விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 21, 2010

விஜய்யை தாக்கும் ஆர்யா?


நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இந்த பதிவுலகத்துக்கு வந்த நாள் முதல் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு வகையான மாற்றுப்பார்வையோடு அணுகவேண்டும் என்று நாம் தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன மாற்றுப்பார்வை என்று கேட்கிறீர்களா? என்னடா தப்பு கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்பதுதான். அந்த வகையில் சென்ற வாரம் இரண்டாவது முறையாக (எந்திரன் ட்ரெய்லர் பார்க்கும் காரணத்துக்காக) பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்க சென்றேன். முதல் தடவை என் குருட்டு பார்வையில் தட்டுப்படாத சில விஷயங்கள் தற்போது பார்த்த மாற்றுப்பார்வையில் சிக்கியது.பார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், புனைவு என்கிற பெயரில் பல வக்கிரங்கள் மற்றும் ஆபாசங்கள் என படத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும்.... (அடடாடா... மாற்றுப்பார்வையாளருக்கே உரிய எழுத்து நடை வந்து விட்டது போலிருக்கே?) சில நாட்களுக்கு முன்னாள் இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விஷயமாக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது சம்பந்தமே இல்லாமல் விஜய் அவர்களை ஒரு டீவி நிகழ்ச்சியில் கலாய்த்தது மற்றும் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் கொதித்து எழுந்த பின்புதான் விஜயின் மாஸ்சை பார்த்து தமிழகமே மிரண்டது. சம்பந்தப்பட்ட டீவி சேனல் மன்னிப்பு தெரிவித்தாலும் விடாமல் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.


விஜய் ரசிகர்கள் யாரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்கவில்லையா? அல்லது கவனிக்க தவறி விட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஒரு மாற்றுப்பார்வையாளனின் கடமை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும் விஜய் அவர்களை சம்பந்தம் இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். முதலாவதாக படத்தில் சந்தானத்தின் சலூன் பெயர் தல-தளபதி. ஏன் தளபதி-தல என்று வைத்தால் குறைந்து போயி விடுவார்களா? தல – தளபதி சலூன் என்று பெயர் வைத்து விட்டு, போர்டில் மட்டுமே விஜய் படம் இருக்கும். சலூனில் திரும்பும் இடமெல்லாம் அஜித் படம்தான் ஒட்டப்பட்டிருக்கும். படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஆர்யாவின் தங்கையின் அறிமுகக்காட்சி. அதில் அவர் தங்கை தன் நண்பிகளிடம், “ஹேய் இப்ப இருக்குற தமிழ் ஹீரோக்களிலேயே அஜித்துக்குதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு பெர்சனாலிட்டி இருக்கு.” என்று சொல்வார். இதுவும் விஜய் டீவியில் ஒரு பெண் சொன்ன கருத்து போலத்தான். அஜித்துக்கு பெர்சனாலிட்டி இருக்கு என்று சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவருக்கு மட்டும்தான் இருக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவரது சமகால நடிகரான, விஜய் அவர்களுக்கு இல்லை என்று உள்நோக்கத்தோடே இந்த வசனத்தை அணுக வேண்டும்.


இன்னொரு காட்சியில் சந்தானம் ஆர்யா இருவரும் திரைப்படத்துக்கு செல்வார்கள். அந்த அரங்கில் வில்லு மற்றும் ஏகன் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அங்கிருக்கும் ரசிகர் கூட்டம், அஜித்தின் பேனருக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருப்பார்கள். விஜய் பேனர் அம்போவென இருக்கும். இது ஒரே நேரத்தில் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்தும் செயல். இதுவும் படத்தின் இயக்குனரான ராஜேஷின் காழ்புணர்ச்சியையே காட்டுகிறது. கடைசியில் இருவரும் எந்த படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் படம் ஓடிக்கொண்டிருக்கும் பகுதி நோக்கித்தான் செல்வார்கள். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி படத்திலும் அஜித் புகழ் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதே காட்சியில் அஜித்தின் ரசிகர்கள் ஸ்மார்ட்டாகவும், விஜய் ரசிகர் மொட்டை தலையுடனும் இருப்பார். உடனே சந்தானம் அவரிடம் உன் ஹேர்ஸ்டைல பார்த்தா ஜெய்சங்கர் ரசிகர்னு நெனச்சேன், நீ விஜய் ரசிகரா? என்று கேவலமாக கேட்பார். அதே போல வில்லு படத்தைப்பார்த்து சந்தானம், உங்க ஆள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று சொல்வார். இது வில்லு படம் தோல்வி அடைந்ததை குத்திக்காட்டுவதற்காக வேண்டுமென்றே வைக்கப்பட்ட வசனம். அஜித் ரசிகர்களிடம், உங்க அளவுக்கு அவுங்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) அறிவில்லை என்ற பொருள் படும்படி பேசுவார். 


படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அஜித்தின் அடிவருடியாகவே இருந்து விட்டு போகட்டும். அதற்காக ஊர்அறிந்த ஒரு மாஸ் நடிகரை கலாய்ப்பது கண்டனத்துக்குரியது. கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் என்கிற முறையில் என் கண்டனங்களை முதலில் பதிவு செய்கிறேன்.
இன்னும் பத்து படங்களை கூட தாண்டாத புது தயாரிப்பாளர் ஆர்யா அவர்களே, உங்களைப்போல பலபேரை சந்தித்து அவர்களை எல்லாம் புறந்தள்ளி, மேலே வந்தவர் எங்கள் தளபதி என்பதை மறவாதீர். இன்று நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் இளைய தளபதியின் தொண்டனாக என் கண்டனங்களை பதிவு பண்ணுகிறேன். அடுத்த படத்தின் தொடக்கத்தில் நீங்கள் மன்னிப்பு கோரினாலும் விடப்போவதில்லை. புறக்கணிப்போம் ஆர்யாவின் படங்களை...

டிஸ்க்:இந்த பதிவை  விஜய் அவர்களை கலாய்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

46 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா ஓட்டியிருக்கீங்க.. இந்த இடுகையை என்னோட பஸ்ல ஷேர் பண்ணியிருக்கேன்..நன்றி..:-))))

☼ வெயிலான் said...

அட விருதுநகர்லருந்தா..... உங்க மின்னஞ்சல் முகவரி வேணும் பாலா!

என்னோடது veyilaan.ramesh@gmail.com

Anonymous said...

//இந்த பதிவை விஜய் அவர்களை கலாய்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//

ரைட்டு.. நம்பிட்டோம் நாங்க :)

//கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் //

வேண்டாம்ணே.. அந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க, உங்க பிஞ்சு உடம்பு தாங்காதுண்ணே :)

Anbu said...

உங்க பதிவு அருமை அண்ணே..

விருதுநகரா..நீங்க..நான் சிவகாசி தான்...

Anonymous said...

Podanngoyyala... padatha pathu relaxeda poga sona.. ipdi ellam ezhuti ivaru popularity thedikararam, like news channels do.. vijay pathi sonathe periya vishayam.. ithule ivarukku thapa vera solitangalam..

DR.K.S.BALASUBRAMANIAN said...

பத்தவச்சிட்டீங்களே...பாஸ்....!

sakthi said...

இந்த மாற்றுக்கருத்து மேட்டர் நல்லாயிருக்குங்கோ!!!

பாலா said...

@ கார்த்திகைப் பாண்டியன்

தலைவரே உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி... அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு போங்க..

பாலா said...

@ ☼ வெயிலான்

அனுப்பியாச்சு தல... வருகைக்கு நன்றி...

பாலா said...

@ Balaji saravana

//ரைட்டு.. நம்பிட்டோம் நாங்க :)
தயவு செஞ்சு நம்புங்க ப்ளீஸ்.

//உங்க பிஞ்சு உடம்பு தாங்காதுண்ணே :)
எனக்கு ரிஸ்க் எடுக்குரதுன்னா ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

பாலா said...

@ அன்பு

ஆகா நெருங்கிட்டோம். நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு. அடிக்கடி வாங்க தலைவரே...

பாலா said...

@ பெயரில்லா

என்னோட நோக்கத்த புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீங்கதான் தல. பேர் சொன்ன தப்பில்லையே?

பாலா said...

@ drbalas

அய்யய்யோ நான் எங்க பத்த வச்சேன். விஜய் ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு, அவ்வளவுதான்.
நன்றி நண்பரே.

பாலா said...

@ sakthi


பதிவுலகம் வந்து நான் கத்துக்கிட்டது நண்பரே...
கருத்துக்கு மிக்க நன்றி...

க.பாலாசி said...

//பாலா கூறியது...
@ பெயரில்லா
என்னோட நோக்கத்த புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீங்கதான் தல.//

சரியான காமடிங்க... எல்லாத்தைவிடவும்...

shalini said...

enna oru naarathar velai ... vendame nanba .. matravargal adithu kolvathil enna santhosam ungaluku

ssk said...

இந்த கூட்டம் மலையாளிகளின் ஆட்டம். இங்கு இடம் கொடுத்தால் இப்படிதான் பண்ணுவான். மலையாள பார்பான் அஜீத்தை அவன் தூக்கி புகழவே செய்வான்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனக்கு ஒரு சந்தேகம். தளபதி எங்க ஆள் ரஜினி பேர், 'இளைய' தளபதி தான் விஜய்னு இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருக்கேன். எது சரி?

பாலா said...

@ க.பாலாசி

புரிஞ்சு போச்சா.... ஹா ஹா ஹா

பாலா said...

@ shalini


முதலிலேயே சொல்லி விட்டேன் ஒரு இதெல்லாம் ஒரு மாற்று பார்வையாளனின் கடமை என்று....
சரி வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க...

பாலா said...

@ ssk

ஆஹா... நீங்களும் என்ன மாதிரியே ஒரு மாற்று பார்வையாளன் போல இருக்கே? வாழ்த்துக்கள்...

பாலா said...

@ நாய்க்குட்டி மனசு

நண்பரே அப்ப தளபதி வந்த புதுசு. அதிலும் விஜய்க்கு இருபத்தி ஒரு வயசு. அதனால அவர் அப்போ இளைய தளபதி. நியாயமா பார்த்தா அவர் இப்போ தன் பெயர முதிய தளபதின்னுதான் வச்சுக்கணும். தளபதின்னு வச்சிக்கட்டும் என்ன கெட்டுட போகுது?

ruban said...

hello vijay rasigare , vijay appa padam yedukkum pothu mattum nadikkira hero vijay rasigara kattrangale athellam ennaga soldrathu hmm, vijay avanga appa antha maari pannithan undu vera yaarum panna mattanga, aana yenga thalaiku athu thevaye illa bcoz cine fieldla 75% yella actorum ajith fan tha theriyuma , thala thala than.

Anonymous said...

hello vijay rasigare , vijay appa padam yedukkum pothu mattum nadikkira hero vijay rasigara kattrangale athellam ennaga soldrathu hmm, vijay avanga appa antha maari pannithan undu vera yaarum panna mattanga, aana yenga thalaiku athu thevaye illa bcoz cine fieldla 75% yella actorum ajith fan tha theriyuma , thala thala than.

பாலா said...

@ ruban and @ பெயரில்லா


நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆளா இல்ல வேற வேறயா?
உணர்ச்சிகரமான அஜீத் ரசிகரா இருப்பீங்க போல இருக்கே?
ஒரே தடவை முழுசா இந்த பதிவ படிங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரசித்து சிரித்தேன். நன்றி.

Anonymous said...

//விஜயின் மாஸ்சை பார்த்து தமிழகமே மிரண்டது//

ஹி.. ஹி.. ஹி..ஹி

செம காமெடி.
இயக்குனர் ராஜேஷை விட நீங்கதான் ரொம்ப கலாய்கிறீங்க

Anonymous said...

seri ippo enna pannalamnu sollareenga? Dei inimela vijaya ottadheenga. Solliten seriya bossu? Vijay ottara alavuku avaroda padam odadhu.

Shu shu velai vettiya parungapa. 15 nimisham wastea pochi.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆனாலும் விஜயை இப்படியெல்லாம் ஓட்டக்கூடாது. அவரு அடுத்த பிளாப் தருனுமா வேண்டாமா...

பாலா said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@ பெயரில்லா

//Vijay ottara alavuku avaroda padam odadhu.


என்ன தலைவரே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க?

பாலா said...

@ ஜெகதீஸ்வரன்.

அப்போ அவர ஓட்டினா ஹிட் படம் கொடுத்துடுவாரா? அப்படின்னா அவரு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே கொடுத்திருக்கணும்

வருகைக்கு நன்றி...

Anonymous said...

hello boss sathyaraj padathula ajith otti irupangale vijaya periya nadiganu avana poi perumaya solvanunga athellam ungaluku theriyatha

Raji said...

/அந்த
வகையில் சென்ற வாரம்
இரண்டாவது முறையாக (எந்திரன்
ட்ரெய்லர் பார்க்கும்
காரணத்துக்காக) /

Unga nermai enaku romba pudichi iruku.

Anonymous said...

அப்பப்பா...யார் இந்த பெயரில்லாத பெயர் கொண்டவர்..தொரத்தொ தொரத்துனு....

ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்...விஜய் இப்பவும் அன்றுமலர்ந்த மலராக இளமையுடன்...இது யாருக்கும் கிட்டாத ஒரு வரம்...

"ராஜா" said...

தல இன்னொன்னு கவனிச்சீங்களா... சந்தானம் அஜித் ரசிகனிடம் உங்க படத்துக்கு எவ்ளோ கூட்டம் , கண்டிப்பா உங்க படம் ஹிட் ஆகிடும் என்று பிரமிப்பாய் கூறுவார் ... விஜய் ரசிகனிடம் ஏளனமாய் உங்க படம் கண்டிப்பா ஓடும் என்று கூறுவார் .. இந்த காட்சியிலேயே தெரிந்து விடும் இயக்குனரின் இரட்டை வேடம் .. நீங்கள் சொல்லுவதை போல ஆர்யா ரொம்ப குசும்பு பிடிச்சவர்தான் ... என்ன தைரியம் இருந்தா தளபதியவே ஓட்டுவாரு ... இதற்க்கு தளபதியின் ரசிகர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

ஏம்பா நீங்க விஜய் டிவிய மட்டும்தான் எதிர்பீர்களா? உதயநிதி என்றால் அடங்கி விடுவீர்களா? இதுதான் நீங்க சொல்லுற தளபதி மாஸா?

Yoganathan.N said...

//கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் என்கிற முறையில் என் கண்டனங்களை முதலில் பதிவு செய்கிறேன்.//
இன்னாது இது???

இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. சந்தானம் காமடியில் பிண்ணியிருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். கூடிய விரைவில் பார்க்க வேண்டும்.
உங்களது இந்த பதிவு படத்தைப் பார்க்க மேலும் தூண்டுகிறது. டபுள் ஓகே... :)

Yoganathan.N said...

//ஏம்பா நீங்க விஜய் டிவிய மட்டும்தான் எதிர்பீர்களா? உதயநிதி என்றால் அடங்கி விடுவீர்களா? இதுதான் நீங்க சொல்லுற தளபதி மாஸா?//
பதிவுலகில் கூட ஒரு சிலர் இன்னும் புறப்பட்டு வரவில்லையே... ஏன்???

பாலா said...

@ பெயரில்லா

நான் அஜித் ரசிகர்கள் பத்தி சொல்லவே இல்லையே? பெயருடனேயே வரலாமே?

பாலா said...

@ Raji

ஹி ஹி ஹி ...
வருகைக்கு நன்றி...

பாலா said...

@பெயரில்லா

நூத்துல ஒரு வார்த்தை.

பாலா said...

@ "ராஜா"

//ஏம்பா நீங்க விஜய் டிவிய மட்டும்தான் எதிர்பீர்களா? உதயநிதி என்றால் அடங்கி விடுவீர்களா? இதுதான் நீங்க சொல்லுற தளபதி மாஸா?

கவலைப்படாதீங்க, உதயநிதிய கவுக்குறதுக்கு இன்னொரு ஐடியா இருக்கு. குருவி பார்ட் 2 நடிச்சிட்டா போகுது.

பாலா said...

@ Yoganathan.N


// இன்னாது இது???

அவர் படம் நடிக்காம இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு. ஆகவே அவர் நடிக்காமல் இருக்கும் வரை நான் அவரது ரசிகன்.

Murugan Style said...

அடுத்த படத்தின் தொடக்கத்தில் நீங்கள் மன்னிப்பு கோரினாலும் விடப்போவதில்லை. புறக்கணிப்போம் ஆர்யாவின் படங்களை...

என்ன கொடுமை சார் இது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்களே அது இதுதானோ.

ட்ரைலர் பாக்க தியேட்டர் போற ஒரே ஆளு நீங்கதான்.

பாலா said...

// என்ன கொடுமை சார் இது

அடுத்த வாரம் ஒளிபரப்பான நீயா நானாவில் கோபிநாத் மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் திட்டினார்களே அதன் நீட்சிதான் இது.

//ட்ரைலர் பாக்க தியேட்டர் போற ஒரே ஆளு

அட நீங்க வேற... சில பேர் போஸ்டர் பாக்குறதுக்கு கூட தியேட்டர் போறாங்கன்னா பாத்துக்கோங்க...

Unknown said...

unnamaathiri patta pichai kara naikal irupathalthan innum tamilakam muneramal irukuthu . entaiku oru tamilana tamilan kidal pannamal irukeengaleo anthaikuthan urupadum. nee ennavo periya arivaali mayiru maathiri eluthirukiratha ninaipau? hehe itha paatha evanukum kopamum varathu , siripumvum varathu unmela parithapam than varuthu hehehe

Related Posts Plugin for WordPress, Blogger...