"அதானே பார்த்தேன். என்னடா இன்னும் எழுதலயே? அப்படின்னு நெனச்சோம், இதோ எழுதிட்டானே." என்று சலித்துக்கொள்கிறீர்களா? என்னங்க பண்றது? இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். மீறக்கூடாது. சரி விஷயத்துக்கு வர்றேன். எந்திரன் பற்றி எல்லோரும் எழுதிவிட்டார்கள். கதை ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கும். என்ன எழுதுவது என்று யோசித்த போது சில சொந்த கருத்துக்கள் அனுபவங்களை எழுதலாம் என்று தோன்றியது. எழுதுகிறேன். நேற்றே எழுதலாம் என்று நினைத்தேன். ஹி ஹி... நேற்றே இரண்டு தடவை படத்தை பார்த்ததால் எழுத முடியவில்லை.
அதிகாலயிலேயே கிளம்பி மதுரைக்கு சென்று விட்டோம். மதுரை என்றாலே ரஜினி பட ரிலீஸ் என்றால் சில பல காட்சிகள் அரங்கேறும். அதை பார்க்க நேர்ந்தது. ஒரு நபர் முகம் முழுவதும் ரத்த களரியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தார். அடி வயிற்றில் பீதி கிளம்பியது. "அய்யய்யோ படத்தை முழுவதும் பார்க்க விடமாட்டார்கள் போலிருக்கே?" என்று. நல்லவேளை எங்கள் காட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. வழக்கமாக ரஜினி படங்களுக்கே உரிய ஆர்ப்பாட்டம், கூச்சல் எல்லாம் இருந்தது. எல்லாம் கொஞ்ச நேரம்தான். பிறகு எல்லோரும் படத்தை கவனிக்க தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு காட்சி முடிவிலும் கரவொலி விண்ணை பிளந்தது. வீம்புக்கு கத்தவேண்டும் என்று கத்தவில்லை, மனதார அடடா! என்று கைதட்டியவர்களே அதிகம். எங்கள் ஊரில் தியேட்டரில் முதல்நாளில் பெண்களை பார்ப்பது அரிது. ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சிலர் குடும்பத்துடன் வந்தனர். அவர்களுடன் வந்திருந்த குழந்தைகள் படத்தை வெகுவாக விரும்பினார்கள்.
படத்தைப்பற்றி என் கருத்துக்கள்...
படம் முழுவதும் வியாபித்திருப்பவர் சுஜாதா..சுஜாதா..சுஜாதா...
தமிழ் சினிமா சுஜாதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் திணறப்போவது சர்வ நிச்சயம். படம் முழுவதும் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அக்கிலிஸ்-ஆமை முரண்கூற்று, பிபோனாகி நம்பர், பிரைம் நம்பர், மின் காந்த அலைகள் என்று ஒரே சுஜாதா மயம்தான். ஒரு காட்சியில் போட்டோ பிளாஷ் அடித்தவுடன் ரோபோ திணறும். இதை பின்னர் சாமர்த்தியமாக பயன்படுத்தி இருப்பார்கள். வில்லன் ரோபோ(க்கள்) மாஸ்டர் கிளைண்ட் அடிப்படையில் இயங்குவது. வைரஸ் பிரோகிராம் எழுதி அவற்றை செயலிழக்க வைப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இளமையாக இருக்கிறார். மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவி ஒரு வசனம் பேசுவார், "சரியான வில்லன் மூஞ்சி" என்று. தலைவர் வில்லனாக நடித்தால் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறார். சந்திரமுகியில் கடைசியில் வந்த வேட்டையன் எல்லா கவனத்தையும் ஈர்த்தமாதிரி. ஐஸ்வர்யா காதலை ஏற்கமுடியாது, எரேஸ் பன்னிடு என்று சொல்லும்போது, தலையை தொங்கப்போடும் போது சிட்டி ரோபோ மீது நமக்கே பரிதாபம் வந்துவிடுகிறது. ஐஸுக்கு வயதாகிவிட்டது என்று சொல்கிறார்கள். மருத்துவமனையில் ரஜினி பிரசவம் பார்க்கும் முன், ஒரு லேடி டாக்டரிடம் பேசிக்கொண்டு வருவார்கள். அவருக்கும் ஐஸ்வர்யா வயதுதான் இருக்கும். அப்போது தெரியும் ஐஸ் எவ்வளவு இளமையாக இருக்கிறார் என்று. ரஜினி அவரை கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் தியேட்டரே "கபர்தார்!!" என்று கத்துகிறது... (ரஜினி சொன்னது என்பதால். பலருக்கு அதன் அர்த்தமே தெரியாது)
டெக்னிசியன்களின் கடும் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. படத்தில் தேவை இல்லாத காட்சிகள் என்று நாம் நினைப்பதெல்லாம் (கொசு, தீவிபத்து) கண்டிப்பாக குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டதை போல இருக்கிறது. இவை எல்லாம் இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளும் படத்தை ரசிக்க வேண்டும் என்றால் இவை எல்லாம் தேவைதான். அதே போல கலாபவன் மணி, ஹனீபா இல்லாமல் இருந்தால் கேரளா மக்களுக்கு ஒரு அந்நிய படத்தை பார்க்கும் உணர்வு ஏற்படும் என்பதாலேயே சேர்க்கபட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அடித்து சொல்கிறேன் இவ்வளவு கம்மி செலவில் இத்தனை பிரமாண்டமாக ஒரு படத்தை ஹாலிவூட்டில் கூட எடுக்க முடியாது. ஹாட்ஸ் ஆப் டு சங்கர். நம்ப முடியவில்லையா? படத்தை பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.
பி.கு: இது முற்றிலும் நிஜம். மதுரையில் நான் படம் பார்த்துக் கொண்டிருந்த போது இடைவேளையில் ஜாய் ஆலுக்காஸ் விளம்பரம் போட்டார்கள் (நடிகர் விஜய் வருவாரே..). பொதுவாக இம்மாதிரியான நேரத்தில் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் நடந்ததே வேறு. ஒட்டுமொத்த தியேட்டரே எழுந்து வசை பாடி தீர்த்து விட்டார்கள். எனக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. தியேட்டர் முழுக்க இருந்தது ரஜினி ரசிகர்கள். விஜய் கவனமாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனம் பாஸ்...
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
27 comments:
good sharing vaththiyare...!
//இவ்வளவு கம்மி செலவில் இத்தனை பிரமாண்டமாக ஒரு படத்தை ஹாலிவூட்டில் கூட எடுக்க முடியாது//
உண்மைதான் 150 கோடியில் ஷங்கர் காட்டிய பிரம்மாண்டம் அதிசயிக்கத்தக்கது.
கடைசியாய் ஒருவரை பற்றி சொன்னீர்களே, யாரது.... ஆ...ஆ... விஜய், ஆமா அவரு யாரு?
Bala Sir,
You only remembered Sujatha related to this film....
These poor peoples dont even shown his photo or given thanks to the legend.(Sujatha)
Thx for remembering him:)
சுஜாதா இல்லாமல் ஷங்கர் இல்லை ..
அப்பறம் இதற்க்கெல்லாம் அசரமாட்டார் thalapathi ...
//இவ்வளவு கம்மி செலவில் இத்தனை பிரமாண்டமாக ஒரு படத்தை ஹாலிவூட்டில் கூட எடுக்க முடியாது
)): "கம்மி செலவில் " && "பிரமாண்டம்
// தலைவர் வில்லனாக நடித்தால் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறார்
உண்மை , அரிமா அரிமா பாடல் ரஜினியின் ஸ்டைலுக்காகவே பட்டைய கிளப்ப போகிறது
@மதுரை சரவணன்
Thanks nanbare...
@எப்பூடி..
//கடைசியாய் ஒருவரை பற்றி சொன்னீர்களே, யாரது.... ஆ...ஆ... விஜய், ஆமா அவரு யாரு?
ஓ அவ்ரா? கொஞ்ச நாளக்கு முன்னாடி அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்ப அடுத்த புரட்சி தலைவருன்னு சொல்றாரு. இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த ஐ நா சபை தலைவர்ன்னு கூட சொல்வாறு..
@ Ramesh
Thank you very much.
@ "ராஜா"
வருகைக்கு நன்றி நண்பரே...
தலைவர் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இளமையாக இருக்கிறார்.
தமிழ் சினிமா சுஜாதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் திணறப்போவது சர்வ நிச்சயம்.
அடித்து சொல்கிறேன் இவ்வளவு கம்மி செலவில் இத்தனை பிரமாண்டமாக ஒரு படத்தை ஹாலிவூட்டில் கூட எடுக்க முடியாது. ஹாட்ஸ் ஆப் டு சங்கர்.
நல்லா எழுதியிருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்
ரஜினி படத்தை மதுரையில் பார்ப்பது போன்ற கொண்டாட்டமான விசயம் வேறு எதுவும் கிடையாது!
//ஓ அவ்ரா? கொஞ்ச நாளக்கு முன்னாடி அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்ப அடுத்த புரட்சி தலைவருன்னு சொல்றாரு. இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த ஐ நா சபை தலைவர்ன்னு கூட சொல்வாறு..//
அந்த பயபுள்ளயா? ஓகே ஓகே, ஆனா அவருக்கு நைனா சபைதானே தெரியுமின்னு நினைச்சன், ஐநா சபையும் தெரியுமா? பொதறிவில முன்னேறிட்டார் போல!
@ r.v.saravanan
நன்றி நண்பரே...
@ Mohan
அடிதடி ஏதாவது வந்து விடுமோ என்று பயமாக வேறு இருந்தது...
@ எப்பூடி..
எப்போ அவருக்கு டாக்-டர்ர்ர் பட்டம் கொடுத்தாங்களோ அப்பவே முன்னேறிட்டார்...
இன்னும் பார்க்கவில்லை. மலேசியாவில் சக்கை போடு போடுகிறது. :)
dai first nee muthalil unnidam irukkum alukkai neegki vittu aduthavanai patti pesu, vijay patti pesa unakku enna arukathai irukkuda ethuna oru blog aarambichi ethavathavathu unaka istathukku eluthuna unna methavi solluvangala? unna un theruva vitta evanukkavathu theriyumada? nee vijay kalil irukkum thoosiku vilai peramata neeyelam pesavanthutiya? konjam adagi vaasi ok
@Yoganathan N
வருகைக்கு நன்றி தல...
@vijay
விஜய் என்ற பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ? இல்லை விஜய் ரசிகர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களா? திரைக்குப்பின்னால் இருந்து பேசாமல் நேரடியாகவே பேசலாமே? நான் கால்தூசிக்கு கூட சமானம் கிடையாதுதான். ஏனென்றால் பொதுவில் பேசும்போது “டேய்” போட்டு பேசும் நாகரீகம் எல்லாம் எனக்கு கிடயாது.
hello unakku mattum naakareekam therinthirukiratha? uanku sampatham( theriyathavan) illatha oruvarai patti kindal pannuvathuthan oru manithanin naakareekama?
Valkai enpathu oru vattam da , intaiku jeikiravan naalai thopan, intaikum thopavan naalaiku jeipan athai mattum purinthukol.
unnai ketka aal illai entu enna vendumanalum pesathe ok
Naan ingu oru sila madaiyarkalai pola aduthavanai kurai sollavillai. Rajini Sir, Kamal Sir, Vijay,Ajith , Surya ellarum avaravar ulaipai koduthathal than intaiku intha idathil irukirarkal. Yaarum yaraiyum kurai sollavendam athaithan sollukiran.
கடவுள்: அஜித் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
அஜித் : இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க !!…
கடவுள்:அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
அஜித் : அப்ப என் அடுத்த படத்தகுறஞ்சது 10 நாள் ஆவது ஓட வைங்க……..
கடவுள்: அமெரிக்காவுக்குரோடு சிங்கிளா, டபுளா…
hyio!!! hyio !!!- Kozhi Thalai rasigarkaluku ....
கையில கிடைச்சா செத்தான் சிம்புவின் ஆவேசம்!
பெரிய நடிகர்கள் செய்தால் அர்ப்பணிப்பு. அதுவே அறிமுகமாகிறவர்கள் செய்தால் ஆர்வக் கோளாறு. திரையுலகில் எல்லா விஷயத்திற்கும் இதே அளவுகோல்தான். இதோ இரண்டு 'அர்ப்பணிப்புகள்' நம் கண்ணெதிரே.
மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற எல்லா பாடல்களையும் கமலே எழுதிவிட்டார். டைரக்டர்களில் பேரரசு உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களுக்கு தாங்களே பாடல்களை எழுதிவிடுகிறார்கள். பாடலாசிரியர்கள் சங்கம் பரவால்லன்னு விடுறதாலதான் இப்படியெல்லாம் நடக்குதோ என்னவோ? போகட்டும்... கமல்ஹாசனை தொடர்ந்து இப்போது சிம்புவும் பாடல் எழுத வந்துவிட்டார்.
இவரும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து விட்டால் மெட்டு ஹிட்டாகும். ஹிட் துட்டாகும் என்பது ஊர் உலகமே அறிந்த நல்ல விஷயம்தான். இவரது இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சிம்பு இப்போது ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். அதன் பல்லவியை கேட்டால் அப்படியே ஆடிப் போயிருவீங்க!
எவன்டி உன்னை பெத்தான், பெத்தாள்...
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
இப்படி போவுது பாட்டு. படம் வந்தால் ஊரே ஒண்ணு கூடி உரல் இடிக்கும்னு இப்பவே ஆரூடம் சொல்லுது கோடம்பாக்கம்.
evan
ali asitha & sombu alaparaikal sangam
//uanku sampatham( theriyathavan) illatha oruvarai patti kindal pannuvathuthan oru manithanin naakareekama?
சம்பந்தம் இல்லாதவரா? போங்க பாஸ் ஒவ்வொரு படமும் நூறு ரூபா கொடுத்து பாக்குரோம்ல ... அந்த நூறு ரூபாய்க்கு படத்துல வொர்த்தா ஏதாவது இருந்தா நாங்க ஏன் இவர ஓட்ட போறோம்...
// Valkai enpathu oru vattam da , intaiku jeikiravan naalai thopan, intaikum thopavan naalaiku jeipan athai mattum purinthukol.
யோவ் கொலவெறிய ஏத்தாத ... படத்துலதான் இம்ச பண்றீங்கன்னா .. இங்க வந்துமா?
// unnai ketka aal illai entu enna vendumanalum pesathe ஓகே
கேட்க ஆள் இல்லாமல் அவர் சுறா மாதிரி எப்படி வேணுமானாலும் படம் எடுக்கும்வரை நாங்களும் எப்படி வேண்டுமானாலும் அவரை ஓட்டுவோம்
//Naan ingu oru sila madaiyarkalai pola aduthavanai kurai சொல்லவில்லை
ஆமா இவரு அப்படியே உலக படமா எடுத்து தமிழ்நாட்டோட பெருமையை உலகம் முழுக்க பரப்பிக்கிட்டு இருக்காரு ... இவர நாங்க திட்டி அவரை அவமானபடுத்தி விட்டோம்... ஊரே அசிங்கபடுத்துது...
போ போயி உன் உண்மையான பேரோட வந்து கம்மெண்ட் போடு...
@ movitha
அந்த காமெடியில அஜித்துன்னு இருக்கிற எடத்துல எல்லாம் விஜய் பேர போட்டா காமெடி உண்மையாகிடும்....
தைரியம் இருந்தால் உண்மையான பெயரோடு வந்து பின்னூட்டம் இடுங்கள்... இல்லனா நீங்க எழுதி இருக்கீங்களே "அலி"ன்னு அது வேற யாரும் இல்லை நீங்கதான்....
@ vijay
உங்க நாகரிகம் என்ன புல்லரிக்க வைக்குது. நான் நேரில் பார்த்த ஒரு காட்சியை பற்றி உண்மையாக எழுதினால் ஏன் இவ்வளவு கடுப்பாகிறீர்கள்? நான் உங்களுக்கு ரொம்ப வேண்டியவனோ? தூசுக்கு சமானம் அப்படின்னு சொல்றீங்க. தெரியாதவன பத்தி நீங்க பேசலாமா?
//Valkai enpathu oru vattam da , intaiku jeikiravan naalai thopan, intaikum thopavan naalaiku jeipan athai mattum purinthukol.
இப்படி பேசுறத சூப்பர் ஸ்டாரே நிறுத்திட்டார். திருந்துங்கப்பா.
@ movitha
நல்ல நகைச்சுவை சிரித்து மகிழ்ந்தேன். தப்பு கணக்கு போட்டுட்டீங்களே. அஜித்தை ஓட்டினா டென்சன் ஆவேன்னு பாத்தீங்களா? ஒரிஜினல் பெயரோடு வந்து பேசுங்கள்...
Ajith:- Imayamalaieil en Kodi Paranthal Unakenna?
Makkal:- Nalla Paaruda Athu Un Komanam.
Ethu eppudi bala ????
Eyarai Eyarai Entu Ketkondu Erukireergal?
Neengal Kopapadavendum Entu Sollavillai Sakothara. Ethu Ellarum Sirikathan .
All Actors Remakes
thee â?? deewar
viduthalai â?? qurbani
thillumullu â?? golmaal
baasha â?? hum
muthu â?? thenmaavin kombathu
chandramukhi â?? manichitrathazhu
billa â?? don
moondru mugam â?? john jhonny janardhan
annamalai â?? khudgarz
mappillai â?? Athaikku Yammudu Ammaikku Moguduâ??
panakkaran â?? laawaris
veera â?? allari mogudu
velaikaran â?? namak halal
sattam oru iruttari â?? andhakanoon
malaiyur mambutiyan -gangwaa
Ram Robert Rahim â?? Amar Akbar Antony
* Naan Vazavaipen â?? Majboor
* Padikkathavan â?? Khuddar
* Mr. Bharath â?? Trisool
* Maaveeran â?? Mard
* Siva â?? Khoon Pasina
* Badsha â?? Outline of HUM
* Dharmathin Thalivan â?? Kasme Vaad
Ayan â?? some part from blood diamond
Vaarnam Ayaram is from hollywood movie
VTV â?? 500 days of summer
Kaka kaka â?? THE UNTOUCHABLES
@ movitha
உங்க தங்கிலீஷ படிச்சு மூளை குழம்பிடுச்சி. சில பரதேசிகள் நேராக திட்ட முடியாதவற்றை மறைமுகமாக திருட்டு அக்கவுண்ட்டில் வந்து திட்டி விட்டு போவார்கள் அதனால்தான். அது சரி அது என்ன அவ்வளவு பெரிய லிஸ்ட். உங்களுக்கு பொது அறிவு இருக்கிறது என்று நிருபிக்கவா?
@ movitha.
Ennadhan solla vareenga. Ellarume remake nadichirukangannu solreengala?
@movitha
தேவை இல்லாமல் இங்கே இந்த லிஸ்டை ஏன் சேர்த்தீர்கள்?
Ellaarum DOT ( fullstop) pottu mudippaanga..
Thalaivar DOT pottu aaramichuvechurukkaar...
Ini young hero nu sollitu irukkara buildup aasaamigal, thirundhanum !!!
Post a Comment