விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 30, 2010

வாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...


இந்த சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...


"அரிமா அரிமா 

சொல்லாமலே யார் பார்த்தது
ஒரு பொன் மான் கிடைத்தால்
பூ பூத்தது,
மல்லு வெட்டி கட்டி இருக்கு
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
மல்லிகைப்பு வாசம் என்னை 
மாசத்துல மூணா நாலு பொறுக்கணும் பொதுவாக
ஒரு ஜீவன் அழைத்தது..
ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்,
மழை சுடுகின்றதே 
இனி எனக்காக அழ வேண்டாம்,
அடி போடி புள்ள எல்லாம் டூப்பு..."




ஏதோ பாடல் வரிகளை கொடுத்து புதிர் போட்டி நடத்த போகிறேன் என்று நினைக்கிறீர்களா? அட நீங்க வேற வயித்தெரிச்சல கெளப்பிக்கிட்டு...முந்தாநாள் சிவகாசி செல்லும் ஒரு மொபசல் பேருந்தில் ஏறினேன். என்னை சுற்றி ஐந்து பேர் கையில் சைனா மொபைலை வைத்துக்கொண்டு பாட்டு கேட்டு கொண்டு வந்தனர். ஹெட்போனில் கேட்காமல் சத்தமாக அனைவரும் கேட்கும்படி கேட்டனர். அப்போது என் காதில் விழுந்த ஒரு பாடல்தான் நான் மேலே சொல்லி இருக்கும் பாடல். ஒரே நேரத்தில் ஐந்து பாடல்கள். போதாக்குறைக்கு பேருந்தில் பயங்கர கூட்டம் வேறு. மொத்தம் இருபது நிமிடமே பயணம் செய்த எனக்கே பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. நெடுந்தூரம் பயணம் செய்பவர்களை பற்றி எண்ணிப்பார்த்தேன். ஒருத்தனை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். என் கையில் கிடைத்தான், செத்தான். யாரா? இந்த சைனா மொபைல கண்டுபிடிச்ச அந்த நாதாரிதான்.


வாடா – மறக்கமுடியாத ஒரு படம். (18+)




கடந்த வாரம் சனிக்கிழமை வாடா படம் பார்க்க சென்றேன். (நாங்கல்லாம் சூறாவையே ரெண்டு தடவை பார்த்தவங்க...). இந்த படம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. எப்படி என்று அப்புறம் சொல்கிறேன். படத்தில் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம். நம் நெஞ்சை அல்ல. சுந்தர் சி கதாநாயகியின் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம். பொதுவாக பலான படங்களில் இடைவேளைக்கு அப்புறம் தான் பிட்டு ஒட்டுவார்கள். இந்த படத்தில் இடைவேளைக்கு முன் ஓட்டுகிறார்கள். அதிலும் கதாநாயகி கட்டி இருக்கும் துண்டு அவிழும் பாருங்கள். படக்கென்று சுந்தர் சி துண்டை பிடித்து கதாநாயகியின் மானத்தை காப்பாற்றுவார் (எங்கே பிடிப்பார் என்பதை திருட்டு டிவிடியில் காண்க). கண்டிப்பாக சுந்தர் சி நெஞ்சை தொடும் காட்சி. அதே போல பேண்ட் அவிழும் என்று தெரிந்தே கதாநாயகி எழுந்து நிற்பார். பக்கத்து அறையில் சுந்தர் சியின் தங்கை இருந்தாலும், அவரை கூப்பிடாமல் சுந்தர் சியே தன் மானத்தை காக்க வேண்டும் என்று பேண்டை தூக்கி விட சொல்வார். அப்போது சுந்தர் சி பேண்ட் என்று நினைத்து வேறு ஒரு இடத்தில் கைவைப்பார் பாருங்கள் அடடடா... "பேண்ட் அவிழுவதை தடுக்காமல் கதாநாயகியின் கை என்ன செய்து கொண்டிருந்தது?" என்றெல்லாம் கேட்கக்கூடாது. உடுக்கை இழந்தவன் கை போல என்ற குறளுக்கே சவால் விடும் ஒரு காட்சி இது. 


இந்த மாதிரி சில பல காட்சிகள் படத்தில் இருக்கிறது. நான் சொன்னதை படித்து இந்த காட்சிகளை பார்க்கும் ஆவல் ஏற்பட்டால், திருட்டு டிவிடியில் இந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு படத்தை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் அநாவசியமாக உங்கள் உங்கள் டிவிடி பிளேயரையோ, டிவியையோ உங்கள் கையாலேயே உடைக்க நேரிடலாம். சரி வாடா எப்படி எனக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது? படம் பார்க்கும் போது என் அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக போன் வந்தது. அதைத்தான் சொன்னேன்.



ஸ்ஸ்ஸ்...அப்பா கண்ண கட்டுதே... 18+ 



சென்ற வாரம் நான் பார்த்த இன்னொரு மொக்கை படம். இது. படத்தில் ஒளிப்பதிவு மிக துல்லியமாக இருக்கிறது. மற்ற எல்லாமே சுத்த வேஸ்ட். மல்லிகா ஷெராவத் முழு ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மொட்டை கட்டையாக இருக்கிறார். "ஸ்கின் டிரஸ் போட்டிருப்பாரோ?" என்று சந்தேகம் எழுந்தது. சில குளோஸ் ஆப் காட்சிகள் அதனை போக்கி விட்டது. ஒன்னுமே போடல ஹி .. ஹி.. வழக்கமான பாம்பு படம் போல் ஆண் பாம்புக்கும் பெண் பாம்புக்கும் இடையே டூயட், காபரே இல்லாமல் இருப்பது படத்தின் பலம் மற்றும் பலவீனம். (பின்னே ஏதாவது இருந்திடும்னு குடும்பத்தினரும், ஒன்னுமே இல்லைனு இளைஞர்களும் படத்தை புறக்கணிக்கும் அபாயம் உள்ளது). ஒரே ஒரு படுக்க அறை காட்சி இருக்கிறது. ஆனால் அது மல்லிகா ஷெராவத்துக்கு அல்ல. கொஞ்சம் மேனக்கெட்டிருந்தால் ஒரு சுவாரசியமான த்ரில்லர் படமாக அமைந்திருக்கும். நல்ல படமாகவும் இல்லாமல், பலான படமாகவும் இல்லாமல் இரண்டும்கெட்டானாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொறுத்தால் சோனியிலோ, ஜீடிவியிலோ கண்டுகளிக்கலாம். 



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


16 comments:

"ராஜா" said...

//சில குளோஸ் ஆப் காட்சிகள் அதனை போக்கி விட்டது. ஒன்னுமே போடல

வட போச்சே ... நான் மிஸ் பண்ணிட்டேன் படத்த தியேட்டர்ல பாக்க முடியாம போச்சே ...

// படத்தில் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம்.

நானும் பாத்தேன் ... என்ன சொல்ல சுந்தர்.சி கொடுத்து வச்சவர் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// படத்தில் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம்.///

hehe

karthikkumar said...

நெஞ்சை தொட்ட காட்சிகள் சூப்பரப்பு

NKS.ஹாஜா மைதீன் said...

சுந்தர் சி லாம் எதுக்கு ஹீரோவா நடிக்கிறான்....

பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு....
அதாங்க படத்தை பற்றிய உங்க கருத்த சொன்னேன்....

ரஹீம் கஸ்ஸாலி said...

சீனா மொபைல வச்சுக்கு இந்தா நாதாரிங்க தொந்தரவு தாங்க முடியலங்க. நானும் இந்த இம்சையை அனுபவிச்சிருக்கேன் நண்பா...

ரஹீம் கஸ்ஸாலி said...

சுந்தர் சி லாம் எதுக்கு ஹீரோவா நடிக்கிறான்....//////////
வேறெதுக்கு திராவிட கொள்கைகளை வளர்க்கத்தான்.

r.v.saravanan said...

என் கையில் கிடைத்தான், செத்தான். யாரா? இந்த சைனா மொபைல கண்டுபிடிச்ச அந்த நாதாரிதான்.

ஹா ஹா ரொம்ப கடுப்பாயிடீங்க போல

r.v.saravanan said...

சரி வாடா எப்படி எனக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது? படம் பார்க்கும் போது என் அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக போன் வந்தது. அதைத்தான் சொன்னேன்.

எப்படி இந்த படம் எல்லாம் பார்க்கறீங்க பாலா

சரி ஸ்வீட் எங்கே

பாலா said...

@ "ராஜா"

தியேட்டர்ல பாக்குற அளவுக்கு வோர்த் கிடையாது தல...

பாலா said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நன்றி நண்பரே...


@ karthikkumar

கருத்துக்கு நன்றி நண்பா...

பாலா said...

@ NKS.HAJA MYDEEN

காசு இருந்தா யார் வேணா ஹீரோ ஆகலாம். யாருக்கு யாரோ ஸ்டெப்நி படம் பாக்கலாயா?

பாலா said...

@ ரஹீம் கஸாலி

சைனா மொபைல்னு இல்ல எல்லா மொபைலும் இந்த மாதிரிதான். ஆனா சைனா மொபைல் கொடுக்குற சத்தம் இருக்கே?

பாலா said...

@ r.v.saravanan


எனக்கும் பாட்டு கேக்குறது பிடிக்கும். ஆனா ஒரே நேரத்துல அஞ்சு பாட்ட எப்படி கேக்குறது?
ஸ்வீட் கண்டிப்பா கொடுத்துடுவோம் தல ...

//எப்படி இந்த படம் எல்லாம் பார்க்கறீங்க பாலா

அதான் சொன்னேனே, நாங்கல்லாம் சுறாவையே ரெண்டு தடவ பாத்தவங்க

Philosophy Prabhakaran said...

நல்ல தொகுப்பு... சைனா மொபைல் பற்றிய கருத்து சூப்பர்... நானும் அத்தகைய கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்...

Yoganathan.N said...

சித்தப்பா ஆகிட்டீங்க. வாழ்த்துகள் :)
உங்கள் அண்ணன் குடம்பத்தினருக்கும் வாழ்த்துகள் :)

பாலா said...

@ philosophy prabhakaran

கருத்துக்கு நன்றி நண்பரே...

@ Yoganathan.N

ரொம்ப நன்றி...
என்ன கடை பக்கம் ஆளையே காணோம்...?

Related Posts Plugin for WordPress, Blogger...