விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 19, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 19

2010 ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத தொடங்கி கிட்டத்தட்ட ஒண்ணறை வருடங்கள் எழுதி வருகிறேன். எப்போதும் ஹிட்ஸ் பற்றியோ, ஓட்டுகள் பற்றியோ சிந்தித்ததில்லை. அதிலும் தமிழ் மணத்தில் இணைப்பதற்கு இப்போதும் ஆர்வம் இல்லை. ஒரு வேளை இணைத்திருந்தால் இன்னும் பல பேருக்கு பதிவுகள் சென்றடைந்திருக்குமோ என்னவோ. இது என்னுடைய 150 ஆவது பதிவு. இப்போது ஹிட்ஸ் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிலும் கிரிக்கெட் பற்றி எழுத தொடங்கிய பிறகு, மூன்று மாதங்களில் 25000 ஹிட்ஸ் வந்துள்ளது. பின் தொடர்பவர்களும் 200ஐ நெருங்கி விட்டது. கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு என் நன்றி. 

உருவாகிறது உலகக்கோப்பைக்கான அணி




இந்திய அணியில் 2002ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஒரு உத்வேகம் தோன்றி என்னால் இருப்பதை உணர முடிந்தது. எல்லா வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். நான், "போங்கடா இப்படித்தான் இருப்பீங்க. கடைசியில உலகக்கோப்பையில் போய் செம உதை வாங்குவீங்க." என்று நினைத்துக்கொண்டேன். இது முந்தைய உலகக்கோப்பைகளில், குறிப்பாக 2003இல் பெற்ற காயம். இருந்தாலும் மனதில் உலகக்கோப்பையை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. கங்குலி மட்டுமல்லாது பல இந்திய வீரர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்த கிரெக் சாப்பல் காலம் முடிந்து விட, இந்திய அணிக்கு புதிய பயிற்ச்சியாளராக பொறுப்பேற்றார் கேரி கிறிஸ்டன். தென்னாப்பிரிக்காவின் தலை சிறந்த ஒப்பனராக விளங்கிய கிறிஸ்டன் எப்படி பயிற்சியாளராக செயல்படப்போகிறார்? என்பது சந்தேகமாக இருந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், கிறிஸ்டன் சச்சினுக்கு அப்புறம் கிரிக்கெட் ஆட வந்தவர். ஆனால் இன்னும் சச்சின் ஆடிக்கொண்டிருக்கும் போது, அவருக்கு பயிற்சியாளராக வந்ததை பார்த்ததும் எனக்கு சுந்தரகாண்டம் படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபகம் வரும். "டேய் ஷண்முகமணி, என் கூட படிச்சு எனக்கே வாத்தியாரா வந்துட்டடா " என்று ஒருவர் பாக்கியராஜை பார்த்து சொல்வார். இதே வசனம் ஜெயசூர்யா ஆடிக்கொண்டிருக்கும்போது அம்பயராக நிற்கும் தர்மசேனாவை பார்க்கும்போதும் ஞாபகம் வரும். தர்மசேனா ஜெயசூர்யாவுக்கு அப்புறம் 6 வருடங்கள் கழித்து ஆட வந்தவர்.


என் சந்தேகங்களை தவிடுபொடியாக்கும் வகையில் முதல் தொடரிலேயே ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து, கிறிஸ்டன் தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார். 2009 ஆண்டில் இந்தியா பங்கேற்றது இரண்டே இரண்டு டெஸ்ட் தொடர்களில்தான். முன்னதாக 2008 அக்டோபரில் நடந்த ஆஸ்திரேலியாவுடன் நடந்த தொடரில் அடுத்தடுத்து கங்குலியும், கும்ப்ளேவும் தாங்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இவ்விருவரின் இழப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, என்னைபோன்ற ரசிகர்களுக்கும் பேரிழப்புதான். ஆனால் காலத்தின் கட்டாயம். இந்த தொடரின் இந்த இருவருவருமே சிறப்பாக ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலை எடுத்தால், அதில் முரளீதரன், வார்னே மற்றும் கும்ப்ளேவை தவிர்க்க இயலாது. அதிலும் மற்ற இருவரும் பந்தை அதிகமாக சுழற்றும்போது, பந்தை அதிகமாக சுழல வைக்காமலேயே பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். இவரை நாங்கள் "மீடியம் பாஸ்ட் பவுலர்" என்றே கிண்டல் செய்வோம்.


சரியான தூரத்தில் பந்தை தரையில் குத்தி, விருட்டென எழும்பும் வகையில் இவர் வீசும் பந்துகள், எப்பேற்பட்ட பேட்ஸ்மேனையும் திணறடிக்கும். சில வீரர்கள் அவசரப்பட்டு ஸ்வீப் செய்ய முயன்று, முகத்தில் அடிபட்டுக்கொண்டதும் உண்டு. பல நேரம் அது விக்கெட் கீப்பர்களையும் விட்டு வைத்ததில்லை. இவர் பந்துவீச்சில் முகத்தில் அடிவாங்காத விக்கெட் கீப்பரே இல்லை எனலாம். அதிலும் சபா கரீம் வலது கண்ணில் அடிவாங்கி, அவர் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டு, அதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியானது. இப்போதும் சபா கரீம் டிவியில் பேசும்போது உற்று கவனித்தால், அவரது வலது கண்ணில் உள்ள மாறுபாடு தெரியும். கும்ப்ளேவுக்கு பிறகு அதே தொடரிலேயே கேப்டன் பொறுப்பேற்ற தோனி அணியை வெற்றி பாதையில் அழைத்து செல்கிறார். இன்று வரை தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த குறையை போக்குவது போலவே, தற்போது இங்கிலாந்துடன் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்திய அணி.

கும்ப்ளே வீழ்த்திய விக்கெட் கீப்பர் சபா கரீம்


2009இல் இந்திய அணி இரண்டே டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பங்கேற்றது. காரணம் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள். ஆனால் நிறைய ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. 2009 இல் இந்தியா பல அபார வெற்றிகளை குவித்தது. அந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடர் என்று இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்தது. அந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபியை வென்று ஆஸ்திரேலியா நாங்கள் இன்னும் தரம் தாழ்ந்துவிடவில்லை என்று ஞாபகப்படுத்தியது. இத்தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் அதிரடியாக ஆடி வயிற்றில் புளியை கரைத்தார். மேலும் அந்த ஆண்டு நடந்த டுவென்டி20 உலகக்கோப்பையில் இந்தியா மண்ணை கவ்வியது. 2007இல் தவறவிட்ட கோப்பையை, அப்ரிடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வென்று காட்டியது பாகிஸ்தான். ஒரு சில போட்டிகள் தவிர இந்திய அணி ஆட்டங்களை பொறுத்தவரை சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. 2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான ஒரு தொடரில் இந்தியா விளையாடியது. 


இந்த தொடரையும் இந்தியாவே கைப்பற்றியது. இதில் முதல் போட்டி மிக சுவாரசியமானது. அதாவது முதலில் ஆடிய இந்தியா 414 ரன் எடுத்தது. சும்மாவே அசமந்தமாக ஆடும் நம்ம வீரர்களுக்கு குளிர் விட்டு போக, இலங்கை தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை வெற்றி பெரும் நிலை வந்துவிட, அப்போதுதான் இந்திய வீரர்கள் சுதாரித்துக்கொண்டார்கள். தில்ஷான் எடுத்த 160 ரன்களும், சங்ககாராவின் 90 ரன்களும் இலங்கை 400 ரன்களை எட்ட உதவியது. கடைசி ஓவரில் 11 ரன் தேவை. பந்தை நெஹ்ரா வீச ஆட்டம் பரபரப்பானது. இரண்டு பந்துகளில் 6 ரன் தேவை என்ற நிலையில் இலங்கை 2 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 400 ரன்களுக்கு மேல் இரண்டு முறை எடுத்த அணிகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவுடன், இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து கொண்டன. முன்னதாக நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 443 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதே போல அந்த ஆண்டு ஹாமில்டனில் நடந்த ஒரு போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 270 ரன் எடுத்தது. மழையால் ஆட்டம் தடைபட இந்தியா 283 எடுக்க்வெண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. பத்து ஓவரில் 83 ரன் எடுத்தபோது மறுபடியும் மழை 43 ஓவரில் 243 எடுக்கவேண்டும் என்று மாற்றப்பட்டது. களத்தில் நின்ற சேவாக்கும் கம்பீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு, 23 ஓவரில் 197 ரன் எடுக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்தியா 201 ரன் எடுத்திருந்ததால், ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. சேவாக் 60 பந்துகளில் சதமடித்தார். இந்த மாதிரி மரண அடியை பார்க்காத வெட்டோரி, ஆட்டம் எப்போது முடியும் என்றாகி விட்டது என்றார்.


பிப்ரவரி 24, 2010 தேதியை சச்சினின் வரலாற்றில் மட்டுமல்ல, கிரிக்கெட் வரலாற்றிலேயே மறக்க முடியாது. அன்றுதான் நாற்பது வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் பலர் முயற்சி செய்து எட்ட முடியாத 200 ரன்னை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எட்டி, சச்சின் புதிய சாதனை படைத்தார். மேலும் அந்த போட்டியில் இந்தியா 400 ரன்களை கடந்து, மூன்று முறை 400 ரன்களை கடந்த ஒரே நாடு என்ற பெருமையை பெற்றது. தென்னாபிரிக்கா இரண்டு முறை 400 ரன்னுக்கு மேலும், ஒரு முறை 399 ரன்னும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு அடுத்த படியாக 194 ரன்களை பாகிஸ்தானின் அன்வரும், ஜிம்பாப்வேயின் கோவேண்ட்ரியும் எடுத்துள்ளார்கள். அதிலும் கோவேண்ட்ரிக்கு கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசிவரை 194 ரன்னிலேயே அவுட் ஆகாமல் இருந்துவிட்டார். அப்போது அவருக்கு அது ஒரு உலகசாதனை என்பது கூட தெரியாது என்பதுதான் வேடிக்கை.


இந்த மாதிரியான பல சந்தோஷ நிகழ்வுகள், இந்த முறை இந்தியர்களின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாகிவிட்டது. முன்னெப்போதும் போல இல்லாமல் இந்திய வீரர்களின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது. எந்த ஒரு ஆட்டத்திலும் அவர்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மிகுந்த தடுமாற்றத்துடன் ஆடியது. குறிப்பாக மூன்று தொடர்களில், இறுதிப்போட்டியில் இலங்கையுடன் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. இந்திய பேட்டிங்கை குறை சொல்ல முடியாது. ஆனால் பந்து வீச்சின் தரம் குறையதொடங்கியதால் வந்த வினை. கும்ப்ளே இல்லாத இடத்தை நிரப்ப, ஓஜா, மிஸ்ரா மற்றும் அஸ்வின் முயன்று கொண்டிருந்தார்கள். ஆனால் 2010இன் இறுதியில் 5 - 0  என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது. இருபது ஓவர் போட்டிகளில் அந்த ஆண்டு இங்கிலாந்து உலகசாம்பியன் ஆனது. ஆனால் இதை பற்றி எல்லாம் இந்தியர்கள் கவலைப்படவே இல்லை.


2010 இறுதியில் தென்னாபிரிக்கா பயணமான இந்திய அணி டெஸ்ட் தொடரை டிரா செய்தாலும், 2011 ஆரம்பத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இந்தியா நேரடியாக 2011 உலகக்கோப்பையில் தான் விளையாடவேண்டும். "இதென்னடா சோதனை" என்றாகி விட்டது. 2009 முதல் 2010 வரையிலான கிரிக்கெட் போட்டிகளை பார்த்தபோது தெளிவாக தெரிந்த விஷயம் ஒன்று, ஆஸ்திரேலியா பலவீனமாக இருந்தாலும், தோற்பது கடினம். தென்னாபிரிக்காவும் இலங்கையும் வழக்கம்போல முஷ்டியை மடக்கிக்கொண்டு நிற்கின்றன. அவர்களை வீழ்த்துவது அவர்களின் கையிலேயேதான் இருக்கிறது. போட்டி நடக்கும் அன்று அவர்களின் ஆட்டமே அதை நிர்ணயிக்கும். மற்றபடி, இங்கிலாந்து ஸ்ட்ராஸ் தலைமையில் நல்ல போட்டியினை அளிக்கலாம். ஆனால் வெல்வது கடினம். வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் வேஸ்ட் இண்டீஸ்தான். பாகிஸ்தானும், நியூசிலாந்தும் புரியாத புதிர். எப்போது எப்படி விளையாடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இதை விட ஒரு நல்ல வாய்ப்பு இந்திய அணிக்கு எப்போது அமையும்?


இந்திய பேட்டிங் வரிசையை அசைக்கவே முடியாது, கம்பீர், சேவாக், ரெய்னா, யுவராஜ், தோனி, விராட் கொஹ்லி, யூசுஃப் பதான் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின். இவர்களின் பீல்டிங்கும் மிக அருமை. வழக்கம்போல பவுலிங்தான் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் ஜாகீர்கான், அஷ்வின், ஹர்பஜன், முனாஃப் பட்டேல் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர். கடைசி நேரத்தில் பிரவீன் குமார் காயமடைய ஸ்ரீசாந்த் அணிக்குள் வந்தார். ஆனால் எல்லோருக்குமே கேள்வியை எழுப்பிய ஒரு விஷயம், பியூஸ் சாவ்லாவை அணிக்குள் சேர்த்ததுதான். இது இந்திய ரசிகர்களுக்குள்ளேயே அதிருப்தியை உண்டாக்கியது.


சரித்திரம் திரும்பியது - இறுதி அத்தியாயம்.... 
அடுத்த பதிவில்..... 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

32 comments:

சக்தி கல்வி மையம் said...

இங்கிலாந்திடம் தோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..

r.v.saravanan said...

150 க்கு வாழ்த்துக்கள் பாலா

தொடருங்கள் வெற்றி பயணத்தை தொடர்கிறோம் நாங்கள்

செங்கோவி said...

150வது பதிவிற்கு வாழ்த்துகள் பாலா..ந்மக்கு கிரிக்கேட் பற்றி ஒன்றும் தெரியாது, விருப்பமும் இல்லை..எனவே தான் கமெண்ட்டுவது இல்லை..

தொடர்ந்து கலக்குங்கள்!

மாய உலகம் said...

தங்களது 150வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா...தங்கள் மேன்மேலும் வளரவும் வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் முழுமையான பகிர்வு.

150க்கும் அதற்கு மேல் மேல் மேல்... போவதற்கும் வாழ்த்துகள் பாலா!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
பழைய செய்திகள் - தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கிரிகெட் பக்கங்கள்.

எப்பூடி.. said...

பதிவுகள் நூற்று ஐம்பதிற்கு வாழ்த்துக்கள்,

தொடர் முழுவதும் மிகவும் அழகான நடையில், எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் இந்த கிரிக்கட் தொடர் பதிவை உங்களுக்கு சௌகரியம் கிடைக்கும் பொது புத்தகமாக வெளியிடவும் தாங்கள் முயற்ச்சிக்கலாம், இதை நான் கொம்பிளிமேண்டாக சொல்லவில்லை, உண்மையில் மனதில் தோன்றியதுதான்.

அப்புறம் உங்களது 150 ஸ்பெசலுக்காக உங்களுக்கு பிடித்த வீரர் 150 இல் செய்த சாதனை ஒன்று-: தொடர்ச்சியாக (11 தடவை என்று நினைக்கிறேன் ) தான் 100 ஓட்டங்களை கடந்த ஒவ்வொரு டெஸ்ட் இனிங்களிலும் 150 ஓட்டங்களை கடந்த வீரர் வீரேந்திர ஷேவாக்

K.s.s.Rajh said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
கும்ளேயின் ஒய்வு பெற்ற படத்தை இணைத்தது மாதிரி.கங்குலியின் ஒய்வின் போது கங்குலியை இந்தியவீரர்கள் தூக்கிக்கொண்டு வரும் அந்தப்படத்தை இணைத்து இருக்கலாம்.

உங்கள் இந்தப்பதிவு முடியப்போகின்றது என்று நினைக்க கவலையாக உள்ளது.
நாங்கள் எல்லாம் கிரிக்கெட் பதிவு எழுதினாலும்.உங்கள் அளவுக்கு வராது.நீங்கதான் சீனியர்.எனவே இனிவரும் காலங்களிலும் இடைக்கிடையே சுவாரஸ்யமான கிரிக்கெட் பதிவுகளைத்தாருங்கள்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் பார்த்து வருவதன் மூலம் நான் அறிந்து கொண்டது, ஜெயித்தாலும் இந்தியா மாதிரி ஜெயிக்க முடியாது.தோற்றாலும் இந்தியா மாதிரி தோற்க முடியாது. அந்த நிலைமைதான் இப்போது. முன்பெல்லாம் இப்பேற்பட்ட படுதோல்விகளுக்கு மிகுந்த கவலை பட்டிருக்கிறேன். இப்போது அப்படி இல்லை.

வீரர்களின் சரியான திட்டமிடல் இல்லாமையும், பிட்னஸ் பிரச்சனையும்தான் தோல்விகளுக்கு காரணம்.

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

@செங்கோவி

மிக்க நன்றி நண்பரே. கிரிக்கெட் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே...

பாலா said...

@மாய உலகம்

நன்றி நண்பா.

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@Rathnavel

நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நன்றி தல

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே. புத்தகமாக கொண்டு வரவேண்டுமானால் அதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த எழுத்து நடையை இன்னும் மெருகேற்ற வேண்டும். முயற்சி செய்கிறேன்.

நீங்கள் சொல்வது போல சேவாக் சதம் கடந்த பொதெல்லாம் 150 கடந்தது குறிப்பிடத்தக்கதுதான். நன்றி நண்பரே..

பாலா said...

@Kss.Rajh

நண்பரே இந்த தொடரில் நிறைய இடங்களில் கங்குலியின் படங்களை இணைத்து விட்டதால் வேண்டுமென்றெதான் இணைக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் முடிவு என்பது உண்டுதானே? கண்டிப்பாக அவ்வப்போது நடக்கும் போட்டிகளை பற்றி என்பார்வையில் எழுதுகிறேன். நன்றி நண்பரே...

Mohammed Arafath @ AAA said...

என்ன பாஸ் REWIND பண்ணி பார்க்கும் போது திடீர்னு அப்புறம் Fast forward பண்ண மாற்றி இவ்ளோ வேகமா வந்த்டீங்க...
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்டிப்பா கும்ப்ளே வும் கங்குலி யும் ஒரு இழப்பு தான்.கும்ப்ளே இல்லாத குறை இந்த இங்கிலாந்து தொடர்ல நாள் தெரியுது.
வேகபந்து வீச்சு இல்ல இங்கிலாந்து அணியை சுருட்ட கும்ப்ளே தான் வேணும் .

Mohammed Arafath @ AAA said...
This comment has been removed by the author.
Mohammed Arafath @ AAA said...

மற்ற T20 உலக கோப்பை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம். ஐ .பி. எல் ல அம்போன்னு விட்டு றீங்களே .. அதுதான் நாம உலககோப்பை வாங்க முக்கியமான காரணமா நான் நினைக்கறேன்.அதே போல ரெண்டு T20 தோற்றத்துக்கும் அது தான் காரணம்.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

நண்பரே சமீபகாலத்தில் நடந்தவை எல்லாம் எல்லோருக்கும் ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி இருக்கும் என்ற காரணத்தினாலேயே மிக வேகமாக கடந்து விட்டேன்.

உலகக்கோப்பை போட்டிகள் வென்றமைக்கு ஐபிஎல் காரணம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு சில வீரர்களுக்கு வேண்டுமானால் உதவி இருக்கலாம். இன்னொன்று கவனித்தீர்களா, வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் ஐபிஎல்லில் சுமாராக ஆடுகிறார்கள். ஆனால் சொந்த அணியில் சிறப்பாக விளையாடுகிறார்கள். நம்ம ஆட்கள் அப்படியே உல்டாவா இருக்கிறார்கள்.

மேலும் ஐபிஎல் பற்றி எழுதினால் அதற்கென்றே தனி தொடராக எழுதவேண்டும். அவ்வளவு விஷயம் இருக்கிறது.

கருத்துக்கு நன்றி நண்பரே...

Mohammed Arafath @ AAA said...

என்ன வென சொல்லுங்க.இந்தியா இது வர ஒரு முழுமை அடையாத ஒரு அணி தான்.எந்த ஒரு சிறந்த அணிலையும் இந்தியா matri ஒரு கேவலமான Bowling இருக்காது.என்ன தான் டோனி எல்லா போட்டியும் ஜெயித்தாலும் அது எனக்கு வெறும் ஒரு லக்(luck) மாத்ரி தான் எனக்கு தெரியுது. என்ன தான் batting strong இருந்தாலும் நாம பேஸ் மட்டம் bowling so வீக்.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

ஜெயிச்சா லக்கு ஜெயிக்காட்டி மக்கு என்பதை நீங்களும் சொல்லாதீர்கள். இந்திய அணியில் ஒரு தரமான பந்துவீச்சு வரிசை இல்லை. அதுவே முக்கிய காரணம்.

தமிழ்விருது said...

இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

pradeep said...

I am eagarly waiting for your indian WC win narration, No article in any of the media form satisfy my cric urge especially in tamil. I hope you will satisfy as all your previous posts.

Unknown said...

அண்ணா உலககோப்பை வெற்றியை நீங்கள் பல பதிவுகளாக இந்திய அணியின் ஒவ்வொரு போட்டியையும் தனித்து எழுத வேண்டுகிறேன். ப்ளீஸ்.....

arasan said...

அலசல் அற்புதம்,.
150 பதிவுக்கு வாழ்த்துக்கள் ..
தொடர்ந்து கலக்குங்க ..

பாலா said...

@தமிழ்விருது

வருகிறேன் நண்பரே...

பாலா said...

@pradeep

சிறப்பாக தர முயற்சி செய்கிறேன் நண்பரே.

பாலா said...

@மதுரை
இதுவரை எழுதியதே தாவு தீர்ந்து விட்டது நண்பா... இன்னும் ஆறேழு பதிவுகள் என்றால் தாங்காது.

பாலா said...

@அரசன்

மிக்க நன்றி நண்பரே....

Related Posts Plugin for WordPress, Blogger...