நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்கள் என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். அவர் அழைத்து வெகு நாட்கள் ஆகி விட்டன. இப்போதுதான் எழுத நேரம் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளில் எனக்கு பிடித்த பத்து பாடல்களை தேர்வு செய்ய வேண்டுமாம். பத்து படங்களை தேர்வு செய்வதென்பதே மிக கடினமான காரியம். இதில் பத்து பாடல்களை எப்படி தேர்வு செய்வது?
எனக்கு பொதுவாகவே மெலடி பாடல்களை விட கொஞ்சம் துள்ளலான பாடல்கள் அதிகம் பிடிக்கும். அதே போல இவை என் மனதில் ஞாபகம் இருக்கும் பாடல்கள் மட்டுமே. இப்போதும் என் மனதில் இடம் பிடித்திருக்கும் பாடல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன். இந்த பத்தாண்டுகளில் ஏ ஆர் ரகுமானை விட வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஆகியோரின் ஆதிக்கம்தான் தமிழில் அதிகமாக இருந்துள்ளது.
முன்பனியா முதல் மழையா?
படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
எஸ்பிபியின் குரல் எந்த வயது நாயகனுக்கும் பொருந்தும். தனக்குத்தான் வயதாகி விட்டது. தான் குரலுக்கல்ல என்று நிரூபித்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதே ரீதியில் சமீபத்தில் வெளிவந்த நாணயம் படத்திலும் தன் குரலில் இளமையை நிரூபித்துள்ளார் எஸ்பிபி. இப்படம் வெளி வந்தபோது கல்லூரி முதல் ஆண்டு. லைலா பின்னாடி லோ லோ என்று அலைந்தோம்.
என் அன்பே என் அன்பே
படம்: மவுனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இந்த பாடலில் வரும் புல்லாங்குழல் கேட்கும்போதெல்லாம் மனதை என்னவோ செய்கிறது. அதற்கேற்ப சங்கர் மகாதேவன் குரல். நான் திரிஷா ரசிகன் ஆனது இந்த படத்தில்தான்.(என்னது இதுதான் அவரின் முதல் படமா?)
டிங் டாங் கோயில் மணி...
படம்: ஜி
இசை: வித்யாசாகர்
மதுபாலகிருஷ்ணன் மற்றும் மதுஸ்ரீ இருவரும் அருமையாக பாடி இருப்பார்கள். வித்யாசாகர் பாடல் என்றாலே அழகான நெளிவு சுளிவுகள் நிறைய இருக்கும். திரிஷா மீது முழு இது ஏற்படுத்தியது இந்த பாடல்(இதுன்னா என்னவா?).
லஜ்ஜாவதியே..
படம்: 4 ஸ்டூடண்ட்ஸ்
இசை: ஜேஸி கிஃப்ட்
ஜேஸி கிஃப்ட்டின் குரலே வித்தியாசமாக இருக்கும். நான் கல்லூரியில் படித்த பொழுது நடன போட்டிக்காக நாங்கள் தேர்வு செய்து ஆடி வெற்றி பெற்றது இந்த பாடலுக்குத்தான்.
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
படம்: பூவெல்லாம் உன் வாசம்
இசை: வித்யாசாகர்
இந்த பாடலில் உயிரே வரிகள்தான். வைரமுத்து கலக்கி இருப்பார். அதற்கு உயிரூட்டும் விதமாக ஜேசுதாஸ் மற்றும் சாதனா இருவரும் நன்றாக பாடி இருப்பார். பாடலில் வழக்கம் போல அழகான அஜீத்.
சகானா சாரல் தூவுதே....
படம்: சிவாஜி
இசை: ஏ ஆர் ரகுமான்
இந்த பாடலும் மனதில் சாரல் தூவுவது போலவே இருக்கும். சின்மயி குரல் தேன்போல அவ்வளவு இனிமையாக, உதித் நாராயண் குரல் கட்டையாக. அந்தக்கால விண்ணோடும் முகிலோடும் பாடல் போல இந்த முரணான காம்பினேசன் நன்றாக இருக்கும்.
பிச்சை பாத்திரம்...
படம் : நான் கடவுள்...
இசை: இளையராஜா
ஆன்மீகத்தில் கொஞ்சமெனும் ஈடுபாடு இருக்கும் யாருக்குமே இந்த பாடல் உடனே பிடித்து போகும். இளையராஜாவே எழுதி உள்ள இந்த பாடல் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று நிரூபிக்கும் படி உள்ளது.
அய்யய்யோ...
படம் பருத்தி வீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
மிக மெதுவான பாடல்கள் என்றால் யுவனுக்கு அல்வா சாப்பிடுகிறமாதிரி போலிருக்கிறது. பாடலை ஹெட்போனில் கேட்டால் உலகையே மறக்க செய்துவிடும். வாத்தியங்களின் ஜாலம் அப்படி. கடந்த பத்தாண்டுகள் யுவனுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம்.
ஆராரிராரோ
படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலின் வரிகளுக்காகவே இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அம்மா பாடலுக்கும் ஜேசுதாசுக்கும் அத்தனை பொருத்தம்
யாரோ மனதிலே...
படம்:தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
சோகம் இழையோடும் குரல். முதலில் மென்மையாக அப்புறம் கொஞ்சம் ஷர்ப்பாக, கெஞ்சலாக என்று பலவிதமாக பாடி இருப்பார் பாம்பே ஜெயஸ்ரீ.
அட போங்கப்பா ஒரே வருத்தமா இருக்கு. நினைவில் வந்த பத்து பாடல்களை உடனே எழுதிவிட்டேன். இப்போது நிறைய பாடல்கள் ஞாபகம் வருகிறது. குறிப்பாக அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு தேவா மெட்டமைத்த பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்கள். கலப்படமாக இருந்ததால் குறிப்பிடமுடியவில்லை. கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், காக்க காக்க, 12பி, மின்னலே என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. பத்து பாடல்கள்தான் என்பதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்.
யான் பெற்ற இன்பம் பெறுவதற்கு நான் அழைப்பவர்கள்
மறுக்காம எழுதுங்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது...
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
20 comments:
பொறுங்க வாறன்..
எனக்குத் தான் சுடு சோற...
அருமையான பார்வை சகோதரா... 10 பாடலில் உள்ளடக்குவது சிரமமான காரியம் தானே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
எப்போ பாத்தாலும் சூடு சோற நீங்களே தட்டிட்டு போறீங்களே. வருகைக்கு நன்றி நண்பரே...
எல்லாமே மெலடி பாட்டா இருக்கு.... நல்லா தேர்வுகள் தல
செம தேர்வுகள் தல!
//முன்பனியா //
கேக்கும்போதே மனசுக்குள்ள சாரல் அடிக்குமே!
தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி பாஸ்! கண்டிப்பா எழுதுறேன்!
உங்கள் தெரிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும், அதிலும் 'டிங் டொங் கோவில் மணி' மிகவும் பிடிக்கும், தொடர்பதிவை எழுதியதற்கு நன்றிகள்.
நல்ல தொகுப்பு பங்காளி...
@Arun Prasath
நன்றி தல
@Balaji saravana
நன்றி நண்பரே
@எப்பூடி..
கருத்துக்கு நன்றி தலைவரே
@karthikkumar
தேங்க்ஸ் பங்காளி
நல்ல தொகுப்பு நண்பரே
போட்டாச்சு நண்பா நம்ம பத்து எப்புடின்னு பாரு.
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/10.html
நீங்களும் அஜித் ரசிகரா... :) குண்டு மின்னல் வேகத்தில் தொடர் பதிவை எழுதிவிட்டார் போல...
அழைத்தமைக்கு நன்றி விரைவில் எழுதுகிறேன் ...
//பாடலில் வழக்கம் போல அழகான அஜீத்.
கலக்கல் தல
@r.v.saravanan
நன்றி நண்பரே
@ராஜகோபால்
நன்றி நண்பா வந்து பாக்கிறேன்
@philosophy prabhakaran
துப்பாக்கி குண்டா இருப்பாரோ?
@"ராஜா"
விரைவில் எழுதுங்கள். நன்றி
நல்ல பதிவு நண்பா! " யாரோ மனதிலே " பாடல் எனக்கும் பிடிக்கும்!
Post a Comment