எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் லேட்டான புத்தாண்டு வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத பயணங்களால் சுமார் ஒரு மாத காலம் பதிவுலகில் எட்டி பார்க்க முடியாத நிலை. எனக்கும் ஏர்டெல்லுக்கும் இருந்த வாய்க்கால் தகராறு வேறு முற்றி விட, இன்டர்நெட் இணைப்பையும் துண்டித்து விட்டேன். குறைந்த பட்சம் பதிவுகளை படிக்கக்கூட நேரமில்லை. தற்போதுதான் கொஞ்சம் செட்டில் ஆகி இருக்கிறேன்.
இது போலீஸ் சீசன்
கடந்த இரண்டாண்டுகளுக்குள் தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் வந்து விட்டன. நிறைய முன்னணி நடிகர்கள் போலீஸ் கெட்டப்பில் நடித்து விட்டார்கள். தனுஷ் மற்றும் விஜய் மட்டுமே பாக்கி. விஜய் ஏற்கனவே அந்த கெட்டப்பில் நடித்து மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மீண்டும் துப்பாக்கி படத்தில் போலீஸ் கெட்டப் போடுகிறாராம். ஆக மிச்சம் இருப்பது தனுஷ் மட்டுமே. தனுஷ் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. தனுஷ் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதை விட, மனோபாலா நடிப்பதையே பார்த்து விடலாம். இரண்டு பெரும் போலீஸ் உடையில் ஒரே மாதிரிதான் இருப்பர். அப்புறம் தனுஷ் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. தற்போது புகழ் பெற்றிருக்கும் கொலவெறி பாடலை ஒரு வழியாக நானும் கேட்டு விட்டேன். ஆனால் நான் முதன் முதலில் கேட்டது தனுஷ் குரலில் அல்ல. பாடகர் சோனு நிகாமின் 4 வயது மகன், நேவான் நிகாம் குரலில். வீடியோவுடன் அந்த பாடலை பார்க்கும்போது," ச்சோ.... சுவீட்!!", என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதன் பின் தனுஷ் குரலில் அதை கேட்டபோது, ஏதோ ஒன்று குறைவதை போன்றே தோன்றுகிறது. நேரமிருந்தால் நேவான் குரலில் அந்த பாடலில் யு டியூபில் பாருங்கள்.
அஜீத் ரசிகரான EBகாரர்
புத்தாண்டு அன்று நண்பன் பட பாடல் வெளியீட்டு விழாவை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ஈபியில் வேலை பார்ப்பவர் அஜீத் ரசிகராக இருப்பார் போலிருக்கிறது. பின்னே, கரெக்டா நிகழ்ச்சி தொடங்கும்போது கரண்ட் கட் பண்ணினால் எப்படி?, கரண்ட் வரும்போது கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடிந்து விட்டது. இயக்குனர் சங்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். பாடல்களை இன்னும் கேட்கவில்லை. படத்தோடு பாடல்களை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். நான்கு வரிகள் கேட்டவரை, அஸ்கா லஸ்கா, இருக்கானா...இல்லியானா பாடல்கள் நன்றாக இருக்கிறது. சங்கர் கடைசியில், "எந்திரனை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்துக்கு வராதீர்கள், அந்த மாதிரி எதுவும் இந்த படத்தில் கிடையாது. வேறு சில விஷயங்கள் இதில் உண்டு. உங்கள் எதிர்பார்ப்பு மீட்டர்களை ஜீரோவில் வைத்துக்கொண்டு வந்தால் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்." என்று கூறினார். எதை மனதில் வைத்துக்கொண்டு இதை கூறினார் என்று தெரியவில்லை.
டாப் டென் 2011
"எங்க ஆள் படம்தான் ஃபர்ஸ்ட்... இல்ல எங்க ஆள் படம்தான் ஃபர்ஸ்ட்", என்று ஆளாளுக்கு தன் அபிமான நடிகரின் படத்தை தாங்கி பிடித்தாலும், மனசாட்சிப்படி எல்லோருக்குமே எந்த படம் நன்றாக ஓடியது, வசூலித்தது என்று தெரியும். சொல்லப்போனால் கடந்த ஆண்டு எல்லா நடிகர்களின் படங்களுமே ஓரளவுக்கு சுமாராகப்போனது. எந்த படங்களும் யாரையும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. அதே போல டாப் டென் படங்கள் என்று வரிசைப்படுத்துவது மிக தவறானது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட படத்தை பற்றி வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே உண்மைதன்மை அற்றவைகளாக உள்ளன. ஆகவே எந்த அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துவது என்பதே பெரிய குழப்பம். மொத்தத்தில் சென்ற ஆண்டு எல்லா நடிகர்களுக்கும் நல்ல ஆண்டுதான். மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும், யாரும் சறுக்கலை சந்திக்கவில்லை என்பது உண்மை. ஆகவே கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆண்டு நான் பார்த்ததிலேயே டாப் டென் மொக்கை படங்களை பட்டியலிடுகிறேன்.
10. எங்கேயும் காதல்
9. முதல் இடம்
8. யுவன் யுவதி
7. சிங்கம் புலி
6. ஒஸ்தி
5. ரௌத்திரம்
4. போடிநாயக்கனூர் கணேசன்
3. பவானி ஐபிஎஸ்
2. சீடன்
1. ராஜபாட்டை
சாமியே சரணம் அய்யப்பா....
இந்த பதிவு முழுவதும் சினிமா பற்றி பேசி விட்டேன். அதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு செய்தி. இது சபரிமலை சீசன் என்பதால் எங்கு பார்த்தாலும், மாலை போட்ட ஐய்யப்ப சாமிகளை பார்க்க முடியும். முன்பெல்லாம் மாலை போட்டவர்களை பார்த்தால் ஒரு வித மரியாதை ஏற்படும். இப்போதெல்லாம், "இவனெல்லாம் ஏண்டா மாலை போட்டிருக்கிறான்?", என்று திட்ட தோன்றுகிறது. இந்த காலகட்டம் என்பது, விரதம், பரதேசிகோலம், எளிமை எல்லாமே ஒரு வித பற்றற்ற நிலையை குறிப்பது. சுயத்தை இழந்து கடவுளை மட்டுமே சிந்திக்கும் நிலையே பற்றற்ற நிலை. இந்த காலகட்டத்தில் நமக்கு எந்த வித எதிர்மறை எண்ணங்களும் தோன்றி விடக்கூடாது என்பதாலேயே, எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும் விஷயங்களான, மாமிசம், மது, மாது போன்றவற்றை தவிர்க்க சொல்கிறார்கள். ஒரு காலத்தில் ஐய்யப்பன் தண்டித்து விடுவான் என்ற பயத்தில் பலர் இந்த செயலில் ஈடுபடாமல் இருந்தாலும், தற்போது, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மிக அதிகம்.
இதனால் நமக்கு தண்டனை எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் நாம் புனிதம் என்று நினைத்து கொண்டிருக்கும் கடவுளின் புனிதத்தை நாமே கெடுத்தது போலாகும். மாலை போட்டவுடன் கடவுள் நமக்குள் குடிவந்து விடுகிறார் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே தான் மாலை போட்டவர்களை சாமி என்று அழைக்கிறார்கள். கடவுள் வெளியே எங்கும் இல்லை. உனக்குள்ளேயே இருக்கிறார் என்பதே இதன் அடிப்படை தத்துவம். கடவுள் நமக்குள் இருக்கிறார் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக இந்த மாதிரி செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சபரி மலைக்கோ, ஐய்யப்பனுக்கோ சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம். பக்தி என்பதும் ஒரு வித மனக்கட்டுப்பாட்டை கொடுக்கவேண்டும். வெறும் பயத்தால் மட்டுமே வந்தால் அது பக்தி அல்ல. மாலை போடுவது என்பது ஒரு பேஷன் அல்ல. வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் துறவு வாழ்க்கை வாழும் ஒரு உன்னத தருணம் என்பதை எப்போது இவர்கள் உணருவார்கள் என்று தெரியவில்லை.
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
24 comments:
// சங்கர் கடைசியில், "எந்திரனை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்துக்கு வராதீர்கள், அந்த மாதிரி எதுவும் இந்த படத்தில் கிடையாது. வேறு சில விஷயங்கள் இதில் உண்டு. உங்கள் எதிர்பார்ப்பு மீட்டர்களை ஜீரோவில் வைத்துக்கொண்டு வந்தால் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்." என்று கூறினார். எதை மனதில் வைத்துக்கொண்டு இதை கூறினார் என்று தெரியவில்லை. //
இவருக்கு தான் யார் நடிக்கும் எப்படிப்பட்ட படத்தை எப்படி சொன்னால் ரசிகர்கள் ரசிச்சு வெற்றிப் படமாக்குவார்கள் என தெரிஞ்சிருக்கு. அதான் இப்படி சொல்லியிருக்காரு போலருக்கு.
மொக்கைப் படங்கள் வரிசையை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால் சிங்கம் புலி சற்று ரசிக்குமாறே இருந்தது சந்தானத்தினால். :)
அந்த போலீஸ் கெட்டப்ல சுள்ளான நெனைச்சி பாக்குரதுக்கே....ச்சே..முடியல..இங்க போட்டு இருக்க படம் வேற இன்னும் காமடியா இருக்குய்யா ஹிஹி!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தனுஷ் போலீஸ் கெட்டப்பில், வேண்டாமய்யா இந்த கொலைவெறி அழுதுருவேன்....
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!
@ஹாலிவுட்ரசிகன்
கரெக்டா சொன்னீங்க...வருகைக்கு நன்றி நண்பரே.....
@விக்கியுலகம்
மாப்ள, அவர் எவ்ளோ சீரியஸா சல்யுட் அடிக்கிறாரு? உங்களுக்கு காமெடியா இருக்கா?
@r.v.saravanan
நன்றி நண்பரே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் வாழ்த்துக்கள்
@MANO நாஞ்சில் மனோ
கூடிய சீக்கிரமே அது நடக்கிறதா இல்லையான்னு பாருங்க.
@MANO நாஞ்சில் மனோ
நன்றி நண்பரே, உங்களுக்கும், என் வாழ்த்துக்கள்
// தனுஷ் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதை விட, மனோபாலா நடிப்பதையே பார்த்து விடலாம். இரண்டு பெரும் போலீஸ் உடையில் ஒரே மாதிரிதான் இருப்பர். //
செம காமெடி.........
டாப் 10 மொக்கை வரிசைல வர எந்த படத்தையுமே நான் பார்க்கலை. தப்பிச்சுட்டேன் ...........
லேட்டஸ்ட்டான அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
இனிய புத்தான்டு வாழ்த்துகள்..
@எனக்கு பிடித்தவை
நன்றி நண்பரே. நீங்க தப்பிக்க முடியாது. இன்னும் ஆறு மாதத்துக்குள் இவை அனைத்தும் இந்தியா தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று உங்கள் வீட்டுக்குள்ளேயே வந்துவிடும். இதில் ஏற்கனவே சில படங்களை ஒளிபரப்பி விட்டார்கள்.
@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நெட்டுக்கு எவ்ளோ செலவு பண்றீங்க?
முழுத்தகவலை எனக்கு மெயில் பண்ணுங்க!முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்!
vasanseenuku@gmail.com
அண்ணே...... பத்து அப்படிங்கற எண்ணுக்காக சில படங்களை விட்டுடிங்கன்னு நினைக்கிறேன்...
வணக்கம் பாஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தனுஷ் போலிஸ் கெட்டப்பில் நடிப்பதை பார்பதைவிட டாகுதரின் சுறா படத்தை திரும்பி ஒரு முறை பார்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//மாலை போடுவது என்பது ஒரு பேஷன் அல்ல. வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் துறவு வாழ்க்கை வாழும் ஒரு உன்னத தருணம் //
அருமையாச் சொன்னீங்க பாலா!
த.ம. 2
@சீனுவாசன்.கு
விடுங்க சார். அது முடிஞ்சு போன கதை. இப்போ கொஞ்சம் பிரீயா இருக்கேன். பாக்கலாம். மிக்க நன்றி.
@தமிழ்வாசி பிரகாஷ்
ஆமாம் நண்பரே சிலதை விட்டுட்டேன். நீங்க எந்த படத்தை எதிர்பார்த்தீங்க?
@K.s.s.Rajh
நன்றி நண்பா. அதுவும் சரிதான்.
@சென்னை பித்தன்
மிக்க நன்றி சார்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
Post a Comment