விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 20, 2011

நான் ஒரு காவி பயங்கரவாதி



பதிவுலகம் என்பது எல்லோருடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம். என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கூட தணியாத எழுத்து தாகத்தை தீர்த்துக்கொள்ள உதவும் நீரூற்று. இலக்கியம், அரசியல், சினிமா, நகைச்சுவை, சமையல் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் பெட்டகம். எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பதை போல எனக்கும் இருக்கிறதல்லவா. ஆகவே வெகு காலமாக என் மனதில் இருந்துவந்த சில ஆதங்கங்களை இங்கே சொல்கிறேன். (வழக்கம்போல கொஞ்சம் நீளமாக...) 



டிஸ்க்: இங்கே இனம் என்ற வார்த்தை பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை சாதியை மட்டும் என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். 


மனிதன் முதன் முதலில் தோன்றியவுடன் அவனுக்கு ஏற்பட்ட உணர்வு எது தெரியுமா? காதலா? இல்லவே இல்லை. மனிதனுக்கு முதலில் தோன்றிய உணர்வு இன உணர்வுதான். அதாவது, "நான் மனிதன். என்னை போலவே இருப்பவர்கள் மனிதர்கள். என் இனத்தவர்கள்." என்பது மாதிரியான எண்ணம்தான். ஆதி காலம் முதல் தற்காலம் வரை ஒரு மனிதனால் வேறு எந்த விதமான உணர்வும் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். ஆனால் இன உணர்வில்லாமல் வாழ முடியாது. "அதெப்படி? தன்னலமில்லாத, இன பேதமில்லாத மனிதர்களும் இங்கு இருக்கிறார்களே?" என்று கேட்கலாம். கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் இனம் என்றவுடன் நாம் புரிந்து வைத்திருப்பது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட இனத்தை மட்டும்தான். ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இந்த இன உணர்வானது பிறப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு உண்டாவதில்லை. 


இன உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனால் இந்த சமூகத்தில் வாழ முடியும். இல்லாவிட்டால் அவன் தனித்து விடப்படுவான். இப்போது இனம் என்று எதை சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எதனோடாவது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே மனிதன் நினைக்கிறான். எவ்வளவுதான் படித்தாலும் இந்த உணர்வு மாறவே மாறாது. அது பெரும்பாலும், சாதி, மத, மொழி உணர்வுகளாக இருக்கும். அதுபோக அரசியல் கட்சிகள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், இஞ்சீனியர்கள் என்று எதனோடாவது நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம். இதுவும் ஒரு வகை இன உணர்வுதான். 


ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போது நான் அல்லது நாங்கள் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றியதோ, அப்போதே அவர்கள் நம் எதிர் இனத்தவர்கள், என்று இன்னொரு மனிதனை பார்க்கும் உணர்வும் தோன்றிவிட்டது. கூடவே, "அவர்களை விட நாம் மேம்பட்டவர்கள், பலசாலிகள், அவர்களை நம் ஆளுமைக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் ." என்ற எண்ணமும் தோன்றியது. இதன் விளைவாகவே, மனிதன் தோன்றியவுடன் செய்த முதல் காரியம், தன்னோடு தோன்றிய மற்ற இரண்டு மனித (குரங்கு) இனத்தை கூண்டோடு அளித்ததுதான். ஆக ஆரம்பத்தில் இருந்தே இன வெறி என்பது மனித ரத்தத்தில் ஊறிய ஒன்று. காலம் மாற மாற, நாகரீகம்(?) வளர வளர, மனிதன் தன் இன வெறிக்கும் நீரூற்றி வளர்த்து வந்தான். பிறகு ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ முடியாது என்ற நிலை வந்தவுடன், ஒரு வித ஒப்பந்தத்துடன் எல்லை வகுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் உள்மனதில் அந்த இன வெறி இருந்து கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வெளிப்படவும் செய்தது. 


கல்வி அறிவு வளர்ந்து, விஞ்ஞானம் வெகு வேகமாக வளர்ந்த நிலையில் இந்த இன உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கினான் மனிதன். ஆனால் அவனது ஆழ்மனதில் சுருண்டு கிடக்கும் கருநாகம் போல இந்த உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை கொஞ்சம் சீண்டினால் போதும். விருட்டேன எழுந்து விடும். அந்த நொடியில் அவன் கற்ற கல்வி, நாகரீகம், பண்பாடு ஆகியவை காணாமல் போய், ஆதி மனிதனாக மாறி விடுகிறான். இதைத்தான் பண்டைய காலத்தில் இருந்து அரசர்களும், தலைவர்களும் செய்து வருகிறார்கள். உங்களுக்கு பின்னால் ஒரு பெரும் கூட்டம் சேர வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, அந்த கூட்டத்தை, நீங்கள் அவர்களின் இனத்தவன் என்று நம்ப வைக்க வேண்டும். அதை விட மிக முக்கியம் அவர்களின் எதிரி இனத்திற்கு நீங்கள் எதிரி என்று நம்பவைக்க வேண்டும். இதற்கு பல மனிதர்கள் சான்றாக இருந்திருக்கிறார்கள். 


மிகப்பெரிய கொடுங்கோலனாக இருந்த ஹிட்லருக்கு கூட கடைசி வரை விசுவாசிகள் இருந்தார்கள். காரணம் ஹிட்லர் கையில் எடுத்தது இனவெறி என்ற ஆயுதம்தான். ஒசாமா பின் லேடன் ஆனாலும் சரி, பால் தாக்கரே ஆனாலும் சரி அவர்கள் கையில் வைத்திருப்பது இனவெறி என்னும் வசிய மை. எந்த மனிதனையும் எளிதில் ஆட்டுவிக்கக்கூடியது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை ஐம்பது வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கும் கழகங்களின் தொடக்கமே இன உணர்வை அடிப்படையாகக் கொண்டதுதான். பெரும்பான்மையான திராவிடர்களின் ஆதரவை பெற வேண்டுமானால், அவர்களை சிறுபான்மையான ஆரியர்களுக்கெதிரான இன உணர்வை தூண்ட வேண்டும். அந்த சரக்கு இன்றும் விலை போய் கொண்டிருக்கிறது. 


பூவுலகத்தின் தலை எழுத்துக்கு, வலையுலகமும் விதி விலக்கா என்ன? இந்த இன வெறியை தூண்டும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது . பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. புரட்சி செய்கிறேன் என்று மக்களின் மனதில் இன வெறியை தூண்டும், சிகப்புச்சட்டை பால்தாக்கரேக்கள் இங்கு அதிகம். ஆனால் இவர்கள் பால் தாக்கரேவையும், ராஜா பக்சேவையும் இன வெறியன் என்று கூறுகிறார்கள். நம் மக்களின் அடிப்படை இன உணர்வு மொழி உணர்வு, அதை சொல்லி பிரிக்கவேண்டும், பின்னர் மத உணர்வு, பின்னர் ஜாதி உணர்வு, பின்னர் வர்க்க உணர்வு. இப்படி ஏதாவது ஒரு இடத்தில் அவனை வசியப்படுத்தி விடலாம். "டேய் தமிழா! உனக்கு மானமில்லையா?" என்று தமிழர்களையும், "டேய் உன்னை இந்த காவி பயங்கரவாதிகள் அடிமை படுத்தி வைத்திருப்பது தெரியவில்லையா?" என்று பிற மதத்தவரையும், "அடேய் உன்னை அரிஜனம் என்று சொல்ல அந்த நாய் காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கு?" என்று பிற்படுத்தப்பட்டோரையும், "டேய் உன் இம்மானுவேல் சேகரனை விடவா தேவர் உயர்ந்தவர்?" என்று விஷத்தை பாய்ச்சி, இவர்கள் இருவர் பற்றி தெரியாதவர்களை கூட படிக்க செய்து தன்னுடைய இனமாக மாற்றும் நடவடிக்கைகளில் சில நல்ல உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள். எதுவுமே கிடைக்கலையா? குறைந்த பட்சம் ஆண் பெண் என்ற இன உணர்வையாவது தூண்டுவோம் என்று ஆணாதிக்கம், பெண்ணாடிமை என்று வீட்டில் பொண்டாட்டியை அடித்து காசு வாங்கி கட்டிங் அடித்து விட்டு பதிவுலகில் பஞ்சாயத்து பண்ண தொடங்கி விடுவார்கள்.


பொதுவாகவே சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு (சாதியினால் மட்டுமல்ல), இன்னொரு இனத்தின் மீது பொருமல் இருந்துகொண்டே இருக்கும். அதைப்போல ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அஜீத் ரசிகராக இருக்கும் பொது, ஒரே ஒருவர் மட்டும் விஜய் ரசிகராக இருந்தால் தொலைந்தது. அவரால் பேசவே முடியாது. கூனி குறுகி போய் விடுவார். ஆனால் அதே நேரம் கூட இன்னொரு விஜய் ரசிகர் சேர்ந்து விட்டால் அத்தனை நாள் சேர்த்து வைத்த கடுப்பை கொட்டி தீர்த்து விடுவார். விளைவு எப்படா அஜீத் ரசிகன் தனியாக மாட்டுவான் என்று காத்திருக்க ஆரம்பித்து விடுவார். எப்படா இந்த ரஜினி தவறு செய்வான், அவனை காய்ச்சலாம் என்று காத்திருந்து, கூப்பாடு போடுபவர்களை பதிவுலகில் எங்கும் காணலாம். இந்த தாழ்வு மனப்பான்மையால், வேறு இனத்தவர் சும்மா சிரித்தால் கூட நம்மை பார்த்துத்தான் சிரிக்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். 


அதன்பின் அடுத்த இனத்தை முடிந்த அளவு தகாத வார்த்தைகளால் திட்டுவது, முடியாத பட்சத்தில் அடுத்தவர்களின் திட்டுகளை ரசிப்பது என்று உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தை அவ்வப்போது தட்டி கொடுப்பார்கள். இந்த மாதிரி வலைப்பக்கங்களுக்கு அதிகமாக ஹிட்ஸ் கிடைப்பதே இதன் சான்று. ஒரு சில நல்ல எண்ணத்தில் வெளிப்படும் பதிவுகளில் கூட பின்னூட்டமிட்டு அந்த பதிவின் நோக்கத்தையே திசை திருப்பும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி பதிவுகளால் எந்த பிரயோசனமும் கிடையாது. சம்பந்த பட்டவர்களின் மனதில் இருக்கும் வக்கிரங்களுக்கு வடிகாலாக வேண்டுமானால் அமையும். உண்மையான சமூக அக்கறை உள்ளவனுக்கு அடுத்த மக்களை பிரித்து பார்க்க தெரியாது. ஒரு இனத்தை தாழ்த்தி பேசி, இன்னொரு இனத்தவனை மகிழ்விப்பதில் இருந்தே அவர்களின் சமூக உணர்வு பல்லிளித்து விடுகிறது. இது புரியாமல் இந்த மாதிரி பதிவுகளை படித்து விட்டு, ஒரு கூட்டம் தன் மனதில் இருக்கும் வக்கிரங்களையும் பின்னூட்டங்களால் இறக்கி வைக்கிறது. இன்னொரு கூட்டம் தங்கள் இனம் திட்டப்படுவதை பொறுக்காமல், பதிலுக்கு திட்டி தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.


சிங்கம் படத்தில் ஒரு வசனம் வரும், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாடியும் ஒரு ஜாதி இருக்கு, ஒரு கூட்டம் இருக்கு. அதை நல்லவர் யாரும் காட்டிக்க மாட்டாங்க. அதைத்தான் நானும் சொல்கிறேன். ஒரு மனிதனை வசியப்படுத்தி தன் பேச்சை கேட்க வைப்பதை ஆங்கிலத்தில் Manipulation என்று கூறுவார்கள். இது பலவகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த இன உணர்வை தூண்டுவது. மக்களே பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. உங்களுக்கு இன உணர்வு இருப்பது தவறே கிடையாது. ஆனால் அடுத்த இனத்தையும் மனிதனாக பார்க்கும் உணர்வும் இருக்கணும். மற்றபடி இனத்தை காட்டி உங்களை Manipulate செய்ய நினைக்கும் யாரையும் கண்டுக்காதீங்க...


இந்த இடத்தில் என்னுடைய இனஉணர்வையும் பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது. மதக்குறியீடுகள் என்பது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவருக்கும் எவ்வளவு மதிப்பிற்குரியது என்பது தெரிந்ததே. தெரிந்திருந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தவர் மதக்குறியீடுகளை குதர்க்கமாக கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? காவி என்பது இந்துக்களை பொறுத்தவரை ஒரு புனிதமான ஒரு நிறம். ஆனால் கண்ட நாதாரிகளை அடிப்படையாக வைத்து காவி குள்ளநரி, காவி பயங்கரவாதி என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? மேலும் ஒரு மதத்தை ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக அவர் மத வெறியர் அல்லர். அதே போல ஒரு மதத்தை சேர்ந்தவர் அயோக்கியர் என்பதற்காக அந்த மதத்தவர் அனைவருமே அயோக்கியர் அல்லர். எப்படி இசுலாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று பரப்பப்ப்டுகிறதோ அது போல. ஆனால் இந்துக்களை பற்றி சொல்லும் எல்லா இடத்திலும், காவி புத்தி என்று கூறுவது கண்டனத்துக்குரியது. நைசாக இந்த கட்டுரையில் என் காவி நரித்தனத்தை புகுத்தி விட்டதாக நீங்கள் நினைத்தால் தாராளமாக சொல்லுங்கள் நான் ஒரு காவி பயங்கரவாதி என்று. எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா? 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

34 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மக்களே பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. உங்களுக்கு இன உணர்வு இருப்பது தவறே கிடையாது. ஆனால் அடுத்த இனத்தையும் மனிதனாக பார்க்கும் உணர்வும் இருக்கணும். மற்றபடி இனத்தை காட்டி உங்களை Manipulate செய்ய நினைக்கும் யாரையும் கண்டுக்காதீங்க..:://////

பாலா உங்களுக்கு மிகப்பெரிய சலியூட்! மிக அருமையான விஷம் ஒன்றை சுட்டிக்காட்டியமைக்கு! இதை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாலா ஒரு சின்ன வேண்டுகோள் - பிரபுதேவா ரம்லத்தை கைவிட்டு, நயந்தாராவை பிடித்தது போல, நானும் எனது பழைய ப்ளாக்கை கைவிட்டுடு, இப்போ புது ப்ளாக்கிற்கு மாறிட்டேன்!

ஆனால் உங்க டாஷ்போர்ட்டில பழைய ப்ளாக் லிங் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! எனவே எனது புதிய முகவரியை அட் பண்ணவும்!

இனிமேல் அடிக்கடி ப்ளாக்கை மாற்ற மாட்டேன் என்பதையும், சிவகுமார் போல உறுதியாக இருப்பேன் என்பதையும், இத்தால் அறியத்தருகிறேன்! ஹி ஹி ஹி

http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/2011/06/blog-post_20.html

rajamelaiyur said...

அருமையான பார்வை

rajamelaiyur said...

நல்ல அலசல்

பாலா said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

மிக்க நன்றி நண்பரே... உங்க லிங்க்கை அப்டேட் பண்ணிடுறேன்.

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

shanmugavel said...

முதல் உணர்வு இன உணர்வு தான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!நல்ல பகிர்வு.

சென்னை பித்தன் said...

அருமையான பதிவு பாலா!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒரு மதத்தை சேர்ந்தவர் அயோக்கியர் என்பதற்காக அந்த மதத்தவர் அனைவருமே அயோக்கியர் அல்லர்.//
மிகச் சரியாக சொன்னீர்கள் பாலா.

பாலா said...

@shanmugavel

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி நண்பரே...

பாலா said...

@நாய்க்குட்டி மனசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

குணசேகரன்... said...

கரெக்டாத்தான் சொல்றீங்க

கார்த்தி said...

நாம் தமிழர் ஆனால் மற்றவர்களயும் மதிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கருத்து நல்லது!

Unknown said...

பதிவு கலக்கல்..பல இடங்களை தொட்டு செல்கிறது!!!

Unknown said...

சிந்தனைக்குரிய பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி!

பாலா said...

@குணசேகரன்...

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@கார்த்தி

நன்றி நண்பரே..

பாலா said...

@மைந்தன் சிவா

கருத்துக்கு நன்றி நண்பா

பாலா said...

@Karikal@ன் - கரிகாலன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அடிக்கடி வாங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

விரிவான அலசல் நண்பரே...

arasan said...

சிறந்த அலசல் ... வாழ்த்துக்கள்

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

பாலா said...

@அரசன்

நன்றி நண்பரே...

சுதா SJ said...

அருமையான சமூக அக்கறையான பதிவு

சுதா SJ said...

மதத்தை காட்டி பிழைப்பு நடத்துவவர்கள் தயவு தாட்சணம் இன்றி அழிக்கப்பட வேண்டியவர்கள் பாஸ்

பிரபாஷ்கரன் said...

கம்பி மேல் நடப்பது போல் மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

அருமையான பகிர்வு!

விவாதிக்கவேண்டிய கட்டுரை ஆனால் காலம் கடந்து விட்டது பாஸ்.

வாழ்த்துக்கள்!

பாலா said...

@துஷ்யந்தன்

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@பிரபாஷ்கரன்

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@அந்நியன் 2

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

vidivelli said...

nalla alsal,,,,,,,
valththukkal


namma pakkam
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம் neenkalun oodivanko...................

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே..

Unknown said...

மாப்ள அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...