விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 15, 2011

காக்க வைப்பது, காத்திருப்பது - எது சுகம்?


இது கண்டிப்பாக காதல் சம்பந்தமான பதிவு அல்ல. சொல்லப்போனால் அதற்கு எதிரான பதிவு. நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது நம்மிடம் இல்லாத ஒரு நல்ல விஷயத்தை அடுத்தவரிடம் எதிர்பார்ப்போம். சிலருக்கு நம்மிடம் அந்த குணாம்சம் இல்லை என்றே தெரியாது. பலருக்கு  தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவரை கடிந்து கொள்வோம். சமீபத்தில் படித்த ஒரு பொன்மொழி, "நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்." இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதில் ஒரே ஒரு குணாம்சத்தை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது நேரம் தவறாமை. எல்லோரிடமும் இருக்கவேண்டிய, பலரிடம் இல்லாத இந்த குணம்தான் என்னை பொறுத்தவரை ஒருவரிடம் இருக்கவேண்டிய தலையாய குணம். 


தனக்கு வந்தால்தான் தெரியும்.... 


சந்திப்புகள், நிகழ்வுகள், விழாக்கள் ஆகிய பல இடங்களுக்கு நான் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது தவறாமல் நடக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த இடத்தில் நான்தான் முதல் ஆளாக இருந்திருக்கிறேன். குறித்த நேரத்திற்கு சுமார் 5 நிமிடம் முன்னமே சென்று விடுவதால், பத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. லேட்டாக வந்தவர்கள், "உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?" என்று நக்கல் விட்டதும் உண்டு. காத்திருத்தல் என்பது எவ்வளவு கடுப்பை கிளப்பும் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால், ஒரு முறை ஏதாவது செல்போன் சேவையின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு பஸ்ஸோ, ட்ரெயினோ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால், அந்த வண்டியை ஓட்டுபவரில் இருந்து, அந்த துறை மந்திரி வரை கிழித்தெடுப்போம். காலையில் மனைவி டிபன் ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டால் அவளோடு சேர்த்து அவளின் பெற்றோரையும் தாளிப்போம். காத்திருத்தலின் அவஸ்தையை உணரும் நாம், அடுத்தவரை காக்க வைக்கும்போது உணர்வதில்லை. அதுதான் இங்கே பிரச்சனை. கீழே இருக்கும் படத்தை பார்த்தாலே சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பலருக்கு பீபி எகிறும். அது போலத்தானே அடுத்தவருக்கும் இருக்கும்?  



கால தாமதம் ஏன்?

என் நண்பர் ஒருவர் பின்லாந்து சென்ற அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறினார்.  வெள்ளைக்காரன் இந்த வேலையை நம்மால் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாது என்று நினைத்தால், ஒன்று மறுத்து விடுவான் இல்லை அதற்கான காரணங்களை கூறுவான். நம்மாட்கள் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கி கொண்டு, பின்னர் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள். "எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்",னு வடிவேலு காமெடியா சொன்னாலும், அதுதான் உண்மை. தவறான திட்டமிடல்களே கால தாமதத்தின் முக்கிய காரணி. ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய தெளிவான திட்டமிடல் வேண்டும். சரியாக திட்டமிட்டு, அதற்கெற்றார்போல சமயோஜித செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியும். 


கால தாமதத்தின் இன்னொரு காரணம் அலட்சியம். ?கொஞ்சம் லேட்டானா என்ன குடியா முழுகி போயிடும்?", என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இது பெரும்பாலும் அந்த செயல்களில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கே வரும். அரசு அலுவலர்கள், உயரதிகாரிகல் ஆகியோர் இந்த மனப்பான்மையோடு செயல் படுவதே எந்த வேலையும் கால தாமதமாக நடப்பதின் முதல் காரணம். இந்த கால தாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது எனும்போது அவர்களுக்கு ஒருவித அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் கால தாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவ பாடத்தை கொடுக்கும். ஆகவே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் அலட்சியத்தால் கால தாமதம் செய்பவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. ஒரு நாள் அதே அலட்சியம் அவர்களை நோக்கி திரும்பும் வரை.... 

காலம் தவறாமல் இருப்பது எப்படி? 


என்னை பொறுத்தவரை காலம் தவறாமை என்பது தலைமை பண்புகளில் மிக முக்கியமானது. ஒரு இடத்துக்கு தலைவன் சரியான நேரத்துக்கு வந்தால்தான், அவனுக்கு கீழே இருப்பவர்களும் வருவார்கள். காலம் தவறாமை என்பது ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாட்டின் அளவுகோல். ஆகவே உங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் சரியாக வேலை வாங்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் காலம் தவறாமல் இருக்க பழகி கொள்ளவேண்டும். பிரச்சனை இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதை சரி செய்துவிட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும். 

முக்கியமாக சரியான திட்டமிடல் வேண்டும். அதற்கு கொஞ்சம் காமன் சென்ஸூம், கொஞ்சம் அனுபவ அறிவும் இருந்தாலே போதும். ஆறு மணி வண்டிக்கு, போன தடவை ஐந்து மணிக்கு கிளம்பியதால், வண்டியை தவறவிட்டோம் என்று தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என்று உணர்வதற்கு குறந்த பட்ச காமன் சென்ஸ் போதும். 

காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி ஒத்தி போடுதல். எந்த ஒரு செயலையுமே தள்ளி போட்டால், கண்டிப்பாக அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும். என் நண்பன் கரெக்டாக வண்டிக்கு கிளம்பும்போதுதான், செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணனும் என்று சொல்வான். அந்த அவசரத்தில் ரீசார்ஜ் கடையை தேடி அலைந்து, டென்ஷன் ஆவது வேறு கதை. குறைந்த பட்சம் கிளம்பும் முன்னரே ரீசார்ஜ் செய்திருக்கலாம். இதுபோல டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுப்பது, சட்டை இஸ்திரி செய்வது என்று சின்ன சின்ன வேலைகளை நாம் ஒத்திப்போடுவதால், அவை எல்லாம் கடைசி நேரத்தில் கியூவில் நின்று நம்மை பயமுறுத்தும். 

அடுத்தவர் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தல், ஆங்கிலத்தில் Standing on Others Shoes   என்று சொல்வார்களே. இதற்கு பெரிய மனது வேண்டும். ஆனால் இந்த பண்பு வந்து விட்டால் கண்டிப்பாக காலம் தாழ்த்த மாட்டோம். ஒட்டு மொத்தத்தில் சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி. என்னை பொறுத்தவரை நோய்க்கு மருந்து உண்பதை காட்டிலும், தடுப்பூசி போடுவதே புத்திசாலித்தனம். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

48 comments:

Unknown said...

மாப்ள நீங்க சொல்வது அனைத்தும் நிதர்சனம்...இருந்தாலும் நேரத்துக்கு சரியாக செல்லும் காரணத்தால் நான் எப்போதுமே பரிகாசத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்... கேட்டால் முதலில் வருபவன் தொண்டனாம் ஹிஹி...எவன் எப்படி இருந்தாலும் முடிந்த வரை நேரத்தை கடைப்பிடிக்கிறேன் என்பதில் ஒரு பெருமிதம் எனக்குண்டு எப்போதுமே ஹிஹி!

பால கணேஷ் said...

மற்றவர்களின் நேரத்துக்கு மதிப்புக் கொடுத்து நாம் சரியான நேர ஒழுங்கைக் கடைப்பிடித்தால் நம் நேரத்துக்கு மதிப்பும், நமக்கு மரியாதையும் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். எதற்குமே சரியான திட்டமிடலும், அலட்சியமின்மையும் வேண்டும் என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள் பாலா... அருமை. நன்றி.

Unknown said...

டைம் மனேஜ்மென்ட் அவசியம் எல்லோரும் கணவந்த்தில் கொள்ள வேண்டியது, சரியா சொன்னீங்க

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள உங்கள மாதிரிதான் நானும். ஆனாலும் அதற்கெல்லாம் கவலைப்பட தேவை இல்லை. நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலம் தவறாமல் இருப்பது நல்ல பழக்கம் தான்... முடிந்தவரை கடைபிடிப்பது ரொம்ப நல்ல பழக்கம்.


நம்ம தளத்தில்:
ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?

பாலா said...

@கணேஷ்

உண்மைதான் சார். எப்போதுமே நேரம் தவறாமல் இருப்பவருக்கு எல்லாமே சரியாக நடக்கும் என்பது என் நம்பிக்கை. நன்றி

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நன்றி நண்பரே

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

கருத்துக்கு நன்றி நண்பரே

rajamelaiyur said...

//அடுத்தவர் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தல், ஆங்கிலத்தில் Standing on Others Shoes என்று சொல்வார்களே. இதற்கு பெரிய மனது வேண்டும்.
//
உண்மைதான் .. தன்னை போல பிறரை என்னும் மனம் வேண்டும்

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

தமிழ் உதயம் said...

நேரம் தவறாமை, மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய குணம். அதை அழகாக சொல்லியது பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

சரியாக சொன்னீர்கள், ஒரு வெள்ளைக்காரனின் கம்பெனிக்கு வேலைக்கு இண்டர்வியூ போயிருந்தேன், அஞ்சி நிமிஷம் லேட்டா போனதுக்கு நோ சான்ஸ் சொல்லி இண்டர்வியூ எடுக்காமலே என்னை வெளியே தள்ளி விட்டார்கள், அதுதான் வெள்ளைக்காரன்..!!!!

Sathish said...

ச‌ரியா சொல்லியிருக்கீங்க‌.....சும்மா ப‌ழைய‌ பெருமைக‌ள‌ பேசுற‌துல‌ இருக்கிற‌ ஆர்வ‌ம் ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளை க‌டைபிடிக்கிற‌துல‌ இல்ல‌. அதுல‌யும் ச‌ரியாக‌ ந‌ட‌ந்துகிற‌வ‌ங்க‌ளை கிண்ட‌ல் ப‌ன்ற‌து ரொம்ப‌வே ஓவ‌ர்.

சுசி said...

மிக நல்ல பகிர்வு.

K.s.s.Rajh said...

சரியாகச் சொன்னீங்க பாஸ்
நேரம் தவறாமை மிகவும் முக்கியமான விடயம் ஆகும்....அதை எல்லோறும் கடைப்பிடிக்க வேண்டும்.

சக்தி கல்வி மையம் said...

ஒட்டு மொத்தத்தில் சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி.// ஒரு அற்புதமான விஷயத்தை சாதாரணமாக சொல்லி விட்டீர்கள்..

பகிர்வுக்கு நன்றி..

சென்னை பித்தன் said...

நேரம் தவறாமை பற்றிய நல்ல பதிவு.

shanmugavel said...

முக்கியமான கருத்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.

r.v.saravanan said...

சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி. என்னை பொறுத்தவரை நோய்க்கு மருந்து உண்பதை காட்டிலும், தடுப்பூசி போடுவதே புத்திசாலித்தனம்.

அருமையா சொன்னீங்க பாலா

சாரி கொஞ்சம் டயமாகிடுச்சு என்று அசடு வழிவதை விட சரியான நேரத்திற்கு செல்வதே சிறப்பானது

எப்பூடி.. said...

நீங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் அனுபவித்திருக்கிறேன், சில சமயங்களில் அடுத்தவர்களையும் அனுபவிக்க வைத்துள்ளேன், இரண்டாவதிலும் முதலாவது மிக அதிகம் என்பது பரவாயில்லை ரகம் என்றாலும் ஒரு ரஜினி ரசிகனாக என்னிடம் பங்சுவாலிட்டி போதாது, இனிமேல் 100 சதவிகிதமாக முயற்ச்சிக்கிறேன்.

இன்னுமொரு கடுப்பு கிளம்பும் விடயத்தையும் கூற நினைக்கிறேன்; நம்ம கூட வருவாங்க, திடீரென அவங்களுக்கு தெரிந்தவங்க யாரையாவது பார்த்தா நேரம் போறது தெரியாம ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருப்பாங்க, நாம கொட்டாவி விட்டுகிட்டும், நகம் கடித்துக் கொண்டும், அங்க யாராவது போனா(பொண்ணுங்க ஏன்னா ஓகே :-)) அவங்களை பராக்கு பாக்கிறதிலையும் நேரத்தை கடுப்புடன் கழிக்க வேண்டி இருக்கும். அப்புறமா அவங்க வந்து 'சரி' மச்சான் or 'சாரி' மச்சான் கிளம்பலாமா என்று சாதரணமா சொல்லி காஸுவலா நம்மகூட வருவாங்க, நமக்கு அன்று முழுவதும் செம கடுப்பா இருக்கும்.

Philosophy Prabhakaran said...

Good one... வடிவேலுவின் அந்த நகைச்சுவை மட்டுமல்ல... நிறைய வசனங்கள் சிந்திக்க வைக்கும் வாழ்க்கை தத்துவங்கள்...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க - இதைவிட சிறப்பாக அகிம்சையை வலியுறுத்த முடியுமா என்ன...

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் ஒரு வசனத்தில் polymorphism பற்றி ஒரு வசனம் பேசியிருப்பார்...

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

பாலா said...

@தமிழ் உதயம்

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

என்னதான் சொன்னாலும் வெள்ளைக்காரன் இந்த விஷயத்தில் ரொம்ப கறார்தான்.... நன்றி நண்பரே

பாலா said...

@Sathish

மத்தவங்க கிண்டல் பண்ணுவதை எல்லாம் பொருட்படுததவே கூடாது. நன்றி நண்பரே

பாலா said...

@சுசி

நன்றிங்க...

பாலா said...

@K.s.s.Rajh

நன்றி நண்பரே

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@shanmugavel

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பாலா said...

@r.v.saravanan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@எப்பூடி..

ஆமாம் தலைவரே. சில நண்பர்கள் ஒருவரோடு அல்லாமல் வழியில் பார்க்கும் எல்லோரோடும் நின்று நின்று பேசிக்கொண்டே வருவார்கள். அவர்கள் சென்றபின் என்னிடம் செம திட்டு வாங்குவார்கள்.

பாலா said...

@Philosophy Prabhakaran

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Pavi said...

நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றாக நேரந்தவறாமை என நான் கருதுகிறேன் . அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் நண்பரே .

Karthikeyan said...

இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

இன்றைய லட்சியம் நாளைய மாற்றம்

இது யார் சொன்னாங்கன்னு தெரியல. ஆனால் உங்க பதிவின் சாராம்சம் இதுதான்.

பயனுள்ள சிந்திக்க தூண்டும் பதிவு.

Anonymous said...

////கீழே இருக்கும் படத்தை பார்த்தாலே சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பலருக்கு பீபி எகிறும்.

nice img selection..

same feelings...

அருமையான கருத்துக்கள்

பாலா said...

@Pavi

நன்றி சகோ.

பாலா said...

@Karthikeyan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@thiru

நன்றி தம்பி

Mohammed Arafath @ AAA said...

sonnathu ellam unmai.nalla pathivu.. itharku kala thamathamaga vantha ennai mannikanum :P


enna bala sir... recent ta anniyan padam patheengala...?

சீனுவாசன்.கு said...

எனது நண்பர் ரசிகன் என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
1.காலபைரவன்
2.அசதா
3.பாலா
4.சந்திரகௌரி
உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

கிரி said...

// நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்.//

பொன்மொழி நன்றாக உள்ளது :-)

//குறித்த நேரத்திற்கு சுமார் 5 நிமிடம் முன்னமே சென்று விடுவதால், பத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. //

எனக்கு அடிக்கடி இது ஆகும் அதனால் வெறுத்துபோய் தற்போது ஒரு சில இடங்களுக்கு தாமதமாகவே செல்கிறேன்.

மற்றபடி என் தந்தையைப் போல நானும் நேரத்தை சரியாக பின்பற்றுபவன்.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

நன்றி நண்பரே. ரீசண்டா வேலாயுதம்தான் பார்த்தேன்.

பாலா said...

@சீனுவாசன்.கு

என்னை அழைத்ததற்கு நன்றி நண்பரே. கட்டாயம் எழுதுகிறேன்.

பாலா said...

@கிரி

நீங்களும் நம்மள மாதிரிதானா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

vimalanperali said...

காக்கவைப்பதும்,காத்திருப்பதும் காதலில்தான் சுகம் என கேள்விப்பட்டும்,படித்தும் உள்ளேன்.
ஆனால் நேரம் தவறீப்போனதால் கோட்டைவிட்ட காரியங்களும்,
அவப்பெயரும் நிகழக்கண்டிருக்கிறேன்.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
தவிர இதுவும் ஒருவித வாழ்க்கைநெறிமுறை என்பதை நாமும்,சரி,நமது சமூகமும் சரி,நாம் சார்ந்துள்ள இடங்களும் சரி. சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

இராஜராஜேஸ்வரி said...

பொன்மொழி, "நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்.//

very nice.

பாலா said...

@விமலன்

சரியாக சொன்னீர்கள். இது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்று உணர்ந்து விட்டாலே வீண் தாமதங்கள் ஏற்படாது... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...