விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 9, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 17

கரிபியன் மண்ணில் பூசிக்கொண்ட கரி 



கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கிரிக்கெட்டின் ஆர்வம் சிறிது குறைந்தாலும் முற்றிலுமாக அது நீங்கவில்லை. பதினைந்து வருடமாக அல்லவா கிரிக்கெட் பார்த்து வருகிறேன்? அவ்வளவு சீக்கிரம் மனதில் இருந்து நீங்கி விடுமா என்ன? ஆனால் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. கேப்டனாக இல்லாமல் அணியில் ஒரு சாதாரண வீரனாக கங்குலி விளையாடுவது எனக்கு பிடிக்கவில்லை. நான் கூட நினைத்திருக்கிறேன். "இப்படி விளையாடுவதற்கு பேசாமல் ஓய்வு அறிவித்து விடலாம்." என்று. ஆனால் கங்குலிக்கு கிரிக்கெட் மீதான தீராத காதலே அவரை தொடர்ந்து கிரிக்கெட் ஆட செய்கிறது என்பது பிறகே புரிந்து கொண்டேன். 


2006 ஆம் ஆண்டில், இந்திய அணி டிராவிட் தலைமையில் சிறப்பாகவே ஆடியது. எல்லா அணிகளுமே ஆட்ட நுணுக்கங்களுள் புதிவித யுத்திகளை பயின்று 2007 உலககோப்பை போட்டிகளுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருந்தன. இந்தியாவும்தான். ஆனால் இந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் அணியில் மட்டும் பல குழப்பங்கள் நிலவி வந்தன. கேப்டன்கள் திடீர் திடீர் என்று மாற்றப்பட்டார்கள். சில வீரர்கள் போதை மருந்து, விபசார வழக்கு போன்றவற்றுள் சிக்கினார்கள். அவ்வப்போது சூதாட்ட புகாரிலும் மாட்டினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி ஒரு நிலையான அணியாக இல்லாமல் தடுமாறியது. ஒரு சில நல்ல வீரர்கள் கூட இந்த மாதிரி வழக்குகளில் சிக்கி காணாமல் போனார்கள். நான் முன்பே சொன்னது போல இந்திய அணிக்கு ஒரு குணம் உண்டு. உலகக்கோப்பையில் மண்ணை கவ்விய பிறகு அடுத்த மூன்றாண்டுகளுக்கு அசுர வேக வளர்ச்சி அடையும். எல்லாம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கும்போது, சரியாக உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் சில மாதங்களுக்கு முன்பாக எல்லா வீரர்களுக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகி பரிதாபமாக நிற்பார்கள். 


2006 இறுதியில் தென்னாபிரிக்கா சென்ற இந்திய அணி தர்ம அடி வாங்கி திரும்பியது. டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் பரிதாபமாக இழந்து நாடு திரும்பியது. மறுபடியும் தென்னாபிரிக்கா, உலகக்கோப்பை வாங்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று நிரூபித்தார்கள். 434 ரன்களை துரத்தி வென்ற பிறகு, அப்படித்தான் நினைக்கத்தோன்றியது. இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இலங்கையோடு சிறிய தொடர்களில் உள்நாட்டில் ஆடி கோப்பையை வென்ற பின் ஓரளவுக்கு நம்பிக்கையோடு வெஸ்ட் இண்டீஸ் நோக்கி பயணமானார்கள். இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தோடு சொன்னது ஆஸ்திரேலியாவை மட்டும்தான். தென்னாபிரிக்கா ஓரளவுக்கு பலத்துடன் இருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவர்களின் மீது ஒருவித அவநம்பிக்கையையே உண்டு பண்ணியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா இருந்தாலும், அதற்கடுத்த படியாக அணிவரும் எதிர்பார்த்தது, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளைத்தான்.



2003 இல் ஜெயசூரியாவுக்கு அடுத்த படியாக பதவியேற்ற அட்டப்பட்டு ஓரளவுக்கே ஜொலிக்க முடிந்தது. அதன் பின் இளைஞரான ஜெயவர்தனே தலைமையில் படு வேகமாக முன்னேறியது இலங்கை. முழுக்க முழுக்க இளைஞர்களைக்கொண்டு ஒரு துடிப்பான அணியாக விளங்கியது இலங்கை. எல்லா அணிகளுமே முன்னோக்கி சென்று கொண்டிருக்கையில், தன் ஆரம்பகால நிலையில் கூட இல்லாமல், படு வேகமாக பின்னோக்கி சென்று கொண்டிருந்தது ஜிம்பாப்வே அணி. அவர்களின் நட்சத்திர வீரர்களான, பிளவர் சகோதரர்கள், ஹீத் ஸ்ட்ரீக், ஆகியோர் இல்லாமல், ஒரு தரமற்ற அணியாகவே விளங்கியது. மாறாக கடந்த காலங்களில் தடுமாறி வந்த பங்களாதேஷ் திறமையாக ஆடத்தொடங்கியது. இப்படி பட்ட நிலையில், "உலகக்கோப்பையை வெல்வது அப்புறம் இருக்கட்டும், முதலில் அரையிறுதிவரை செல்லலாம்." என்ற அரைகுறை நம்பிக்கையோடே 2007 உலகக்கோப்பையை எதிர்கொண்டேன். 


இந்த தொடரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சுவாரசியம் இல்லாமல் போனதன் காரணம், கங்குலியின் தலைமை இல்லாதது மற்றும் போட்டிகள் நடப்பது மேற்கிந்திய தீவுகளில். அங்கே எப்போதுமே காலநிலை மோசமானதாகவே இருக்கும். கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் மழை பெய்யும். மேலும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மேலேதான் ஆட்டங்கள் தொடங்கும். ஆகவே விடிய விடிய உட்கார்ந்து ஆட்டங்களை பார்ப்பது சாத்தியமில்லை. இவ்வாறு பல காரணங்கள் இந்த போட்டிகளில் உள்ள ஈடுபாட்டை குறைத்தது. வழக்கம்போல கோலாகலமாக தொடங்கியது 2007 உலகக்கோப்பை போட்டிகள். போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையாகவே இருந்தன . பி‌சி‌சி‌ஐ போல ஒரு பணக்கார அமைப்பு கிடையாது என்பதால், டபில்யு‌ஐ‌சி‌பி அரைகுறையாகத்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தன. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? அணி வீரர்களுக்கு கூட சரியாக ஊதியம் வழங்க முடியவில்லை. இது பல வீரர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. இந்த உலகக்கோப்பை போட்டியை நடத்தி சரியான லாபம் சம்பாதித்து விடலாம் என்று அவர்கள் போட்ட கணக்கு தப்பாகப்போனது. 


நான்கு பிரிவாக பிரிக்கப்பட்ட அணிகளில், ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பெரிய அணிகள் இருந்தன. இந்திய அணி இருந்த பிரிவில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் இருந்தன. அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரே பிரிவில். அதனோடு இரண்டு சின்ன அணிகள். சிங்கம் மற்றும் புலி ஆகிய விலங்குகளோடு இரண்டு சுண்டெலிகளும் ஒரே அறையில் மாட்டிக்கொண்டதைப்போல இருந்தது. மரண அடி. நெதர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் 30ஆவது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து உலகசாதனை புரிந்தார் கிப்ஸ். இந்த போட்டியில் தென்னாபிரிக்கா 40 ஓவரில் 353 ரன் எடுத்தது. மழை பெய்திருக்காவிட்டால் 500 ரன் எடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த பிரிவில் கடைசியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதிய போட்டியில் 377 எடுத்த தான் உலகச்சம்பியன்தான் என்று நிரூபித்தது ஆஸ்திரேலியா.இருந்தாலும் தொடர்ந்து வந்து 294 எடுத்தது தென்னாபிரிக்கா. 


இந்திய அணிக்கு முதல் போட்டி பங்களாதேசுடன். அசால்டாக களமிறங்கிய இந்திய அணியை கலங்கடித்தது பங்களாதேஷ். இந்திய அணி முக்கி முக்கி 192 எடுத்தது. நிதானமாக அதை துரத்தி வென்றது பங்களாதேஷ் அணி. முதல் போட்டியிலேயே செருப்படி. அடுத்த போட்டியில் பெர்முடாவை எதிர்கொண்ட இந்திய அணி, முதலாளி மீதுள்ள கோபத்தை, அப்பாவி மனைவி மீது காட்டும் வீரம் மிக்க கணவன் போல, பெர்முடாவை துவைத்து எடுத்தது. முதல் முறையாக 400 ரன்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் ஒரே போட்டியில் 18 சிக்சர்களுக்கு மேலே அடித்தும் சாதனை படைத்தது. ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இலங்கையுடனான போட்டியில் வென்று விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கையில், அதற்கும் ஆப்பு வைத்தது இலங்கை. தற்போது இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு பெர்முடா கையில். அதாவது, அடுத்து நடக்கவிருக்கும், பங்களாதேஷ் உடனான போட்டியில் பெர்முடா வென்று விட்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு சென்று விடும். நம் நிலைமையை பார்த்து வெட்கமாக இருந்தது. பெர்முடவால் என்ன செய்ய முடியும்? இந்திய ரசிகர்களை பொறுத்தவரை முதல் சுற்றோடு இந்த உலகக்கோப்பை முடிந்து போனது. 


இதே அணிதான் 2003 உலகக்கோப்பையிலும் ஆடியது. ஒன்றிரண்டு வீரர்கள் தவிர அனைவரும் அதே வீரர்கள்தான். ஆனாலும் இந்திய அணி வரலாறு காணாத அளவில் முதல் சுற்றிலேயே படுதோல்வி அடைந்து வெளியேறி விட்டது. ஒரு பக்கம் வருத்தம். மறுபக்கம், இப்போது தெரிந்திருக்கும் கங்குலியின் அருமை என்று ஒரு எண்ணம். கிட்டத்தட்ட என் உலகக்கோப்பை கனவு வடிந்தே போய் விட்டது. "போங்கடா, நீங்களும் உங்க கிரிக்கெட்டும்!" என்று கூட தோன்றி விட்டது. மீதி உலகக்கோப்பை போட்டிகளை அனைத்தையுமே பேப்பரில் படித்தே தெரிந்து கொண்டேன். நமக்குத்தான் இப்படி என்றால் டி பிரிவில் இன்னும் பெரிய அதிர்ச்சி. இக்கட்டான சூழ்நிலையில் அயர்லாந்தை சந்தித்த பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே ஜிம்பாப்வே உடன் ஒரு போட்டி டிரா ஆனதால், அடுத்த சுற்றுக்கு அயர்லாந்து தகுதி பெற, வெளியேறியது பாகிஸ்தான். மறுநாள் செய்தித்தாளில் வந்த செய்தி கிரிக்கெட் உலகையே கதி கலங்க செய்தது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் இறந்து விட்டார். அது தற்கொலையா அல்லது கொலையா என்று தற்போதும் சர்ச்சைகள் நிலவுகின்றன. சூதாட்ட ஏஜெண்டுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 


சூப்பர் 8 சுற்றுக்கு வந்த எட்டு அணிகளில் இரண்டு அணிகள் சிறிய அணிகள். அதிலும் அயர்லாந்துக்கு இது முதல் தொடர். அயர்லாந்து அணியை பொறுத்தவரை, ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. அதே போல பங்களாதேஷ் அணியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அவர்களின் பயிற்சியாளர் வாட்மோர். இவர் 1996இல் இலங்கை உலகக்கோப்பை வெல்வதற்கு பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் சொதப்ப, அதை மற்ற அணிகள் பயன்படுத்திக்கொண்டன. ஒரு வழியாக அரையிறுதிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றன. மண்ணின் மைந்தர்கள் என்பதை தவிர எந்த தகுதியுமே இல்லாத வெஸ்ட் இண்டீஸ் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தது. 


நியூசிலாந்தை எளிதாக வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை. மறுபக்கம் ஆஸ்திரேலியாவை சந்தித்தது தென்னாபிரிக்கா. ஆஸ்திரேலியாவை வெளியேற்றும் வல்லமை படைத்தது என்று எல்லோராலும் நம்பப்பட்ட தென்னாபிரிக்கா, பியூஸ் போன பல்ப் மாதிரி ஆடியது. நாக் அவுட் என்றால் தென்னாபிரிக்கா எப்படி ஆடும், ஆஸ்திரேலியா எப்படி ஆடும் என்று தெரிந்தும் தென்னாப்பிரிக்காவை நம்பியது நம் தவறுதான். இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.  கிட்டத்தட்ட எல்லோருக்கும் இறுதிப்போட்டியின் முடிவு தெரிந்து போனது. ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று அடித்து சொன்னார்கள். ஏனென்றால் இந்த தொடர் முழுக்க, ஆஸ்திரேலியா தான் ஆடிய எல்லா போட்டிகளிலுமே முதலில் ஆடினால் 300க்கு மேலும், இரண்டாவதாக ஆடியிருந்தால் ரன்ரேட்டை 6க்கு மேலும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மழையால் குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 38 ஓவர்களில் 281 ரன்களை குவித்தது. கில்க்றிஸ்ட் தன் வாழ்நாளின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கையின் பந்து வீச்சை சிதறடித்த இவர் 104 பந்துகளில் 149 குவித்தார். பிறகு களமிறங்கிய இலங்கையும் சிறப்பாகவே ஆடியது. 1999இல் பாகிஸ்தான் போலவோ, 2003இல் இந்தியா போலவோ, அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விடமாட்டோம் என்று ஆடினார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவின் இமாலய ஸ்கோரை அவர்களால் எட்ட முடியவில்லை. 36 ஓவரில் 215 எடுத்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால், இரு கேப்டன்களின் ஒப்புதலோடு ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்றாவது முறையாக உலகச்சம்பியன் பட்டம் வென்றது.  இலங்கை கில்க்றிஸ்டை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருந்தால், கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். 


இந்த உலகக்கோப்பையில் சுவாரசியமான விஷயங்களும் இருக்கத்தான் செய்தன. பெர்முடாவின் 130 கிலோ லேவேராக், இந்தியாவின் உத்தப்பாவுக்கு பிடித்த அபாரமான கேட்ச் மிகப்பிரபலம். மேலும் தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் கையில் 5 விக்கெட்டுகள் இருக்க, வெற்றி பெற நான்கே ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில், இலங்கையின் மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பிறகு தட்டு தடுமாறி, ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வைத்து தென்னாபிரிக்கா ஜெயித்தது வேறு விஷயம். அதேபோல இறுதி போட்டியில் கில்க்றிஸ்ட் தனது கையுறைக்குள் ஸ்குவாஷ் பந்துகளை வைத்துக்கொண்டு விளையாடினார். பிடிமானத்துக்காக இதை பயன் படுத்தியதாக அவர் கூறினார். இந்த விஷயம் பல விவாதங்களை கிளப்பி பின்னர் அடங்கியது. 

முழுக்க முழுக்க ஆஸ்திரேலியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்த உலகக்கோப்பை தொடர், இதுவரை நடந்த தொடர்களிலேயே, சுவாரசியமில்லாத ஒரு உலகக்கோப்பை தொடர் என்று எல்லோராலும் வருணிக்கப்பட்டது. இதன் பின்னர், ஒரு சில விவாதங்களில், இனிமேல் ஆஸ்திரேலியாவை உலகக்கோப்பை போட்டிக்குள் அனுமதிக்க கூடாது. அதற்கு பதிலாக மற்ற நாடுகளுக்குள் போட்டி வைத்து, அவர்களுள் ஒரு சாம்பியனை தேர்ந்தெடுத்து, அவர்களோடு ஆஸ்திரேலியா மோதலாம் என்று கேனைத்தனமான கருத்துக்களும் உலாவந்தன. இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை, இந்த உலகக்கோப்பை தொடர் என்பது ஒரு கெட்ட கனவு. அதை அனைவரும் மறக்கவே விரும்புகின்றனர். நானும்தான்.


முடிகிறது ஆஸ்திரேலியர்களின் ஆட்சி, கரை சேர்க்க வந்த தோ(ணி)னி... 

அடுத்த பதிவில்....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

33 comments:

மாய உலகம் said...

கிரிக்கெட் பதிவு பற்றி தமிழில் இவ்வளவு எளிதாக சொல்லும் பதிவு உங்கள் பதிவாக தான் இருக்க முடியும் வாழ்த்துக்கள் நண்பா

r.v.saravanan said...

விறுவிறுப்பை தரும் பதிவு கலக்கறீங்க பாலா வாழ்த்துக்கள்

Unknown said...

கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றிகள் உமக்கு!

K.s.s.Rajh said...

கில்கிறிஸ்ட் எங்கள் வெற்றியை பறித்து விட்டார்.இல்லை என்றால் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை எங்கள்(இலங்கை) வசமாகி இருக்கும்.

உண்மையைச்சொன்னால் உங்களைப்போலவே தல(தாதா) புறக்கனிக்கப்பட்ட காலத்தில் கிரிக்கெட் மீதான என விருப்பமும் குறைந்து விட்டது.
குறிப்பாக இந்திய அணிவிளையாடும் போட்டிகளை பார்க்கவே பிடிக்கவில்லை.

தலையை(தாதா)கலாய்தவர்களுக்கு எல்லாம் மீண்டும் வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டுத்தான் ஒய்வு பெற்றார்.அதான் தாதா.

இப்ப தல வர்ணணையாளர் ஆகிவிட்டதால்.போட்டிகளை பார்க்க கொஞ்சம் பிடிக்கின்றது.

சக்தி கல்வி மையம் said...

இந்த பதிவிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உழைப்புக்கு ஒரு சல்யூட்...

"ராஜா" said...

2007 உலக கோப்பை போட்டிகள் நான் ஒரு போட்டி கூட பார்க்கவில்லை .... பங்களாதேஷ் அணியுடன் இந்தியா தோற்றது துரதிஷ்டவசமானது அது நடக்கவில்லை என்றாள் அந்த தொடரில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும் , குறிப்பாக இலங்கை இறுதி போட்டி வரை முன்னேறி இருந்திருக்காது ...

அந்த தொடரில் இலங்கை இறுதி போட்டிக்கு முன்னேறியது முழுக்க முழுக்க அதிர்ஷ்டமே ....

நீங்கள் சொல்லியதை போல அந்த தொடரில் நூறு சதவீதம் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்ட்ரேலியா மட்டுமே ...

அந்நியன் 2 said...

சொல்றேன்னு தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது...ஆனாலும் நீங்கள் இவ்வளவு ஆர்வமாக எழுதுவதைப் பார்த்தால் அதில் எதோ ஒரு சூட்சுமம் இருப்பதை உணர முடிகின்றது.

வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தெளிவான வரலாறு....

நாளை தொடங்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுகிறேன்...

ம.தி.சுதா said...

///ல் கையில் 5 விக்கெட்டுகள் இருக்க, வெற்றி பெற நான்கே ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில், இலங்கையின் மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்./////

கதிரை நுனியில் இருந்து பார்த்த தருணங்களில் ஒன்று சகோதரா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தொடருக்கு தொடர் விறுவிறுப்பு

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

பாலா said...

@மாய உலகம்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள வந்ததுக்கு நன்றி

பாலா said...

@Kss.Rajh

ஆஸ்திரேலியா அப்போது இருந்த நிலையில், கில்கிறிஸ்ட் அவுட் ஆகி இருந்தாலும் கூட பின்னால் வருபவர்கள் அடித்து நொறுக்கி இருப்பார்கள். நன்றி நண்பரே.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அப்படி ஒன்று கடின உழைப்பெல்லாம் கிடையாது நண்பரே.

பாலா said...

@"ராஜா"

அந்த தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்ல, கோப்பையை வெல்லவும் தகுதியான அணி ஆஸ்திரேலியாதான்.

பாலா said...

@அந்நியன் 2

அதிலென்னங்க இருக்கு? கிரிக்கெட் பற்றி தெரியாமல் இருப்பது ஒன்றும் குற்றம் இல்லையே? சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டோடு வளர்ந்ததால்தான் இந்த ஆர்வம். நன்றி நண்பரே.

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே, என் விருப்பமும் அதுதான்

பாலா said...

@♔ம.தி.சுதா♔

அந்த போட்டியை நான் பார்க்கவில்லை. பின்னர் ஹைலைட்ஸில்தான் பார்த்தேன், நன்றி நண்பரே,

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

கேரளாக்காரன் said...

Super bala apdiye 5 year pinnadi pona maathiri irunthuchi awesome

கேரளாக்காரன் said...

Annikki intha Lanka pasanga kitta thothathukku summa marana adi 2011 summa gilli climax maathiri marakkamaattanuga. Mothame Mumbai sizela oru country ennaa setta paakkalam pa intha Asia cupla

Chitra said...

இந்த பதிவை வாசிக்கும் போது, ஒரு சந்தோஷ துள்ளல்..... சூப்பர்!

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

நண்பா நீங்க ஒரு வில்லங்கமான ஆசாமி என்று உங்கள் கருத்தில் இருந்தே தெரிகிறது. உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி.

அப்புறம் பரப்பளவில் பெரிய நாடாக இருப்பது மட்டுமே கோப்பை வெல்ல தகுதியா? அப்படிப்பார்த்தால் நம்ம சைசுக்கு ஒலிம்பிக்கில் எல்லா மெடலையும் அள்ளி இருக்கணும். உங்கள் கருத்தில் நீங்கள் சொல்லி இருக்கும் லங்கா பசங்க என்பதை, இலங்கை கிரிக்கெட் அணியை மட்டுமே என்றே எடுத்துக்கொள்கிறேன். நன்றி.

பாலா said...

@Chitra

நன்றிங்க.

arasan said...

கிரிக்கெட் மன்னா தொடருங்க உங்கள் பதிவு வேட்டையை ...
ரசிக்க காத்திருக்கிறேன் .. வாழ்த்துக்கள்

கேரளாக்காரன் said...

மன்னிக்கவும் பாலா ஏதோ உணர்ச்சி வேகத்தில் சொல்லப்பட்ட வார்த்தை தான் அந்த லங்கா பசங்க எனும் சொல் .நம்ம சகோதர சாவ்தரிகளும் அங்கே உள்ளனர் என்பது என்னோட மூளைக்கு உரைக்கவில்லை போலும் மன்னிக்கவும் இலங்கை சகோதரர்களே . இலங்கை எனக்கு தெரிஞ்சு ரெண்டு வாட்டி இந்தியாவ உலககொப்பைல இருந்து நாக் அவுட் பண்ணினார்கள அந்த கோபத்தில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் தான் அவள் மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும் இலங்கை சகோதரர்களே

பாலா said...

@அரசன்

என்ன நண்பா அரசன்னு நீங்க பெயர் வச்சுக்கிட்டு என்ன மன்னன்னு சொல்றீங்க?

உங்க கருத்துக்கு நன்றி.

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டுமே நினைப்பதால், எப்போதுமே கிரிக்கெட் போட்டிகளை இரண்டு நாடுகளுக்கு இடையேயான போட்டியாக பார்க்க முடிவதில்லை. கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்தால் எந்த பிரச்சனையுமே இல்லை. நன்றி நண்பரே.

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க.

Kettavan said...

போயி வேற வேலப்புண்ட இருந்தா பாருங்கடா..கிலிக்கெட்டாமா கிலிக்கெட்டு..காசு வாங்கிட்டு ஆடுனது சச்சின் பயதான்

Kettavan said...

திசாரா பெரேரா mass

Related Posts Plugin for WordPress, Blogger...