விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 7, 2010

மொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....


முன்கூறிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் சில அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மன்னிச்சுக்கோங்க பிளீஸ்ஸ்... 

பதிவெழுத வந்தபோது எல்லாரும் புதியவர்களே. இங்கே பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறேன். இனி வரும் சமுதாயம் அப்படி ஒரு அவல நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதாலேயே ஒரு புது பதிவரும் பிரபல பதிவரும் பேசிக்கொள்வதை போல எனக்கு தெரிந்த சில தகவல்களை தந்திருக்கிறேன். மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை தந்து உதவுங்கள்.



கே: பதிவு என்றால் என்ன? 

ப: நாம் நினைத்ததை எழுதுவது. எழுத்துப்பிழை சரிப்பார்ப்பது கூட அவசியமற்றது. 


கே: மீள்பதிவு என்றால்? 

ப: படிக்க எதுவுமே இல்லாத போது பழைய பேப்பரை எடுத்து படிப்போமே அது போல. எழுத எதுவுமே இல்லாத போது எழுதியதையே திருப்பி தருவது. 


கே:பின்னூட்டம் என்றால் என்ன? 

ப: தன் வலைப்பதிவை பிரபலமாக்கும் கருவி. நீ எத்தனை பேருக்கு பின்னூட்டம் இடுகிறாயோ அந்த அளவிற்கு நீ பிரபலம் ஆவாய். கெட்ட வார்த்தைகள் கூட பயன்படுத்தலாம்.


கே: எதிர்வினை என்றால் என்ன? 

ப: பெரிய பின்னூட்டம் இட்டு போராடித்து விட்டால், அவை அனைத்தையும் திரட்டி ஒரு பதிவாக இடுவது. 


கே: சொம்பு அடிப்பது/தூக்குவது என்றால்? 

ப: சூப்பர், எப்படி இப்டிலாம்?, கலக்கீட்டிங்க என்று பதிவை படிக்காமலே பின்னூட்டம் இடுவது. 


கே: கும்மி அடிப்பது என்றால் என்ன? 

ப: நான்கு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை வெளுப்பது.


கே: ஓட்டு என்பது? 

ப: கெஞ்சி கூத்தாடி வாங்குவது. உதாரணம்: இந்த பதிவின் கடைசியில் பார்க்கவும்.


கே: எழுத்தாளர் என்பவர் யார்? 

ப: சக பதிவரை எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளாதவர். 


கே: பிரபல எழுத்தாளர் என்பவர் யார்? 

ப: சக பதிவரை மனிதனாக கூட மதிக்காதவர். உலகம் முழுவதும் சுற்றுபவர். ஆனால் ஒரு சினிமா டிக்கட் வாங்க காசு இல்லாதவர்.


கே: ஆணாதிக்கம் என்றால் என்ன? 

ப: பெண்களை தட்டி கேட்கும் ஆண்களுக்கு சூட்டும் பட்டம். 


கே: பெண்ணுரிமை என்றால் என்ன? 

ப: ஆண்களை திட்ட பெண்கள் பயன்படுத்தும் வார்த்தை. 


கே: முற்போக்கு – பிற்போக்கு ஒப்பிடுக 

ப: படித்ததை ஜீரணித்து தள்ளுவது பிற்போக்கு. படித்ததை ஜீரணிக்காமல் வாந்தி எடுப்பது முற்போக்கு. 


கே: புரட்சி என்றால் என்ன? 

ப: ஓய்வு நேரத்தில் செய்வது. அடுத்தவனுக்கு மட்டுமே செய்வது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு ஒரு வழி. 


கே: நாத்திகம் என்றால் என்ன? 

ப: கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு மற்றொரு வழி.


கே: திரைப்படத்தை புறக்கணிப்பது என்றால் என்ன? 

ப: முதல்நாளே பார்த்துவிட்டு கமுக்கமாக இருப்பது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு முதல் படி.


கே: விமர்சனம் என்பது என்ன? 

ப: ஒருவரை வஞ்சம் தீர்க்க பயன்படுத்தும் வாய்ப்பு. பெரிய்ய இதுவாக மாற உதவும்.


கே: தரமான விமர்சனம் என்பது என்ன?

ப: படம் பார்க்காமலே எழுதுவது. எல்லோரும் எழுதும் விமர்சனங்களை படித்து விட்டு அவற்றுக்கு மாறாக ஒரு கருத்தை சொல்லுவது. நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று காட்ட உதவுவது. 


கே: பஞ்சாயத்து என்றால் என்ன? 

ப: பஞ்சாயத்து செய்தால்தான் நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்.


கே: பஞ்சாயத்து செய்வது எப்படி? 

ப: மிக எளிது. உங்கள் எதிரி யார் என்று பாருங்கள். அவன் அப்பன் தாத்தா செய்த தவறு என்ன என்று பட்டியலிடுங்கள். பின் கெட்ட வார்த்தையில் திட்டுங்கள். உங்கள் சொம்பு தூக்கி நாலு பேரை உடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று புரிய வையுங்கள் அவ்வளவுதான்.


கே: ஆபாசம் என்றால் என்ன? 

ப: உங்கள் வாயில் இருந்து சரளமாக வரும் ஒரு கெட்ட வார்த்தை பிறர் வாயில் இருந்து வந்தால் அது ஆபாசம். நீங்கள் பேசினால் அது ஆபாசம் ஆகாது. ஏனென்றால் நீங்கள்தான் ஒரு பெரிய்ய இது ஆயிற்றே?


கே: பிரபல பதிவர் என்பவர் யார்? 

ப: பெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர். 


கே:பெரிய்ய இதுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்களே? இதுன்னா என்ன? 

ப: மயிரு அல்லது புடுங்கிண்ணு அர்த்தம். அதாவது உனக்கு இருக்கணும் ஆனா அடுத்தவனுக்கு இருக்கக்கூடாதுண்ணு புடுங்கிட்டே இருக்கணும்.


கே: இவ்வளவு தெளிவா பேசுறீங்களே? நீங்க பெரிய்ய இதுவா ஆயிட்டீங்க போல இருக்கே? 

ப: இப்பத்தான் ஒரு சின்ன இதுவா ஆயிட்டிருக்கேன். கூடிய சீக்கிரத்தில் ஆயிடுவேன்.


புதிய பதிவர்: ஆத்தா நான் பதிவர் ஆயிட்டேன்... 

பெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர்: வாடி மாப்ள. இனிமேல்தான் கச்சேரியே இருக்கு DOT



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...




14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

dsfasdfjl jdsalf

sdfsadfnas

summaa ketta vaarththaila thittinen

எப்பூடி.. said...

அட நீங்க பெரிய இது பெரிய இதுன்னு சொன்னது நம்ம போலி புரட்சி,கம்மியூனிச,சமூகவிளிப்புணர்வு காமடி பீசுகளையா? அந்த புண்ணாக்குகளே இப்ப வாயில வயித்தில அடிச்சு கத்திக்கிடு இருக்குதுகள், விடுங்க விடுங்க பிழைச்சு போகட்டும். பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பதைபோல இந்த காமடிபீசுகள் தாங்கள் சமூக விழிப்புணர்வு பீரங்கிகள் என்று தங்களை தாங்களே நினைத்துக்கொண்டு இப்பிடி கத்திக்கொண்டே இருக்கட்டும், மாரித்தவக்கைகள்.

இதுகளெல்லாம் வேண்டா வெறுப்புக்கு பிள்ளைய பெத்திட்டு காண்டாமிருகமெண்டு பேருவைக்கிற கூட்டம், லூசில விடுங்க.

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

ம.தி.சுதா said...

நல்லயிருக்கு வாழ்த்துக்கள் சகோதரம்...

Umapathy said...

:D

"ராஜா" said...

//உங்களுக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்

உங்கள் பதிவு அருமை .. உங்கள் எழுத்து நடை கலக்கல் .. நக்கலும் நையாண்டியும் உங்களுக்கு அருமையாக வருகிறது ... நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை ...

பாலா said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ஹி ஹி... ரொம்ப புகழாதீங்க...

பாலா said...

@ எப்பூடி..

கரெக்டா சொன்னீங்க... ஆனா இந்த கொசுக்களை அப்பப்ப அடிக்க வேண்டி இருக்கே... ஏதாவ்து மருந்து இருந்தா அடிச்சு கொல்லுங்கப்பா..

பாலா said...

@ ம.தி.சுதா கூறியது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...

@ உமாபதி கூறியது...

சிரிப்புக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@ "ராஜா"

நன்றி தல...

//நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை ...

இப்படி உசுப்பேத்தி விட்டு உடம்ப ரணகளம் ஆக்கிடாதீங்க..

http://unnainaadi.blogspot.com said...

neenga periya idhudhan.

Yoganathan.N said...

பதிவுலகில் உபயோகிக்கப்படும் சில பல சொற்றொடர்களுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

இன்னொன்று, 'பார்ப்பனியம்' (சரிதானே?) என்றால் என்ன?

பாலா said...

// 'பார்ப்பனியம்' (சரிதானே?) என்றால் என்ன?

நம் தவறுகளை சுட்டிகாடுபவர்களுக்கு நாம் கொடுக்கும் பட்டம்

பாலா said...

//Mrs. Krishnan

Thank you

Related Posts Plugin for WordPress, Blogger...