விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 5, 2010

ரஜினி படங்களும் சில வன்முறைகளும்...


அட போங்கப்பா! மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது போல. இது ஏதோ முற்போக்கு, பின் நவீனத்துவ அல்லது நுண்ணரசியல் பதிவு என்று நினைத்து விடாதீர்கள். எந்திரன் படம் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்போதே ஒருவர் தியேட்டரினுள் இருந்து ரத்த களரியோடு வந்தார் என்று சொல்லி இருந்தேன். அது சம்பந்தமாகத்தான் சொல்லப்போகிறேன்.சுப்பிரமணியபுரம் படத்தில் ஒரு காட்சி வரும். முரட்டுக்காளை படம் ஓடும்போது ஜெய் மற்றும் சசிகுமார் சில நபர்களை தியேட்டரில் புரட்டி புரட்டி எடுப்பார்கள். இது ஏதோ சண்டைகாட்சி வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட காட்சி அல்ல. மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பெரிய படம் வரும்போதும், குறிப்பாக ரஜினி படம் வெளியாகும் போதும், எல்லா காட்சியிலும் ஏதாவது ஒரு வன்முறை காட்சி நடந்தே தீரும். இந்த மாதிரி வன்முறைகளை பலமுறை நேரில் பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. எங்கள் வீட்டில் எல்லோரும் ரஜினி ரசிகர்கள்தான். என் அண்ணன்கள் இருவரும் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஆகவே பெரும்பாலான படங்களை முதல்நாள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்தது. நான் விபரம் தெரிந்து பார்த்த முதல் படம் மனிதன். அப்புறம் வரிசையாக எல்லா படங்களும் முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே பார்த்து விடுவேன்.என் அண்ணனுடன் மாப்பிள்ளை படம் பார்ப்பதற்கு தியேட்டர் சென்றிருந்தேன். பால்கனி டிக்கட். கூட்டம் முண்டியடித்தது. கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டரில் ஒரே கூச்சல். ஒரு காட்சியில் ஸ்ரீவித்யா ரஜினியை பார்த்து, "டேய் சின்ன பையா!!" என்று சொல்வார். உடனே கோபமுற்ற ஒரு ரசிகர் எச்சில் துப்பும் மண்தொட்டியை எடுத்து பால்கனியில் இருந்து திரையை நோக்கி வீசினார். நேராக கூட்டத்துக்குள் போயி விழுந்து ஒருவரின் மண்டை உடைந்தது. யார் தொட்டியை வீசியது என்று தெரியவில்லை. எனக்கு மட்டும் அந்த ரகசியம் தெரியும். அந்த தொட்டியை வீசியது என் அண்ணன்தான். சம்பந்தபட்ட அதே தியேட்டரில் வெளிவந்த இரண்டு படங்கள் பாண்டியன் மற்றும் எஜமான். படத்தின் கடைசி தினத்தன்று ஆடி தீர்த்து விடுவர். ஒன்ஸ்மோர் கேட்டு பாடலை திரும்ப போடவில்லை என்றால் அவ்வளவுதான். பாண்டியன் மற்றும் எஜமான் இரண்டு படங்களின் கடைசி நாள் அன்றும் கழிவறைகள் முற்றிலும் சுக்கு நூறாக தகர்க்கப்பட்டன. அத்தோடு அந்த தியேட்டர்காரர்கள் ரஜினி படம் போடுவதையே விட்டு விட்டனர்.இந்த மாதிரி வன்முறைகளை எல்லாம் எதிர் கொள்ளும் திறன் படைத்த ஒருவர், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். அவரது தியேட்டரில் தான் இப்போதெல்லாம் ரஜினி படம் வெளியிடப்படுகிறது. ரசிகர்கள் ரகளை செய்தால் போலீஸ் எல்லாம் கிடையாது. அடியாட்கள் தான் உள்ளே வருவார்கள். அண்ணாமலை, பாட்ஷா என்று சந்திரமுகி வரை இது தொடர்ந்தது. பாட்ஷா படத்தின் போது, ஒரு கட்டத்தில் ரசிகர்கள் பரவச நிலை அடைந்து எல்லா சேர்களையும் உடைக்க ஆரம்பித்தனர். சுமார் முப்பது பேர், ஆறு அடி நீளமுள்ள கட்டைகளுடன் கூட்டத்துக்குள் புகுந்தனர். தியேட்டருக்குள் சுற்றி சுற்றி ஓடியது எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதே போல ரஜினிக்கு எதிராக ஒரு வசனம் வந்து விட்டால் போதும். திரை உடனே கிழிக்கப்படும். படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போடுவார். உடனே பறந்து வந்தது ஒரு செருப்பு. பின் பறந்து வந்தது தீயணைப்புக்கு வைத்திருந்த மண் வாளி. திரை டர்ரென்று கிழிந்தது. தடியுடன் உள்ளே புகுந்தனர் அடியாட்கள். பிறகு என்ன? ஜாக்கிசான் சண்டைகாட்சிதான். தியேட்டரை சுற்றி சுற்றி ஓடினோம். இதை மனதில் வைத்துக்கொண்டு படத்தின் கடைசி நாளான 109ஆம் நாள் பாட்டில் குத்து எல்லாம் அரங்கேறியது. (எங்கள் ஊரில் ஒரு படம் ஐம்பது நாள் ஓடினால் அது சூப்பர் டூப்பர் ஹிட். கரகாட்டக்காரன் 175 நாள் ஓடியது. அதன் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை).பாபா படத்துக்கு சொல்லவே வேண்டாம். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. பாமகவினரும் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். சந்திரமுகியில் நடந்த கதையே வேறு, மதுரை சினிப்ரியா காம்ப்ளக்சில் சந்திரமுகியும் சச்சினும் வெளியாயின. அந்த நேரத்தில் திருவாளர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்யை புகழ்ந்து பேசுகிறேன் என்று ரஜினியை மட்டம் தட்டிவிட கடுப்பில் இருந்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி படம் நள்ளிரவே திரையிடப்பட்டதால் சினிப்ரியாவில் உள்ள எல்லா ஸ்க்ரீனிலும் சந்திரமுகிதான் ஓடியது. அடுத்த நாள் காலை காட்சி சச்சின் திரையிடப்படவேண்டும். சந்திரமுகி ஓடி முடிந்ததும் அந்த திரை கந்தல் கோலம் ஆனது.


ஓரளவிற்கு வன்முறை குறைவாக இருந்தது என்றால் அது சிவாஜிக்குதான். எந்திரன் படத்துக்கு நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது முகமெல்லாம் ரத்ததோடு ஒருவர் வெளியே வந்தார். உள்ளே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. கேட்டுக்கு வெளியே பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. உள்ளே ஒருவரை தியேட்டர்காரர்கள் துவைத்துக்கொண்டிருந்தார்கள். ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டாராம். ஆனால் முன்பு போல வெறித்தனமான ஆக்ரோஷமான ரசிகர்களை காண முடியவில்லை. வன்முறைகளும் குறைவாகவே இருக்கின்றன. ஒரு வேளை ரஜினி ரூட்டை மாற்றியது போல ரசிகர்களும் மாறிவிட்டார்களோ?பி.கு: இதை படித்து விட்டு எத்தனை பேர் முட்டாள் ரசிகர்கள், மக்களை ஏமாற்றும் ரஜினி உங்களுக்கு என்ன செய்தார்? வன்முறை உணர்வைத்தானே தூண்டுகிறார்? என்று எழுதப்போகிறார்களோ? 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...14 comments:

Yoganathan.N said...

//ஆனால் முன்பு போல வெறித்தனமான ஆக்ரோஷமான ரசிகர்களை காண முடியவில்லை. வன்முறைகளும் குறைவாகவே இருக்கின்றன.//
இது போன்ற விசயங்கள் முற்றிலும் மறைய வேண்டும்.
இல்லையேல், பெரிய நடிகர்களின் படங்கள் Family Audience-இன் ஆதரவை இழக்கக் கூடும். எனது கருத்து.

Unknown said...

விருதுநகரா நீங்க?

பாலா said...

@yognanathan N

//Family Audience-இன் ஆதரவை இழக்கக் கூடும்.

ரஜினி விஷயத்தில் அப்படி நடக்கவில்லை என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.

பாலா said...

@ முகிலன்

ஆமா தலைவா...

எப்பூடி.. said...

நீங்க பார்த்த ரஜினியின் முதல்ப்படமும் மனிதனா ? என்னங்க இதிலையும் நானும் நீங்களும் ஒண்ணுதானா? படத்தில் ரஜினியின் அக்காவின் மகளின் வீட்டில் பிறந்தநாளில் பொலிசாரும் தேடப்படும் குற்றவாளி ரஜினியும் (மறைந்து) இருக்கும் காட்சியில் ரஜினி பிடிபட்டுவிடுவாரோ என பயந்து காதுகளை பொத்தியபடி கதிரைகளுக்கு பின்னால் ஒழிந்தது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கு. அப்போ எனக்கு வயது ஐந்து.

r.v.saravanan said...

ரஜினி விஷயத்தில் அப்படி நடக்கவில்லை என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.

correct

பாலா said...

@ எப்பூடி

:)) என்ன ஒரு ஒற்றுமை?

மனிதன் என்றவுடன் எனக்கு அந்த காட்சிதான் ஞாபகம் வரும். (இதிலும் ஒற்றுமை)

அந்த படம் பார்க்கும்போது எனக்கு வயது நாலு. (மிஸ்ஸாயிடுச்சே)

நன்றி தலைவரே...

பாலா said...

@ rv saravanan

Thank you for your comment :)

ஆர்வா said...

ம்ம்ம்ம்ம்.. எல்லா படங்களுமே.. ச்சும்ம்ம்ம்மாஅ அதிருதுல்ல

பாலா said...

நன்றி கவிதை காதலரே...

விமலன் said...

வன்முறையை தூண்டும் படங்களை
எதிர்க்கும் உங்களது மனோநிலை மிகவும் பிடித்துப் போகிறது சார்.

Rocket Ranga said...

First of all, I apologize for writing this comment nearly after 13 months you have posted this blog. I just read your blog today and I am forced to write this comment bcoz of your observation that SA Chandrasekar had said something against Rajini during Sachin Chandramuki release time (Also, read some of your other blogs where you have mentioned that Vijay has insulted Rajini).

The truth is neither Vijay nor SAC had said anything against Rajini.

Its a well known fact that Rajini had requested cini people informally not to release any movie during his movie release because he is doing a movie only every 3 or 4 years. Its a different matter altogether that nobody had the guts to release their movie alongside Rajini's.

With Sachin, when the movie's official announcement was made, it was announced that the movie will be released on April 14. Vijay really had nothing to do with the movie releasing on the same day as Chandramuki. When asked about his movie releasing along side Rajini, I remember him saying its the producer's call to decide the release date.

But, it is the giant-sized ego of Rajini fans that made them think that Vijay had insulted Rajini by releasing Sachin along Chandramuki. From then on, all Rajini fans turned against Vijay and started supporting Ajith.

You have good writing style and I hope u will write about facts in the future and not tailor truth to suit your needs.

Thanks.

பாலா said...

லேட்டாக இருந்தாலும் கமெண்ட் போட்டதற்கு என் நன்றிகள். சந்திரமுகியுடன் சச்சின் வெளிவந்ததால் ரசிகர்களுக்கு அவரை பிடிக்காமல் போனது என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், சந்திரமுகி ஆடியோ ரிலீசில் ரஜினி சொன்னது, "நான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் குதிரை. விழுந்தாலும், மறுபடியும் எழுந்து ஓடி விடுவேன்." (இது பாபா தோல்வியை சம்பந்தப்படுத்தி ரஜினி சொன்னது).

பிறகு சச்சின் ஆடியோ ரிலீசில் விஜய்யின் தந்தை ஏஸ்ஏசி அவர்கள் பேசியது, "விஜய் குதிரை அல்ல. யானை. யானை விழுந்தாலும் குதிரை உயரத்துக்கு இருக்கும்." இது சந்திரமுகியுடன் சச்சின் வெளிவருவதை சம்பந்தபடுத்தி அவர் பேசியது. இதுதான் ரசிகர்களை ஆத்திரப்படுத்தி விட்டது.

பாலா said...

விஜய் எங்கே வளர்ந்து ரஜினியை விட பெரிய ஆள் ஆகி விடுவாரோ என்ற பயம் எந்த ரஜினி ரசிகனுக்கும் கிடையாது. சொல்லப்போனால் ஆரம்பத்தில் அஜீத் மீதுதான் கடுப்பில் இருந்தனர். பின் அஜீத் ரஜினி மீது அதிக ஈடுபாடு காட்ட, அந்த வெறுப்பு மறைந்தது. ஆனால் அதே சமயம் விஜய் அவர்கள் தொடர்ந்து தன்னை ரஜினி ரசிகனாக முன்னிறுத்தி, ஒரு கட்டத்தில் தான் ரஜினியையே முந்திவிட்டதாக எண்ணிக்கொண்டு, நடவடிக்கைகளில் இறங்கினார். அவரது ரசிகர்களும் அதே போல சில செய்கைகளை செய்யத்தொடங்கினார். இதுவே வெறுப்பை வரவழைக்க காரணம். விஜய்யை குறை சொல்லவோ, இல்லை ரஜினியை தூக்கி பிடிக்கவோ நான் உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Related Posts Plugin for WordPress, Blogger...