பல தினங்களுக்கு முன் பதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன். அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு பத்து நாள் பொறுத்தால் எல்லா பதிவுகளும் வந்து விடும் என்று தோன்றுகிறது. சில பதிவுகளை கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், இதற்காக யாரும் என்னை பதிவுலக தீர்க்கதரிசி என்றெல்லாம் சொல்லாதீர்கள். நமக்கு பப்ளிசிட்டி பிடிக்காது.
ஒரு திருமணமும், சில நிகழ்வுகளும்...
பதிவுலகில் அவ்வப்போது சில தேவை இல்லாத விஷயங்கள் பிரச்சனைகளாக மாறுவதுண்டு. இப்போது நண்பர் ஒருவரின் திருமணம் அப்படி ஆகி இருக்கிறது. திருமணம் இனிதே நடந்து விட்டது. ஆனால் அதை பற்றி அவரது நண்பர்கள், எதிரிகள் என்று பலரும் பதிவெழுதி தள்ளி விட்டார்கள். பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நண்பர் கடவுளை முழுவதுமாக மறுப்பவர். இன்னும் சொல்லப்போனால் கெட்ட வார்த்தையால்தான் அழைப்பார். அவர் பதிவுகள் பெரும்பாலானவை அந்த ரீதியில்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்று பார்ப்பனர்களையும் ஒரு கை பார்த்து விடுவார். சமீபத்தில் அவரது திருமணம் நடந்தது. அவர் எதிர்த்த எல்லா விஷயங்களும் திருமணத்தில் நடந்ததாக சொல்கிறார்கள். ஆகா வகையாக மாட்டிக்கொண்டான் என்று இது வரை காத்திருந்தவர்கள் பாய்ந்து குதறி விட்டார்கள். பிள்ளையார் படம், தாலி, புரோகிதர், வரதட்சணை, சாந்தி முகூர்த்தம் என்று எல்லாவற்றையும் விமர்சித்து விட்டார்கள்.
இரு தரப்பும் இந்து சம்பிரதாயங்கள், வரதட்சணை, சாதி என்று எல்லா சாணிகளையும் சாரி ஆயுதங்களையும் மாறி மாறி எறிந்து வருகிறார்கள். எனக்கும் இந்த சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போகிற வழியில் ஒரு சண்டையை பார்த்தால் நாமும் கருத்து தெரிவிப்போமே அது போலத்தான். நண்பரின் கருத்துக்களுக்கு நானும் எதிரிதான். ஒவ்வொரு முறை அவர் கடவுள்களை ஆபாசமாக திட்டும்போதும் என் கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். என் கண்டனங்கள் அவரை திருத்தி விடாது என்று தெரியும். ஒரு இறை நம்பிக்கையாளனாக நான் என் மனதில் நினைத்தது, காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்று. அது நடந்து கொண்டிருக்கிறது. சரி அவருக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாது. மற்றவர்களுக்கு உண்டால்லவா? ஒரு திருமணம், மங்களகரமான நிகழ்வு நடந்திருக்கிறது என்றால், எதிரியே ஆனாலும் வாழ்த்துவதுதான் கடமை. அதை விடுத்து அமங்கலமான வார்த்தைகளை பிரயோகிப்பது தவறில்லையா? இதில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். ஒரு நல்ல ஆத்திகன் யாரும் நாசமாய் போய் விடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. உங்கள் கடவுளுக்கு சக்தி இருக்கிறதா என்று கேட்பவருக்கு கடவுள் பதில் சொல்வார். காலத்தின் வாயிலாக. நாம் கடவுளின் வக்கீல்களா என்ன?
ஹீரோக்களின் படம் இல்லாத தீபாவளி...
ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றாலே பட்டாஸோடு புது பட அணிவகுப்பும் ஞாபகம் வரும். ஆனால் வரவர தீபாவளிக்கு வெளியாகும் புதுப்பட எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் சுமார் பத்து முதல் பதினைந்து படங்கள் வரை தீபாவளிக்கு வெளியாகும். தற்போது ஐந்து படங்கள் வெளி வந்தாலே அது சாதனையாக இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூரியா, சிம்பு என்று முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் வெளிவாராதது ஏமாற்றமாக இருக்கிறது. இந்த முறை உத்தமபுத்திரன் தனி ஆளாக களமிறங்குகிறது. சிக்சர் அடிக்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தீபாவளியும் பலான படங்களும் - 18+
தீபாவளி என்றாலே எல்லோருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் புதுப்படங்கள் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு 1999ஆம் வருடம்தான் ஞாபகம் வரும். எங்கள் ஊரில் ஒரு சிறப்பு. தீபாவளிக்கு புது படம் வரும் என்பதால் சுமார் ஒரு வார காலத்துக்கு முன்பாக எல்லா தியேட்டர்களிலும் மொக்கை படங்களை வெளியீட்டு ஈடு கட்டுவார்கள். அதிலும் பெரும்பாலானவை பலான படங்களாக இருக்கும். அந்த சம்யத்தில் எங்கள் பள்ளி ஆண்டு விழா வேறு நடக்கும் என்பதால் ஆண்டு விழாவை காரணம் காட்டி எல்லோரும் இரண்டு படமாவது பார்த்து விடுவோம் (ஆண்டு விழா மாலை ஐந்து மணிக்கு தொடங்கி இரவு ஒரு மணி வரை நடக்கும்). அந்த சமயத்தில் தியேட்டரில் நுழைந்தால் வெறும் மாணவர்களை மட்டுமே பார்க்க முடியும்.
1999ஆம் ஆண்டு உலக மகா அதிசயமாக ஆறு தியேட்டர்களிலும் பலான படம். எல்லா தியேட்டர்களும் கவுஸ்புல். படம் வேறு வெகு ஜோர். எல்லோரும் உற்சாகத்தில் ஒரு மயக்கத்தில் இருந்தனர். இடைவேளையில் பாளையத்து அம்மன் டிரைலர் போட்டார்களே பார்க்கலாம். அதிலும் பாளையத்தமா நீ பாசவிளக்கு பாடல் முழுவதும். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டனர் ஆபரேட்டரின் அறிவை நினைத்து. ஒரு பலான படத்துக்கு வந்து பக்தி பட டிரைலர் பார்த்த இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாகிப்போனது.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
31 comments:
hehehe......palana padathukku poi pakthi padam pathathu super anubavam.....
செம அரட்டை. நண்பன் இம்சை மற்றும் நல்லநேரம் லிங்க் கொடுத்ததற்கு நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள் பாலா
நம் தளத்திற்கும் வருகை தாருங்கள் நேரமிருக்கும் போது
@ NKS.HAJA MYDEEN
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
அவர்கள் உங்களுக்கும் நண்பர்களா? ஓகே ஓகே..
நன்றி நண்பரே...
@ r.v.saravanan
நன்றி தலைவரே...கண்டிப்பாக வருகிறேன்.
பதிவரின் திருமணத்தை பற்றி எழுதியிருந்த பத்தி சிறப்பு... மாற்றுக்கருத்து கொண்டவர் ஆனாலும் வாழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறதே... அந்த மனசுதான் கடவுள்...
//கல்யாண மேட்டர்//
//எதிரியே ஆனாலும் வாழ்த்துவதுதான் கடமை//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்.. இந்த மாதிரி மனநிலை எனக்கு எப்போ தான் வருமோ?
உத்தம புத்திரனுக்கு, குவாட்டர் கட்டிங் ஒரு போட்டியா இருக்கும்னு என்னோட கணிப்பு..
@ philosophy prabhakaran
எங்கோ படித்ததாக நினைவு. நாம் மனிதர்களை மதிப்பிடுவதில்லை. அவர்களின் குணங்களைத்தான் மதிப்பிடுகிறோம். குணத்தை வைத்து ஒருவனை மதிப்பிடுவது மகா தவறு... ஆக்சிஜன் தனியே இருந்தால் பிராணவாயு, கார்பனுடன் சேர்ந்தால் கரிம வாயு, ஹைட்ரஜனுடன் சேர்ந்தால் தண்ணீர். இதற்காக ஆக்சிஜன் இல்லை என்று ஆகி விடுமா?
வருகைக்கு நன்றி நண்பரே...
@ Balaji saravana
எல்லோரையும் பாலாஜி சரவணனாக பார்த்தால் அந்த மனநிலை சீக்கிரமே வந்து விடும்.
குவாட்டர் கட்டிங் எல்லா செண்டர் மக்களையும் கவரும் என்று சொல்லி விட முடியாது. தெரியாத முகங்களும் அதிகம் இருப்பது ஒரு குறை.
நன்றி நண்பரே...
தீபாவளி வாழ்த்துக்கள் பங்காளி
அரட்டை நல்லா இருக்குங்க ..
பாபு அண்ணனோட லிங்க் கொடுத்ததுக்கு நன்றி .!!
தல குவாட்டர் கட்டிங் படத்த மறந்துட்டீங்களே .... எனக்கு தெரிந்த வரையில் தீபாவளி அன்று ஓப்பனிங்கில் கல்லா கட்ட போவது இந்த படம்தான் .... தமிழ்படம் கொடுத்த எதிர்பார்ப்பு மற்றும் படத்தின் பெயர் எல்லாம் சேர்த்து படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது நம் குடிமகன்களிடம்...(நானுந்தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ... முதல் நாள் பார்த்து விட்டு விமர்ச்சனம் போட)
செம அரட்டை. நண்பன் இம்சை மற்றும் நல்லநேரம் லிங்க் கொடுத்ததற்கு நன்றி //
நண்பன்டா
அருமையான கச்சேரி ..தூள் கிளப்பிட்டீங்க..பலான படம் நு தலைப்பு போட்டுட்டு அம்மன் படம் போட்ருக்கீங்களே சாமி கண்ணை குத்தாது
ஆக்சிஜன் தனியே இருந்தால் பிராணவாயு, கார்பனுடன் சேர்ந்தால் கரிம வாயு, ஹைட்ரஜனுடன் சேர்ந்தால் தண்ணீர். இதற்காக ஆக்சிஜன் இல்லை என்று ஆகி விடுமா? //
யாருய்யா இந்த அப்துல்கலாம்
தீபாவளி வாழ்த்துக்கள்.
@ karthikkumar
உங்களுக்கும் வாழ்த்துக்கள் பங்காளி
@ ப.செல்வக்குமார்
நன்றி தல அடிக்கடி வாங்க
@ "ராஜா"
தல முன்னணி ஹீரோக்கள் நடித்த படத்தில் உத்தம புத்திரன் மட்டுமே களமிறங்குகிறது என்ற அர்த்ததில் சொன்னேன்.
@ ஆர்.கே.சதீஷ்குமார்
அப்படி கண்ண குத்தணும்னா முதல்ல அந்த படத்துல நடிச்சவங்களத்தான் குத்தணும். அட நீங்க வேற அப்துல் கலாம எதுக்கு இப்ப கேவல படுத்திக்குட்டு. நன்றி நண்பரே....
@ எப்பூடி
இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் தலைவரே...
அரட்டை அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@ எஸ்.கே
நன்றி நண்பரே.. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...நல்ல அரட்டை தான்...!
ரொம்ப நன்றி மக்கா என்னோட லிங்க் மட்டும் நல்ல நேரம் ரெண்டு கொடுத்ததுக்கு ...............
பாரு மக்கா இந்த ரமேஷ பொறமை புடிச்ச பய எப்ப பாரு என்னை வம்பு இழுத்து கிட்டே இருப்பான்....
சரி மக்கா உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.விஷயங்களைச் சொல்லிச் செல்கிற விதம் நன்றாக உள்ளது.
@ சௌந்தர்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
@ இம்சைஅரசன் பாபு..
நன்றி பாசு...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@ விமலன்
மிக்க நன்றி நண்பரே...
//ஒரு நல்ல ஆத்திகன் யாரும் நாசமாய் போய் விடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. உங்கள் கடவுளுக்கு சக்தி இருக்கிறதா என்று கேட்பவருக்கு கடவுள் பதில் சொல்வார். காலத்தின் வாயிலாக. நாம் கடவுளின் வக்கீல்களா என்ன?// very perfect lines
Post a Comment