விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 12, 2010

வெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண்டிங்

ஆஸ்திரேலியா மறுபடியும் ஒருமுறை வாயை கொடுத்து பின்னால் புண்ணோடு ஊர் திரும்ப போகிறது. நான்காம் நாள் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரு அணியினரும் ஆடுவதைப்பார்த்தால் ஆட்டம் டிராவில்தான் முடியும் போலிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் ஆஸ்திரேலியா இந்தியா வரும்போது ஏதாவது சவடால் விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும். இந்த முறை அவர்கள் வந்திருப்பது 2011 ஆம் ஆண்டு நடக்கும் உலககோப்பை தொடருக்கான முன்னோ(நோ)ட்டம் என்று கூறப்படுகிறது. வயசானாலும் சிங்கம், சிங்கம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் திராவிட், லக்ஷ்மண் மற்றும் சச்சின். முதல் டெஸ்டில் லக்ஷ்மண் ஆடியதை பார்த்து வெறுத்து போயிருப்பார் பாண்டிங். இதுகுறித்து பாண்டிங் புலம்புவதுபோல கற்பனை செய்து சமீபத்தில் ஒரு பதிவர் தன் பதிவில் வெளியிட்டிருந்ததே "லக்ஷ்மணா எப்படா ரிட்டயர் ஆவ?"




சச்சின் – கிரிக்கெட்டின் எந்திரன்.



சச்சின் தான் இன்னும் நிகழ்த்தாத சாதனைகளை பட்டியலிட்டு வைத்திருப்பார் போலும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் களமிறங்கும் முன்னும் அதில் எந்தெந்த சாதனைகளை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்து வீட்டுத்தான் களமிறங்குவார் போலிருக்கிறது. இந்த இரண்டாவது டெஸ்டில் அவர் நிகழ்த்தி இருப்பது 14000 ரன்கள், ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிகமுறை கடந்தது, அதிகமுறை 150க்கு மேலான ரன்களை குவித்தது ஆகியவை ஆகும். அடுத்து ஒருநாள் தொடரில் களமிறங்கும் முன், மிச்சமிருக்கும் சாதனை பட்டியலை சரிபார்த்துவிட்டு களமிறங்குவார் போலிருக்கிறது. அதிக ஆட்டநாயகன், அதிக தொடர்நாயகன், அதிகமுறை தொண்ணூறுகளில் அவுட் ஆனவர்கள், டெஸ்டில் அதிகமுறை ரன் அவுட் ஆனவர்கள், என்று எல்லா சாதனை பட்டியலிலும் சச்சின் பெயர் உள்ளது. உண்மையிலேயே சச்சின் சாதனை நாயகன்தான். ஆனால் வருத்தப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சச்சின் இன்னும் எத்தனை நாள் விளையாடுவார் என்பதுதான். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டுதானே? 


3 இடியட்சும் என் சென்டிமென்டும்


விஜய் ரசிகர்களிடயே இப்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு செய்தி, 3 இடியட்ஸ் படத்தை சங்கர் இயக்குகிறார் என்பதும், விஜய் அதில் நடிக்கிறார் என்பதும்தான். அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் இந்த செய்தி ஒருவேளை வதந்தியாக இருக்குமோ? என்று நினைக்க வைக்கிறது. உண்மையாக இருக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பம். இந்த படத்தை ஹிந்தியில் பார்த்தவர்கள் பலருக்கும் இருக்கும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. "அமீர்கான் வேடத்துக்கு விஜய் எப்படி செட் ஆவார்?" என்பதுதான். இப்போது புதிதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. வைரஸ் ப்ரோபசர் வேடத்தில் சத்தியராஜ் நடிக்கிறார் என்று. அதுவும் செட் ஆகும் என்று தோன்றவில்லை. தொடங்கும்போதே "இதெப்படி வோர்க்கவுட் ஆகும்? கண்டிப்பாக தோல்விதான்" என்று எனக்கு தோன்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன. உதாரணம், காதல்மன்னன், சேது, தில், ரன், கில்லி மற்றும் சந்திரமுகி. பார்க்கலாம் 3 இடியட்ஸ் இதில் சேர்கிறதா? இல்லை இந்த சென்டிமென்டை முறியடிக்கிறதா என்று.


வந்தே மாதரம்


நான் வாரம் ஒருமுறை தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவன். அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பார்த்து விடுவேன். கடந்த வாரம் எந்திரன் அந்த கோட்டாவை எடுத்துக்கொண்டதால் இந்த வாரம் வேறு ஒரு படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். இருப்பது மூன்று அரங்குகள். ஒன்றில் எந்திரன், மூன்று முறை பார்த்தாயிற்று. இன்னொன்றில் தேவலீலை. நான் அந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை.(படத்தில் ஒன்னுமே இல்லை என்று ஏற்கனவே நண்பர் ஒருவர் எச்சரித்து விட்டார்... ஹி ஹி). வேறு வழி இல்லாமல் வந்தே மாதரம் படத்துக்கு போகும் நிலை ஏற்பட்டது. வழக்கமான கதைதான் என்றாலும், படம் சுவாரசியமாகவே சென்றது. ஒரு வேளை எந்த வித எதிர்பார்ப்புமே இல்லாமல் போனதாலோ என்று தெரியவில்லை. தியேட்டரில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. என் முன் சீட்டில் இருக்கும் இருவர் போரடிக்கும் போதெல்லாம் படத்தை பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்ததை அனைவரும் ரசித்தனர். உதாரணமாக கிளைமாக்ஸில் அர்ஜூன் மற்றும் மம்முட்டி பேசும் வசனத்தை கேட்டதும், "பன்னிகுட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா!!" என்று சொன்னதும் தியேட்டரே சிரிப்பலையில் ஆழ்ந்தது.


இது ஜோக்கா இல்லை சிறுகதையா?

ஒரு கணவனுக்கு தன் மனைவி செவிடாய் இருப்பாளோ என்று சந்தேகம் வந்தது. உடனே ஒரு டாக்டரின் அறிவுரைப்படி, அவளுக்கு தெரியாமல் சோதனை செய்ய முடிவு செய்தான். நேராக வீட்டுக்கு சென்றவன், தன் மனைவி சமையலறையில் இருப்பதை பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் இருந்து கத்தினான்.

"அடியே! இன்னைக்கு என்ன சமையல்?" பதிலில்லை.

உடனே ஹாலுக்கு வந்து கத்தினான். "இன்னைக்கு என்ன சமையல்ன்னு கேட்டேன்!!" பதிலில்லை.

சமையலறை அருகில் சென்று கேட்டான். பதிலில்லை. 

மிக அருகில் சென்று கேட்டான். "அதான் கேக்குரேன்ல? இன்னைக்கு என்ன சமையல்?".

அவன் மனைவி கோபமாக திரும்பி, "தக்காளிசாதம்! தக்காளிசாதம்! தக்காளிசாதம்! எத்தனை தடவைங்க சொல்றது? உங்க காதென்ன செவிடா?"என்றாள்.

நம்மாள் திருதிருவென விழித்தான்.





நீதி: அடுத்தவரின் குறையை கண்டுபிடிக்கும் முனைப்புடன் இருக்கும்போது, நாம் குறை நாம் கண்ணுக்கு தெரிவதில்லை.



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

1 comments:

எப்பூடி.. said...

சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...