கொஞ்ச நாளைக்கு நாளைக்கு முன்னாடி "கழுத்தறுத்த ஏர்டெல்" என்று சொந்தகதை சோகக்கதை ஒன்றை எழுதி இருந்தேன். அதை படித்த யாரோ ஏர்டெல்காரனிடம் போட்டு கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாளாக நெட் கட். ஆகவே கிடைக்கிற கேப்பில் பதிவிடுவெனா? இல்லை பின்னூட்டம் இடுவேனா? இல்லை வந்த பின்னூட்டங்களுக்கு பதிவிடுவேனா? ஆகவே மக்களே அப்பப்ப வந்துதான் படிக்க வேண்டி இருக்கிறது. மன்னிக்கவும்.
ரஜினி பிறந்த தினம் அன்று அவரை பற்றி பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நான் எப்போதுமே தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை. ஆனால் இன்னொருவர் கூறும் கருத்துக்கு என் தரப்பில் இருந்தும் சில கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லைதானே. இது கண்டிப்பாக பிளாசபி பிரபாகரன் அவர்களின் பதிவுக்கு எதிர்வினை அல்ல. ரஜினி பற்றி எழுத வேண்டியது இதனுடன் இணைத்து எழுத வேண்டியதாகி விட்டது.
டிஸ்க்: இனிமேல் வரப்போவது ஒரு பக்கா ரஜினி ரசிகனின் சோம்படித்தல். பிடிக்காதவர்கள் தயவுசெய்து இதற்கு மேலே படித்து கடுப்பாக வேண்டாம்.
என்னை நானே கேட்டு கொள்கிறேன், "ரஜினி எனக்கு என்ன செய்தார்? நான் ஏன் அவருக்கு ரசிகன் ஆக வேண்டும்? அவரை தலைவா என்று கூப்பிடும் அருகதை அவருக்கு உண்டா?" இந்த கேள்விகள் ஒவ்வொரு ரஜினி ரசிகனிடமும் கேட்கபடுகிறது. மேலும், "அவர் அரசியல் வசனங்களால் ரசிகனை உசுப்பேற்றுகிறார். ரசிகனை முட்டாள் ஆக்குகிறார். வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகிறார்." என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இவை எல்லாம் அதிகமானது பாட்சா படத்துக்கு பிறகுதான். ஆனால் பாட்சா படம் வருவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவருக்கு நான் ரசிகன். அப்போது அரசியல் எனக்கு தெரியாது. அதன் பின் அவர் அரசியல் வசனம் பேசும்போதெல்லாம் அதனை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு மகிழ்ந்தது கிடையாது. இருந்தும் ரஜினி என்னை வசீகரித்தார். காரணம் ரஜினியின் மதி மயக்கும் பேச்சல்ல. அவரிடம் இருக்கும் ஏதோ ஒரு அமைதி. இது பொய்யாக இருந்தாலும் (ரஜினி நடிக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்) அது எனக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கிடையாது. அப்படியே அமைதியாய் இருப்பது போல் எத்தனை நாள் நடிக்க முடியும்? ஒரு கட்டத்தில், "சைலன்ஸ் பேசிக்கிட்டிருக்கென்ல!!" என்று குட்டு உடைந்து விடும்.
சரி, அவரை ஏன் தலைவர் என்று சொல்ல வேண்டும்? யாரை தலைவர் என்று கூப்பிடவேண்டும் என்று எனக்கு தெரியும். அதை எனக்கு யாரும் கத்து தர தேவை இல்லை. என் வீட்டு பாத்ரூமை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்? (நன்றி கமலஹாசன்). நாட்டில் பல பரதேசி, பன்னாடைகளை எல்லாம் தலைவன் என்று கூப்பிடுகிறார்கள். அப்போது வராத கோபம், இவரை சொன்னால் மட்டும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை. பொதுவாக மத எதிர்ப்பாளர்கள் அல்லது மாற்று மதத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவரை தாக்கும்போது (சொல் மூலம்), அந்த மதத்தில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் பேர்வழி என்று உப்பு சப்பில்லாத அல்லது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை பிடித்து தொங்குவார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று தன்னுடைய மன வக்கிரங்களை தீர்த்து கொள்வார்கள். அப்படித்தான் இருக்கிறது தற்போது ரஜினியை வசை பாடுபவர்கள் நிலையும்.
இந்த பத்தி மட்டும் பிரபாகரன் அவர்களுக்கு...
"ரஜினி தன் மகள் திருமணத்துக்கு பிரியாணி போடுகிறேன் என்று பொய் சொல்லி எந்திரன் பார்க்க வைக்கிறார்." என்பது மிகப்பெரிய நகைச்சுவை. தனக்கு நடனம் தெரியாது என்றுதானே சொல்லி இருக்கிறார்? எல்லோரும் பிரபுதேவா போல, விஜய் போல கமல் போல ஆடி விட முடியுமா? அவர்களுக்கு எளியதாக தோன்றும் சில நடன அமைப்புகள் எனக்கு கடினமாக தோன்றும். எனக்கு எளிதாக இருக்கும் அமைப்புகள் இன்னொருவருக்கு கடினமானதாக இருக்கும். இதை ஒரு பிரச்சனை என்று சொல்லலாமா? மைனா பற்றி ரஜினி புகழ்ந்தது பற்றி, ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்லும்போது இப்படி சொல்வது இயல்புதானே? இதுவும் ரஜினியை குறை கூற எடுத்துக்கொண்ட உப்பு சாப்பிலாத காரணம் தானே?
சரி அடுத்த கேள்வி, உங்க தலைவன் நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுக்குரேன்னு சொன்னாரே? என்ன ஆச்சு? அரசு எல்லா ஆயத்த பணிகளையும் செய்து விட்டது. இன்னும் ஒரே ஒரு கோடி மட்டும்தான் வர வேண்டி இருக்கிறது. ரஜினிக்காகத்தான் வெயிட்டிங் என்பது போல உள்ளது இந்த கருத்து. "இந்த திட்டம் செயல்படுத்தும்போது பணம் ஒரு பிரச்சனை என்று யாரும் நினைத்தால், தான் அதற்காக ஒரு கோடி கொடுக்கத்தயார்." என்றுதானே சொன்னார். "என்னவோ ரஜினியின் ஒரு கோடியை வைத்துத்தான் நதிநீர் இணைப்பு திட்டமே நடக்க போகிறதேன்பது போல இருக்கிறதே." எங்கள் ஊரில் ஏடாகூடமான பழமொழி ஒன்று உண்டு. "பாவாடை அவிழ்ந்தது தப்பில்லை? கொழுந்தன் சிரிச்சதுதான் தப்பு என்கிற மாதிரி." அரசு திட்டங்களை நிறை வேற்றாமல் இருப்பது தவறில்லை. ரஜினி ஒரு கோடி கொடுக்கிறேன் என்று சொன்னதுதான் தப்பு. அப்படியே ஒரு கோடி கொடுத்து விட்டாலும், "கறுப்பு பணத்தில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்." என்று வாய் கூசாமல் சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இதே மாதிரிதான் கன்னடனை உதைக்க வேண்டும் என்று சொன்ன விஷயமும்.
ரசிகன் ஒருவரிடம் இருக்கும் விஷயம் பிடித்து அபிமானி ஆகிறான். இல்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவதில்லை. ரஜினி ரசிகன் தெளிவாக இருக்கிறான். அவனுக்கு ரஜினியிடம் இருந்து எதுவும் தேவை இல்லை. அவர் முதல்வரானால் கூடுதல் மகிழ்ச்சி. அவ்வளவுதான். அவருடைய மகள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை என்றோ? பிரியாணி போடவில்லை என்றோ கோபித்து கொள்ள போவதில்லை. இனி வருங்காலத்தில் ரஜினி ரசிகன் ஆகப்போகிறவனும், என்னமோ அவரின் வாய்ஜாலங்களுக்கு மயங்கி ரசிகனாகப் போவதில்லை. என்னுடைய அக்காவின் பேத்தி வயது ஒண்ணரைதான் , (நேற்று முத்து படம் பார்க்கும் போது) ரஜினி திரையில் தோன்றினால் "ரோபோ தாத்தா! ரோபோ தாத்தா!!" என்று கத்துகிறாள். இந்த அன்பின் பின்னால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதுவே எல்லா ரசிகனின் நிலையும். ஆகவே ரஜினி ரசிகனைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
ரசிகன் என்று இந்த பதிவில் கூறி இருப்பதெல்லாம் நான் மற்றும் என் போன்ற ரசிகர்களை குறிப்பது. பொது மக்களை குறிப்பதல்ல. எது எப்படியோ
அறுபத்து ஒன்றாம் பிறந்த தினத்தை கொண்டாடி இருக்கும் தலைவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
88 comments:
ரசிகன் ஒருவரிடம் இருக்கும் விஷயம் பிடித்து அபிமானி ஆகிறான். இல்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவதில்லை. ரஜினி ரசிகன் தெளிவாக இருக்கிறான். அவனுக்கு ரஜினியிடம் இருந்து எதுவும் தேவை இல்லை. அவர் முதல்வரானால் கூடுதல் மகிழ்ச்சி. அவ்வளவுதான். ///
நெத்தியடி பங்காளி
ரஜினியை பற்றி பேசும்போது மட்டும் சிலர் பொங்குவது உண்மைதான். அப்படி அவர்மேல என்ன வெறுப்போ.
மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
நானும் உங்களைப் போல் ஒருவனே!
ஒரு கட்டத்தில், "சைலன்ஸ் பேசிக்கிட்டிருக்கென்ல!!" என்று குட்டு உடைந்து விடும்.//
செம குத்து
ரஜினி ஒரு மாமனிதர்
ரஜினி வாழும் மஹாத்மா
ரஜினி அமைதியான கடல்
ரஜினி குட்டி பாபாஜி
ரஜினி வசீகரம்
ரஜினி படிக்க போரடிக்காத புத்தகம்
ரஜினி மூன்றெழுத்து மந்திர சொல்
ரஜினி படிக்காத மேதை
ரஜினி பண்பின் சிகரம்
ரஜினி நாகரீக மனிதன்
ரஜினி உதாரண புருஷன்
ரஜினி ஆய்வு செய்ய வேண்டிய வாழ்க்கை
ரஜினி பகுத்தறிய முடியாத ரகசியம்
ரஜினி கிடைக்காத பொக்கிஷம்
ரஜினி அமைதியான காற்று
ரஜினி அடங்கி கிடக்கும் சூறாவளி
:-))
ரஜினியின் உழைப்பு பாராட்டத்தக்கதே......
எனக்கென்னமோ அவர் ஒவ்வொரு முறை விமர்சனத்தில் சிக்கும் போதும் ஒரு சாதாரண மனிதன் மேடை அலங்காரம் தெரியாமல் பேசி (அந்த நேரத்து உண்மையையை) மாட்டிக்கொள்வது போல் தான் உள்ளது.
//யாரை தலைவர் என்று கூப்பிடவேண்டும் என்று எனக்கு தெரியும். அதை எனக்கு யாரும் கத்து தர தேவை இல்லை.// உங்க தலைவரா இருக்கும் வரை பரவாயில்லை, அவரை எங்களோட தலைவராவும் ஆகணும்னு கட்டவுட்டுக்கு பாலூற்றும் ரசிக சிகாமணிகள் ஆசைப் படுதே, அங்க தாங்க பயம் வயித்தைக் கவ்வுது. சினிமாவுல வர்றதெல்லாம் நிஜம்னு நம்பும் இளிச்சவாயன் தமிழன். "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்" இதை நிசம்னு நம்பி ஒட்டு போட்டான். ஏழைகள் சந்தோசமா ஆனாங்களா? History repeats itself-என்ற பழமொழி மாதிரி ஆயிடக் கூடாதுங்க.
//எந்திரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு உங்கள் இரண்டாவது மகளின் திருமணம் நடந்து முடிந்தபிறகு ஒரு பிரஸ்மீட்டில் ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.// அடங்கொக்க மக்கா, நான் அவர் எப்ப பேசினார் என்பதைக் கூறத்தான் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்தேனே! அதுக்கு இதான் //ரஜினி தன் மகள் திருமணத்துக்கு பிரியாணி போடுகிறேன் என்று பொய் சொல்லி எந்திரன் பார்க்க வைக்கிறார்." // அர்த்தமா!
ரசிகர்களுக்கு விருந்து வையுங்கள் என்று சொல்வது தவறாக இருக்கலாம், வைக்கிறேன் என்று சொல்லி விட்டு ஏன் வைக்கவில்லை என்பதுதான் கேள்வி. இதில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. இதில் போடப்படும் உணவு என்பது பெரிய விஷயம் அல்ல. அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போறவர்கள் அங்கே போடப் படும் உணவுக்காக அழைக்கப் பட வில்லை. அப்படி பார்த்தால் திருமணத்திற்கு வருபவர்கள் உன்ன உணவில்லை அதனால்தான் வருகிறார்கள் என்று அர்த்தமில்லை. எல்லோரையும் என்ன காரணத்திற்க்காக திருமணத்திற்கு அழைத்தாரோ அதே காரணத்திற்க்காக ரசிகர்களுக்கும் அவர் சொன்ன மாதிரியே விருந்து வைக்க வேண்டும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம், சமாளிக்க முடியாது என்பது ஒரு காரணமென்றால் அவர் விருந்து வைக்கப் போகிறேன் என்ற அறிக்கையே விடாமல் இருந்திருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு, காரணம் சொல்ல வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
//"இந்த திட்டம் செயல்படுத்தும்போது பணம் ஒரு பிரச்சனை என்று யாரும் நினைத்தால், தான் அதற்காக ஒரு கோடி கொடுக்கத்தயார்." என்றுதானே சொன்னார்.// இதில் சிறிது மாற்றம் உள்ளது. "காவிரிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல் படுத்துவது மட்டும் தான். எனவே நதிகளை இணையுங்கள், அதற்க்கு ஏன் சார்பாக ஒரு கோடி தருகிறேன். பணம் போதவில்லையா, இன்னும் எத்தனை கோடி வேண்டும் சொல்லுங்கள் வசூலித்துத் தருகிறேன்". [வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது, ஆனால் அவர் அன்று சொன்னதன் சாராம்சம் இதுதான்]. ஒரு வேலை அந்த திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருந்தால் அவர் இவ்வாக்குருதியை நிச்சயம் காப்பாற்றியிருப்பார், முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.
//இதே மாதிரிதான் கன்னடனை உதைக்க வேண்டும் என்று சொன்ன விஷயமும்.// பேசுவது பெரிய விஷயமல்ல. யாரைப் பற்றிப் பேசுகிறோம், எங்கே பேசுகிறோம் என்பது முக்கியம். பொது மேடையில், தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் பதிவு செய்து கொண்டிருக்கும் இடத்தில் இவ்வாறு ஒரு பொறுப்புள்ள மனிதர் உணர்ச்சிவசப் பட்டு சும்மா அள்ளிவிட்டிருக்கக் கூடாது. பெங்களூருவும், கன்னடர்களும் நம்ம பயல்கள் மாதிரி இளிச்ச வாயர்கள் இல்லை. அவர்களுக்கு ஒற்றுமை அதிகம், மொழிப் பற்று, மாநில உணர்வு கொஞ்சம் அதிகம். அந்த உணர்வுகளை காயப் படுத்தும்படி யாராவது பேசினாலோ செய்தாலோ அவ்வளவுதான். லேசில் விட மாட்டார்கள். கன்னடனை உதைக்க வேண்டும் என்று
யாராவது பெங்களூருவுக்குள் பேசியிருந்தால் கதையே வேறாகியிருக்கும். கடைசியில் அவர் மன்றாடி மன்னிப்பு கேட்ட பின்புதான் அவர்கள் விட்டார்கள்.
//அவருடைய மகள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை என்றோ? பிரியாணி போடவில்லை என்றோ கோபித்து கொள்ள போவதில்லை.//இங்கே ஒருவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர், நாளை அரசியலில் குதிக்கலாம் என்ற எதிர்பார்க்கப் படும் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பது நிச்சயம் விமர்சகர்கள்/பொது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும். வாக்குறுதிகள் அள்ளி வீசிவிட்டு தேர்தலுக்கப்புரம் மறந்து விடுவது அரசியல் வாதி[வியாதி]களின் வழக்கம் [பொது சனத்தோட மராத்தி மேல அசைக்க முடியாத நம்பிக்கைதான் இதற்க்குக் காரணம்!]. விருந்து வைக்க வில்லை என்று ரசிகர்கள் பெரிதுபடுத்தவில்லை என்றாலும், சொன்னபடி நடக்கவில்லை என்று சாதாரண மக்கள் நினைக்கலாம் அல்லவா? நான் என் முடிவுப் படிதான் நடப்பேன் என்று அவர் சொல்லிவிட்டால் பரவாயில்லை. ஆனால், "நீங்கள் தலைவா தலைவா என்று சில நடிகர்களைக் கொண்டாடுகிறீர்களே, அந்த நடிகர்களோடு நீங்கள் எப்போதாவது சந்திக்க முடிந்திருக்கிறதா, ஒரு புகைப் படமாவது எடுத்திருக்கிறீர்களா" என்று இன்னொருத்தர் பேசியதுக்கப்புரம் ரசிகர்களை சந்திப்பது, அவர்களை புகைப் படம் எடுக்க அனுமதிப்பது போன்றவை அதிகரிக்கப் படுகிறது. உங்கள் மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழையாதது எதிர் பின்விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்று வேறு யாரோ அறிவுறுத்திய பின்னர், ரசிகர்களுக்கு தனி விருந்து என்ற [இன்னமும் நிறைவேறாத] அறிவிப்பு நடக்கிறது. இப்படி ஏன் இன்னொருத்தர் சொல்லிய பின்தான் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டுமா?
//அவரின் வாய்ஜாலங்களுக்கு மயங்கி ரசிகனாகப் போவதில்லை.// எந்த ஒரு நடிகனின் படங்களும் "நாங்கள் அந்த நடிகனின் தீவிர ரசிகர்கள்" என்று தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொண்டு, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் போன்ற இன்னும் பல கூத்துகளை செய்பவர்களால் மட்டும் ஓடுவதில்லை. நல்லா இருக்கும் எந்தப் படத்தையும் நான் பார்ப்பேன் என்று பார்க்கும் பொதுவான சினிமா ரசிகர்களால் மட்டுமே ஒரு திரைப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். [பாபா, குசேலன் போன்ற படங்களை தீவிர ரசிகர்களால் மட்டுமே ஓட்டி விட முடியவில்லையே? இவர்கள் தயவை மட்டுமே நம்பி இருந்தால் அந்த நடிகன் தலை மேல் துண்டை போட்டுக் கொண்டுதான் போக வேண்டும்]. இது போன்ற பொதுவான ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு நடிகன் தொடர்ந்து படங்களில் நடித்து நிலைத்திருக்க முடியாது. ஆனால் படம் நன்றாக இருந்தால் கட்டவுட்டுக்கு பாலூற்றும் ரசிக பெருமக்கள் இல்லாமலும் படம் வெற்றியடைய முடியும். ஆகையால், இந்த நடிகன் எங்களுக்கே சொந்தம், அவருக்கும் எங்களுக்கும் நடுவில் யாரும் மூடை நுழைக்க வேண்டாம், நாக்கை நீட்ட வேண்டாம் என்ற வசனங்கள் தேவையில்லை.
இந்த இடுக்கை தமிழிஷில் பிரபலமானதாலும், //உங்களுக்கு என்ன தோணுதோ, தயங்காம சொல்லுங்க// என்று நீங்கள் போட்டிருந்த படியாலும் எனது பின்னூட்டங்களைப் போட்டிருக்கிறேன். இவை என்னுடைய சொந்தக் கருத்துக்கள். இவை உங்கள் மேல் திணிக்கப் பட்ட கருத்து அல்ல. நான் சொன்னவற்றில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை. என் கருத்துக்கள் யார் மனதையும் புன்படுத்துவதற்க்காக எழுதப் படவில்லை. என் மனதில் பட்டதை பதிவு செய்துள்ளேன். அவ்வளவுதான்.
பதில் எழுதுவதற்கு முன்பு ஒன்றை சொல்லியாக வேண்டும்... நான் ஒன்றும் ரஜினி எதிர்ப்பாளன் அல்ல... நானும் ரஜினியை ஒரு ரசிகனாக பல படங்களில் ரசித்திருக்கிறேன்... நான் இதற்கு முன்பு எழுதிய சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள் மற்றும் எந்திரன் படம் குறித்த இரண்டு பதிவுகளையும் படித்தால் தெரியவரும்...
// "ரஜினி தன் மகள் திருமணத்துக்கு பிரியாணி போடுகிறேன் என்று பொய் சொல்லி எந்திரன் பார்க்க வைக்கிறார்" //
இப்படி ஒரு வரியை நான் எனது பதிவில் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தவில்லை... தவிர நீங்கள் எழுதியுள்ள இந்த வரியில் ரஜினி ரசிகர்கள் பிரியாணிக்கு அலைந்தவர்கள் என்பது போன்ற அர்த்தம் வருகிறது... உண்மை என்னவென்றால் ரஜினி ரசிகர்கள் விருந்தை விரும்புவது ஒரு வாய் சோற்றுக்காக அல்ல... தங்கள் அபிமான நடிகனை அருகில் இருந்து பார்க்கலாம், அவனது மகள் திருமணத்தை பார்க்கலாம், என் தலைவன் எனக்கு விருந்து வைத்தான் என்று நாலு பேரிடம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் என்ற உயரிய எண்ணத்தில் மட்டுமே...
// அவருடைய மகள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை என்றோ? பிரியாணி போடவில்லை என்றோ கோபித்து கொள்ள போவதில்லை //
கண்டிப்பாக கோபித்துக்கொள்ள மாட்டார்கள்... ஆனால் விருந்து உண்டு என்று சொல்லிவிட்டு இப்பொழுது இல்லாமல் போனதில் ஏமாற்றம் மட்டுமே அடைவார்கள்...
// தனக்கு நடனம் தெரியாது என்றுதானே சொல்லி இருக்கிறார்? எல்லோரும் பிரபுதேவா போல, விஜய் போல கமல் போல ஆடி விட முடியுமா? அவர்களுக்கு எளியதாக தோன்றும் சில நடன அமைப்புகள் எனக்கு கடினமாக தோன்றும். எனக்கு எளிதாக இருக்கும் அமைப்புகள் இன்னொருவருக்கு கடினமானதாக இருக்கும். இதை ஒரு பிரச்சனை என்று சொல்லலாமா? //
பலமுறை ரஜினியின் அந்த பேட்டியை சன் டி.வியில் பார்த்து சலித்துப்போய் எழுதிய வார்த்தைகள் அவை... இருப்பினும் உங்கள் வார்த்தைகளில் இருக்கும் நியாயத்தை ஒப்புக்கொள்கிறேன்...
// மைனா பற்றி ரஜினி புகழ்ந்தது பற்றி, ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்லும்போது இப்படி சொல்வது இயல்புதானே? //
அந்த கடிதத்தில் கடைசி இரு வரிகளை மட்டும் நீக்கியிருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது... எதற்காக தன்னால் செய்யமுடியாத ஒரு விஷயத்தை வெறும் பேச்சுக்காக குறிப்பிட வேண்டும்...
கன்னடனை உதைக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்ட செய்தியைப் பற்றி விரிவாக எழுதாதது ஏன்...?
மற்றபடி உங்களுக்கு என்மீது தனிப்பட்ட கோபம் இல்லைஎன்று நம்புகிறேன்... அப்படி எதுவும் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...
மேலும் இந்தப் பதிவில் இன்னும் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறேன்... அதையும் படித்துப் பார்க்கவும்...
http://timeforsomelove.blogspot.com/2010/12/blog-post_12.html
ரஜினி ஒரு மாமனிதர்
ரஜினியின்னு பேர கேட்டாலே வயித்தில கடுப்பு வாறவங்களுக்கு பதில் சொல்வது விழலுக்கிறைத்த நீர் போலத்தான், பாலா இந்த பசங்களுக்கு பதிலளித்து உங்க நேரத்தை வீணாக்கிக்காதீங்க, இது என்னோட சொந்த அனுபவம். யாராலும் யாரையும் 100 வீதம் திருப்திப்படுத்த முடியாது. குத்தம் கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம், இவங்க மாதிரி பேசிறதின்னா காமராஜரிலையும் குத்தம் கண்டு பிடிக்கலாம், இவர்களை லூசில விடுங்க. இவர்களது பிதற்றல்கள் சந்திரனை பார்த்து நாய் குலைக்கிற மாதிரித்தான், ரஜினிக்கு இவர்களால் எதுவும் ஆகப்போறதில்லை.
மைனாவை ரஜினி பாராட்டியது மைனாவுக்கு வணிகரீதியா எவளவு பிளஸ் என்பது அதன் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். இது மைனா தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல எந்த தயாரிப்பாளருக்கும் தெரியும். 'உனக்காக என்ன வேணுமின்னாலும் செயவேன்' என்பது எப்படி ஒரு மிகைப்படுத்தப்பட்ட அன்பின் வெளிப்பாடோ அதேபோலத்தான் ரஜினியும் மைனா விடயத்தில் சொன்னது.
ரசிகர்களுக்கு விருந்து வைப்பதிலுள்ள சிரமம் ரசிகர்களாகிய எங்களுக்கு தெரியும், எங்களுக்கில்ல இவங்களுக்கும் தெரியும், ஆனா வயித்தெரிச்சலை அவங்களும் போக்கிக்க ஒரு சந்தர்ப்பம் வேணாமா? அந்த சந்தர்ப்பமா இதை அவங்க 'தாங்க செய்யிறது பிக்காலித்தனம்' என்று தெரிஞ்சே பயன்படுத்திக்கிறாங்க.
ரஜினியின் டான்ஸ் மூவ்மன் பற்றி பிரபுதேவாவே பலதடவை புகழ்ந்துள்ளது இவர்களுக்கு தெரியாதது, டான்சின்னா கண்டபடி ஆடுரதின்னு நினைக்கிறவங்க கிட்ட பேசி பலனில்லை. ரஜினிக்கு ஆடதேரியாதது தப்பின்னா எம்.ஜி.ஆர், சிவாஜி தொடக்கம் இன்றைக்கு அஜித், விக்ரம் வரை எல்லோருமே தப்புத்தான் (அஜித்தை உதாரணத்துக்கு இழுத்ததுக்கு சாரி). ஆட தெரிஞ்சா போதுமின்னா விஜய்க்கு இணையா இன்றைக்கு சினிமாவில யாருமில்லை.
இவர்கள் காமடியிலேயே சூப்பர் பாட் என்னான்னா ரஜினியை இவங்க ரஜினி ரசிகராவே கேள்வி கேப்பாங்களாம், ஹி ஹி கேக்கிறவன் கேனயனின்னா கமல் கௌதமியோட ஜஸ்டு பிரன்சிப் என்று சொல்லுவாங்க போல.
இந்த காமடி பீசுகளுகளை லூசில விட்டுடுவோம்.
ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மட்டுமே சொந்தம் என்றால் படங்களை எடுத்து அவற்றை சி.டி.யாகப் போட்டு உங்கள் வட்டத்திற்குள் மட்டும் போட்டு பார்த்துக் கொள்ளுங்களேன், அங்கே யார் வந்து கேள்வி கேட்கப் போகிறார்கள்? ஒரு நடிகனின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு உங்கள் பிடித்த நடிகனின் படங்கள் தொடர்ந்து வர வேண்டும், அவற்றை நீங்கள் ரசிக்க வேண்டும் என்றால் கூட, படம் நன்றாக இருக்கிறது அதனால் பார்க்கிறேன் என்று சொல்லும் சாதரணமானவர்களின் ஆதரவும் வேண்டும். அது இல்லை என்றால் நீங்களும் இல்லை உங்கள் ஸ்டாரும் இல்லை. கட்டவுட்டுக்கு பால் ஊற்றுபவன், காவடி தூக்குபவன், மொட்டையடிப்பவன், அலகு குத்துபவன், அதிகாலையில் எழுந்து நீராடி அங்க பிரதட்சணம் பண்ணிக் கொண்டு திரையரங்குக்கு வந்து மங்களம் பாடுபவன் இவர்கள் ஆதரவு இல்லாமலும் படங்கள் வெற்றியடையும். ரசிகன் என்று காண்பித்துக் கொள்வதற்காக உங்கள் குடும்பத்தினரை கொடுமைப் படுத்தி பணத்தை கட்டவுட்டுக்கு பாலூற்றவும், படத்தின் preview பார்க்கவே நூற்றுகணக்கில் செலவு செய்தல், முதல் நாளே படம் பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் விரயம் செய்யாமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். உங்களால் உங்கள் குடும்பத்துக்கும் தொந்தரவு, அந்த நடிகனுக்கும் தொந்தரவு, பொது மக்களுக்கும் இடைஞ்சல், பூனையின் உபகாரம் குறுக்கே வராமல் இருந்தால் போதும்.
பூனையின் உபகாரம் குறுக்கே வராமல் இருந்தால் போதும்///
ஆமாம் உங்கள் கமெண்ட் அப்படித்தான் உங்களை சொல்கிறது...
சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எந்தப் போடும் ஓடும், எது ஓடாதுன்னு அறுதியிட்டு யாராலும் இதுவரை சொல்ல முடியவில்லை. முப்பது நாற்பது வருடங்களாக படங்களை வாங்கி விற்று, சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே இந்த நிலை தான். ஆனால் இங்கே சில வருடங்களாக வயிறு செமிககாமல் இருக்கிறதே என்று பதிவு போடத் துவங்கிய நண்பர் ஒருவர் குசேலன் படம் ஏன் ஓடவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்.
அவை: தவறான விளம்பர உக்திகள், சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் 'அரசியல்' நடவடிக்கைகள், ரஜினி பங்கு 25 % என்பதை மறைத்து 100% என விளம்பரப்படுத்தி, அதிகவிலைக்கு விற்ற தயாரிப்பாளரின் பேராசை. மேலும் பாபா படத்துக்கு அப்புறம் ரஜினி சொந்தப் படமெடுக்காததுக்கு அவர் கண்டுபிடித்துள்ள காரணம்: அரசியல் சாக்கடைகள் சிலர் செய்த அட்டூழியம். அதாவது படம் பார்க்கப் போகும் ஒவ்வொருத்தரும் படம் தயாரிக்க ஆரம்பத்திலிருந்து செய்தித் தாட்களை வாங்கி என்னென்ன கலாட்டவெல்லாம் நடந்தது என்று டயரி போட்டு குறித்துவைத்துக் கொண்டு, நான்கைந்து பட்டி மன்றங்களை போட்டு அலசி ஆராய்ந்து அந்தப் படத்துக்கு போகலாமா வேண்டாமான்னு என்று முடிவெடுக்கிறார்கள். என்னதான் கேணப் பயல்கலாக இருந்தாலும் இந்த பிக்காலித்தனமான காரணங்களை நம்புவானா? படம் ஓடாததற்க்குக் காரணம் அந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கவில்லை. படம் எடுப்பதை ஒருத்தர் நிறுத்திய காரணம் நஷ்டத்தை தாங்க முடியாது. ரொம்ப சிம்பிள். ஆனாலும் அந்த நடிகர் மீதுள்ள பக்தி கண்ணை மறைக்கிறது, இஷ்டத்துக்கும் இல்லாத கப்சாக்களை அள்ளி விடுகிறார். ஆனாலும் அடுத்தவர்களை பிக்காலித் தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார், என்ன கொடுமை இது?
//ஆமாம் உங்கள் கமெண்ட் அப்படித்தான் உங்களை சொல்கிறது...
// உங்களுடைய இடுக்கைகளுக்கு நான் பின்னூட்டமிடவில்லை.
ஒரு நடிகர் ஒரு படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதால் அந்தப் படத்துக்கு வணிகரீதியாக பிளஸ் ஆகி பிச்சுக்கிட்டு ஓடி விடும். அதுசரி, ஜக்குபாய் படத்துக்கும் கூடத்தான் அவர் போய் பேசினார் ஏன் படம் ஓட வில்லை. அவ்வளவு ஏன் அவர் நடிக்த்த சில படங்களே கூட படுதோல்வி அடைந்தனவே, அன்றைக்கு சில கூட்டங்களை நடத்தி வணிகரீதியாக பிளஸ் கொடுத்து ஓட வைத்து விநியோகஸ்தர்களைக் காப்பாற்றியிருக்கலாமே? மற்ற படங்கள் ஓடுவதற்கு எங்கள் தலைவர்தான் காரணம், அவர் படங்கள் ஓடாவில்லை என்றால் அன்றைக்கு கேமராமேனுக்கு வீட்டில் சண்டை, தயாரிப்பளருக்கு பேதி என்று சப்பையான காரணங்கள். பிடித்த நடிகர் மீதி மதிப்பு இருக்க வேண்டியததுதான், அதற்காக இப்படியா ரீல் விடுவது?
@எப்பூடி..
// சந்திரனை பார்த்து நாய் குலைக்கிற மாதிரி //
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுமா நண்பரே...
யதார்த்தமான இடுகை பாராட்டுக்கள் நண்பா
கோடிகணக்கில் இதயங்களை ஆளும் நம் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ரஜினி கேரக்டர்கள் பற்றிய தொடர் பதிவு இட்டுள்ளேன் பார்க்கவும்
@Jeyadev Das,
Hello sir, we(rajini fans) will take care of our life, please stop worrying about us. What we are expecting from people like you is //பூனையின் உபகாரம் குறுக்கே வராமல் இருந்தால் போதும்//
Instead of writing and wasting your time, please do some good things to others.
We many are in good jobs and taking care of our family well (better than you). Rajini fans club started the "blood bank" from 1983 and so far more than 1 lac people donated their blood and this will continue....like that many other good things are done by rajini fans...but for your eyes you can see only "cut out" and other celebrations happening during the movie release.
Now you yourself decide where is the problem.
@Philosophy Prabakaran,
Your criticism is better than many who comment against Rajini sir. Rajini never hurted anyone personally (except that "Uthaikka vendama" - for this also you knew how that meeting went on and what Sathyaraj had spoken) and Rajini always give importance to Relationship. I feel he is very nice man .....if you do not feel , then it is not his mistake.
@karthikkumar
நன்றி பங்காளி
@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி நண்பரே...
@ஆர்.கே.சதீஷ்குமார்
நண்பரே பெரிய லிஸ்டா போட்டு அசத்தீட்டிங்க
மிக்க நன்றி
@NKS.ஹாஜா மைதீன்
மிக்க நன்றி நண்பரே
@விக்கி உலகம்
ம்ம் அது கூட கொஞ்சம் உண்மைதான்...
@Jayadev Das
நண்பரே உங்கள் கருத்துக்களை படிக்க நிறைய கால அவகாசம் தேவை படுகிறது. ஆகவே கொஞ்சம் பொறுத்து பதில் போடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
//ஆகவே கொஞ்சம் பொறுத்து பதில் போடுகிறேன்.//Don't scold me, OK!
@philosophy prabhakaran
உங்கள் சில கருத்துக்களுக்கும் பதிலளிக்க கால அவகாசம் இல்லை. இன்டர்நெட் பிரச்சனை. கொஞ்சம் பொறுத்து பதில் அளிக்கிறேன். மற்றபடி தங்களை தாக்க வேண்டுமென்ற நோக்கில் நான் இந்த பதிவை எழுதவில்லை. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அவசியமும் கிடையாது. என்னைப்போல நீங்களும் மனதில் தோன்றியதைத்தானே எழுதினீர்கள்.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி நண்பரே
@எப்பூடி..
//இந்த காமடி பீசுகளுகளை லூசில விட்டுடுவோம்.
ரைட்டு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@Jayadev Das
என்னுடைய பதிவுகளையும் கருத்துக்களையும் பார்த்தாலே உங்களுக்கு புரியும். நான் யாரையும் திட்டுவதில்லை.
ஹா....ஹா.ஹா....ஹா.......Thanks
என்ன சதீஸ், படிச்சு நல்ல வேலையில இருக்கீங்க இன்னும் என்னென்னமோ சாதிச்சிருக்கீங்க, ஆனாலும் பின்னூட்டங்களை தமிழில் போட மட்டும் கற்றுக் கொள்ள முடியவில்லையா? [பயபுள்ள ஆங்கிலத்தில் எழுத இவ்வளவு கஷ்டப் படுதேன்னு நானும் 'hurted' ஆயிட்டேன்!! :-))]. //What we are expecting from people like you is //பூனையின் உபகாரம் குறுக்கே வராமல் இருந்தால் போதும்// // .நான் உங்க எல்லோரையும் வாங்கப்பா பிரசங்கம் பண்ணுறேன்னு கூப்பிடல, இந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம்தான் போட்டிருக்கிறேன், பதிவுலக கருத்துச் சுதந்திரப் படி இது அனுமதிக்கப் பட்டது தான். மேலும், நான் சொல்வது முற்றிலும் சரியாக இருக்கும்னு நான் சொல்லவில்லை என்று முன்பே சொல்லிவிட்டேன். இது என்னுடைய கருத்து, நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமென்று நான் சொல்லவில்லை. //Instead of writing and wasting your time, please do some good things to others. // இதுக்கு பதில் நீங்க சொன்னதேதான். please stop worrying about me. Instead of writing and wasting your time, please do some good things to others.
//We many are in good jobs and taking care of our family well (better than you). // அத நீங்களே சொல்லக் கூடாது இரண்டு பேரோட குடும்பத்தையும் நேரில் பார்த்ததுக்கப்புறம் தான் முடிவு செய்ய வேண்டும்.
//Rajini fans club started the "blood bank" from 1983 and so far more than 1 lac people donated // நல்லது வரவேற்கிறேன்.
//Now you yourself decide where is the problem.// ஒரு நடிகருக்கு ரசிகர்களா இருக்கீங்க, அவர் மேல காட்டும் அதீத பற்று, அவருக்காக எதையும் செய்வேன் என்ற ஆழ்ந்த ஈடுபாடு இவை எல்லாம் என்னைப் பொறுத்த மட்டில் தப்பில்ல. அதே சமயம் தலையில் பாலூற்றுவது, மொட்டையடிப்பது, காவடி தூக்கிவது, அலகு குத்துவது, அங்க பிரதட்சணம் செய்வது இவை அத்தனையும் கோவில்களில் இந்துக்கள் இறைவனுக்குச் செய்வது, சொந்த வாழ்க்கையில் எந்த மனிதனுக்கும் செய்யப் படுபவை அல்ல, நாம் காலம் காலமாகக் கடை பிடித்துவரும் வழக்கமும் அல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணம். இவற்றை ஒரு மனிதனுக்கு செய்து ஒரு மதத்தில் உள்ள நம்பிக்கையை கேவலப் படுத்தி கொச்சைப் படுத்தும் செயலாகும். அவரைப் பற்றி யாரவது விமர்சனம் செய்து எழுதினால் அந்த நடிகர் தவறே செய்யாமல் நூறு சவிகிதம் சரியாக இருக்க அவரொன்றும் அவதாரப் புருஷர் இல்லை என்றே உங்களில் சிலரே சொல்கிறீர்கள். இருந்தும் அவரை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்கிறீர்களே அது ஏன்?. மேலும், நடிப்பு என்பது வேறு அரசியல் என்பது வேறு. நடிகர் படங்களில் உலகில் உள்ள எல்லா தீவிர வாதிகளையும் பிடிப்பார், நிஜத்தில் அவர் ஒரு கொசுவை கூட பிடிக்கத் தெரியாதவராகக் கூட இருக்கலாம். இதை மறைத்து, மக்களின் ஏமாளித் தனத்தைப் பயன் படுத்தியும் நடிகனின் புகழை துஷ்பிரயோகப் படுத்தியும் அவனை ஆட்சியில் உட்காரவைத்து ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். எல்லோரும் இப்படி என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் ரசிகர்கள் சந்திப்பு என்று நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்வியே பிரதானமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்து ஓடாய் தேய்வதர்க்குத் தான் நீங்கள் எல்லோரும் இப்படித் துடிக்கிறீர்கள் என்பதை கழுதை கூட நம்பாது, அவ்வளவு ஏன் அடிமுட்டாள் என்று தன்னையே சொல்லிக் கொள்ளும் என் பதிவர் நண்பர் கூட நம்ப மாட்டார். கேரளா மக்கள் போல அறிவாளிகளாக நம்ம சனம் இருந்திருந்தால் எந்தக் கவலையுமே இல்லை. அனால் ஏமாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்.
குறையில்லாத மனிதர்களே கிடையாது. குற்றம் கண்டுபிடிப்பதென்றால் யார் மீது வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். தவறே செய்யாமல் இருக்க அவர் ஒன்றும் அவதாரப் புருஷர் இல்லை. நூறு சதவிகிதம் சரியானவர்கள் யாரும் இல்லை........[யப்பா தாங்க முடியலைடா சாமி] இதெல்லாம் சரி. அப்படியென்றால், 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு எற்பட்டுவிட்டதேன்னு யாரும் ஒரு அமைச்சரைப் பார்த்து குறை சொல்லவே முடியாது. ஆயிரக் கணக்கில் இனப் படுகொலை நடந்ததேன்னு ஒரு நாட்டின் அதிபரைப் பார்த்து யாரும் சொல்லக் கூடாது. எங்க பார்த்தாலும் ஊழல் ஆட்சி சரியில்லை என்று யாரும் ஒரு முதல்வரைப் பார்த்து யாரும் சொல்லவே முடியாது. இதையெல்லாம், எல்லோரும் தவறிழைக்கக் கூடியவர்கள் தான், இவர்களும் தவறிழைத்து விட்டார்கள் என்று சமாதானம் செய்து கொண்டு கம்மென்று இருந்துவிட வேண்டும். இதைவிட பிக்காலித் தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
@Jayadev,
Sorry for my comments in english that too not in good english:) Mostly I do these things from office:)
Few fans are really doing too much that was already condemned by Rajini. Also which is very occasional.(now once in 3 years).
There are many other serious things in society like environmental pollution and corruption.
Compared to that these celebrations usually do not disturb people and fans are enjoying.
Why you are so angry on these?
Enna sir - English okay va?
(guess you are enjoying in finding fault with others)
அன்புள்ள சதீஷ், தங்களது அன்பான பதில்களுக்கு நன்றி. ரஜினி அவர்கள் மீது நடிகர் என்ற முறையிலோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ எனக்கு எந்தவித கோபமும் கிடையாது. ரஜினி ரசிகர்கள் மீதும் எந்தக் கோபமும் கிடையாது. நாங்கள் சிறு வயது முதல் ரஜினி படங்களை பார்த்து ரசித்து வளர்ந்தவர்கள். இப்போது கூட அவரிடம் பிடிக்காத/வெறுக்கக் கூடிய விஷயம் எதையாவது சொல் என்று சொன்னால் என்னால் ஒன்று கூட சொல்ல முடியாது. அவர் அப்படி என்ன செய்துவிட்டார் வெறுப்பதற்கு? இதுவரை செய்யவில்லை. நாளை என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? ஆனால், குஷ்புவுக்கு கோவில் கட்டுகிறேன் என்று கிளம்பியவர்கள், அப்புறம் தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் முதலிட்ட நான் முன்னமே பலமுறை சொன்ன வேலைகளைச் செய்பவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் தலைவனின் வீட்டு நாய் கக்கா போகவில்லை என்றாலும் தீக்குளிக்க ரெடியாக இருப்பவனை தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும். மேலும், தமிழகத்தை சினிமாக்காரன் மட்டும்தான் ஆட்சி செய்ய முடியும் என்ற கேவலமான நிலையை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சினிமாக்காரனும் அரசியலுக்கு வரலாம் என்பது வேறு, சினிமாக் காரன் மட்டும்தான் அரசியலுக்கு வர முடியும் என்பது வெட்கக் கேடானது. நடிப்பிற்கும் நாட்டை ஆள்வதற்கும் என்ன சம்பந்தம்? [தங்களது ஆங்கிலத்தை குறை சொல்ல வில்லை, பொதுவாக தெலுங்கு பேசுபவர்கள் speaked/spoked, putted, இந்த மாதிரி பேசி/ எழுதி சிரிக்க வைப்பார்கள் வேறொன்றுமில்லை!!]
ரஜினி ஒரு அமைதி சூறாவளி
ரஜினி இன்றி ஒரு அணுவும் தமிழ்நாட்டில் அசையாது
மகாத்மா இறந்து போன ரஜினி
ரஜினி ஒரு அகில உலக சூப்பர் ஸ்டார் ...
எதிர்கால நிரந்த தமிழக முதல்வர் ரஜினி
இந்த பதிவில் எங்கள் டாக்குடரை வம்புக்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்
மனித கடவுள் ரஜினி வாழ்க
இந்த சலசலப்பில் மாட்டப்பட விரும்பாமல் ஒதங்கியிருந்து விட்டேன்... நான் நடிகர்களின் ரசிகனில்லை... அவர்கள் நடிப்பின் ரசிகன்.. அவருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
@Jayadev Das
நண்பரே உங்கள் கருத்துக்களை படித்தேன். என் பதிவின் நோக்கம் ரஜினி ஒரு சிறந்த மனிதர் என்று உங்களுக்கு புரிய வைக்க அல்ல. ரஜினியை பிடிக்காதவர்கள் தான் எண்ணத்தை தெரிவிக்க வெளிப்படையாக பேசாமல் தான் இவ்வளவு நாள் ரசிகனாக இருந்தேன் இப்போது இல்லை என்று சொல்வது போல கூறுவது கடுப்பளிக்கிறது. நீங்கள் சொல்வது போல ரஜினி அயோக்கியன் என்றால் அதை மக்களிடம் சொல்லுங்கள். ரசிகனிடம் சொல்லாதீர்கள். அப்படியே தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் பேசாமல் கேரளா சென்று விடுங்கள். நான் பிறந்தது காமராசர் பிறந்த விருதுநகரில். அவர் மீது ஆயிரம் குறைகளை எங்கள் ஊர்க்காரகள் அடுக்குவார்கள். அந்த ரீதியில் தான் யாரும் நூறு சதவீதம் உத்தமர் இல்லை என்று சொன்னது. மேலும் நாட்டில் என்ன நடந்தாலும் (ரசிகர் அல்லாதவர்கள்) ரஜினியை திரும்பி பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.
@Jayadev Das
சிவகாசி படத்தில் அசினின் விரலை விஜய் தொட, விரல் கையில் இருக்கு. கை உடலில் இருக்கு. இவன் என் உடம்ப தொட்டுட்டான் என்று கத்துவார். அதே போல ரஜினி என்ன சொன்னாலும் அதற்கு கண் காது மூக்கு வைப்பது வேலையாக இருக்கிறது. இந்த மாதிரி செய்பவர்களை உதைக்க வேண்டாமா என்று ரஜினி சொல்ல. நேரடியாக பார்க்காமல் ரஜினி கன்னடனை உதைக்க சொல்கிறார் என்று பிளேட்டை திருப்பி அதில் தன் வயிற்றெரிச்சலை தீர்த்து கொண்டார்கள். எதுக்கு சார் பிரச்சனை. என் பதிவில் நான் சொல்ல வந்தது நான் அவரை புரிந்து கொண்ட ரசிகன். நீங்கள் மக்களுக்கு நல்லது நினைக்கும் சமூகவாதி. என்னை திருத்த பார்க்காதீர்கள். மக்களை காப்பாற்றுங்கள். ஆனால் இனிமேலும் ரசிகர்களிடம் ஒரு கேள்வி, நானும் ரஜினி ரசிகன்தான் என்று ஆரம்பிக்காதீர்கள்.
@philosophy prabhakaran
நண்பரே இது குறித்து எழுதவேண்டும் என்று நிறைய நாள் யோசித்ததுண்டு. ஆனால் சரியாக உங்கள் பதிவை படித்த பிறகு எழுத வேண்டியாகி விட்டது. உங்கள் மீது எந்த கோபமோ வெறுப்போ கிடையாது. ஒரு விஷயம். ரஜினியிடம் நீங்கள் ஏதாவது தவறு கண்டீர்கள் என்றால் வெளிப்படையாக எழுதுங்கள். அதற்கு பதில் வரும். ஒரு சில நண்பர்கள் உணர்ச்சி வசப்பட்டு கடுமையான வார்த்தைகள் உபயோகிக்கலாம். அது வெறுப்பில் வருவதல்ல. ரஜினி மீதான அதீத அன்பில் வருவது.
நண்பர்களே ஒரு உண்மை. விவாதத்தில் பல உண்மைகள் வெளிவரும். ஆனால் யாரும் ஜெயிக்க முடியாது. நீங்கள் விவாதத்தில் ஜெயிக்க வேண்டுமானால் நண்பர்களை இழக்க வேண்டி வரும். என்னதான் ஒப்புக்கு தோல்வியை ஒப்புக்கொண்டாலும், உள் மனதில் இல்லை இல்லை நான் சொல்வதுதான் சரி என்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நன்றி
அன்புள்ள நண்பர் பாலா அவர்களுக்கு, தங்களது பதிலுக்கு நன்றி. எனக்கு ரஜினி படங்களைப் பிடிக்கும், நான் அவரது ரசிகனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. [முதலில் ஒரு வரையறை போட வேண்டும், என்னவெல்லாம் இருந்தால் ஒருத்தரை ரசிகன் என்று சொல்லலாம் என்று]. ரஜினி படங்களில் அவரது அறிமுகக் காட்சிகள் [முத்து படத்தில் வருவது போல], அவரது காமெடிகள், சொல்ல வருவதை நறுக்கென்று சொல்வது இவையெல்லாம் பிடிக்கும். பொது வாழ்க்கையில் தன்னை இந்த அளவுக்கு வளரக் காரணமாக இருந்தவர்களையும் [பால சந்தர் போல], மேலும் சிவாஜி போன்றவர்களின் குடும்பங்களுக்கும் அவர்கள் கஷ்டங்களில் இருக்கும்போது அவர்களுக்காக ஒரு படம் செய்து அவர்களை கஷ்டத்திலிருந்து அவர் காப்பாற்றுவது பிடிக்கும், மேலும் தயாரிப்பாளர்கள் தன்னால் நஷ்டமடைந்தால் பணத்தை திருப்பிக் கொடுத்து, அடுத்த படத்தை அவர்களுக்கே கொடுத்து தூக்கி விடும் பண்பைப் பிடிக்கும். பெங்களூரில் பிறந்து வளர்ந்த மராட்டியர் எனினும், ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்து ஒரு பொறுப்புள்ள தகப்பனாக இன்றளவும் இருந்து வருவது பிடிக்கும். சரி, இப்போ அவர் மேல் எனக்குப் பிடிக்காதது என்னன்னு கேட்கிறீர்களா? ஹா... ஹா..ஹா.... என்னாலா எதையுமே சொல்ல முடியாது. எதுவுமே இல்லை.
அரசியல் கட்சிகளை உண்மையில் தாங்கி நிற்ப்பவன் என்று பார்த்தல் அது எதையுமே எதிர்பார்க்காமல் கட்சிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அடிமட்டத் தொண்டனாகத்தான் இருப்பான். இவனுக்கு எந்த ஆதாயமுமே இருக்காது, ஆனால் அதற்க்கு இவன் கொடுக்கும் உழைப்பைப் பார்த்தால் வியக்க வைக்கும். இந்த அளவுக்கு ஈடுபாடு வட்டம், மாவட்டம் என்ற அளவில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கே இருக்காது, குரங்கு மாதிரி கட்சி தாவும் சந்தர்ப்ப வாதியாக இருப்பான், ஆனாலும் வசதி வாய்ப்போடு இருப்பான். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சியாகும் போதும் இதே சங்கதிதான் நடக்கும். உண்மையான ரசிகனுக்கு ஒன்னும் கிடைக்காது. சில குள்ள நரிகள் மேலே உட்கார்ந்து கொண்டு எல்லா அட்டூழியங்களும் பண்ணிக் கொண்டிருக்கும். கடைசியில் இந்த சிலர் தான் மற்ற எல்லோரையும் கட்டுப் படுத்தப் போகிறார்கள் என்பதுதான் கொடுமை. இங்கே நான் சாடியிருப்பது நடிகரைப் பயன்படுத்தி தங்களது சொந்த நலத்தை மேம்படுத்திக் கொள்ள நினைப்பவர்களை. படங்கள் வெளியாகும் தேதிகளில் ரசிகர்கள் செய்யும் பாலாபிஷேகம், மொட்டையடித்தல், காவடி தூக்குதல் போன்றவற்றை நிச்சயம் ரஜினி போன்றவர்களே ஆதரிக்க மாட்டார்கள். இந்த மாதிரி வேலைகளைச் செய்பவர்கள் அவர்கள் வீட்டில் இருப்பவர்களையும் கஷ்டப் படுத்தி அந்த நடிகரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி, பொது மக்களுக்கும் இடைஞ்சல் செய்கிறார்கள். அதைத் தான் நான் எதிர்க்கிறேன்.
//இந்த மாதிரி செய்பவர்களை உதைக்க வேண்டாமா என்று ரஜினி சொல்ல. நேரடியாக பார்க்காமல் ரஜினி கன்னடனை உதைக்க சொல்கிறார் என்று பிளேட்டை திருப்பி அதில் தன் வயிற்றெரிச்சலை தீர்த்து கொண்டார்கள்.//ஹா...ஹா......ஹா...... என்ன சொல்றீங்க பாலா? கன்னடனை உதைக்கச் சொன்னதாக ரஜினி சொல்லவில்லை, சில விஷமிகள் அவ்வாறு கதை கட்டி விட்டார்கள் என்கிறீர்களா? உங்களுக்கே இது தமாஷாகப் படவில்லையா? கன்னடர்களுக்கு இங்கே இருப்பவர்கள் சொல்லியா தெரிந்தது? அவர்களே நேரிடையாக தொலைக்காட்சியில் பார்த்து அவர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொண்டார்கள் அல்லவா? அவர் உண்மையிலேயே கன்னடர்களை அவ்வாறு சொல்லவில்லை என்றால் அப்புறம் எதற்காக அவர்கள் கொதித்து எழுந்தார்கள், மன்னிப்பு கேட்கும் வரை இவர் படங்களை பெங்களூரில் வெளியிட விடமாட்டோம்னு நிறுத்தி வைத்தார்கள்? ஆக உங்க தலைவர் மேல இருக்கும் பிரியம் உங்க கண்ணை மறைக்குது, பழியை வேற யார் மீதோ போடுகிறீர்கள். கன்னடர்கள் நம்மை மாதிரி இல்லை. அன்பானவர்கள், சீண்டிப் பார்க்க நினைத்தால் அவர்கள் எந்த அளவுக்குப் போவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் மொழி, மாநிலத்தை கேவலமாக பேசுவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு சொல்ல வருவது, முதலில் அவ்வாறு பேசியதே தவறு, இங்கு தமிழர்களை திருப்தி படுத்த பேசிவிட்டு அங்கே மன்னிப்பு கேட்க வேண்டுமா என்பதுதான் கேள்வி? [இந்த விஷயமும் நீங்கள் இந்த இடுக்கையில் எழுப்பியதாலேயே நானும் அது பற்றி கூற வேண்டியதாயிற்
@ பாலா
// நீங்கள் விவாதத்தில் ஜெயிக்க வேண்டுமானால் நண்பர்களை இழக்க வேண்டி வரும் //
அதே... அதே... எனக்கு உங்கள் நட்புதான் முக்கியம்...
@ Jayadev Das
போதும்ன்னு நினைக்கிறேன் நண்பரே... நிறுத்திக்குவோம்...
//நீங்கள் சொல்வது போல ரஜினி அயோக்கியன் என்றால் அதை மக்களிடம் சொல்லுங்கள். ரசிகனிடம் சொல்லாதீர்கள்.//இதை நான் ஒரு போதும் சொல்லவில்லை, வேறு யாராவது சொல்லிருந்தால் என்னால் ஒன்னும் பண்ண முடியாது. நீங்கள் ஒருத்தாரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்கிறீர்கள், கடவுளைப் போல அவரைக் கருத வேண்டும் என்று உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கிறீர்கள்.அதை நான் எதிர்க்கிறேன். கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது உங்களுக்கு மகிழ்ச்சி வருவது உண்மை என்றால் தினமும் உங்கள் வீட்டில் ஒரு குடம் பாலை நீங்கள் மட்டும் தனியே இருந்து அவர் போட்டோ மீது ஊற்றுவீர்களா? மாட்டீர்கள். ஆக உங்கள் எண்ணம் பிறர் பார்க்க வேண்டும் என்பதே, நீங்கள் உற்றும் பாலால் அந்த கட்டவுட்டும் மகிழ்ந்து போகாது, அந்த நடிகனுக்கும் போய்ச் சேராது. தெரிந்தே மற்றவர்கள் பார்க்க ஷோ காட்டவே செய்கிறீர்கள். அது உங்கள் விருப்பம்.
@Jayadev Das
கன்னடனை உதைக்க வேண்டும் என்று ரஜினி சொல்லவே இல்லை என்று நான் சொன்னேனா.
அவர் கன்னடனை என்ற வார்த்தையை பயன் படுத்தவே இல்லை. பொதுவாக இந்த மாதிரி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உதைக்க வேண்டும் என்றுதானே சொன்னார். உடனே உங்களை மாதிரி நல்லவர்கள் கன்னடனிடம் உங்க ஊர்காரன் உங்களை உதைக்க சொல்கிறான் என்றும், இங்கே கன்னடனை உதைக்க சொன்னார் என்றும் தண்டோரா போட்டார்கள்
@Jayadev Das
உங்க ரூட்டுக்கே வர்றேன். ரசிகர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து ரஜினி கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யவில்லை. அவர் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டரில்தான் இதை எல்லாம் செய்கிறார்கள். கொண்டாடும் நோக்கில். யாரும் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் இதை செய்வார்கள்.
//அப்படியே தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் பேசாமல் கேரளா சென்று விடுங்கள்.// இப்போ நடக்குற ஆட்சியின் லட்சணம் உங்களுக்கே தெரியும். இருந்தும் குடுக்கும் கோழி பிரியாணியைத் தின்று விட்டு, சாராயத்தைக் குடித்துவிட்டு, பணத்தை வாங்கிப் பயில் போட்டுக் கொண்டு ஓட்டு அதே கருமாந்திரம் பிடிச்ச பயல்களுக்கே போடுகிறவனை என்ன சொல்வது? கடவுள் செயலோ என்னவோ, நிஜமாவே நான் இப்போ வெளியில் தான் இருக்கிறேன். பிறந்த ஊர் உருப்படாம நாசமா போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
//நான் பிறந்தது காமராசர் பிறந்த விருதுநகரில். அவர் மீது ஆயிரம் குறைகளை எங்கள் ஊர்க்காரகள் அடுக்குவார்கள்.// நான் உங்கள் ஊர் இல்லை, காமராஜர் என் சாதியும் இல்லை. இருப்பினும் அவர் மாதிரி சிறந்த தலைவர் இல்லை. அவரையே தோற்கடித்த மூடர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? அவரைத் தோற்கடித்த பாவத்துக்கு தமிழன் இன்னும் அனுபவிப்பான். ஒரு ரூபாய் அரிசி, எலிக்கறி, அரசு ஆஸ்பத்திரி, அப்படியே கண்ணம்மா பேட்டைதான்.
//உடனே உங்களை மாதிரி நல்லவர்கள் கன்னடனிடம் உங்க ஊர்காரன் உங்களை உதைக்க சொல்கிறான் என்றும், இங்கே கன்னடனை உதைக்க சொன்னார் என்றும் தண்டோரா போட்டார்கள்.//உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பெங்கலூருக்குள்ள எங்க போனாலும் தமிழ் பேசுவாங்க, புரிஞ்சுக்குவாங்க, யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. மேலும் அந்த சமயத்துல தமிழனைக் கனடால அவங்க உதைப்பாங்க, எவன் போய் வீதியில நின்னு பேசிகிட்டு இருப்பான்? பேசின அவன்தான் முதல் உதை வாங்குவான், அவன் என்ன பேசினான் என்பது அப்புறம்தான். சும்மா சொல்லாதீங்க பாலா சார்.
@Jayadev Das
நீங்கள் எதையுமே லிட்டரலாக மட்டுமே புரிந்து கொள்கிறீர்கள். நான் நீங்கள் போய் சொன்னீர்கள் என்று சொன்னது போய் பெங்களூருவில் நடுத்தெருவில் நின்று கொண்டு சொன்னீர்கள் என்று அர்த்தம் செய்து கொள்கிறீர்கள். மீடியாக்கள் அப்படி செய்து விட்டன என்று சொன்னேன்.
உதாரணமாக: கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்ட போது அங்கே என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் டிவியில் திரும்ப திரும்ப காட்டியது என்னவோ கலைஞரை அடித்து இழுத்து சென்றது போல.
உங்களைப்போல் என்னைப்போல் நாள் முழுவதும் இணையதளத்தில் அமர்ந்திருக்கும் தமிழர்கள் மிக குறைவு. அவர்களுக்கு போய் சேரும் செய்திகள் திரிக்கப்பட்டவை. படித்தவர்கள் நியூஸ் கேட்டுவிடு வியாக்கியானம் பேசுவதோடு சரி. ஓட்டுப்போடுவதென்னவோ அடுத்த வேளைக்கு சோறு போடுவனை தெய்வமாக நினைப்பவன். இது அவர்கள் தவறல்ல. முதலில் பொத்தாம் பொதுவாக முட்டாள்கள் என்று அழைக்காதீர்கள்.
@ஆர்.கே.சதீஷ்குமார்nalla irnga sir..nalla irrunga.. ungala pola nalu peru iruntha nadu velankidum....vazha valamudan...
பாலா அண்ணன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பதிவ பாக்கும் பொது... நா இத இப்ப தான் பாத்தேன்.. நண்பர் பிரபாகரன் வெளியிட்ட அந்த பதிவையும் நா ரொம்ப லேட்டா தான் பாத்தேன்..இல்லன்னா கண்டிப்பா அதற்கு பதில் பதிவு எழுதியிருப்பேன்...நானும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தலைவரின் ரசிகன்.....
தலைவரின் இமாலய வளர்ச்சி கண்டு பொங்கும் சில பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளுமே இதுபோன்ற தேவையில்லாத, சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவரிடமிருந்து அவர் ரசிகர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை, படங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதை தவிர..
அவர் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் அவருக்கு சொல்ல தேவையில்லை... என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் தனி விளம்பரங்களுக்க்காகவே அவரை வம்புக்கு இழுக்கின்றனர்.
ஒருவர் உலகமே வியந்த எந்திரனை, குட்டி பிசாசு படத்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார்.. அதாவது மற்றவர்களிடமிருந்து அவர் வேறுபட்டு இருக்கிறாராம்... இந்த ஜந்துக்களை என்ன சொல்வது?
கிரிக்கெட்டில் சச்சினை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? உண்மையை சொல்ல போனால் தலைவரை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது . அப்படி இருந்தால் போலியாக அவர்கள் அவர்களை ஏமாற்றிக்கொண்டு விளம்பரத்துக்காக நடிக்கிறார்கள் என்றே அர்த்தம்.
ஐஸ்வர்யா திருமணத்தின்போது பத்திரிக்கைகள் அடித்த லூட்டியில் எனக்கு கோவம் தலைக்கேறிவிட்டது.. அநேகமாக இதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்..
http://muthusiva.blogspot.com/2010/09/blog-post.html
@முத்துசிவா
அண்ணன் என்று சொல்லி என்னை பெரியவன் ஆக்கி விட்டீர்கள். எழுத்துலகை பொறுத்தவரை நான் மிக சிறியவன். ஒருவரை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் ரஜினி அதற்கு என்ன சொல்கிறார் என்று திரும்பி பார்ப்பது. அவர் கருத்து சொன்னால் நடுநிலையாளன் என்ற போர்வையில் திட்டுவது, கருத்து சொல்லாவிட்டால் ரசிகனின் கடிதம் என்ற போர்வையில் திட்டுவது ஆகிய செயல்கள் சிறுபிள்ளைதனமானவையே.
லேட்டா கருத்து சொன்னாலும் லேட்டஸ்டா கருத்து சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி
அப்புறம் சச்சினை எனக்கு பிடிக்காது என்று இரண்டு பதிவு எழுதி இருக்கிறேன். படித்து விட்டு திட்டாதீர்கள். அதில் கூட சச்சினை முன்னிறுத்தி மற்றவர்களை விமர்சிப்பதை கண்டித்திருப்பேன். சச்சினின் தனிப்பட்ட ஒழுக்கத்தை அல்ல.
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_26.html
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_27.html
Post a Comment