விமர்சன வித்தகர்கள்
பதிவுலகம் பிரபலமாக தொடங்கியதில் இருந்து, எந்த ஒரு திரைப்படத்தையும் மிக வெளிப்படையாக விமர்சிக்கும் பாங்கு அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு வெளிப்படை என்றால் மிக மிக கேவலமாக திட்டும் அளவுக்கு. இதில் ஒரு வித நேர்மை இருந்தால் கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட வெறுப்பே தெரிகிறது. ஒரு சில நண்பர்கள், தான் ரஃப் அண்ட் டஃப் ஆள் என்றும், ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆட்கள் என்றும் புரிய வைக்க வேண்டும் என்று காட்டுவதற்காக சில கெட்ட வார்த்தைகளையும் அடித்து விடுகிறார்கள். இதை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால் இவை முகம் சுளிக்க வைக்கும் என்பது உண்மை. "கடவுள் இல்லை", என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட "இருந்தா நல்லா இருக்கும்" என்று சொல்வதை ஏற்றுக்கொள்வது, அந்த கருத்து சொல்லப்பட்ட விதத்தாலேயே. விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அதே போல சில பிரபல, நல்ல பதிவர்கள் படத்தின் கதையையே விமர்சனம் என்ற பெயரில் எழுதி விடுவதால், சமீப காலத்தில் வரும் மொக்கை படங்களில் உள்ள ஒரு சில சுவாரசியங்களும் படம் பார்க்கும்போது காணாமல் போய் விடுகிறது. இதனாலேயே இப்போதெல்லாம் எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை,
யூரோ கோப்பை
மேட்ச் பிக்சிங் என்று சொல்கிறார்கள். ஒரு தலைப்பட்ச முடிவுகள் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் சுவாரசியமாகவே உள்ளது. வழக்கம்போல எனது அபிமான ஜெர்மனி அரையிறுதியில் தோல்வியுற்றது. இந்த அணி இறுதி போட்டிக்கு வந்தால் ஸ்பெயினுக்கு சரியான சவாலாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அரையிறுதியில் இத்தாலியின் ஆட்டம் மிக அருமை. சொல்லப்போனால் ஸ்பெயினுக்கு இப்போதுதான் மிக கடினமான தருணம். இரண்டு அணிகளில் இத்தாலி அணியே சிறந்த அணியாக இருக்கிறது. பார்க்கலாம். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்களை பார்த்த போது அய்யோ பாவம் என்றே தோன்றியது. அப்புறம் ஆட்டம் தொடங்கும் முன் இரண்டு அணிகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்படும் நேரத்தில், ஒவ்வொரு வீரருடனும் ஒரு குழந்தை கை கோர்த்து வருகிறது. எங்கிருந்து புடிக்கிறீங்கப்பா?" என்ன அழகு....ச்சோ சுவீட்!!" என்று சொல்லத்தோன்றுகிறது.
மாட்டிக்கொண்டாள் மணிமேகலை
தொடர்ந்து பதிவுலகில் பல்வேறு பதிவுகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இந்நேரம் என்ன நினைத்துக்கொண்டு இந்த பத்தியை படிக்க தொடங்குவீர்கள் என்று எனக்கு தெரியும். அதுதான் இல்லை. இப்போது நான் சொல்லப்போவது அது அல்ல. மணிமேகலை என்ற பெண்ணை பற்றியும் அல்ல. சும்மா ரைமீங்காக வைத்த தலைப்பு அவ்வளவே.
"பெண்கள் பெரும்பாலும் தாங்கள் சைட் அடிக்கப்படுவதை விரும்புவார்கள். அதேபோல அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஆண்களை சைட் அடிப்பதிலும் கில்லாடிகள். அவர்கள் சைட் அடிக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்கவே முடியாது." இந்த அரிய தத்துவத்தை சொன்னவன், பள்ளிப்பருவத்திலேயே பல பெண்களை சைட் அடித்தும், பெண்களால் சைட் அடிக்கப்பட்டேன் என்று சொல்லிக்கொண்டும் திரிந்த அருமை நண்பன் ஒருவன். அன்றில் இருந்து இன்றுவரை எந்த ஒரு பெண்ணையுமே கையும் களவுமாக சாரி கண்ணும் சைட்டுமாக பிடித்ததில்லை. ஆனால் சென்ற வாரம் ஒரு பெண் பேருந்தில் பிடிபட்டாள். பேருந்தில் ஓரளவுக்கு கூட்டம். மாலை பள்ளி கல்லூரிகள் விடும் நேரம் என்பதால் பெரும்பாலும் யூனிஃபார்ம்களே தென்பட்டன.
நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த ஒரு பாலிடெக்னிக் மாணவி குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு. நீங்க தப்பா நினைச்சா மாதிரிதான் நானும் நினைச்சேன். ஆனால் அவள் பார்வை ஊடுருவியது அருகில் கும்பலாக நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாணவர் கூட்டத்தை. ஒருவேளை அவளுடைய ஆள் அந்த கூட்டத்துக்குள் இருக்கிறானோ? என்னவோ? என்று நானும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல தலையை மாற்றி மாற்றி அந்த கும்பலையும் அவளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்(விளங்கிடும்....). பசங்க குழுவில் யாரும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. நான் கவனிப்பதை பார்த்ததும் அவள் முகத்தில் வந்ததே பாருங்கள் வெட்கம்.அவளது கண்கள் அலைபாய்ந்து அடங்கவே 5 நிமிடம் ஆனது. "ஹா ஹா மாட்டிக்கொண்டாயா?" என்று என்மனதில் நினைத்துக்கொண்டேன். இந்த சம்பவமே இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்(மறுபடியும் விளங்கிடும்...) என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பேஸ் புக்கில் ரசித்தது.
பேஸ்புக்கில் அவ்வப்போது உலாவுவது உண்டு. அந்த நேரத்தில் கண்ணில் தென்படும் சில பகிர்வுகள் களுக்கென்று சிரிக்க வைத்து விடும். சில நேரம் நம்மை அறியாமல் புன்னைகைக்க வைக்கும். அப்படிபட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர் போலிருக்கு....
என்னே கற்பனை வளம்......வடிவேலு முகம் எல்லாவற்றுக்குமே சரிப்பட்டு வருதே?
இதுவும் ஒருவகையில் உண்மைதானே..... ரஜினி ரசிகர்களே?
இந்த போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள்தான் கேட்பார்கள் போலிருக்கிறது. பதில் அதைவிட அறிவுப்பூர்வமாக இருக்கிறது.....
புன்னகைக்காமல் இருக்க முடியவில்லையே....
இறுதியில் அது நடந்தே விட்டது..... கடந்த மாதம் என்னுடைய பிறந்த தினமான ஜூன் 10 அன்றே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 12இல் திருமணம் என்று நாளும் குறித்து விட்டாயிற்று. இது குறித்து நண்பர்களை வரவேற்று தனி பதிவில் வெளியிடுகிறேன். குடும்பஸ்தன் ஆகும் முன்னரே எத்தனை கட்டளைகள் கண்டிஷன்கள்? இப்போ புரியுதா? பதிவுலகத்துல ஏன் இத்தனை நாளாய் தலை காட்ட முடியவில்லை என்று?
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க நண்பர்களே....
58 comments:
ஆ இன்னும் கல்யாணமே ஆகலையா? நல்லா இருக்கு நியாயம்... அதான் தலைப்பைச் சொன்னேன்.
திருமண வாழ்த்துகள் பாலா.
திருமணத்துக்கு வாழ்த்துக்கள் தலைவரே... அப்போ இனிமே கவர்ச்சிக்கன்னி தொடர் அவ்வளோதானா?
நாங்க ஒருதடவ ஒருகோடி உங்களுக்கே - ஆர்யாவும் சந்தானமும் (முதல் பாகம்) பதிவுல போட்டிருந்த முதல் கேள்வி, அது கூட உண்மையிலேயே ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விதான். தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் எவ்வளவோ தேவல.
படங்கள் ரசிக்க வைத்தன
அட்வான்ஸ் திருமண நல் வாழ்த்துக்கள் பாலா
இந்த வீடியோவ பாருங்க, இந்த ஆள பாராட்டாம இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=dsw3TILXXBk
@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிஉண்மையிலேயே ஒரு முறை கூட ஆகல மேடம். வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
@Dr. Butti Paul
கவலைப்படாதீங்க நண்பரே. கவர்ச்சி கன்னிக்கு ஒண்ணும் ஆகாது. கண்டிப்பாக வருவா. பகிர்வுக்கு நன்றி நண்பரே
@r.v.saravanan
ரொம்ப நன்றி சார். கூடிய விரைவில் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்
மனமார்ந்த வாழ்த்துகள்.
அப்போ த்ரிஷாவோட வாழ்க்கை?
திருமணத்துக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்
கரைக்ட் உள்ள அறிவாளியா போறவன் வெளிய முட்டாளா திரும்பி வருகிறான்...!
இது எல்லாருக்கும் பொருந்தும்...!
@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி சார்
@கதிரவன்
அந்த பொண்ணு என்னை விட மூத்தவராம். இப்போதான் தெரிஞ்சது
@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நன்றிங்க
@வீடு சுரேஸ்குமார்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி நண்பரே
கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதா? ஆகா.... மாட்டிக்கிட்டிங்களா?
வாழ்த்துக்கள் பாலா சார்....
முதலில் திருமண வாழ்த்துக்கள் பாஸ்
துப்பாக்கி போஸ்டர் செம செம .............சூப்பர் ஹி.ஹி.ஹி.ஹி...........
நானும் பல இடங்களில் பொண்ணுங்க சைட் அடிப்பதை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முயற்சி செய்ததுண்டு சிலர் மாட்டியிருக்கிறாங்க ஆனா தாங்க சைட் அடித்தோம் என்று ஒத்துகொள்ள மாட்டாங்க
இது பற்றி நிறைய மேட்டர் இருக்கு சந்தர்ப்பம் அமைந்தால் ஒரு பதிவு போடுகின்றேன்
வெட்டி அரட்டை இம்முறையும் ரசிக்க வைத்தது. இன்னும் கல்யாணம் ஆகாத கொயந்தைப் பையன் தானா பாலா? அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள். கல்யாணம் எந்த ஊர்ல?
@K.s.s.Rajh
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்களிடம் இருந்து இந்த மாதிரியான இன்னொரு பதிவை எதிர்பார்க்கிறேன். நமக்கு அதில் எல்லாம் அனுபவம் குறைவு.
@பா.கணேஷ்
ஆமாம் சார் இப்போதும் குழந்தைதான் இனி மேலும் குழந்தைதான். ஹி ஹி வாழ்த்துக்கு நன்றி சார். திருமணம் சொந்த ஊரான விருதுநகரில்.
தலைப்போட சஸ்பென்ஸ்.. கடைசியில் கல்யாண மேட்டர போட்டு உடைச்சிட்டீங்க.
வாழ்க்கை படகோட்ட போகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். [ இறங்கி தள்ளிர முடியாது..!!]
நீங்கள் பேஸ் புக்கில் ரசித்தது. அதான் நானும் உங்களுக்கு சொல்கிறேன் வேண்டாம் கை எழுத்து போடாத வேண்டாம் வேண்டாம்
வாழ்த்துக்கள் பாலா, திருமணபந்தத்தில் இணையப்போவதற்கு, இனி நேரம் கிடைப்பது கடினம்தான், ஆனாலும் அதிலும் ஒரு தனி சந்தோசம் இருக்கும், மீண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் பாலா. பத்திரிக்கை அனுப்புங்கள். திருமணத்திற்கு வருகிறோம். மகிழ்ச்சி.
////எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை, ////
நல்ல முடிவு ஏனென்றால் இதற்கு நீங்கள சொன்ன காரணத்தை ஏற்றுக் கொள்ளவதால்..
மாப்பிளைக்கு என் முற் கூட்டிய வாழ்த்துக்கள்... உங்கள் திருமண நாள் அன்று நான் எங்கு நிற்பேனோ தெரியாது அப்போது மன்னித்து விடுங்கள்..
வாழ்த்துகள் பாலா :-)
//Dr. Butti Paul said...
திருமணத்துக்கு வாழ்த்துக்கள் தலைவரே... அப்போ இனிமே கவர்ச்சிக்கன்னி தொடர் அவ்வளோதானா?//
ஹா ஹா
டீச்சர் பாலாவிற்கு பாடம் எடுக்க ஒரு டீச்சர் வந்துட்டாங்களா! :-) பாலா கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அப்ஸ்கான்ட் ஆகிட்டீங்களே.. கல்யாணத்துக்கு அப்புறம் வருவீங்களா? :-)
அதெல்லாம் சரி.. உங்க ஆளுக்கு தலைவரை பிடிக்குமா? இது பெரிய பிரச்சனை ஆச்சே! ஹி ஹி தலைவரை பிடிக்கவில்லை என்றாலும் பராவயில்லை, இளையவரை பிடிக்காமல் இருக்கணுமே ஹா ஹா
நிச்சயமாயிடுச்சா.........? தலைவரு இனி பம்மிடுவாரு..... தெளிஞ்சு வாங்க பாஸ்... இன்னொரு ரவுண்டு வருவோம்....!
\\நானும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல தலையை மாற்றி மாற்றி அந்த கும்பலையும் அவளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.\\ ஆஹா...... அருமையான உதாரணம்!!
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்-01-07-2012
சென்னை: பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவர்களுக்கான, ரேங்க் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டார். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உண்டு என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=14472&cat=1
போன வாரம் ஒரு B.Sc. Maths படிச்ச ஒருத்தி, "ஒரு நிமிடத்திற்கு 60 வினாடி என்றால் ஒரு மணிக்கு எத்தனை வினாடிகள்?" என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஆடியன்ஸ் போலுக்கு போயிட்டா. அதே மூஞ்சியை வச்சுகிட்டு Rs.3,20,000 ஜெயித்தும் விட்டாள். என்ன கொடுமை சார் இது..???? [போகும் போது அவ தங்கச்சி அழ வேறு செய்தாள், ஏனென்றால் இதே டபுளா கிடைக்கலியே என்ற காரணமாம்.]
\\ செப்டம்பர் 12இல் திருமணம் என்று நாளும் குறித்து விட்டாயிற்று.\\ கடவுள் மேல பார்த்த போட்டுட்டு தைரியமா இருங்க, வேறென்ன சொல்றது?!!
//எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை, // உங்களை நான் ஆமோதிக்கிறேன்
//விளங்கிடும்....// அதே தான் விளங்கிடும்....
தலைவர் பத்தின Creativity சூப்பர்
//பதிவுலகத்துல ஏன் இத்தனை நாளாய் தலை காட்ட முடியவில்லை என்று?//
ஹா ஹா வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
@கலாகுமரன்
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே
@mubarak kuwait
விதியை யாராலும் மாற்ற முடியாது நண்பரே
@இரவு வானம்
வாழ்த்துக்கு நன்றி நண்பரே. முடிந்தவரை இணையத்தில் இணைந்திருக்க முயற்சிக்கிறேன்
@Rathnavel Natarajan
நிச்சயமாக அனுப்புகிறேன் சார். இன்னும் பத்திரிக்கை பிரிண்ட் ஆகல.
@♔ம.தி.சுதா♔
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நண்பரே. உங்கள் அன்பும் ஆசியும் இருந்தாலே போதும்.
@கிரி
நன்றி நண்பரே.
டீச்சருக்கு டீச்சர் கரெக்ட் மேட்சிங்.
தலைவர், இளையவர் விஷயத்தில் மேட்சிங்கோ மேட்சிங்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
அய்யோயோ எல்லோரும் பயமுறுத்துறீங்களே? யாராவது தைரியம் சொல்லி அனுப்புங்கப்பா....
@Jayadev Das
உங்க கருத்துக்கு நன்றி நண்பரே. நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இதே நேரம் சூரியா நடித்த 25 படங்களின் பெயரை கேட்டால் டக் என்று சொல்லி இருப்பார். என்ன செய்வது. இவ்ளோ கஷ்டமான கேள்வி கேட்டு விட்டார்களே?
@சீனு
மிக்க நன்றி சார்.
வாழ்த்துக்கள் தல.. சட்டு புட்டுன்னு சமயல் கத்துக்குங்க... புகுந்த வீட்டுல பையனுக்கு சமைக்க தெரியலயேன்னு எதும் சொல்லக்கூடாது :)
திருமண வாழ்த்துக்கள் பாலா சார். நீங்களும் என்ன போல மாட்டிகிட்டீங்களா?
@முத்துசிவா
ஹி ஹி சென்னையில் ஒரு நாலுவருஷம் இருந்தப்போ நான்தான் சமையல். சோ ஆல்ரெடி நான் டிரெயினிங் எடுத்துட்டேன்.
@N.H.பிரசாத்
நன்றி நண்பரே. என்ன செய்ய முடியும் எல்லோரும்போல நானும் ஜோதியில் ஐக்கியமாக வேண்டியதுதான்.
சார் நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க...சுவாரஷ்யமா இருக்கு..
முற்கூட்டிய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...
ரீட் கொடுங்க சார்...கொடுக்காம விட்டீங்க...
****சில பிரபல, நல்ல பதிவர்கள் படத்தின் கதையையே விமர்சனம் என்ற பெயரில் எழுதி விடுவதால், சமீப காலத்தில் வரும் மொக்கை படங்களில் உள்ள ஒரு சில சுவாரசியங்களும் படம் பார்க்கும்போது காணாமல் போய் விடுகிறது. இதனாலேயே இப்போதெல்லாம் எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை, *****
இதை நான் இருபது வருடங்களாகவே கடைப்படித்து வருகிறேன்.. தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் வரும் விமர்சனங்களைக் கூட படிப்பதில்லை.. இதனால் படம் பார்க்கும் சுவராஷ்யம் குறைந்துவிடுகிறது என்பதை நான் அந்த வயதிலேயே உணர்ந்திருக்கிறேன்.. அடுத்து என்ன காட்சிகள் வரும்.. அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை இந்த விமர்சனங்கள் ஓரளவுக்கு யூகிக்க வைத்துவிடுவதால் படத்தில் எதிர்வரும் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடுவதால் படம் பார்த்த திருப்தி இருப்பதில்லை... பகிர்வுக்கு நன்றி பாலா அவர்களே..!
ஆஹா உங்களுக்கு கல்யாணமா? வாழ்த்துக்கள் பாலா! :-)
***உங்க ஆளுக்கு தலைவரை பிடிக்குமா? இது பெரிய பிரச்சனை ஆச்சே! ஹி ஹி தலைவரை பிடிக்கவில்லை என்றாலும் பராவயில்லை, இளையவரை பிடிக்காமல் இருக்கணுமே ஹா ஹா***
கிரி என்ன சொல்றார்னா, என்னுடைய இந்த கதையைப் படிக்க சொல்றாரு..
http://timeforsomelove.blogspot.com/2009/10/500.html
மண வாழ்க்கை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
எழுத்தை தொடருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!
திருமண வாழ்த்துக்கள் பாஸ்..,
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
THIRUMANA VAAZHTHUKKAL BALA..
Post a Comment